Pages

Back to Top

எதிர்காலம்?



நாங்க ஜபல்பூரில் இருக்கும்போது அக்டோபரில் ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்து
சந்த்ராபூர் போகும்படி ஆனது. குழந்தைகள் எல்லாரோட ஸ்கூல் திறந்து 5
 மாதம்ஆனநிலையில்ட்ரான்ஸ்பர்.பெரியமகன்11வதுபடித்துக்கொண்டிருந்தன்.
 வீட்டுக்காரர் ஆர்டினன்ஸ் பேக்டரியில் வேலை. எங்கமாத்தினாலும் பேக்டரி
ஸ்கூலில் இடம் கொடுத்து விடுவார்கள். அதனால எல்லாரையும் கூட்டிண்டு
 கிளம்பினோம்.போன இடத்திலும் அதிக கஷ்டப்படாமல் ச்கூலிலும் சேர்த்து
விட்டோம். ஜபல்பூர் மத்யபிரதேஷ். அங்க ப்யூர் ஹிந்தி மெயி்ன் சப்ஜெட்.
சந்த்ராபூர் மஹாராஷ்ட்ரா. மராட்டி மெய்ன் சப்ஜெட்.. நல்லவேளை குழந்தை
கள் எல்லாருமே நல்லா படிக்கரவங்கதான். 5மாசத்துல ம்ராட்டியும் பிகப்
பண்ணிண்டுவாங்க.






முழுபரீட்சையில் எல்லாருமே 80% க்கு மேலே எடுத்து பாஸ் பண்ணிட்டாங்க.
11-வது படிக்கும் மகன் 88% வாங்கி அந்த ஸ்கூலிலேயேமுதலாவதாகவந்தான்.
அதுவரை எல்லாமே ஸ்மூத்தாகப்போனது. அடுத்த க்ளாஸ் அட்மிஷனுக்காக
இவர் ஸ்கூல் போனப்போ.எல்லாரோடபோனவகுப்பின் மார்க் லிஸ்ட் கேட்டா
இவரும் எல்லாம் சரியாக கொடுத்தார். பாக்கி நாலு பேருக்கும் ஈசியா அடுத்த
க்ளாசுக்கு அட்மிஷன் கொடுத்துட்டா.பெரியவன் டர்ன் வந்தப்போ அவன்10-
வது மார்க் லிஸ்ட், 11, மார்க் லிஸ்ட் எல்லாம் பாத்துட்டு, வெரி,க்ளவர் பாய்
என்றுசொல்லிட்டு, சார் 10-வது ஸ்கூல் மார்க் லிஸ்ட்னா இருக்கு. போர்ட்
எக்சாம் கொடுக்கலையா? என்றார்.




இல்லை இவ்வளவு நாள் ஜபல்பூர்ல படிச்சான். இப்ப இங்கவந்து 5-மாசம்தான்
ஆகுது என்றார். ஓ.ஜபல்பூர்னா அது எம்,பி, ஸ்டேட் இல்லியோ?அங்கெல்லாம்
11-வதுன்னா S.S,C போர்ட் எக்சாம். ஏன்பாதில இங்க கூட்டி வந்தீங்க? இங்க
அதாவது மஹாராஷ்ட்ராவில் 10+2-ஸிஸ்டம். 10-வது போர்ட் எக்சாம் எழுதி
இருந்தாதான் 12-வது போர்ட் எழ்தமுடியும்.இல்லைனா 11-வதாவது போர்ட்
எழுதி இருக்கணும். இப்ப 12-வதுக்கு அட்மிஷன் கொடுக்கமுடியாது.ஒன்னு
இங்க10படிச்சுபோர்ட்எழுதசொல்லுங்க.வேரவழியேஇல்லைன்னுசொல்லிட்டர். எங்களுக்கு ரொம்ப டெஷன் ஆச்சு.எப்படியும் 10-வது போர்ட் எழுதித்தான்
ஆகணும் என்று ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா நாங்க என்ன செய்ய. எங்களுக்கும்
எம்,பி, யில் 11 போர்ட்,மஹாராட்ராவில் 10+2 ஸிஸ்டம் என்பதெல்லாம் முத
லிலேயே தெரிந்திருக்கலை.




