Pages

Back to Top

ஆச்சரியம்

போனவருடம்  என்ஃப்ரெண்ட் போட்ட பதிவு இது. அப்போதான் பதிவு எழுத ஆரம்பித்த புதிது. இந்தப்பதிவு நிறையபேருபார்க்கலே. அதான் அவ என்கிட்ட  இப்பதான் உன்பக்கம் நிரையபேரு வராங்களே இது கொஞ்சம் சுவாரசியமா இருக்கே மறுபடி உன்ப்ளாக்கில் போடுன்னு சொன்னா. அவகேட்டதற்கு இணங்க அதையே மீள் பதிவா போட்டிருக்கேன். இப்ப இங்க நிறையபேரு வரீங்க இல்லியா எல்லாரும் படிக்கமுடியுமே அதான்.

கொஞ்ச நாட்கள் முன்பு ஒரு பண்டிகை நாளில்(சதுர்த்தியோ,ஜன்மாஷ்ட்மியோி நினைவில்லை)

என்ஃப்ரெண்ட் வீட்டில் சமயலுக்கு கத்தரிக்காய் கட்செய்தப்போ

மேலே உள்ளதுபோல ஓம் என்று ஹிந்தியில் தெரிந்ததாம்.

இது ஒருஆச்சர்யமான விஷயமாகத்தோன்றவே செல்லில்

போட்டோ எடுத்து எனக்கும் அனுப்பினா. நானும் சில ஃப்ரெண்ட்ஸ்

களுக்கு அதை அனுப்பினேன். அன்று அவ வீ்ட்டில் நட்ந்த விஷயங்களை

பொனில் சொல்லிசொல்லி ஒரே சிரிப்பு.






அன்று காய் கட் செய்யும்போது வேலைக்காரி சிங்கில் பாத்திரம் தேய்த்துக்

கொண்டிருந்தாளாம். அவளும் இதைப்பாத்திருக்கா. உடனே மேம்சாப் ஆப்கா

கர்மே பப்பா ஆயாஹை. அதாவது அம்மா, உங்க வீட்டுக்கு கண்பதிபப்பா

வந்திருக்காரு.உடனே அந்த பைங்கனை பூஜா ரூம்ல வையி.சந்தன்,குங்கும்

வய்யி. நா கீழபோயி பூவு கொண்டரேன்.என்று கிளம்பிபோயி அக்கம்பக்க வீடுகளில் கண், காது,மூக்கு வச்சு பேனைப் பெருமாள் ஆக்கி எல்லாரிடமும்

சொல்லிட்டு வந்தா.

முதல்ல பக்கத்து வீட்டு மராட்டிக்காரி வந்தா.அஹொ,காய் ஸாலா?

என்னாச்சு? என்று கேட்டுண்டெ கிச்சன்ல வ்ந்தா.காயப்பாத்துட்டு அரெ

டேவான்னு கனனத்ல போட்டுண்டு விழ்ந்து நமஸ்காரமே பண்ணா .

ஒர்வழிஆ அவளைகிளப்பி அனுப்ப வேண்டி இருந்தது.

அடுத்து ் எதிர்வீடு பெங்காலிக்காரி, அரே பெஹன் கி ச்சாய்? ஆமி கிச்சு

கோர்போ நாக்க. திக்காவ். அவளும் வந்து பாத்்துட்டு பெஹன் ஆப்

பஹுத் குஷ் நசீப் வாலி ஹை. ( ரொம்ப லக்கி) உங்க விட்ல பகவான்

வந்திருகாங்க. உன்க்கு லாட்ரில முத பரிசு கிடைச்சு ப் பெரிய அமிர் ஆப்போராய் அப்போ என்னைலாம் மறன்துடாதே.என்று அவளும் புலம்பிட்

டு போனா.




அடு்த்து மேல் வீ்ட்டு மலயாள மாமி தன்னோட 80 கி் லோ உடம்ப

தூக்க முடியாம தூக்கிண்டு வந்தா. எந்தா மோளே. என்னவாக்கும் ஆச்சு?

