Pages

Back to Top
Showing posts with label ஒரு பள்ளி. Show all posts
Showing posts with label ஒரு பள்ளி. Show all posts

கோகுலம் ட்ரஸ்ட்

 இப்பவும் ஈரோடு பதிவுதான். ஒரு பள்ளியின் பிரின்சிபால் அம்மா என்னை வீட்ல வந்து பாத்தாங்க. அவங்க என்கிட்ட அம்மா நாங்க மன வளர்ச்சி குன்றிய குழந்தகளுக்கான ஒரு பள்ளி நடத்துரோம். நீங்க  நிறையா ப்ளாக் எல்லாம் எழுதுரீங்கன்னு உங்க வீட்ல சொன்னாங்க. எங்க பள்ளி பத்தியும் கொஞ்சம் எழுதமுடியுமா என்றார்கள். சொல்லுங்க என்ரேன். ஆண்டவன் படைப்பில் இது போல மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் படைப்பு ரொம்ப பரிதாபம். ஏன் என் ரெண்டு பசங்களுமே அப்படியான பசங்கதான்.  நாங்க ஓரளவு வசதியா இருப்பதால இது போல குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்தனும்னு நினைச்சு ஈரோட்ல நடத்துரோம் அம்மா. கவர்மெண்ட்ல பதிவும் செய்திருக்கோம். ஆனா எந்த சாரிட்டி மூலமாகவோ எந்த டொனேஷன் மூலமகவோ இந்தபள்ளியை நடத்தலேம்மா. முழுவதும் எங்க சொந்த செலவுலதாமா பன்ரோம். இப்பத்தைக்கு 20- குழந்தைகள் எங்க பள்ளியில் இருக்காங்க. 4- ஆசிரியர்களும் இருக்காங்க. அவங்களும் சேவை மனப்பான்மையுடன் தான் இந்தப்பணியை பொறுப்பாகவும் பொறுமையாகவும் செய்து வராங்க. ஆனாலும் கூட அவங்களுக்கும் குடும்பம் குழந்தைன்னு இருக்கே. அவங்களையும் கவனிக்கணுமே. அதுக்கு வருமானம் வேனுமில்லியா. எங்களால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு சம்பளம் கொடுக்கிரோம்மா.

Related Posts Plugin for WordPress, Blogger...