மருமகளின் அக்காவும் கூடவே வந்தா.அன்னிக்கும் காலிவயிருடன்,குளிக்காம வரச்
சொல்லியிருந்தார். நான்மட்டும் குளிக்கலை.அங்கபோயிச்சேரும்போதே9 மணிஆச்சு.
வைத்தியர் ரெடியாகாத்திட்டு இருந்தார்.முதலில் ரூம்லபோயி சாமான்களை வச்சுட்டு
வாங்கன்னு ரூமிக்கு கூட்டிப்போனார்.அவ்ர்வீட்லேந்து ஜஸ்ட்2 நிம்ஷவாக்கில் ரூம்
இருந்தது. வெளியில் நீ.....ண்.......ட வராண்டா. உள்ளே 5 ரூம்கள். ஏற்கனவே 2ரூம்
களில் ஆட்கள் ட்ரீட்மெண்டுக்காக தங்கி இருந்தார்கள். எங்களுக்காக ஒதுக்கப்பட்டரூம்
போயி சாமான்களை வைத்தோம்.10க்கு 8 என்கிர அளவில் ஒரு ரூம்.அதை ரூம் என்று
சொல்வதே சிறிது அதிகம்தான்.ஒருமரக்கட்டில்,அதன்மேல் எண்ணைப்பிசுக்குடன் ஒரு
கோரைப்பாய். ஒருகாலத்தில் அது பாயாக இருந்திருக்கலாம். இப்போ அதில் எண்ணி 10
குச்சிகள்தான் இருந்தது. எதிர்சைடில் இன்னொருசின்ன நீள பெஞ்ச்.சின்னதாகஒரு
அழுக்குடேபிள். தொட்ட இடம்பூரா பிசு.பிசுன்னு ஒட்டரது. ஐயோ, இங்கயா ஒருவாரம்
இருக்கணம்? நுதான் தோணித்து.சரி,வைத்யத்துக்குனு வந்தாச்சு, வேரஎதைப்பத்தியும்
யோசிக்கவே கூடாதுன்னு சாமான்களைவச்சுட்டு திரும்ப வைத்தியர்வீடு போனோம்.
| Tweet | |||||