பையனிடம் சொன்னோம். அவன் ரொம்பவே அப்செட் ஆனான். என்னப்பா
இப்படி சொல்லராங்க? 11-ல பெயிலானாகூட திரும்ப 11 தான் படிக்க சொல்வாங்க. ஸ்கூல் ஃப்ர்ஸ்ட் வந்துட்டு ஒருக்ளாஸ் கம்மியா படிக்கனுமா? என்கூட படிச்சவங்கல்லாம் 12 போவாங்க நான் 10-வதா? எப்படிப்பான்னு
ஓன்னு ஒரேஅழுகை. அவனை சமாதானப்படுத்தவே முடியலை.எனக்கு
ரொம்ப ஷேமா இருக்குப்பான்னு சொல்லிண்டே இருந்தான். வேர என்னதான்
 பண்ணமுடியும் மாறி, மாறி அவனை சமாதானப்படுத்தி 10-வது அட்மிஷன் வாங்கி நோம். ஃப்யூச்ச்ர்க்கு அதுதான் சரியா இர்க்கும்.எப்படியோ ஒழுங்கா
ஸ்கூல் போய் வந்தான்.ஆனா அவன் சந்தோஷமே கானாம ப்போயிடுத்து.




மராட்டிவேறு ரொம்ப தொந்தரவு கொடுத்தது. அப்படியும் 10-வது ரிசல்ட் வந்த
போது95% வாங்கினான். எங்களுக்கும் நல்ல திருப்தியே.ஸ்கூலிலும் நல்ல
பாராட்டுக்கள்.இப்போ திரும்பவும்11, அப்பரம் 12, படிக்கணும். எவ்வளவு வருஷம் வேஸ்ட். மனசளவுல எவ்வளவு அப்செட்.15, 16, வயசில் இருக்கும்
ஒரு டீன் ஏஜ் பையனுக்கு மனசுக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும்? நல்ல
 வளர்ப்பு, நல்ல பையனாக இருந்ததால் நல்ல மார்க் எடுத்துட்டான். அப்பரம்
அடுத்தக்ளாசுக்கு அட்மிஷன் வாங்க வேண்டாம்னுட்டான். எங்களுக்கு
அதிர்ச்சி. என்னடா இப்படி சொல்ராய்.என்ரால் இல்லைப்பா எனக்கு படிப்பு
மேலயே வறுப்பா இருக்கு. உங்க ஆபீசில் வேலை வாங்கி தாங்க, நான் இனி
 வேலைக்குப்போரே.இனிமேலபடிக்கமாட்டேன்னுதீர்மானமாசொல்லிட்டான்.




என்னடா இப்படி சொல்ராய் படிப்புதான் உனெதிர்காலதுக்கு நல்லது.படிக்க
மாட்டேன்னுல்லாம் சொல்லாதேன்னு எவ்வள்வோ நல்லதனமா சொல்லிப்
பாத்தும் அவன் கேக்கவே ரெடி இல்லை. அவன் இவ்வளவு பிடிவாதமாஇருக்
 கான்னா, அவனுக்கு கிடைத்த அனுபவம் அவனை அப்படிநினைக்கவச்சுடுத்து.
சரின்னு ஆபீசில் அப்ரெண்டீசுக்காக ஏற்பாடு பண்ணினார்.அதுக்கும் ரிட்டர்ன்
டெஸ்ட், இண்டர்வ்யு எல்லாம் வைத்து, திறமை இருந்தால் தான் சேர்த்துக்
 கொள்வார்கள். டெஸ்ட்ல எல்லாமே டாப் மோஸ்டா பாஸ் பண்ணிட்டான்.
மொத்தம் அவன்கூட 8 பையன்கள் இண்டெர்வ்யு செய்து அப்ரெண்டீசாக செலக்ட் ஆனார்கள். மத்தபசங்களுக்கு 3- வருஷம் கோர்ஸ். இவன் நல்லா
 பெர்ஃபார்ம் பண்ணினதால மில்ரைட் செக்‌ஷனில் 4 வருஷ கோர்ஸ் கொடுத்
தார்கள்.




வேலைக்கும் விருப்பமாகவே போய்வந்தான் ,ஸ்டைஃப்ண்ட்250 கொடுத்தா.
ஒரே ஆபீசில் அப்பா ஆபீசர், பையன ஒர்க்கர். காக்கி ட்ரெஸ்ஸில் மகன்
ஏழே கால் சங்கு ஊதினதும் சைக்கிளில் கிளம்பிடுவன். கயில் லஞ்ச் 7, 8,
சப்பாத்தி,பாஜி கட்டிக்கொடுப்பேன். இவர் 8 மணிக்கு ஸ்கூட்டரில் போவார்.
 12-மணிக்கு கேரியர்வாலா வந்து இவருக்கு லஞ்ச் கொண்டு போவான்.
 இப்படி அமைதியா 3 வருஷம் போச்சூ. 3 வருஷம் முடித்த அப்ரெண்டிஸ்
பையன்களுக்கு சூப்பர்வைசராக ஆபிசிலேயே வேலைக்கு எடுத்துக் கொண்ட
னர். ஆபீசிலேயே ஒரு ரூல் இருந்தது. அப்ரெண்டீஸ் களை அங்கியே வேலைக்க்கு எடுத்துக்கணும் என்று. இவனோடு 4 வருஷமும் முடிந்தது.
அந்தவருஷம் பாத்து அந்தரூல் கேன்சல் ஆயிடுத்து.