எனக்குக்காட்டிக்கொடு. நா பாக்கட்டும் என்று கிச்சனில் வந்து கத்தரிக்காய்

தரிசனம்பண்ணினா. ஓ. இவ இன்னம் என்ன சொல்லப்போராளோன்னு

நினைச்சேன். அடி பொண்ணே, இந்தக்காய்ல யாரோ ஏவலோ.சூன்யமோ

வச்சிருக்காங்கன்னு தோணரதுடீ. உடனே இதைக்குப்பைல களைஞ்சுடுடீ

பொண்ணே.எண்ட குருவாயூரப்பா, நீதான் இவளுக்கு எந்தகஷ்டமும் நேராம

ரட்சிக்கணும். என்று வந்த வேகத்லியே திரும்பிட்டா. இந்த வேலைக்காரி

நாளைக்கு வரட்டும் அவ்ளை வச்சிக்கரேன்.இப்படியா ஊர்பூரா கொட்டுவா.

என்று அவமேல கோபம் ஒருபுற.ம் வந்தவர்கள் அடித்தகாமெண்ட்களில்

ஏற்பட்ட காமெடிகளென்று ஒருகத்தரிக்காய் படுத்தின பாடு இருக்கே.

அதோட நிக்கலை, அடுத்ததெருவிலும் ந்யூஸ்பரவி அனிமேஷன் படிக்கும்

இரண்டு மாணவர்கள் வேறு,ஆண்டி அந்தக்கத்தரிக்காய் காட்டுங்க என்கிரார்கள்.

3 நாள்ல அந்தக்கத்தரிக்காய் வாடி வதங்கி கடைசில குப்பைல

போட்டாச்சுன்னு,செல் ல எடுத்த்போட்டோவைக்காட்டினேன்.அந்தரெண்டு பசங்களும்

ஆண்டி இது அஸ்லி போட்டோதானே, ஏதும் க்ராபிக் ட்ரிக் இல்லியேன்னு வேர

கேக்கரா. என்னத்தை சொல்ல.

62 comments:

நாய் நக்ஸ் said...

Oru collection
parthirukkalaam.....

Vadai poche !!!!!!

RAMA RAVI (RAMVI) said...

ஒவ்வொருவருக்கு ஒருஒரு நம்பிக்கை.நல்ல வேடிக்கைதான் போங்க.

SURYAJEEVA said...

photoshop வேலை செய்யும் பொழுது கொஞ்சம் யோசித்து செய்யணும், வெட்டப் பட்ட ஒரு பாகத்தில் நேரா காட்டுது சரி, இன்னொன்னு எப்படி நேரா காட்டும் mirror image தானே வரும்

radhakrishnan said...

நானும் முதல் ஆளாய் வந்து விட்டேன்.
ஆச்சரியம் பதிவு மிகவும் ஆச்சரியமாகத்தான் உள்ளது.உடனே
பேஸ் புக்கில் என் நண்பர்களுக்குதள்ளி
விட்டேன்.உங்கள் நண்பியிடம் சொல்லிவிடுங்கள்.
இது போல் இயற்கை அதிசயங்கள் பல
அவ்வப்போது நடக்கின்றன.என் சிறு வயதில் மதுரையில் ஒரு வீட்டில்
முருங்கைமரத்தில் பெரியபந்து போல்
பூ பூத்திருந்த்து.இதைக் கூட்டம் கூட்டமாக மக்கள் பார்த்து வந்தனர்.
மூன்றுநாட்கள் கழித்து
பூ வாடி விழுந்துவிட்டது.வழக்கத்திற்கு
மாறாக ஏதேனும் நடந்தால் நம் மக்க
ளுக்கு ஆன்மீகம் கலந்த அதிசயம்தான்

radhakrishnan said...

அம்மா,
இன்று காலை கண்ணனிடம் பேசினேன்.
பேங்கில் இருந்த்தால் நானே மாலை
பேசுவதாக்கஃகூறிவிட்டேன்.அறிமுகம் மட்டும் செய்து கொண்டு பையனைப்பற்றி விசாரித்தேன்.மாலை
மீண்டும் பேசுகிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல அழகான நகைச்சுவையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

Yaathoramani.blogspot.com said...

