Pages

Back to Top

தன்னம்பிக்கை

சுய மதிப்பீடு,


நமக்கு என்ன திறமை இருக்கிறது? நாம் எந்த அளவுக்கு கெட்டிக்காரர்கள்


என்பதை நாமே அறிந்து கொள்ள வேண்டும். அது தெரிந்து விட்டால், நம்முடைய


வெற்றி என்பது வெகு சுலபமாககைகூடிவிடும். நம்முடைய உண்மையான தகுதி


பொதுவாக நமக்குத்தெரிவதில்லை. மற்றவர்கள் அவ்வப்போது நம்மைப்பற்றிச்


சொன்ன கருத்துக்களின் அடிப்படையில்தான் நாம் நம்மைப்பற்றி மதிப்பீடு


செய்கிரோம். நம்மைப்பற்றி நாம் கொண்டுள்ள மதிப்பீடு என்ன? நம்முடைய


உண்மையான தகுதி என்ன? இந்த இரண்டையும் ஒரு காகிதத்தில் எழுதிப்


பார்த்தாலே பலௌண்மைகள் பளிச்சிடும்.பத்து வருடங்களுக்கு முன்னால்


நம்முடைய அப்பா ஒரு லெட்டரைக்கூட உன்னால் ஒழுங்காக எழுத முடிகிரதா/


என்று கேட்ட கேள்வி இப்போதும் உறுத்திக்கொண்டே இருந்தால் பயனில்லை.


நம்மால் ஒருகடிதத்தை சரியாக எழுத முடியாதது அன்று உண்மையாக இருந்திருக்கலாம். இன்றும் அதுவே உண்மை அல்ல. நம் முழு சக்தியை பயன்


படுத்தாமல், நாம் பல காரியங்களை செய்துவிட்டு, நம் முழு சக்தியே இவ்வளவுதான் என்று முடிவு செய்கிரோம். ஒருகாரை முதல் கியரிலேயே ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு, அதுதான் காரின் வேகம் என்று சொல்வது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறுதான் இதுவும். பலமனோதத்துவ நிபுணர்கள்


சொல்கிறார்கள், ஒவ்வொரு மனிதனும் தன் திறமையில் நூற்றில் ஒரு பங்கைக்கூட உபயோகிப்பதில்லை. என்று. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கூட சராசரி என்று உட்ரோ வில்சனை குறித்து


பேசினார்கள். அப்புறம்தான் அவருக்கே தன் உண்மைத்தகுதி புலப்பட்டது.


அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதிகளில் அவரும் ஒருவராக மாறினார்.


நம்மை நாமே அறிந்தால் தான் முன்னேற்றம் வரும். தோல்வி என்னும் மூடு


பனியிலே அகப்பட்டுக்கொண்டிருக்கும் பலரை சில சமயங்களில் இதைப்போன்ற கட்டுரைகள் எழுப்பி விடும். சிலபேரை சில அறிவு நூல்கள்


பளிச்சென்று விழிக்கவைக்கும். உங்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிரீர்கள்


அந்த நினைப்பை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். உங்கள் கருத்துப்படி உங்களுடைய உண்மையான தகுதி என்ன என்பதை கண்டு பிடியுங்கள்.


நீங்க என்னவாக ஆசைப்படுகிரீர்கள் என்பதையும் ஒருகாகிதத்தில் எழுதுங்கள்.


இப்படி ஒரு புதிய உருவம் எடுக்க உங்களிடம் என்ன தகுதிகள் உள்ளன என்பதையும் யோசியுங்கள். இந்த புதிய தீர்மனப்படி வாழ்க்கையைத்தொடர்வது


என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

மனிதம்

ப்ளாக் ஆரம்பிச்சுட்டு போயி எதுவுமே எழ்தாம இன்னிக்கு வந்திருக்கேன்.
நடைமுறை.
மனிதனோடு கூடப்பிறந்தவை, கற்பனையும், எண்ணங்களும்.
அதை எழுத்தில் வடிக்கலாம் என்றுஎடுத்துரைப்பார் எல்லாருமே
எழுதவேண்டும் என்று இயம்பிக்கொண்டே வாழ்வோர் ஏராளம்.
எழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டே வாழ்வோர் மிகப்பலர்.
எண்ணியதை எழுத்தில் நிறுத்தி, நிறைவு பெருவோர்வெகு சிலரே.
அதில் வெற்றிக்கொடி நாட்டுபவர் ஓரிருவரே.
எண்ணியதை எழுதும் வெகு சிலரில் என்னையும் ஒருத்தியாக்கு இறைவா.

Related Posts Plugin for WordPress, Blogger...