Pages

Back to Top

ஹெல்த் கேர்(3)ஆஸ்பிடலில் இருந்து எப்படா வீட்டுக்கு போலாம்னு ஆச்சு.ஸ்பெஷல் வார்ட் 

வந்ததும் டாக்டர் வேர பெரிய ஆஸ்பிடல் போயி ஆஞ்சியோ டெஸ்ட் எடுக்க

சொன்னார். நான் கேட்டேன் அதனால என்னாகும் என்று.இல்லைமா 

எங்கல்லாம் ப்ளட் க்ளாட் ஆகிஇருக்குன்னுதெரியவரும்அதுக்குத்ததகுந்தாப்ல

ஆஞ்சியோ ப்ளாஸ்டோ பைபாஸொ பண்ணிடலாமென்றார். அது எதுக்குன்னு

திரும்பவும் கேட்டேன். என்னம்மா இப்படி கேக்குரீங்க. ரெண்டு அட்டாக் ஒரே 

சம்யம் ஆகி அதிர்ஷ்ட வசமா நல்லபடியா பிழைச்சு வந்திருக்கீங்க.ஹார்ட் 

ரொம்ப வீக்கா இருக்கு. இந்தகண்டிஷன்ல இன்னும் ஒரு 5 வருஷம்தான் நீங்க

உசிரோட இருக்க முடியும். பைபாஸ் பண்ணிகிட்டா கூட் ஒரு 10 வருஷம் 

இருப்பீங்க என்றார். அப்போ இவ்வளவு மருந்து மாத்திரை எல்லாம் தேவை

இல்லியான்னேன். டாக்டர் சிரிச்சுகிட்டே இன்னமும் கூடவே மருந்து 

மாத்திரைஎடுத்துக்க வேண்டி வரும் என்றார்.
எப்படியும் மருந்துமாத்திரை லைஃப்லாங்க் எடுத்துக்கத்தானே வேணும் 

 நான் என் வாழ்க்கையில் எல்லா அனுபவங்களையும் பாத்தாச்சு.கஷ்டம், சுகம்

 அழுகை சிரிப்பு என்னல்லாம் உண்டோ எல்லாத்தையும் பாத்துட்டேன் 

போதாததற்கு இப்ப  ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பிடல் அனுபவமும் 

பாத்தாச்சு. நிறைய நாள்  இன்னமும் உயிரோட இருக்கனும்னு எல்லாம் ஆசையே இல்லை

எனக்கு 5வருஷமே அதிகப்படிதான். பகவான் இந்த நிமிஷம் என்னை அழைச்

சுண்டா கூட நான் இப்பவே ரெடிதான். நிறைய நாட்கள் எல்லாம் எனக்கு 

வேண்டவே வேண்டாம். அதனால ஆஞ்சியோ டெஸ்டெல்லாம் 

வேண்டாம்னு கட் &; ரைட்டா சொன்னேன். டாக்டர் என் மகனிடம் என்ன 

ஆச்சர்யமான அம்மா இவங்க. எல்லாருமே பேரக்குழந்தைகள் கல்யாணமாகி 

அவங்ககுழந்தைகளையும் பாக்கணும்னு ஆசைப்படுவாங்க. இவங்க 

என்னடான்னா இப்பவே மேல போக ரெடிங்கராங்களே.
சரிம்மா நான் எவ்வளவு சொல்லியும் கூட கேக்க மாட்டீங்கரீங்க. உங்களை

கம்பல் பண்ணமுடியலை.ஆனா ஹெல்த் கேர் ரொம்ப முக்யம் அதை நினை

வில் வச்சுக்கோங்க.மகன் கூடவே இருங்க .தனியா இருக்க வேண்டாம் என

ஒரே அட்வைஸ் மழைதான். ஒரு வழியா 6 வாரங்களுக்குப் பிறகு மகன் வீடு

கூட்டிண்டு போனான்.அப்பாடான்னு இருந்தது.மருமகள், பேரக்குழந்தைகள்

இனிமையாக வரவேற்பு கொடுத்தார்கள். சமையல் முதல் கொண்டு எல்லா

வேலை களுக்கும் வேலைக்காரிகள் இருந்தார்கள்.
மகன் காலை 7 மணி ஆபீஸ் போனா இரவு 8, அல்லது9 மணிக்குத்தான் 

