Pages

Back to Top
Showing posts with label பெரியோர் சிந்தனைகள்.. Show all posts
Showing posts with label பெரியோர் சிந்தனைகள்.. Show all posts

சிந்தனைக்கு

 நஷ்டமில்லாமல் வெற்றி இல்லை
 முட்கள் இல்லாமல் அறியணை இல்லை
 முயற்சி இல்லாமல் பெருமை இல்லை.
 சிலுவை இல்லாமல் மகுடமில்லை.(அறிஞர் பென்)

 குவிந்து கிடக்கும் சாம்பல் மீது தண்ணீரைத்தெளித்தால்
 தண்ணீர் போன இடம் தெரியாது. நல்ல எண்ணம், நல்ல
 பிரார்த்தனைகள் இவைகளுக்கெல்லாம் நல்ல மனம் வேண்டும்.
 அகம்பாவம் குவிந்து கிடக்கும் சாம்பலுக்கு சமமானது.
 அது இருக்கும் மனத்தில் பிரார்த்தனைகளும், நல்லெண்ணங்களும்
 எடுபடாது.(ராமகிருஷ்ன பரமஹம்சர்)

 சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது - இதயத்தின் இசை.
 சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் அது-சக்தியின் பிறப்பிடம்.
 விளையாட நேரம் ஒதுக்குங்கள் அது- இளமையின் ரகசியம்.
 படிக்க நேரம் ஒதுக்குங்கள் அது- அறிவின் ஊற்று.
 நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் அது- மகிழ்ச்சிக்கு வழி.
 உழைக்கநேரம்ஒதுக்குங்கள்அதுவெற்றியின்விலை.   

அன்பனே பொழுதைப்பொன்னாக்கு.ஒரு நிமிஷம் கூட வீணாக்காதே,
 யோசித்துப்பார், ஒரு நாளைக்கு 24-மணி நேரம். அதில் சுமார்8- மணி
 நேரம் இளைப்பாறலாம்.தேகப்பயிற்சி செய்ய, குளிக்க ,துவைக்க, உண்ண உடுக்க 4-மணி நேரம், வயிற்றுப்பிழைபுக்காக தொழில்புரிய8-மணி நேரம்
இந்த 8-மணி நேரத்தைப்பெண்கள் வீட்டு வேலைகளிலும், ஆண்கள் வெளியேசென்று அலுவலகம், தொழிற்சாலைகளிலும் கழிக்கலாம்.
 மீதி 4-மணி நேரம் உள்ளது. அதை வீணாக்காதே.அறிவுப்பயிற்சிகளிலும் ஆன்மீகப்பயிற்சிகளிலுமதைச்செலவிடு.(சுத்தானந்த பாரதியார்)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
Related Posts Plugin for WordPress, Blogger...