Pages

Back to Top
Showing posts with label ஆயுர்வேதவைத்ய அனுபவம். Show all posts
Showing posts with label ஆயுர்வேதவைத்ய அனுபவம். Show all posts

பரணீயம்(6, எண்ட்)

பரணீயம் 6




வெளில தள்ளித்தெரிந்த சிகப்பு புள்ளி நாங்க இருக்கும் இடம் தேடி வருவதுபோல

ரொம்பவே ந்ருங்கி வந்தது. உமாவும் நானும் வெளியில்பாக்காம ஒருவரை ஒருவர்

பாத்துண்டு சுவற்றைப்பார்த்தபடி உக்காந்துண்டு என்னமோ பேசிண்டொம். கொஞ்ச

நேரத்ல ம்க்ம் என்று எங்க பின்னடிலேந்து ஒருகனைப்புசத்தம்.திடுகிட்டு திரும்பி

பாத்தோம். வைத்தியர் வாயiில் பீடியுடன் நின்று கொண்டிருந்தார். பக்கத்ல உள்ள

வங்க காலி பண்ணிட்டு போயாச்சே, நீங்க இருவரும் தனியா இருப்பீங்களே,லைட்டு

வேர போச்சேன்னு உங்களுக்கு கொஞ்ச நேரம் துணையா இருக்கலாம்னு வhந்தேன்னு

சிரிச்சுகிட்டே சொல்ரார்.எங்களுக்கு பயம் போயி சிரிப்புதான் வhந்தது.இப்படியா சத்தம்

போடாம வருவீங்க நாங்க ஒரு நிமிஷம் ஆடிப்போனோம் தெரியுமோன்னு உமா அவரிடம்

சத்தம் போட ஆரம்பிச்சுட்டா.அவர் இன்னும் பெரிசா சிரிச்சு ஏன்ன் என்னை கொள்ளிவாய்ப்

பிச்சாசுன்னு நினைச்சீங்களான்னு கேட்டு இன்னமும்பெரிசா சிரிக்கரார்.




ஆனாலும் மாமியாருக்கும், மறு மகளுக்கும் தைரியம் ஜாஜ்திதான்னு வேர சொல்ரார்.

கரண்ட் வந்ததும் அவர் கிளம்பி போனார். நாங்க சாப்பிட்டு 10 மணிக்கு உள்ள போனோம்.

இரவும்,அடுத்தைரண்டு நாட்களும்கூட இப்படியேதான் போச்சு.வழக்கமான எண்ணைக்குளியல்

சூப்பரா வாக்கிங்க் உக்காந்த இடத்தில் சூடு, சூடா நல்ல ருசியான சாப்பாடுன்னு போயிண்டு

இருக்கு. நல்ல ஒரு அனுபவம் கிடைச்சுண்டு இருக்கு. நல்லா ரசிச்சுண்டு இருக்கேன்.

அடுத்த நாள் டிஸ் சார்ஜ் ஆகணும். அப்பாடான்னு இருந்தது. நானும் தேங்கா நாரை

ஸாஃப்ட் பண்ணிண்டேன். என்னால் வெட்டவெளிலல்லாம் குளிக்க முடியாது. டாய்லெட்

ரூம்லகுளிக்கரேன்னு உமா விடம் சொன்னேன். இருங்கோ அங்க ஒரு ரூம்ல விறகு அடுப்பு

அலுமினியகுண்டான் எல்லாம் இருக்கு வென்னீர் போட்டுத்தரேன்னா.




குண்டான்லதண்ணி பிடிச்சு விறகடுப்பை ஏத்த தெரியாம கண்ணும் மூக்கும் சிவக்க அடுப்பு

ஊதி,ஊதி ஒருவழியா அடுப்பை பத்தவச்சுட்டா. குண்டானை அடுப்பில் ஏத்தினா அடுப்பு அணைஞ்சு

அணைஞ்சு போயிண்டே இருந்தது. முதல்ல காரணமே தெரியலை. அப்பரம் பாத்தா குண்டான் ஓட்டை

அதிலேந்து தண்ணி லீக் அடிச்சு அடுப்பில் விழுந்து அடுப்பை அணைக்குது. கொஞ்சம் புளி எடுத்து

பானையின் ஓட்டை அடைத்து வென்னீர்போட்டுட்டா.ரெண்டு ப்ளாஸ்டிக் பக்கெட்களில் கலந்து

தெங்கா நாரால் தேய்த்து குளியல். குடிக்க, குளிக்க வென்னீர்தான் என்று சொல்லிட்டார்.

அப்பாடா கொஞ்சமே கொஞம் ஃப்ரெஷ் ஆனேன். புடவை போட்டுண்டு வைத்யரிடம் போயி

பண விஷயம் செட்டில் பண்ணினோம். ரூமிற்கு ஒரு நாள் வாடகை 50 ரூபாதான்.

