Pages

Back to Top

எதிர்காலம்?(2)

எல்லாம் சரி ஆகும்னுசொல்லி அவனை சமாதானப்படுத்தி, எங்க ஊர்லேந்து
50 கிலோமீட்டர் தள்ளி ருந்த ஒரு சிட்டியில் ஒரு இ,என்,டி ஸ்பெஷலிஸ்டிடம்
போய் அவன் காது செக் பண்ணினோம். சின்னதா ஒரு எலும்பு வளந்திருக்கு.
 ஆபரேஷன் பண்ணினா சரி ஆயிடும் என்றார். அதுக்கு ஏற்பாடு பண்ணி ஆபரே
ஷனும் செய்து மூன்றாவது மாசமே அவனுக்கு ரெண்டுகாதுமே நல்லா கேக்க
ஆரம்பிச்சது.திரும்பவும் ஒருவருஷம் வீட்ல உக்கார வேண்டி இருந்தது. பேப்ப
ரில் வரும் பேங்க் வேலைக்கெல்லாம் திரும்பவும் அப்ளை பண்ணிண்டுஇருன்
தான். தம்பி, தங்கைக்குபாடங்கள் சொல்லிக்கொடுத்தான். டிஃபன்ஸ்காலனியிலுள்ள குழந்தைகளுக்கும் ட்யூஷன் மாதிரி பாடங்கள் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தான். காலனிக்குழந்தைகள்அவங்க
பெற்றோர் எல்லாருக்குமே அவனை ரொம்பவே பிடிக்கும் இவன் பாடம்
சொல்லிக்கொடுக்கதொடங்கியதுமுதல் எல்லா குழந்தைகளுமே நல்லாமார்க்
வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.அக்கம்பக்கம் எல்லாருமே எங்க மேல கோபப்பட்டார்கள் இவ்வளவு நல்ல
 படிக்கற பையனை மேற்கொண்டு படிக்கவைக்காம  ஏன் வேலைக்கு அனுப்பரீங்க எங்களுக்கு மட்டும் இப்படி புத்திசாலிபையன் இருந்திருந்தா
 அவனை வெளிஊர் அனுப்பி ஹாஸ்டலில் தங்கவைது படிக்க வச்சிருப்போம்
 டாக்டராவோஎஞ்சினியராகவோஆக்கிஇருப்போம்என்றெல்லாம்சொன்னாங்க
ஸ்கூலில்கூட ஏன் சார் மேல படிக்க வைக்காம இருக்கீங்க நல்ல புத்திசாலி
பையன்சார் அவன் வாங்கி இருக்கும் மார்க்குக்கு ஸ்காலர் ஷிப்பே கிடைக்கும்
என்றெல்லாம் மாறி மாறி சொன்னார்கள். அவந்தான் மேல் கொண்டு படிக்கவே மாட்டேன்னுட்டான் என்றால் யாருமே நம்ப தயாராஇல்லை.

திரும்பவும் மஹாராஷ்ட்ரா பேங்க்லேந்து இண்டர்வியு கார்ட் வந்தது.அதுக்கும் போயி நல்லா பண்ணிட்டு வந்தான். மறுபடியும் 10 நாள் கழிச்சு நேர்முக இண்டெர்வ்யூ என்று கூப்பிட்டார்கள். அவனும் போனா.ன்
 டெய்லிபேப்பர், ஜென்ரல் நாலட்ஜ் புக் எல்லாம் நல்லா படிச்சு தயாராகவே
போனான். இண்டெர் வ்யூ எடுத்தாஅபீசர் ரொம்ப ஜாலி பேர்வழி போல இருக்கு.
இவனோடபயோடேட்டா எல்லாம் பாத்துட்டு 10-வதில் இவ்வளவு மார்க்
வாங்கிட்டு படிப்பை ஏன் கண்டின்யூ பண்ணாம வேலைக்கு வந்தாய் என்றார்.
 சார் அது கொஞ்சம் பர்சனல் என்றான் பையன். ஓ,கே, ஓ,கே, உன் பர்சனல்
எல்லாம் எனக்குத்தேவை இல்லை. ஆமா நீ ஏன் நெத்தில என்னமோ பூசிட்டு
 வந்திருக்கே என்றார். சாமி பிரசாத. விபூதி.தினமும்குளிச்சு விபூதி பூசிப்பேன்.
என்றானாம். சரி இப்ப உந்திறமைக்காத்தானே இந்தவேலைல சேர வந்திருக்கே சாமியா உனக்கு வேலை தருது? என்று கேட்டிருக்கார். அவனும்
சளைக்காமல் அப்படி இல்லை சார் சயண்டிபிக்கா ஒரு ரீசன் எனக்குத்தெரிந்த
தைசொல்லவா என்று பர்மிஷன் கேட்டுண்டு,இப்ப ஹிப்னடைஸ், மெஸ்மெரிசம் பண்றவங்க புருவமத்தியை குறியா வச்சுத்தான் ஹிப்னடைஸ்
எல்லாம் பண்ணுவாங்களாம். இதுபோல நெத்தில அந்த புருவமத்தியை ஒரு
விபூதியோ,சந்தனமோ, குங்குமமோ இட்டு மறைச்சுட்டா அவங்களால நம்மை
 எதுவும் பண்ண முடியாது. என்று சொன்னான்.


