Pages

Back to Top

ஈரோடு சந்திப்பு

 ஈரோடு போய் வந்து ஒருவாரம் ஆகுது. அங்கு நடந்த சம்பவங்களை உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா/ முதல்ல பதிவர் சந்திப்பு.
 பதிவுலகில் நம்ம எல்லாருக்குமே  நன்கு அறிமுகமாகி இருப்பவர்  அட்ராசக்கை எனும் தலைப்பில் பதிவெழுதிவரும் சி. பி, செந்தில் குமார் அவர்கள்.1000 பதிவுகளுக்கும் மேல் எழுதி சாதனை படைத்திருப்பவர்,அந்த பந்தா எதுமே இல்லாமல் மிகவும் இனிமையாக பேசிப்பழகுகிரார்.ஈரோடு போனதும் 10- நாட்கள் கழித்து அவருக்குதான் முதலில் போன் பண்ணினேன். பதிவெழுதுபவர்களில் பெரும்பாலோனர் எழுத்துமூலம் மட்டுமே அறிமுகமாகி இருப்போம். அப்படி முகம்தெரியாம பழகினவங்களை நேரில்பார்க்கும் போது மனசுபூராவும் ஒரு சந்தோஷம் வந்து ஒட்டிக்குது பாருங்க, அதை அனுபவிச்சு பாத்தாதான் புரிஞ்சுக்கமுடியும்.


புதிய இந்தியா


இந்த கவிதையை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அவருக்கு நன்றி

புதிய இந்தியா

"*levis jeans" **ஸும்,"van heusen"ஸும்
*வந்ததால் - எங்களின்*
*பருத்தி ...காதி துணிகள்**
பழசாய்ப் போயின**!

"நைட்டியும்","கவுனும்**"
வந்ததால் - எங்களின்*
*தாவணிகளும்,புடவைகளும்*
*தரமிழந்துப் போயின**!

"pizza" வும் "burger" ரும்*
*வந்ததால் - எங்களின்*
*இட்லி,சப்பாத்திக்களை*
*சுவை இழக்க வைத்தன**!

"axe perfume" உம் "olay" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*மஞ்சளும்,மருதாணிக்களும்*
*வாசம் இழந்துப் போயின**!

"valentine's day, friendship day" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*நட்புக்களும்,கல்யாணங்களும்*
*கோர்ட் படிகள் ஏறுகின்றன**!

"cricket"டும்,"golf" பும்*
*வந்ததால் - எங்களின்*
*கபடியும்,மல்யுத்தமும்*
*களையிழந்துப் போயின**!

"wine" னும்,"vodka" வும்*
*வந்ததால் - எங்களின்*
*கூழையும்,கள்ளையும்*
*குழித்தோண்டிப் புதைத்தன**!

"standard charted,american express bank" கும்*
*வந்ததால் - எங்களின்*
*கூட்டுறவு வங்கிகள்*
*திவாலாகிப்போயின**!

"dollar ,euro" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*மூளைகள் வெளிநாடுகளில்*
*அடமானத்திற்க்கு விற்கப்பட்டன**!

இதோ**....
"walmart" டும்,"tesco" வும்*
*வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்*
*நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்*
*உழைக்கும் விவசாயிகளும் கூட இனி**...
*அமெரிக்கர்களின் எகாதிபத்யத்தில்*
*மீண்டும் அடிமையாகப் போகிறார்கள்**.

*இருப்பதை விட்டுவிட்டு*
*பறப்பதற்கு ஆசைப்படும்*
*அரசியல் அதிகாரிகளுக்கு*
*மீனைவிட தூண்டில் பெரிதென்று*
*புரிவதெப்போது?*

மனசே ரிலாக்ஸ்

இப்ப ஒருமாசமா  ஈரோடில் தாமசம். பெரியமகன் வீட்டில்
 வருஷத்தில் ஒருமாதம் ஏதாவது ஒரு மகன் வீட்டிலோ
 மகள் வீட்டிலோ போய் தங்கி அவர்களை சந்தோஷப்படுத்தி
 நானும் சந்தோஷப்படுவேன்.பாக்கி 11 மாசமும் அம்பர்னாத்.
 மும்பை லைஃப் ஸ்டைலில் இருந்து டோட்டலி டிபரண்ட்டா
 இருக்கு.காலை நான் கொஞ்சம் லேட்டாதான் எழ்ந்துப்பேன்
 இரவு லேட்டாபடுப்பேன். இவங்கல்லாம் நான் எழுந்து காபி
 குடிக்கும்போதே ஃபுல் லஞ்ச் சாப்பிடுவாங்க. அதுவே எனக்கு
 வேடிக்கையா இருக்கும். இவங்க 9 மணிக்கு வெளில கிளம்பி
போனா மாலை 5- மணிக்குத்தான் திரும்ப  வருவாங்க. இரவும்
9-மணிக்கு தூங்கிடுவாங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...