இவனை ஆபீசில் வேலைக்கு எடுத்துக்கலை. மில்ரைட் கொஞ்சம் உசத்தியான
 கோர்ஸ். சின்சியரா வேலை பார்த்தும் ஆபீசில வேலை இல்லைன்னுட்டாங்க.
 என்னன்னு சொல்ல.இவனுக்கு ஏன் இப்படிஎல்லாத்லயும்தடங்கல்ஆயிண்டே
இருக்குன்னு எஙகளுக்கெல்லாம் ரொம்பவேமனசுக்கு பாரமா இருந்தது.
 அவன் மனசு என்னபாடு பட்டிருக்கும்? ஒரு வருஷம் வீட்ல சும்மாவே இருந்தான். எனக்கு ஹெல்ப்பா சமையல் முதல் வீட்டு வேலை கள் எல்லாமும் செய்து தருவான். அந்த காலகட்டத்தில் பேங்க் க்ளர்க் வேலைக்கு
10- வதே போதுமான க்வாலிபிகேஷனாக இருந்தது.கண்ணீல்படும் வேலைக்கு
எல்லாம் அப்ளை பண்ணிண்டு இருந்தான்.ஒருவருஷத்திற்குப்பிறகு ஸ்டேட்
 பேங்கிலிருந்துஇண்டெர்வ்யு கார்ட் வந்தது. நாக்பூர் போயி இண்டர்வ்யூ
அட்டென் பண்ணிட்டு வந்தான்.




அதில் செலக்ட் ஆகி ஹெல்த் செக் அப்புக்கு ஒரு நாள் கூப்பிட்டா. எல்லாம்
 ஆச்சு இனி வேலைக்கு சேரும் ஆர்டர்தான் வரணும்னு குஷியா இருந்தான்.
ஹெல்த் செக்கப் ஆனதும் ஒரு பேப்பரில் அவனையே ஃபில் அப் பண்ணி
தரசொல்லி இருக்கா. என்குழந்தைகள் யாருமே எதுக்காகவும் பொய்யே
பேசமாட்டா. ஹெல்த் பேப்பரில் எனக்கு ஒருகாதுல கொஞ்சம் டிஃப்க்ட்
இருக்குன்னு சின்சிய்ரா எழுதிக்கொடுத்திருக்கான்.உன்மையில் ஒருகாது
கொஞ்சம் கம்மியாதான் கேக்கும்.அவனுக்கு. அந்தபேப்பரைப்பார்த்த பெரிய
ஆபீசர் பேங்க் உத்யோகத்துக்கு உடம்புல எல்லா பார்ட்டும் பர்ஃபெக்டா இருக்
கணும். அதுவும் மெயினாகாதும் கண்ணும்குறையில்லாம இருக்கணும்.
 எல்லா டெஸ்டிலும் பாசாயிட்டு ஹெல்த் செக் அப்பில் ரிஜெக்ட் பண்ண
 வேண்டியிருக்கு சாரின்னு சொல்லிட்டா.




வீட்டுக்குவந்து ஒரே அழுகை எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குதுன்னு
 விசும்பி, விசும்பி அழரான்.எப்படி அவனை சமாதானப்படுத்துவதுன்னே தெரியலை.

19 comments:

Asiya Omar said...

லஷ்மிமா,உணர்ர்ச்சியை கொட்டி எழுதற உங்க எழுத்து சூப்பர்.நான் இனி உங்க பரமவிசிறி..எல்லாரும் இலக்கியம் படைக்கப்போறேன்னு சொல்றாளே,நீங்க சத்தம் காட்டாம இலக்கியமாக படைச்சிட்டிருக்கேள்.நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் எழுதுங்க,அப்படியே திரும்ப சின்ன பிழை திருத்தம் இருக்கான்னு சரி பார்த்து போஸ்ட் செய்யுங்கோ.

கோமதி அரசு said...

இறைவன் அதைவிட நல்ல வேலை கொடுத்தாரா?

இராஜராஜேஸ்வரி said...

மகனுக்கு நேர்ந்த இன்னல்கள் மனதுக்குச் ச்ங்கடமாக் இருக்கிறது.

Chitra said...