ஆச்சரியமாகத்தான் இருக்கு
அசல் ஓம் போட்ட மாதிரியே இருக்கு
அந்த கத்திரீக்காய் படுத்தின பாட்டை
பதிவாக்கி இருந்தது ரசிக்கும்படியாக இருக்கிறது
வாழ்த்துக்கள் த.ம 1

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

இராஜராஜேஸ்வரி said...

வந்தவர்கள் அடித்தகாமெண்ட்களில்

ஏற்பட்ட காமெடிகளென்று ஒருகத்தரிக்காய் படுத்தின பாடு இருக்கே.


சுவாரஸ்யமான பகிர்வு.

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோ முடியல.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

இப்பிடித்தான் மும்பையில் த லீலா ஹோட்டல்ல நான் வேலை பார்க்கும் போது, பப்பாளி பழத்துக்கு உள்ளே கணபதி உருவம் மாதிரி இருக்குறதை பார்த்துட்டு கேட் வாசலிலே கோயில் உண்டாக்கிட்டாங்க, தங்கி இருந்த வெளிநாட்டுக்காரங்க மெரண்டு போனாங்க...!!!

ஸ்ரீராம். said...

ஹா..ஹா...ஹா...நல்ல அனுபவம்தான்.

சத்ரியன் said...

கத்தரிக்காய்-ல கணபதியா?

எண்ட குருவாயூரப்பா.

நல்ல காமெடிதான் போங்கோ1

Asiya Omar said...

உங்க ப்ளாக் பக்கம் வந்து நாளாகுது,நிறைய வாசிக்க வேண்டியுள்ளது.

ADHI VENKAT said...

ஒவ்வொருவரின் பார்வையும் எப்படி இருக்கு...ஹே பக்வான்....

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா.கந்தரிக்காயில் அப்படி இருந்தது அபூர்வம் அதைவைத்து நடந்த விடயங்களை என்ன சொலவது அதுவும் அக்டைசியில் அந்த மாணவர்கள் வந்து கிராப்பிக்ஸ் இல்லையா?என்று கேட்டது ஹய்லைட்ஸ்

மகேந்திரன் said...

நகைச்சுவை மேலோங்கிய
அழகிய பதிவு அம்மா.
நன்று.

கவி அழகன் said...

ஒரு கத்தரிக்காயா இப்படி பாவம் அவங்க

வெங்கட் நாகராஜ் said...

இந்த மாதிரி விஷயங்கள் சீக்கிரம் பரவிவிடும்... :)

நல்லா இருக்கும்மா உங்களின் பகிர்வு....

ம.தி.சுதா said...

அடடா கத்தரிக்காய் கூட ஹிந்தி படிச்சிடுச்சா...

ஹ...ஹ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

குறையொன்றுமில்லை. said...

NAAI NAKKS வருகைக்கு நன்றி என்னபேருப்பா இது?

குறையொன்றுமில்லை. said...

ரமா, வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சூர்ய ஜீவா நீங்க சொன்னபிறகுதான் பாத்தேன். வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்னன் போட்டோ அனுப்பியதுமட்டும் அவங்க. மத்ததுஎல்லாம் நம்ம கற்பனைதான்.

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

நண்டு நொரண்டு ரைட்டு

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

நாஞ்சில் மனோ என்னங்க முடியல்லே?

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சத்ரியன் எண்ட குருவாயூரப்பா இல்லே கணபதிதான்.

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர் வந்து எல்லாத்தையும் நிதானமாபடிங்க.

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜ் வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கவி அழகன் நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ம. தி. சுதா அந்தக்கத்தரிக்கா பாம்பேல இருக்கு இல்லியா அதான் ஹிந்தி.

ஹுஸைனம்மா said...

சுவாரஸ்யம்தான்!!

குறையொன்றுமில்லை. said...

ஹுஸைனம்மா நன்றி

C.P. செந்தில்குமார் said...

