Pages

Back to Top

நினைவாற்றல் பெருக.இந்தப்பெட்டி தெரியுமா?, அந்தப்பெட்டி தெரியுமா?

முத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான்.

இந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா?.

முத்து செய்த பெட்டியில், வைத்த நல்ல ரொட்டியும் இதுதான், இதுதான்.

இந்த எலி தெரியுமா?, அந்த எலி தெரியுமா?,

முத்து செய்த பெட்டியில் வைத்த,னல்ல ரொட்டியை,தினம் தின்ற

எலியும் இதுதான், இதுதான்.

இந்தப்பூனை தெரியுமா?, அந்தப்பூனை தெரியுமா?, முத்து செய்த பெட்டியில்

வைத்த நல்ல ரொட்டியை, தினம் தின்ற எலியை கொன்று தின்ற பூனையும்

இது தன், இதுதான்.

இந்த நாய் தெரியுமா, அந்த நாய் தெரியுமா?

முத்து செய்த பெட்டியில் வைத்த நல்ல ரொட்டியைத்தினம் தின்ற எலியை,

கொன்று தின்ற பூனையை குரைத்திட்ட நாயும் இது தான், இதுதான்.

இந்தப்பசு தெரியுமா?, அந்தப்பசு தெரியுமா?.முத்து செய்த பெட்டியில்

வைத்த நல்ல ரொட்டியைத்தினம் தின்ற பூனையைக்குரைத்திட்ட

நாயை உதைத்திட்ட பசுவும் இதுதான், இதுதான்.இந்தக்கோபால்

தெரியுமா?, அந்தக்கோபால் தெரியுமா?. முத்து செய்த பெட்டியில் வைத்த

நல்ல ரொட்டியை தினம் தின்ற எலியைக்கொன்றுதின்ற பூனையைக்

குரைத்திட்ட நாயை உதைத்திட்ட பசுவை கறந்திட்ட கோபால்

இவர்தான், இவர்தான். நாங்கள் யார் தெரியுமா? நாங்கள் யார் தெரியுமா?

முத்து செய்த் பெட்டியில் வைத்த நல்ல ரொட்டியைத்தினம் தின்ற எலியை

கொன்று தின்ற பூனையை, குரைத்திட்ட நாயைஉதைத்திட்ட பசுவைகறந்திட்ட

பாலைக் குடித்திட்ட மாணவர் நாங்கள்தான், நாங்கள் தான்.ரொம்ப நாட்கள் முன் ஒரு பத்திரிக்கையில் படித்த விஷயம் தான்.

இப்ப இருக்கும் இண்டெர்னெட் அவசர யுகத்தில் பத்திரிக்கை படிக்க

நேரம் ஒதுக்குவதே சிரமம்தான். ஆனாலும் கண்களில் படும் நல்ல

விஷயங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளலாமே. இல்லியா.

படிக்க வேடிக்கையாக இருந்தாலும் கூட மாணவர்களுக்கு நினைவில்

வைத்துக்கொள்ள வேண்டிய எந்த ஒரு பாடத்தையும் அவற்றின்

அடுத்தடுத்த பாயிண்ட் களோடுஇணைத்துஅவர்களுக்கு பிடித்த பாணியில்

பாடல் வடிவில்படித்துக்கொண்டே வந்தால் படித்தது எதுவுமேஎவ்வளவு

வருடங்கள் ஆனாலும் மறக்காமல் இருக்கும். அவர்களின் கற்பனா சக்தியும்

வளரும்.

34 comments:

இராஜராஜேஸ்வரி said...

Interesting post. Thank you for sharing.

கலாநேசன் said...

good one. thanks

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆம் நீங்கள் சொல்லுவது சரிதான்.

என் இளம் வயதில் எனக்கு படிப்பினில் மிகுந்த ஆர்வம் இருந்தும், குடும்ப சூழ்நிலைகளால், இளமையில் வறுமையால், என்னால் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்புகள் படிக்க இயலாமல் போய் விட்டது.

நான் என் 40 வயதுக்கு மேல் 48 வயதுக்குள் 3 வெவ்வேறு பல்கலைக்க்ழகங்களில் சேர்ந்து B.Com., M.A. [Sociology] & PGD PM&IR என மூன்று பட்டங்கள் பெற்றேன்.

ஓரளவு எனக்கு நல்ல ