Pages

Back to Top

புண்ணிய ஷேத்திரம்???!!!!(காசி)

இதுவும் 30 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம்தான். நாங்க அப்போ சந்த்ரபூரில் இருந்தோம். என் அப்பா, அம்மா கிராமத்திலிருந்து வந்திருந்தாங்க.
கடசி தங்கையின் கல்யாணம் கூடி வரலியென்னு ரொம்ப கவலையில் இருந்தாங்க.ஊர்லயே ஒரு ஜோசியரிடம் கேட்டாதுக்கு, அவர் காசி யாத்திரை
போய் வாங்க எல்லாம் நல்ல படி ஆகும்னு சொல்லியிருக்கார். அம்மா என்னிடம்
 சொன்னா. நான் வீட்டுக்காரரிடம் சொன்னேன்.அவருக்கு கூடப்பிறந்தவங்கன்னு யாரும் கிடையாது. என் தங்கை தம்பிகளை அவர் கூடப்பிறந்தவங்களாகவே நினைக்கும் பெரிய மனசு அவருக்கு. அதுக்கென்ன
 போனாப்போச்சுன்னு சொன்னார்.ஆபீசில் 10 நாட்களுக்கு லீவு எழுதிக்கொடுத்தார். வீட்டில் பெரிய பையனும் சின்னப்பெண்ணும்தான் இருந்தார்கள். பையன் வேலைக்கு போயிண்டு இருந்தான்.பெண்ணு ஸ்கூலில் படிச்சுண்டு இருந்தா. நாங்க எங்களைப்பாத்துக்கரோம், நீங்க போயிட்டு வாங்கன்னு சொன்னாங்க.
சந்த்ரபூரில் எக்ஸ்ப்ரெஸ் வண்டிலாம் நிக்காது.  பக்கத்தில்150 கிலோ மீட்டரில் இருந்த நாக்பூர் போய் எக்ஸ்ப்ரெஸ்பிடித்து ரிசர்வ் பண்ணிண்டு காசி கிளம்பினோம்.ஒண்ணரை நாள் பயணம்.  அடுத்த நாள் முதலில் அலகாபாத்தில் இறங்கினோம். அங்கே ஒரு போட் பிடித்து திரிவேணி சங்கமம்
 கூட்டி போகச்சொன்னோம்.ஒருமணி நேரம் போட்டில் சென்று திரிவேணி
சங்கமம் சேர்ந்தோம். உடனே அங்கே உள்ள பண்டாக்கள் எங்களைச்சூழ்ந்து
 கொண்டு, பேரம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். என்ன பரிகாரம் பண்ண வந்திருக்கீங்க எதெதுக்கு என்ன கட்டணம் என்று பட்டியல் போட்டார்கள்.
 நாங்க எந்தபரிகாரமும் ப்பண்ண வல்லை, திரிவேணி சங்கமத்ல சமுத்ர ஸ்னானம் செய்யமட்டுமே வந்திருக்கோம் என்றோம்.அதுக்கும்சங்கல்பம் செய்துண்டுதான் சமுத்ர ஸ்னானம் செய்யமுடியும் அதுக்கு தனி கட்டணம்
என்று காசுலேயே குறியா இருந்தாங்க.

 வேரவழி இல்லாம அவங்க சொன்னகாட்டணம் செலுத்தி(அரைமனதாக)
 சங்கல்ப ஸ்னானம் செய்து மறுபடியும்போட்டில் ஒருமணி நேரம் நதியில்
பயணம் செய்து அலகாபாத் நதிக்கரை அடையணும். வழியில், தலை இல்லாத
உடம்பு, உடம்பில்லாத தலைன்னு நதியி மிதந்து வந்துண்டே இருக்கு.பாக்க
சகிக்கவே இல்லை. போட்காரனிடம் கேட்டோம் என்னப்பாஇதுன்னு. இதெல்லாம் இங்க சகஜம் கண்டுக்காதீங்கன்னு கூலா சொல்ரான்.அவனுக்கு500 ரூபா தட்சிணை கொடுத்துட்டு நல்ல ஹோட்டலா ஏதானும் இருக்கான்னு பாத்தோம் எல்லாமே பெட்டிக்கடை அளவில் சுமாராதான் இருந்தது. அப்பா, அம்மா, சப்பாத்திக்கு பழக்கமில்லை. சாதம்தான் சாப்பிடுவாங்க.சாம்பார்னு பேருக்குஎதையோ கொடுத்தாங்க ஒரே கரம் மசாலாவாடை. சாப்பிடவே முடியலை.

இரவு வேறுவண்டி பிடித்து வாரணாசி போனோம். ரயில்வே ஸ்டேஷனிலேயே பண்டாக்களின் தொல்லை ஆரம்பமாச்சு. நாங்க நேரா
சங்கர மடம் போனோம். அங்கு அன்று ஏதோ விசேஷம்போல இருக்கு இடமே
 கிடைக்கலை. வேறு ஒரு தங்கும் விடுதி தேடி ஒருமணி நேரம் குதிரை வண்டியில் சுற்றினோம். ஊர்பூரா வும் கூட்டமும் அழுக்ககவும் இருக்கு குட்டி
குட்டி தெருக்கள் நிறைய திருப்பங்களுடனிருக்கு.எப்படியோ ஒரு விடுதி
 கண்ணில்படவே நாலுபேரும் அங்கேபோய் ரூம் புக் பண்ணிண்டோம். மறு
 நாள் என் மமனாரின் திதி வந்தது. அதுக்காக ஒரு வாத்யார் கிடைப்பாரான்னு
தேடிண்டு போனோம். வழியில் ஒருவர் கிடைத்தார். அவரிடம் நாளை அப்பாவுக்கு ஹோமம்பண்ணி திவசம் பண்ணனும் என்றார் என் வீட்டுக்காரர்.

அவரும் காலேல யே எங்க வீட்டுக்கு வாங்கோ எஙக் வீட்ல அதுக்காகவே தனியாஒரு ரூம் கட்டி வச்சிருக்கேன் அங்கியே ஹோமம் பண்ணி தெவசம்
 பண்ணிடலாம்னு நம்பிக்கையா சொன்னார். வாத்யாருக்கெல்லாம் நானே
ஏற்பாடுபண்ணிடரேன் நீங்கல்லாம் குளிச்சுட்டு வந்திடுங்கோ என்ரார்,சரின்னு
ரூம்போயி ஆளுக்கு ஒரு ப்ரெட்டும் பாலும் மட்டும் சாப்பிட்டோம். மறு நாள
 அந்தவாத்யார் வீட்டுக்குப்போனோம்.சொன்னபடியே எல்லா ஏற்பாடுகளும் செய்துவைத்திருந்தார். ஒருஸ்டவ் பாத்திரங்கள் அரிசி பருப்பு எல்லாம் தனியாக வைத்திருந்தார். நீங்க சமைக்கரதா இருந்தா நீங்களே இங்கியே சமையல் செய்துடலா.ம் இல்லைனா ஒரு பாட்டியம்மா இருக்காங்க சொல்லி விட்டா அவங்க வந்து தெவச சமையல் எல்லாம் பண்ணீ தந்துடுவாங்க என்ரார்,

