Pages

Back to Top
Showing posts with label சிறு கதை 1. Show all posts
Showing posts with label சிறு கதை 1. Show all posts

சினேகிதனே, சினேகிதனே.........1

கல்யானத்துக்கு தேதி கூட குறிச்சாச்சு. முகூர்த்தத்துக்கு இன்னும் ஒருமாசம் கூட இல்லே. பணத்துக்கு என்னடி பண்ரது? வாசுவின் குரலில் ஆதங்கம்.
ஏன் ஆபீஸ்ல பிராவிடண்ட் பண்ட்ல லோன் போட்டிருந்தீங்க இல்லியா? அது என்னாச்சு? லதாவின் நியாயமான கேள்வி. அது இன்னிக்குதான் கிடைச்சது ஆனா நான் எவ்வளவு அப்ளை பண்ணி யிருந்தேனோ அதில் பாதி தான்  சாங்க்‌ஷன் ஆகியிருக்கு.பாக்கி பணத்துக்கு வெளில யாருகிட்டயாவது கடன் வாங்கித்தான் ஆகணும். யாருகிட்ட போயி கேக்கரது? எப்படியும் கடன் வாங்காம கல்யாணம் நடத்தணும்னு நினைச்சோம். எங்க நடுத்தர வர்க்கத்தினரின் சாபம் இது கடன் வாங்காம எந்த ஒரு காரியமும் பண்ணமுடியாது, சரி மேற்கொண்டு யாருகிட்ட கேக்கலாம் உனக்கு ஏதானும் தோனரதா? ஏண்டி நம்ம வெங்கு கிட்ட கேட்டு பாக்கலாமா? நம்மாத்துலயே10- வருஷமா பேயிங்க் கெஸ்ட்டா இருந்திருக்கானே . அவனை நண்பன் போலவா நடத்தினோம். நம்ம குடும்பத்தில் ஒருவனாகத்தானே நினைச்சோம்.. நம்ம நிலமை எடுத்துச்சொல்லி கேட்டு பாக்கலாமா? ஆமாங்க ஏற்கனவே அவரும் நம்மகிட்ட சொல்லி இருக்காரே. பொண் கல்யாணம் என்றால் நான் ஹெல்ப் பண்ரேன்னு. இப்போ அவரும் நல்லா வசதியாதானே இருக்கார். கேட்டுபாக்கலாம். ஆனா இப்போ அவர் வேர ஊர்லன்னா இருக்கார் லெட்டர்போட்டு பதில் வரதுக்கெல்லாம் டைம் இல்லே நாம நேரிலே போயி பத்ரிகை கொடுதுட்டு விஷயம் சொல்லிட்டு வரலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...