Pages

Back to Top

எதிர்காலம்(6)குழந்தையை வீட்டுக்கு கூட்டி வந்ததுமுதல் அவனுக்கு ட்ரெயினிங்க் கொடுப்பதிலேயே நாளின் பெரும்பகுதி கழிந்தது.வீட்டுக்கு யாராவது வந்தா எல்லாரும் மராட்டியிலும்ஹிந்தியிலும் பேசுவது குழந்தைக்கு ரொமவே குழப்பமாச்சு. அதனால என் பையன் பேங்கில் போய் தமிழ் நாட்டுக்கு டிரான்ச்பர் கேட்டான். பூனாவில்தான் ஹெட் ஆபீஸ்இருக்கு அங்க போயி பெரிய ஆபீசரைப்பாருன்னு சொன்னாங்க. அவனும் பூனா போயி

பெரிய ஆபீசரிடம் மகனின் ப்ராப்ளம் பற்றி சொல்லி தமிழ் நாட்டுக்கு டிரான்ஸ்பர்வேணும்னு கேட்டான். ஒரே ஸ்டேட்னா ஈசியாமாத்தலாம். தமிழ் நாடு கேக்கரீங்களேபோகவ்ர மத்தசெலவுகள் நீங்கதான் ஏத்துக்கணம். பேங்க் கொடுக்காது என்றார். எப்படியாவது மாத்தல் கொடுங்க சார்னு கெஞ்சி, கூத்தாடி 6 மாசம் கழித்து ட்ரான்ஸ்பர் வந்தது.

எதிர்காலம்(5)குழந்தை பற்றிய சந்தேகம் உடனே க்ளிய்ர் பண்ணிக்கணு்ம் எனறு அடுத்தநாளே டாக்டரை தேடிப்போனான். சைல்ட் ச்பெஷலிஸ்ட் தான். எல்லா செக்கப்பும்பண்ணிட்டு பெரிய குண்டா தூக்கிப்போட்டார். குழந்தை பிறவியிலேயே டௌன்சிண்ட்ரோம் பேபியா பிறந்திருக்கு. வயத்ல இருக்கும்போதே ஸ்கேன் பண்ணி யிருக்கனும். அப்பவே தெரிஞ்சிருக்கும். வேண்டாம்னு பண்ணி யிருக்கலாம். உங்க ரெண்டுஃபேமிலியுலும் யாருக்காவது இதுபோல மூளை வளர்ச்சி இல்லாம இருந்திருக்கானுகேட்டார். மகன் மருமகள் இருவருமே டாக்டரிடம் போயிருந்தார்கள். இல்லை ரெண்டுசைடிலும் யாருக்கும் இதுபோல இல்லனு சொன்னா. நீங்க சொந்தத்ல கல்யாணமா என்றார்

எதிர்காலம்(4)நாங்க கல்யாணப்பேச்சை எடுத்ததுமே அவன் எனக்கு இப்பொ கல்யாணத்தில் நாட்டமில்லை.இப்போகல்யாணமெல்லாம் வேண்டாம்னு பிடிவாதமா சொன்னான். ஏய், இப்பவே உனக்கு 30 வயசாச்சு, இப்ப கல்யாணம் பண்ணாம
எப்போ பண்ரது? உன் தம்பிகள், தங்கை எல்லாம் ரெடியா இருக்காங்க. உனக்கு
 பண்ணின பிறகுதானே அவங்களுக்கு பண்ண முடியும். நீ ஏன் பிடிவாதமா இருக்கேன்னு எவ்வளவு கேட்டும் முதல்ல அவங்காளுக்கெலாம் பண்ணிடுங்க
என்று தீர்மானமா சொல்லிட்டான். அண்ணன் இருக்கும்போது மத்தவங்களுக்கு
எப்படி பண்ணனு யோசிச்சோம். ஆனா தம்பி தங்கை எல்லாரும் சொந்தமுயற்சியில் மேல் படிப்பெல்லாம் படித்து பாம்பேயில் நல்ல வேலையிலும் அமர் ந்துவிட்டிருந்தார்கள் அதுமட்டுமில்லாம லவ்விலும்
 விழுநதுட்டாங்க.வேர வழி இல்லாம முதல்ல இவங்களுக்கெeல்லாம்
 அவங்க விரும்பியபடி வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தோம்.அப்பரமும்
 இவனை இப்படியே விடக்கூடாதுன்னு தீவிரமாக பெண்தேடினோம். மதுரை
யில் இருந்த ஒரு பெண்ணின் ஜாதகம் நன்கு பொருத்தம் இருந்ததால். அதை
பேசி முடிச்சோம்.அவ்னுக்கோ கல்யாணத்தில் விருப்பமே வரலை. அப்படி
யும் எங்க விருப்பத்துக்காக ஒத்துகிட்டான்.