வீட்டுக்காரர் தெவசம் போட்டா நான் தர்ப்பை பிடிச்சுண்டு பின்னாலயே நிக்கனுமே எப்படி சமையல் செய்யமுடியும்? அதனால அந்தபாட்டியம்மவைக்கூப்பிட்டு சமையல்செய்யச்சொன்னோம். அவங்களும் உடனே வந்து அப்பம்வடை எள்ளுண்டை முதல் எல்லாமே செய்து தந்தாங்க நம்ம வழக்கம் என்னன்னு கேட்டு எல்லாமே முறைப்படி செய்தாங்க. அவங்களுக்கு தனிரேட்டு, வாத்யார்களுக்கு தனி தட்சிணை. எப்படியோ வீடுக்காரருக்கு அவ அப்பா தெவசம் ஒரு முறையாவது காசில போடணும்னு
 நினைப்பு இருந்தது. அதுக்கு இப்பதான் நேரம் அமைஞ்சது. வாத்யார் சாப்பிட்ட பிறகு காக்கைக்கு சாதம் வைக்கணும்(பிண்டம்). காக்காய் சாப்பிட்ட பிறகுதான் வாத்யார்கள் எழுந்து கை அலம்பலாம்னு ஒரு விதி உண்டு. காக்காய்க்கு பிண்டம் எங்க வைக்கணும்னு நாங்க கேட்டோம். காசில காக்காயே கிடையாது கங்கையிலே போயி பிண்டத்தை கரைச்சுட்டு வாங்க்ன்னு வாத்யார் சொல்லிட்டார். நாங்கல்லாம் காக்கயை பிதிர் ரூபமாகவே பாக்கிரவங்க. தினசரியுமே சமையல் ஆனதும் ஒரு பிடிசாதம் முதல்ல காக்கைக்குத்தான் வைப்போம். இங்க காசில காக்காயே கிடையாதுங்கராரேன்னு நினைச்சுண்டே கங்கையில் போயி கரைத்தோம்

இன்னிக்கு தெவசம் பண்ணினதால கோவில் போகமுடியலை. நாளைதான் காசி விஸ்வனாதர் தரிசனம் பண்ணனும் என்று நினைச்சுண்டே ரூம் போனோம். மறு நாள் காலை சீக்கிரமே எழுந்து குளிக்க கங்கை கரை போனோம். நதிபூரா ஒரேகலங்கலா தண்ணி ஓடுது. நிறைய ”காட்கள்” இருக்கு
அன்மன் காட், மணிகர்னிகாகாட்,இன்னும் நிறைய இப்படி இருக்கு. ஒரு வழியா குளிச்சு ட்ரெஸ்மாத்திண்டு விஸ்வனாதர் கோவில்போனோம்
 நெருக்கடியான தெருக்கள் வழி பூராபசு எருமைகள் நடக்கவே முடியாம ஒரே நெரிசல். பாதா ளத்ல லிங்கவடிவில் விஸ்வ நாதர் இருக்கார். அதுக்குபெரிய க்யூ. வரிசையில் நின்னு,அவசர தரிசனம், அன்ன பூரணி தரிசனம் முடிந்து வெளியில் வந்தோம். என் அம்மா காசிக்குப்போயிட்டு வந்தேன்னு சொன்னா எல்லாரும் காசிக்கயரும், கங்கைச்சொம்பும் கேப்பா கொஞ்சம் வாங்கித்தாயேன்னு கேட்டா. சரின்னு 50 காசிக்கயறு, 50 கங்கைச்சொம்பு எல்லாம்இவர் வாங்கி கொடுத்தார்.

கயா போக நேரம் கிடைக்கலை. தவிர கொண்டு வந்தகேஷ் எல்லாமே காலியாகும் தருவாயில் இருந்தது. அதனால மறு நாளே கிளம்பிட்டோம். திரும்ப ஒண்ணரை நாள் பயணம். நாக்பூர், அங்கேந்து பஸ்பிடித்து சந்த்ரபூர்
 ஒரு வழியா அவங்க ஆசைப்பட்டமாதிரி காசி கூட்டிண்டு போய் வந்தோம்னு ஒரு திருத்தி கிடைத்தது அவர்களுக்கும் ரொம்பவே சந்தோஷம் எந்தமாப்பிள்ளை இப்படில்லாம் கூட்டிண்டு போவார்னு சொல்லிண்டே இருந்தா.ஒருவருஷம் கழித்து கடைசி தங்கையின் கல்யாணமும் நல்லபடியா நடந்தது. 

19 comments:

எல் கே said...

நீங்கள சங்கர மடத்தை அணுகி இருந்தாள் குறைந்த செலவில் நிறைவாக ஸ்ரார்தம் பண்ண ஏற்பாடு பண்ணி இருப்பார்கள்

HVL said...