வீட்டுக்குப்போனாலும் தொடர்ந்து3 மாசம் குறைந்தது ரெண்டு நேரமும் உடம்பு பூரா வும்

எண்ணை தேய்ச்சுக்கணம். பத்தியம்னு ஏதும் கிடையாது. உங்க வயசு+ ப்றாப்ளம் ரொம்ப

வருஷமா இருக்கு.அதனால குணம் தெரிய டைம் எடுக்கும். கொஞ்சம் பொறுமையா இருங்க

என்றார்.3 மாசத்துக்குண்டான 3 பாட்டில் எண்ணையும் தந்தார். காலி ஆயிடுத்துன்னா தெரிய

படுத்துங்க கூரியரில் அனுப்பி வைக்கிரேன் என்றார்.எண்ணைக்கு விலை அதிகம் தான்.




ஆனா கொடுக்கலாம்.எண்ணை தயார் செய்வதில் எத்தனை பேரின் உழைப்புகலந்திருக்கு.

வலி என்று வருகிரவர்களின் வலிகுறைக்கத்தானே இவர்கள் இவ்வளவு பாடு படுகிரார்கள்.

மத்யானம் என்மகன் கால்டாக்சி கொண்டு வந்தான்.கிளம்பியாச்சு. மிகவும் சாந்தமான

அமைதியான இடம். நம் வீடு போயாச்சுன்னா,இருக்கவே இருக்கு, மிஷின்லைஃப்.

50, 55 வயதில் வந்திருக்க வேண்டியது. குடும்ப பொறுப்புகளிலிருந்து விடுபட்டு இங்க

வர இப்பதான் முடிந்தது.அது டூ லேட்




இந்தபதிவு படிக்கத்தொடங்கியதிலிருந்தேஎல்லாருமே வலி குறைந்ததான்னுதான் கேட்டார்கள்.

சரியா சொல்லணும்னா 100% ரிலீஃப் கிடைக்கலைதான். ஆனா நல்ல அனுபவங்கள் நிறையவே

கிடைத்து அதை உங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

பரணீயம்(5)

பரணீயம்(5)

                                               


மறு நா காலையும் அதேபோல வைத்தியர் நல்ல ஒவ்வொருவருக்கும்

அழுத்தி, அழுத்தி எண்ணை மாலிஷ் பண்ணிவிட்டார். என்னிடம் என்னாச்சு

இன்னும் வலி தொடங்கலியா? எனக்கே ஆச்சரியமா இருக்கு. 24 மணி

நேரத்ல எண்ணை தன் வேலையைக்காட்ட தொடங்கிடுமே. உன்விஷயத்ல

ஏன் இப்படி ஆகுது? உனக்கு காங்கை சரீரமான்னு கேட்டார். ஆமா எனக்கு

காங்கை சரீரம்தான். உடம்பு எப்பவுமே சூடா தான் இருக்கும். என்ரென்.

ஆங்க்!!!!!!!!!1 அதனாலதான் இப்படி ஆகுதுன்னார். அப்ப எனக்கு சரி ஆகவே

ஆகாதான்னு கேட்டேன். அது எப்படி சரி ஆகாமப்போகும்.னான் விட்டிடிவேனா?

பரணீயம்(1)

 40   வயசுலேந்து இந்தமுட்டிவலி ப்ராப்ளம் பாடா படுத்தி எடுத்தது.
                             யாரு என்ன வைத்தியம் சொன்னாலும் கேக்கெலாம்னு தோணிடும்.
                             2 வருஷம் முன்ன ஈரோட்ல  மகன் வீட்டுக்குப்போயிருந்தேன்.
                             மருமகளின் அக்கா திருவனதபுரத்தில் இருக்கா. அங்க ஒரு ஆயுர்வேத
                             வைத்தியர் இருப்பதாகவும் முட்டிவலியை குணப்படுத்துவதாகவும்
                             சொன்னா. அதையும்தான் என்னதுன்னு பாக்கலாமேன்னு கிளம்பினோம்.
                             திருவனந்தபுரம் ஸ்டேஷனிலிருந்து கிட்டட்தட்ட 30. 40 கிலோமீட்டர் உள்ள
                             தள்ளி இருந்தது, நாங்க போகவேண்டிய இடம். ஆட்டோ ஏற்பாடு பண்ணியிருந்தா.
                             வைத்தியரிடம் காலி வயிற்றுடந்தான் போகனுமாம். அதனால எதுவுமே சாப்பிடாம
                             ஸ்டேஷனில் இருந்து8 மணிக்கு கிளம்பி ஆட்டோவில் ஒன்னரை மணி நேரம்
                             பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...