வருவான். குழந்தைகளும் பெரிதானபடியால் அவங்க படிப்பு, 

அவங்கஃப்ரெண்ட்ஸ் நு அவங்க பிசி.காலையில் ஒரு குட் மார்னிங்க்,இரவு

ஒரு குட் நைட், மகனும் இரவு வந்து சாப்பிட்டீங்களா, மருந்து 

எடுத்துக்கிட்டீங்களான்னு ஒரு விசாரிப்பு.மருமகளும் என்னை தொந்திரவு 

செய்யக்கூடாதுன்னு நிறைய பேச்சு கொடுக்கமாட்டா. வேளா வெளைக்கு 

எல்லாம் ரெடி, ரெடியா கையில் கொண்டு தந்திடுவா. முதல் மூணு மாசம்

ரொம்பவே டயட் கண்ட்ரோல், காலை ஓட்ஸ், மதிய சாப்பாட்டில் ,தேங்காய், 

எண்ணை, நெய் ஃபேட் ஐட்டம் எதுவும் சேர்க்காமல் உப்பு சப்பில்லாம ஒரு

சாப்பாடு. இரவும் 7 மணிக்கே லைட்டாக மோர்விட்டுகரைத்து ஒரு பிடி 

ச்சோறு. இதுக்குமேல வேளைக்கு8 மாத்திரைகள்.(கொடுமை).
எருமைப்பால் கொழுப்பு நிறைந்தது என்று எனக்கு மட்டும் சோயா பாலில்

ஓட்ஸ், பால் எல்லாம். மருந்தும் மாத்திரையும் நிறையாஎடுத்துக்கொள்வதால்

வாய்க்கு எதுவுமே ருசியே தெரியாது. ஒரு வேலையும் இல்லாம சாப்பிட், 

சாப்பிட்டு தூங்கி எழுந்து என்று கிறுக்கு பிடிச்சாமாதிரி ஆச்சு. நடக்க, 

பிராணாயாமம் பண்ண எல்லாத்துக்குமே டாக்டர் தடா போட்டுட்டார்.

3 மாசம் பல்லைக்கடிச்சுண்டு இருந்துட்டேன். அப்பறம் மகனிடம் மெதுவாக

என்னை அம்பர்னாட்ல கொண்டு விட்டுடு. என்னால இங்க இருக்கமுடியலை.

என்றேன். அவனுக்கு ரொம்ப வருத்தம். உங்களுக்கு என்னம்மா இங்க குறை

ஏன் அங்க போகணும்னு சொல்ரீங்கன்னான்.
பூரா நாளும் என்னால சும்மா உக்காந்து இருக்க முடியாது. என் வேலையை

நான்கவனிச்சுண்டு ஓரளவாவது நடமாடிண்டு இருந்தாதான் சரியா வரும்.

என்ரேன். அம்மா டாக்டர் தனியா இருக்கக்கூடாதுன்னு திரும்பதிரும்ப 

சொல்லி இருக்கார்மா என்ரான். டாக்டர்னா அட்வைஸ் செய்வது அவர்கடமை.

அவர் சொல்ரார்னு எல்லாத்தையும் கேக்க முடியாது.னம்மால எதைசெய்ய 

முடியுமோ அதைச்செய்யணும். நான் கவனமா இருந்துக்கரேன் என்னை அங்க

கொண்டு விட்டுப்பான்னு திரும்பதிரும்ப சொல்லவும் அவன் அரை மனதுடன்

சரி என்றான். என்பசங்க எப்பவுமே என் சந்தோஷம், நிம்மதி, அமைதியை

பெரிசா மதிப்பவங்க. எனக்கு மாறாக எதையுமே செய்ய மாட்டாங்க.

எனக்கு தனியா இருப்பதில்தான் விருப்பம் என்று அவர்கள் எல்லாருக்குமே

தெரியும். அடுத்தவாரமே இங்க கொண்டு விட்டான்.
எந்தேவைகளை கவனித்துக்கொண்டு வெளில போய் வர வேண்டிய 

வேலைகளையும் கவனித்துக்கொண்டு இப்பவும் தனியாகத்தான் இருக்கேன்.

என்ன ஒரு விஷயம்னா, இப்ப உங்க எல்லாருடனும் என் வாழ்க்கையில் நடந்த 

விஷயங்கள் பகிர்ந்துகொள்வதில் என்மனது ரொம்பவே ரிலாக்சா இருக்கு. 

எந்த சுமையோ, பாரமோ மனதில் சுத்தமாக இல்லை.என் எழுத்தைப்

படிக்கும் உங்களுக்கெல்லாம் எந்தவித பிரயோசனமும் இல்லாம இருக்கலாம்.

ஆனா ப்ளாக் எழுதுவது என் மனதுக்கு ரொம்ப டைவர்ஷனா இருக்கு.

உண்மையில் குறையொன்றுமில்லைதான்.பொறுமையாக படித்துவரும் உங்க
 
எல்லாருக்கும் தான்  எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

35 comments:

இராஜராஜேஸ்வரி said...

. டாக்டர்னா அட்வைஸ் செய்வது அவர்கடமை.

அவர் சொல்ரார்னு எல்லாத்தையும் கேக்க முடியாது.னம்மால எதைசெய்ய

முடியுமோ அதைச்செய்யணும். /
அனுபவ வார்த்தைகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அனுபவப் பகிர்வும்மா! நம்மால் முடிந்தவரை நம்முடைய வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பது தான் சிறந்தது என்று எங்களுக்கெல்லாம் உணர்த்தும்படி இருந்தது உங்கள் பகிர்வு. நன்றிம்மா!

vanathy said...

என்ன சொல்றதுன்னு தெரியலை? உங்கள் மனத்துணிச்சல் எல்லோருக்கும் வராது. கவனமா மாத்திரைகளை போடுங்கோ, ஆன்டி.

DrPKandaswamyPhD said...

நல்லா எழுதறீங்க. பிரபல பிளாக்கரா ஆகப்போறீங்க. என்னை ஞாபகம் வச்சுக்கோங்க.

கோமதி அரசு said...

//படிக்கும் உங்களுக்கெல்லாம் எந்தவித பிரயோசனமும் இல்லாம இருக்கலாம்.

ஆனா ப்ளாக் எழுதுவது என் மனதுக்கு ரொம்ப டைவர்ஷனா இருக்கு.//

உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு பிரயோசனம் தான்.

மனதுக்கு இதமாக இருக்கும் எழுதுவதை விடாமல் செய்யுங்கள்.

மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இறைவனை வேண்டிக் கொண்டு இருங்கள் நலமாக இருப்பீர்கள்.

வாழ்த்துக்கள்!
வாழக வளமுடன்!
வாழக நலமுடன்!

கோமதி அரசு said...

ஹெல்த் கேர் மூன்று பதிவுகளும் படித்தேன்.

உங்களுடைய மன உறுதி பாரட்டப்பட வேண்டியது தான்.

வலி இருக்கும் போது நேரே ஆஸ்பத்திரிக்கு சென்று இருக்கலாம்.

இறைவன் அருளால் நல்லபடியாக மீண்டு வந்து விட்டீர்கள்.

உடல் நலத்தை கவனமாய் பார்த்துக்கொள்ளுங்கள்.

தனியாக இருக்க விரும்பினால் மகன் வீட்டுக்கு அருகிலேயே வீடு எடுத்து இருந்து கொள்ளுங்கள்.

உங்கள் உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.

Lakshmi said...

இராஜ ராஜேஸ்வரி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

வெங்கட், நன்றிங்க.

Lakshmi said...