ஹெல்த் பேப்பரில் எனக்கு ஒருகாதுல கொஞ்சம் டிஃப்க்ட்
இருக்குன்னு சின்சிய்ரா எழுதிக்கொடுத்திருக்கான்.உன்மையில் ஒருகாது
கொஞ்சம் கம்மியாதான் கேக்கும்.அவனுக்கு. அந்தபேப்பரைப்பார்த்த பெரிய
ஆபீசர் பேங்க் உத்யோகத்துக்கு உடம்புல எல்லா பார்ட்டும் பர்ஃபெக்டா இருக்
கணும். அதுவும் மெயினாகாதும் கண்ணும்குறையில்லாம இருக்கணும்.
எல்லா டெஸ்டிலும் பாசாயிட்டு ஹெல்த் செக் அப்பில் ரிஜெக்ட் பண்ண
வேண்டியிருக்கு சாரின்னு சொல்லிட்டா.

...That is sad news!

vanathy said...

நல்ல பதிவு, ஆன்டி. கொஞ்சம் வருத்தமா கூட இருக்கு படிக்க. எனக்கும் இப்படி ஒரு அனுபவம் 10 ஆவது படிக்கும்போது ஏற்பட்டது. அதன் பிறகு படிப்பில் மிகவு வெறுத்துப் போனேன்.

அமைதி அப்பா said...

நல்ல பகிர்வு. சீரியல் மாதிரி முடிச்ருக்கீங்க மேடம். அடுத்தப் பகுதிப் படிக்க காத்திருக்கிறோம்.

TamilRockzs said...

மிகவும் வேதனையான விஷியம் தான் அம்மா , நான் கூட எப்போதும் நினைப்பேன் , ஏன் இந்த கல்வியில் இந்தனை வித்தியாசங்கள்? நாடு முழுவதும் ஒரே கல்வி முறை இருந்தால் இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் வராது . அனைவருக்கும் சமமான கல்வியும் கிடைக்கும் . எல்லாம் அரசியல் வாதிகள் கையில் மட்டும் மல்ல , மக்களிடையும் விழிப்புணர்வு வர வேண்டும் . . .
நீங்க கவலை பாடங்க அம்மா உங்க பையன் புத்திசாலி , இந்த பேங்க் வேலை இல்லை என்றல் என்ன இதை விட சிறப்பான வேளையில் கூடிய சீக்கிரம் சேருவார் . . .
தங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர் அழகா பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தி வருகிறீர்கள்.எப்படி எமோஷனலா
எழுதும்போது நம்மை அறியாம சின்ன
சின்னதா ஸ்பெல்லிங்க மிஸ்டேக் வந்து
டுது. அதையும் நீங்க யாரும் சுட்டிக்காட்டும்போதுதான் கவனத்திலேயே வருது. இனி கவனமா இருக்கேன்மா.

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு ஆமாம்மா.

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

சித்ரா சின்சியரா இருப்பதினாலும் சில சங்கடங்கலை சந்திக்கத்தானே வேண்டி இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

வானதி உனக்கு என்ன அனுபவம் பகிர்ந்து கொள்ளுங்க.

குறையொன்றுமில்லை. said...

வானதி உனக்கு என்ன அனுபவம் பகிர்ந்து கொள்ளுங்க.

குறையொன்றுமில்லை. said...

அமைதி அப்பா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

தமிழ்ராக்ஸ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எல்லா இடங்களிலும் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாரபட்சமே இருக்கக்கூடாதுதா.

வெங்கட் நாகராஜ் said...

ஒரே நாட்டிற்குள், ஒவ்வொரு மாநிலத்திலும் பல வித்தியாசங்கள் கல்வி முறையில்! இது எல்லாம் படிக்கும் குழந்தைகளைப் படுத்தும் என்பதை எவருமே புரிந்து கொள்வதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்! தொடரட்டும் அம்மா உங்கள் அனுபவப் பகிர்வுகள்!

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நாமெல்லாம் இந்தியர்கள்.!!!!!!1

நிரூபன் said...

எல்லா டெஸ்டிலும் பாசாயிட்டு ஹெல்த் செக் அப்பில் ரிஜெக்ட் பண்ண
வேண்டியிருக்கு சாரின்னு சொல்லிட்டா.//

உங்களது கதை சொல்லும் பாணியுடன் ஒன்றிப் போய் விட்டேன், மிகவும் அழகாக உங்கள் மகனின் உயர்விற்கான காரணங்கள், அவர்கள் முன்னேறியதற்கான முயற்சிகளைச் சொல்லி வந்த நீங்கள் இறுதியில் ஹெல்த் செக் அப்பினைக் காரணம் காட்டி ரிஜக்ட் ஆகியதைச் சொல்லி எங்கள் விழிகளையும் ஒரு கணம் நிமிர்த்திப் பார்க்கச் செய்து விட்டீர்கள்..


அருமையான வரலாற்று அல்லது வாழ்க்கைப் பதிவி.

குறையொன்றுமில்லை. said...

நிரூபன் உங்க கருத்தை மிக அழகா சொல்லியிருக்கீங்க. நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...