இந்த கவிதையை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அவருக்கு நன்றி
புதிய இந்தியா
"*levis jeans" **ஸும்,"van heusen"ஸும்
*வந்ததால் - எங்களின்*
*பருத்தி ...காதி துணிகள்**
பழசாய்ப் போயின**!
"நைட்டியும்","கவுனும்**"
வந்ததால் - எங்களின்*
*தாவணிகளும்,புடவைகளும்*
*தரமிழந்துப் போயின**!
"pizza" வும் "burger" ரும்*
*வந்ததால் - எங்களின்*
*இட்லி,சப்பாத்திக்களை*
*சுவை இழக்க வைத்தன**!
"axe perfume" உம் "olay" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*மஞ்சளும்,மருதாணிக்களும்*
*வாசம் இழந்துப் போயின**!
"valentine's day, friendship day" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*நட்புக்களும்,கல்யாணங்களும்*
*கோர்ட் படிகள் ஏறுகின்றன**!
"cricket"டும்,"golf" பும்*
*வந்ததால் - எங்களின்*
*கபடியும்,மல்யுத்தமும்*
*களையிழந்துப் போயின**!
"wine" னும்,"vodka" வும்*
*வந்ததால் - எங்களின்*
*கூழையும்,கள்ளையும்*
*குழித்தோண்டிப் புதைத்தன**!
"standard charted,american express bank" கும்*
*வந்ததால் - எங்களின்*
*கூட்டுறவு வங்கிகள்*
*திவாலாகிப்போயின**!
"dollar ,euro" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*மூளைகள் வெளிநாடுகளில்*
*அடமானத்திற்க்கு விற்கப்பட்டன**!
இதோ**....
"walmart" டும்,"tesco" வும்*
*வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்*
*நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்*
*உழைக்கும் விவசாயிகளும் கூட இனி**...
*அமெரிக்கர்களின் எகாதிபத்யத்தில்*
*மீண்டும் அடிமையாகப் போகிறார்கள்**.
*இருப்பதை விட்டுவிட்டு*
*பறப்பதற்கு ஆசைப்படும்*
*அரசியல் அதிகாரிகளுக்கு*
*மீனைவிட தூண்டில் பெரிதென்று*
*புரிவதெப்போது?*