Pages

Back to Top
Showing posts with label ஒருஅனுபவம்.. Show all posts
Showing posts with label ஒருஅனுபவம்.. Show all posts

மின்சாரம்.... அது மின்சாரம்

போனவாரம் ஒரு வெள்ளிக்கிழமை காலை10-டு இரவு10- வரை கரண்ட்கட். இரவு10- மணிக்கு கரண்ட்வந்தது. இவ்வளவு நேரம் போயாச்சே இனிமேல போகாதேன்னு  நினச்சு இன்வெர்ட்டர், கார்ட்லெஸ்போன், மொபைல்போன், எல்லாம் சார்ஜ் பண்ண வச்சேன். கம்ப்யூட்டர் ஆன்பண்ணி உக்காந்தேன். சடன்னா 10.30-க்கு லைட் எல்லாம் ரொம்ப பவர்ஃபுல்லா கண் கூசும்அளவுக்கு பளிச்சுனு எரிஞ்சுது. ஃபேனும் எக்கச்சக்கஸ்பீடில் சுத்த ஆரம்பிச்சது. என்னது இப்படி இருக்கேன்னு ஒவ்வொரு ஸ்விச்சா ஆஃப் பண்ணலாம்னு நினைச்சு எழுந்துபோரதுக்குள்ள  ஒயர் ஒன்னொன்னா ஸ்பார்க் வர ஆரம்பிச்சு எல்லாம் இயக்கத்தை நிறுதிச்சு. ஸ்பார்க் வந்துண்டே இருந்தது  எனக்கா, என்ன பண்ணனும்னே தெரியல்லே. ஸ்விச் ஆஃப் பண்ண தொடவே பயமாச்சு. எங்கியானும் ஷாக் அடிச்சு நம்மை தூக்கி எரிஞ்சா என்ன பண்ண? இரவு நேரம் வேர எங்க போக என்ன பண்ணனு ஒன்னும் புரியல்லே.

Related Posts Plugin for WordPress, Blogger...