நாரயன்பூர்(2)
ஷிவ்பூர் டோல்கேட் தாண்டியதும் சிறிது நேரத்தில் பூனா எல்லை வந்தது.
11 மணி கோவில் வாசலில் இருந்தோம். பூனா மண்ணில் காலடி வைத்ததும்
உடம்பு, மனது பூராவும் ஒரு சிலிர்ப்பு. 15 வருடங்கள் வாழ்ந்த ஊர். வாழ்க்கை
தொடங்கியதே இங்குதான். சிரிப்பும், சந்தோஷமும், சோகமும் துக்கமும் என்றுகலந்துகட்டி அனுபவங்களைத்தந்த ஊர். அந்த உணர்வுகள் எல்லாம் மனதில்தோன்றி கண்களில் கண்ணீரைத்தேக்கி விட்டது.மற்றவர்கள் பார்த்தா என்னாச்சுன்னு கேப்பார்களென்னு கண்ணிரைக்காட்டாமல் இரிக்க ரொம்ப சிரமப்பட்டேன்.பூனாவை விட்டு இப்ப 35- வருடங்களுக்கு மேலேயே ஆச்சு. ஆனாலும் கூட நம்மனதுக்கு எவ்வளவு ஞாபக சக்தி இருக்கு.
| Tweet | |||||
