நாங்க இருந்தது ஜபல்பூரிலிருந்து50- கிலோ மீட்டர் உள்ளே
தள்ளி இருந்த கமேரியா என்னுமிடம். காலை12மணிக்கு ட்ரக்
கிளம்பியது. சாப் இன்னிக்கு முதல் நாள் இல்லியா சிட்டிவரை
முதல்ல போயிடலாம். அங்கபோன பிறகு ஒரு தாபா போலாம்.
உள்ளே இஞ்சின் உள் புறமாக இருந்தது. நல்ல தகர மூடியால மூடி
தான் இருந்தது. க்ளீனர் 15 நிமிஷ்த்துக்கு ஒருமுறை கனத்த சாக்கை
தண்ணீரில் நனைத்து நல்ல ஈரமுடன் அந்த இஞ்சினின் மூடி மேல
போட்டுண்டே தான் இருன்தான். ஆனால் கூட வெப்பமும் சூடும் ரொம்ப
அதிகமாவேதான் இருந்தது. குழந்தைகளுக்கு இதுபுதுவித பிரயாணமாக
இருக்கவே மேலே தாளம் போட்டு பாடிண்டு நல்லா எஞ்சாய் பண்ணினா.
நாங்களுமே முதல் முறையா ட்ரக் பயணம்தான்.
| Tweet | |||||