வானதி நன்றிம்மா.

Lakshmi said...

Dr PK KandaswamyPhD வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. நானாவது பிரபல பதிவர் ஆவதாவது. ஏதோ மனசுல தோணினதை எல்லாம் உங்க எல்லார் கூடவும் ஷேர் பண்ணிக்கரேன் அவ்வளவுதாங்க. நீங்க எல்லாரும்தாங்க எனக்கு உற்சாக டானிக்கே. உங்களை எல்லாம் மறக்கமுடியுமா. என்னால முடியாதுங்க.

Lakshmi said...

கோமதி அரசு அழகா பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க நன்றிம்மா.

எல் கே said...

உங்களுக்கு அறிவுரை சொல்லும்வயதில்லை எனக்கு . யாரவது ஒருவரைக் கூட வைத்துக் கொள்ளவும். உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளவும்

Lakshmi said...

வருகைக்கு நன்றி கார்த்தி.

Ramani said...

புதிகாக நான் ஏதும் சொல்லவில்லை
உங்கள் பதிவின் நோக்கத்தைதான்
உங்களுக்கு நினைவூட்டுகிறேன்
நாங்கள் எல்லோரும் மகிழ்வுடன் இருக்க
நீங்கள் மகிழ்வுடன் இருங்கள்
தொடர்ந்து சந்திப்போம்
வாழ்க நல்முடன்.

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி.

ஹுஸைனம்மா said...

உங்கள் எண்ணங்கள் புரிகிறது. உங்கள் நிலையில் நான் இருந்தாலும், இதுபோலத்தான் தனியாக இருக்க எண்ணுவேன். எனினும், முன்பு சொன்னதுபோல் (இப்பதிவில் கோமதி அக்காவும் சொல்வதுபோல்)மகன் வீட்டருகில் இருந்தால் சில சிரமங்கள் தவிர்க்கலாம். இப்போ அக்கம்பக்கம் இருப்பவர்கள் உடன் உதவிக்கு வரக்கூடியவர்கள்தானே?

Lakshmi said...

ஹுஸைனம்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா. நான் இருப்பது
அடுக்குமாடி குடி இருப்பு. மொத்தமா 50
வீடுகளிருக்கு. நிறைய பேரு வேலைக்கு செல்பவர்கள். என் தனிப்பட்ட
குணம் என்னன்னா எதுக்கும் யாரோட டிபண்ட்லயும் இருக்கக்கூட்டாதுன்னுதான்.அதுபடியே
இருந்தும் வருகிரேன்மா.

viji said...

Madam, I sulute you.
I am nearing 60,
i have to learn a lot from you.
viji

வல்லிசிம்ஹன் said...

அன்பு லக்ஷ்மி உங்கள் சுதந்திர குணத்தைப் போற்றூகிறேன். டாக்டர் சொன்ன அறிவுரைகளின் படியே நீங்கள் இருப்பீர்கள் என்ற எண்ணமும் எனக்குத் தெரிகிறது நன்றாக இருங்கள் ஜாக்கிரதையாக இருங்கள். இறைவன் உங்களுக்கு எல்ல வித நன்மைகளையும் வலி இல்லத வாழ்வையும் கொடுக்கட்டும். உங்கள் அனுபவங்கள் எங்களுக்குப் பாடங்கள்.

Lakshmi said...

வல்லி சிம்ஹன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க குறையொன்றுமில்லை பக்கமும் வாங்க.கருத்து சொல்லுங்க.

Lakshmi said...

விஜி, இப்பதான் உங்கபக்கம் போயி கமெண்ட் போட்டுட்டுவந்தேன். க்ராஃப்ட்
ஒர்க் பாத்ததும் நீங்க சின்னப்பொண்ணுனு நினைச்சேன். நீங்களும் சீனியர் சிட்டிசன் தானா என்னைவிட 4 வயசுதான் கம்மி.
இப்பகூட கைவேலை எல்லாம் நல்லா பன்ரீங்களே. குட்.

angelin said...

லக்ஷ்மிம்மா உங்க எழுத்துக்களை வாசிக்கும்போது நீங்க எங்களோட பேசற மாதிரியே இருக்கு.take care of yourself.
நீங்க எப்பொழுதும் நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Lakshmi said...

ஏஞ்சலின், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

அமைதி அப்பா said...

//என்ன ஒரு விஷயம்னா, இப்ப உங்க எல்லாருடனும் என் வாழ்க்கையில் நடந்த

விஷயங்கள் பகிர்ந்துகொள்வதில் என்மனது ரொம்பவே ரிலாக்சா இருக்கு.//

அம்மா நிறைய சொல்லுங்க(நீங்க, எங்களிடம் பேசுவது போல் உள்ளது உங்கள் எழுத்து) கேட்க நாங்கள் தயார்.
நன்றி.

Lakshmi said...

அமைதி அப்பா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

radhakrishnan said...

(cont)you r simply greatஅம்மா.
சாஸ்திரங்களில்சொல்லியபடிdetatched
attachmentஓடு இருக்கிறீர்களே.எப்படி
யம்மாமுடிகிறது?சிறந்த உதாரணமாக
இருக்கறீர்கள்.வயதான என் உறவினர்களுக்குஉங்கள் பதிவை படித்துக்
காட்டவேண்டுமென்றிருக்கிறேன்.வாழ்க்
கையில்களவும்கற்றுமற என்பதுபோல
எல்லாவற்றையும்சுவைத்துவிட்டு
ரெடியாக இருக்கிறூர்கள்.என்ன ஒரு பக்குவம்.i wish to follow u exactly.
நன்றி அம்மா.

Lakshmi said...

ராதாகிருஷ்னன், என் பழைய பதிவெல்லாம் தேடிப்பிடித்து படித்து அழகாக பின்னூட்டமும் கொடுத்துவரீங்க. உங்க வீட்டு பெரியவங்களுக்கும் படிச்சு காட்டுங்க நம்ம பதிவு நாலு பேருக்கு உபயோகமா இருந்தா நல்லதுதானே. நீங்க மதுரையா என்முதல் மறுமகள் வீடு மதுரையில் இருக்கு. ஜனவரில அங்க வருவேன்.

Lakshmi said...

ராதாகிருஷ்னன், என் பழைய பதிவெல்லாம் தேடிப்பிடித்து படித்து அழகாக பின்னூட்டமும் கொடுத்துவரீங்க. உங்க வீட்டு பெரியவங்களுக்கும் படிச்சு காட்டுங்க நம்ம பதிவு நாலு பேருக்கு உபயோகமா இருந்தா நல்லதுதானே. நீங்க மதுரையா என்முதல் மறுமகள் வீடு மதுரையில் இருக்கு. ஜனவரில அங்க வருவேன்.

radhakrishnan said...

சகோதரி,
நான் முதலில் பதிவிட்ட பின்னூட்டம்
உங்களுக்கு வரவில்லை.தொடர்ச்சிமட்டும்கிடைத்துள்ளது.இன்றுஉங்கள் ஹெல்த்கேர் 3பதிவுகளும் படித்ததும்மிகவும் அ
திர்ச்சி யாகஇருந்த்து.இதில்மீண்டுவந்தது
உங்களுக்குமறுபிறவிதான்.ஆனல் இதுபற்றிநீங்கள்பெருமகிழ்ச்சியடைந்ததாகத்தெரியவில்லை.ஈஸியாகஎடுத்துக்
கொண்டுள்ளீர்கள்.இதுஎங்களுக்குஒரு
பாடம்தான்.டாக்டர் யோசனைகளையும்
புறந்தள்ளியுள்ளீர்கள்.நல்ல மனதிடம்

Lakshmi said...

ராதாகிருஷ்னன் உங்க பின்னூட்டம் எதெல்லாம் எனக்கு வருதோ எல்லாத்துக்குமே உடனே பதில் கொடுக்கரேனே. நானொன்னும் தைரிய சாலில்லாம் கிடையாது.

radhakrishnan said...

