நாங்க கல்யாணப்பேச்சை எடுத்ததுமே அவன் எனக்கு இப்பொ கல்யாணத்தில் நாட்டமில்லை.இப்போகல்யாணமெல்லாம் வேண்டாம்னு பிடிவாதமா சொன்னான். ஏய், இப்பவே உனக்கு 30 வயசாச்சு, இப்ப கல்யாணம் பண்ணாம
எப்போ பண்ரது? உன் தம்பிகள், தங்கை எல்லாம் ரெடியா இருக்காங்க. உனக்கு
பண்ணின பிறகுதானே அவங்களுக்கு பண்ண முடியும். நீ ஏன் பிடிவாதமா இருக்கேன்னு எவ்வளவு கேட்டும் முதல்ல அவங்காளுக்கெலாம் பண்ணிடுங்க
என்று தீர்மானமா சொல்லிட்டான். அண்ணன் இருக்கும்போது மத்தவங்களுக்கு
எப்படி பண்ணனு யோசிச்சோம். ஆனா தம்பி தங்கை எல்லாரும் சொந்தமுயற்சியில் மேல் படிப்பெல்லாம் படித்து பாம்பேயில் நல்ல வேலையிலும் அமர் ந்துவிட்டிருந்தார்கள் அதுமட்டுமில்லாம லவ்விலும்
விழுநதுட்டாங்க.வேர வழி இல்லாம முதல்ல இவங்களுக்கெeல்லாம்
அவங்க விரும்பியபடி வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தோம்.அப்பரமும்
இவனை இப்படியே விடக்கூடாதுன்னு தீவிரமாக பெண்தேடினோம். மதுரை
யில் இருந்த ஒரு பெண்ணின் ஜாதகம் நன்கு பொருத்தம் இருந்ததால். அதை
பேசி முடிச்சோம்.அவ்னுக்கோ கல்யாணத்தில் விருப்பமே வரலை. அப்படி
யும் எங்க விருப்பத்துக்காக ஒத்துகிட்டான்.
| Tweet | |||||