என்று சொல்லவும், அவர் பரவால்லையே நிறைய விஷயம் உள்ள பையனாதான் இருக்கே. ஓ, கே இப்ப இண்டெர்வ்யுவுக்குபோலாமா?
உனக்கு இட்லி பிடிக்குமா என்று கேட்டிருக்கார். இது என்ன இண்டெர்வ்யூ கேள்வியான்னு யோசிச்சுண்டே பிடிக்கும் சார். என்று சொல்லி இருக்கான்.
 சரி இட்லிக்கு என்ன அரைப்பாங்க, என்ன அளவுசேர்த்து அரைப்பாங்கன்னு கேட்டி
ருக்கார்.வீட்டில் சமையல் எல்லாம் நல்லாவா அம்மாவிடம் கற்றுக்கொண்டதால் கரெக்டான பதிலையே சொல்லி இருக்கான். எதுக்கு
இவர் இப்படில்லாம் கேட்டுண்டு டைம் வேஸ்ட் பண்றானு பையனுக்கு
தோணிண்டே இருந்திருக்கு. ஓ,கே மை பாய் நீ செலக்ட்டட். இப்பவே
5 நிமிஷம் வெயிட் பண்ணி அப்பாயின்மெண்ட் ஆர்டர் கையில் வாங்கிண்டு போ. என்று சொல்லவும் பையனுக்கு சனந்தோஷத்தில் அழுகையே வந்துட்டது. அவரோ ஒரு ஆளைக்கூப்பிட்டு அப்பாயின் மெண்ட் ஆரடர்
டைப் பண்ணிண்டு வர சொல்லிட்டு பையனிடம் திரும்பி இதெல்லாம்
சும்மா தான். ஏற்களவே உன் பயோடேட்டா பார்த்து செலக்ட் பண்ணீயாச்சு.

க்ளெர்க்கா அப்பாயிண்ட் பண்ணி இருக்கேன். இத்தனை சம்பளம். ஒரு புது
கிராமத்ல ப்ராஞ்ச் ஓபன் பண்றோம். ரூரல் ஏரியாதான். உனக்கு சமையல்
தெரியுமான்னு பாக்கத்தான் இந்த அசட்டுக்கேள்வி எல்லாம். புது இடத்தில்
 உன்னை நீயே கவனிச்சுக்க முடியும் இல்லியா.இவ்வளவு நாள் அப்பா,அம்மா
தம்பி, த்ங்க யுடன் இருந்துட்டு இப்ப தனியா சமாளிக்க முடியுமா உன்னால
என்றார். அதெல்லாம் பாத்துப்பேன் சார் என்று சந்தோஷமாகச்சொல்லிட்டு
சந்தோஷமாக ஆர்டரை கையில் வாங்கினு வீடுவந்தான். ரொம்ப நாள் கழிச்சு
 அவன் முகத்தில் சிரிப்பு பாக்க முடிந்தது.

18 comments:

அமைதி அப்பா said...

நம்பிக்கை வீண் போகாது என்பதற்கு நல்ல உதாரணமாக இந்தப் பதிவு உள்ளது.

கோமதி அரசு said...

நல்ல மேல் ஆபீஸர், நல்லவேலையை இறைவன் கொடுத்து விட்டார் பாருங்கள்.

அம்மாவிற்கு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு உதவியவருக்கு இறைவன் அருள் புரியாமல் இருப்பாரா?

அவர் மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும்.

நன்றாக பதிவு செய்து விட்டீர்கள்.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

ohh my god ..

அம்மா எவ்வளவு இனிமையா எழுதி இருக்கீங்க , படிக்கும் போதே ஒரு படம் பாக்குற உணர்வு ஏற்படுது . . உங்க பையன் செம புத்தி சாலி அம்மா . . . . இந்த இண்டர்விஎவ் என்ன எந்த இன்டர் விஎவ் ளையும் கலக்கி இருபாரு . . சூப்பர்ரா இருக்கு தொடர்ந்து எழுதுங்க , அடுத்த படிக்க ஆர்வமா காத்துகிட்டு இருக்கேன் . .

maggi said...

லக்ஷ்மி அம்மா நான் தமிழ் ரோக்ஸ் ல இருந்து வரேன்.. உங்க போஸ்ட் எல்லாமே ரசிக்கும் படி இருக்கு.. அதே சமயம் நறிய விஷயங்களும் தெரிய வருது.. உங்களுக்கு என் வாழ்த்துகள் :)

இராஜராஜேஸ்வரி said...

ரொம்ப நாள் கழிச்சு
அவன் முகத்தில் சிரிப்பு பாக்க முடிந்தது.//
சந்தோஷமான் விஷயம் தானே...

எல் கே said...

அந்தக் காலத்தில் எப்படி எல்லாம் கேள்வி கேட்டு இருக்காங்க ??

Lakshmi said...

அமைதி அப்பா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Lakshmi said...

கோமதி அரசு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ராக்ஸ் ராஜேஷ், வாங்க, கருத்துக்கு நன்றி.

Lakshmi said...

maggi, வருகைக்கு நன்றி.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி, வருகைக்கு நன்றி.

Lakshmi said...

கார்த்தி, ஆமா, இப்படி ஒருகேள்வி, இப்படி ஒருபதில்.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Good to see this post. A wonderful message got. Thanks.

Lakshmi said...

பிரணவம் ரவிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நிரூபன் said...

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதனை மெய்ப்பிக்கும் வகையில் உங்கள் மகனின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. உங்களின் ஞாபக மீட்டல்களை அழகாகத் தொகுத்துள்ளீர்கள்.

Lakshmi said...

நிருபன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

malathi in sinthanaikal said...

நல்ல உதாரணமாக இந்தப் பதிவு உள்ளது.

Lakshmi said...

மாலதி முதல் தடவை வரீங்களா.
அடிக்கடி வாங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...