சகோதரி,
நான் மதுரையேதான்.உங்கள்மருமகள்
வீடுஎங்குள்ளது?நீங்கள்வருவதுபற்றி
மிகவும்சந்தோஷம்.நான்வந்துபார்க்கிறேன்சமீபத்தில்நெல்லைவரும்வழியில் மதுரை
ரயில்நிலயத்தில்பதிவுலகநண்பர்களை
பார்த்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள்.நான்பதிவுலகிற்கு
மிகவும்ஜூனியராகையால்உங்கள்வருகைபற்றிதெரியவில்லை.தெரிந்திருந்தால்
நானும்வந்துபார்த்திருப்பேன்.மிஸ்ஆகிவிட்டது.உங்கள்மெட்ரஸபதிவுகளைப்
படித்துவருகிறேன்.அந்தமூதாட்டிகள்
மற்றும்கிணற்றுவீட்டைபடிக்கையில்
உடனேபார்க்கவேண்டும்போலிருக்கிறது
அதுதான்தங்கள்பதிவின்அழகு,வெற்றி.

radhakrishnan said...

சகோதரி,
என்மெயில்i.d.--radhaengr22@gmail.com
உங்கள் மூத்தமகன்போன்எண்.கொடுத்தால் அவருடன்தொடர்புகொள்ளவிரும்புகிறேன்.எதிர்நீச்சல்போட்டேவளர்ந்த அவரைப்பாராட்டவிரும்புகிறேன்.டிகிரி
ஏதும்படிக்கவைக்காமலேசுயமுயற்சியிலேயேமேலேபடித்துமுன்னுக்குவந்துள்ள
உங்கள்குழ.ந்தைகள்எல்லோருமே
பாராட்டுக்குரியவர்கள்தான்.முதலில்
டிப்ளமாபடித்து பின்10ஆண்டுகள்கழித்து
குழந்தையுடன்இனஜினியரிங்டிகிரிபடித்தவன்என்றதகுதியில்கூறுகிறேன்.முன்காலத்தில்இருந்தவாழ்க்கைநெருக்கடியில்
வீட்டில்அதிகம்படிக்கவைக்கமுடியாது.
சுயமுயற்சியில்தான்வரவேண்டும்

radhakrishnan said...

சகோதரி,
மிகவும்சாதுவும்,மிகநல்லவருமான
என்அம்மாபற்றிஎழுதி முதல்பதிவு இட
வேண்டுமென ஆசைப்படுகிறேன்.நடக்கவேண்டும்.
பார்ப்போம்.

Lakshmi said...

ராதாகிருஷ்னன், உங்க மெயில் ஐடி அனுப்பினதுக்கு நன்றி என் பெரியமகன் இப்போ ஈரோடில் இருக்கான் அவன் பேரு கண்ணன அவன் நம்பர்09042349077.பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ராவில் கேஷியரா இருக்கான் அவமனைவிதான் மதுரை. விளாங்குடியில் அவங்க வீடு இருக்கு.உங்க ஒவ்வொரு பின்னூட்டமும் ரொம்ப நல்லா இருக்கு. நீங்களும் உங்க அம்மாபத்தி சீக்கிரமே பதிவு எழுதுங்கோ,

Lakshmi said...

ராதாகிருஷ்னன், உங்க மெயில் ஐடி அனுப்பினதுக்கு நன்றி என் பெரியமகன் இப்போ ஈரோடில் இருக்கான் அவன் பேரு கண்ணன அவன் நம்பர்09042349077.பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ராவில் கேஷியரா இருக்கான் அவமனைவிதான் மதுரை. விளாங்குடியில் அவங்க வீடு இருக்கு.உங்க ஒவ்வொரு பின்னூட்டமும் ரொம்ப நல்லா இருக்கு. நீங்களும் உங்க அம்மாபத்தி சீக்கிரமே பதிவு எழுதுங்கோ,

Related Posts Plugin for WordPress, Blogger...