//உடனே அங்கே உள்ள பண்டாக்கள் எங்களைச்சூழ்ந்து
கொண்டு, பேரம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். //
எல்லாமே வியாபாரம் ஆயிட்டு வருது! என்ன செய்யறது!

Chitra said...

உங்களுடய அனுபவ பயண கட்டுரை, ரொம்ப நன்னா இருந்துச்சு, மாமி. :-)

♔ம.தி.சுதா♔ said...

தெவசம் கொடுத்த அனுபவத்தை அருமையாக பகிர்ந்திருக்கிங்க... காகத்திற்கு இப்படி ஒரு மவுசா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

vanathy said...

ஆன்டி, நல்ல பதிவு. கங்கையில் இறந்தவர்களை அப்படியே மிதக்க விடுவார்கள் என்று படித்திருக்கிறேன். படிக்கவே பயமா இருந்திச்சு. பார்த்தா இன்னும் டெரரா இருக்கும்.

இராஜராஜேஸ்வரி said...

காசி யாத்திரை நினவுகள் மனதில் நிழலாட நினைவு கூர்ந்ததற்குப் பாரட்டுக்கள்.

Lakshmi said...

கார்த்தி அதான் முடல்லயே சொன்னேனே. அங்கதான் போனோம் அங்க இடம் கிடைக்கலியே. அதனாலதானே வெளில தங்க வேண்டி வந்தது.

Lakshmi said...

HVL எல்லாத்தையுமே வியாபார கண்ணோட்டத்தில் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. இது சரியே இல்லை.

Lakshmi said...

சித்ரா அப்படியா மருமகளே,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

மதி.சுதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. யானைக்கு ஒருகாலம் வந்தா, பூனைக்கும் ஒருகாலம் வரும் இல்லியா.
அதுபோல அங்க காகத்துக்கு ஏக மவுசு.

Lakshmi said...

வானதி, அமாம்மா, கங்கையில் குளிச்சா புண்ணியம்ங்கராங்க. கண்ணுக்கு நேரா பாத்தபிறகு பாவமாவது, புண்யமாவதுன்னுதான் தோனுது.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

TamilRockzs said...

அம்மா ...
தங்களை tamilrockzs official வலைப்பூ குழுமத்தில் பெருமையுடன் அறிமுக படுத்தி இருக்கிறோம் .
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் . தங்கள் வரவை எதிர் பார்க்கும் நல்ல உள்ளங்கள் .
பதிவுலகில் பெண்கள் ...... ( http://tamilrockzs.blogspot.com/2011/03/blog-post_28.html )

நன்றி ,
அன்புடன் ,
Admin

www.tamilrockzs.com

www.tamilrockzs.blogspot.com

Lakshmi said...

tamilrockzs, தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி.தங்கள் வலைப்பூ குழுமத்தில் என்னை அறிமுகம் செய்த
தற்கு மிகவும் நன்றி.ரொம்ப சந்தோஷமா
இருக்கு.

TamilRockzs said...

அம்மா ,
எங்களது அழைப்பை ஏற்று தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . நேரம் கிடைக்கும் போது தங்களும் நமது வலைப்பூ குழுமத்தில் பதிவிட அன்புடன் அழைக்கிறோம் , மேலும் எமது வலைப்பூவின் இளம் பதிவாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து ஊக்கபடுதவும் .

நன்றி ,
Admin

TamilRockzs said...

அம்மா ,
எங்களது அழைப்பை ஏற்று தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . நேரம் கிடைக்கும் போது தங்களும் நமது வலைப்பூ குழுமத்தில் பதிவிட அன்புடன் அழைக்கிறோம் , மேலும் எமது வலைப்பூவின் இளம் பதிவாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து ஊக்கபடுதவும் .

நன்றி ,
Admin

சி.பி.செந்தில்குமார் said...

உங்கள் பயணக்கட்டுரை ரொம்ப நல்லா இருந்தும்மா

Lakshmi said...

டமில்ராக்ஸ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

சி.பி. செந்தில்குமார் வருகைக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...