Ithenna meelpathivu seasona?? Nalla comedy kathirika!

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள்

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

செந்தில் என்னாச்சு ரொம்ப நாளா ஆளைக்காணோம்? பிசியா?

குறையொன்றுமில்லை. said...

யானைக்குட்டி ஞானேந்திரன் நன்றி

மாலதி said...

அழகான நகைச்சுவையான பதிவு.

Unknown said...

இது, ஏரல் எழுத்துபோல உள்ளது!
வேடிக்கையான பதிவு!புலவர் சா இராமாநுசம்

குறையொன்றுமில்லை. said...

புலவர் சா. ராமானுசம் ஐயா வருகைக்கு நன்றி ஏரல் எழுதுன்னா என்ன?

நிரூபன் said...

வணக்கம் அம்மா,
நலமா?
எதிர்பாராத தருணங்களின் இறைவனினை நாம் நினைந்துருகும் வண்ணம் இவ்வாறான தோற்றங்கள் நாம் யூஸ் பண்ணும் பொருட்களில் வருவது ஆச்சரியம் தான்.
நல்லதோர் பதிவு..

முதலில் கொஞ்சம் ஆன்மீகம், அப்புறமா சுவையான சம்பவங்களைக் காமெடிக் கோர்வையாக்கி அசத்தியிருக்கிறீங்க.

Learn said...

அழகான பகிர்வு

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Vijayan Durai said...

கத்திரிக்காயில் கடவுள் வருவது அதிசயம் தான்.பதிவில் நீங்கள் போட்டிருக்கும் photo உண்மையானதா??

குறையொன்றுமில்லை. said...

னிரூபன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

தமிழ்தோட்டம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

விஜயன் வருகைக்கு நன்றி உண்மை இல்லாம எப்படி போட்டோ போடமுடியும்?

Arjun said...

சூப்பர் பதிவு ரொம்ப ரசிச்சன்

முடிஞ்சா எனது eயாழ்ப்பாணம் பதிவையும் பாருங்க உங்க கருத்துகளை சொல்லுங்க
http://ejaffna.blogspot.com

Arjun said...

சூப்பர் பதிவு ரொம்ப ரசிச்சன்

முடிஞ்சா எனது eயாழ்ப்பாணம் பதிவையும் பாருங்க உங்க கருத்துகளை சொல்லுங்க

Arjun said...

சகோதரம் சூப்பர் பதிவு ரொம்ப ரசிச்சன்

முடிஞ்சா எனது eயாழ்ப்பாணம் பதிவையும் பாருங்க உங்க கருத்துகளை சொல்லுங்க

குறையொன்றுமில்லை. said...

யாழ் அர்ஜுன் வருகைக்கு நன்றி. நானும் உங்க பக்கம் வரேன்

Unknown said...

http://rssairam.blogspot.com/2011/10/blog-post_19.html கல்லிடைக்குறிச்சி புக்ககம் என்பதால் ஓர் நற் செய்தி. மோகன்ராம் என்பவர் 3 ஆண்டுகள், பல லட்சங்கள் செலவு செய்து பொதிகை மலை உச்சிதனைப் படமாக்கியுள்ளார். அதன் ஒரு சிறு விபரத்தை மேல் கண்ட 19 தேதியில் பதிவிட்டுள்ளேன். படித்து மகிழ்க. இது தீபாவளி இனிப்பை விட மகிழ்ச்சியைத் தரும். தமிழ் முனிவன் அகத்தியன் வாழும் பொதிகை டிஸ்கவரி சேனல் போன்று தமிழில் வரும். ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படும்.

குறையொன்றுமில்லை. said...

சீராசை சேதுபாலா புகுந்தவீடு பிறந்த வீடு ரெண்டுமே கல்லிடைதான். நல்லதகவல் சொல்லி இருக்கீங்க படிச்சுப்பார்க்கவருகிரேன். நன்றி

நாகா ராம் said...

நல்ல வேடிக்கைதான் போங்க :))

குறையொன்றுமில்லை. said...

நாகா ராம் வருகைக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...