எதிர்காலம்(3)மஹாராஷ்ட்ரா பேங்க் நாங்க இருக்கும் ஊரிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலை
வில் உள்ளடங்கி இருந்தது. ரொம்பவே பட்டிக்காடு. காலை ஒரே ஒரு பஸ் சிட்டி
லேந்து வரும்.அதில்தான் அந்த ஊருக்கு வேண்டிய காய்கறிகள்,பலசரக்கு எல்லாம் வரும். திரும்ப இரவு அந்தபஸ் சிட்டி போயிடும். பேங்கே ஒரு பெட்டிக்கடை அளவுக்கு மிகவும் சின்ன ஒரு ரூமில் தான் இருந்ததுஅந்த ஊரு
 பெயர், அஹேரி(அஹோரிஇல்லைபேர்கூடயாரும்கேள்விபட்டிருக்கமாட்டாங்க
 பேங்கில் மொத்தமே 5 பேர்தான். ஒரு மேனேஜர்,ஒரு கேஷியர், ஒருக்ளர்க்,ஒரு
அட்டெண்டர்,ஒரு ப்யூன். அவ்வளவுதான்.எங்க பையன் முதல் முதலா வீட்டை
 விட்டு எல்லரையும் பிரிஞ்சு தனியா இருக்கப்போரான்.அந்தஊரில் நல்ல
 ஹோட்டலோ, மெஸ்ஸோ எதுவுமே கிடையாது. தனியாதான் சமைச்சு சாப்பிட
நும். நல்ல வேளை அவனுக்கு சமையல் எல்லாம் நல்லாவே தெரியும். அங்க
 அவன் கிளம்பினப்போ, பெட்டியில் அவனுக்கு தேவையான துணிமணிகள்,முக்
யமான சாமான்களுடன்,சமையல் செய்து சாப்பிட ஒரு திரிஸ்டவ், தேவையான
 பாத்திரபண்டங்கள் எல்லாம் ரெடி பண்ணினோம்.

எதிர்காலம்?(2)

எல்லாம் சரி ஆகும்னுசொல்லி அவனை சமாதானப்படுத்தி, எங்க ஊர்லேந்து
50 கிலோமீட்டர் தள்ளி ருந்த ஒரு சிட்டியில் ஒரு இ,என்,டி ஸ்பெஷலிஸ்டிடம்
போய் அவன் காது செக் பண்ணினோம். சின்னதா ஒரு எலும்பு வளந்திருக்கு.
 ஆபரேஷன் பண்ணினா சரி ஆயிடும் என்றார். அதுக்கு ஏற்பாடு பண்ணி ஆபரே
ஷனும் செய்து மூன்றாவது மாசமே அவனுக்கு ரெண்டுகாதுமே நல்லா கேக்க
ஆரம்பிச்சது.திரும்பவும் ஒருவருஷம் வீட்ல உக்கார வேண்டி இருந்தது. பேப்ப
ரில் வரும் பேங்க் வேலைக்கெல்லாம் திரும்பவும் அப்ளை பண்ணிண்டுஇருன்
தான். தம்பி, தங்கைக்குபாடங்கள் சொல்லிக்கொடுத்தான். டிஃபன்ஸ்காலனியிலுள்ள குழந்தைகளுக்கும் ட்யூஷன் மாதிரி பாடங்கள் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தான். காலனிக்குழந்தைகள்அவங்க
பெற்றோர் எல்லாருக்குமே அவனை ரொம்பவே பிடிக்கும் இவன் பாடம்
சொல்லிக்கொடுக்கதொடங்கியதுமுதல் எல்லா குழந்தைகளுமே நல்லாமார்க்
வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...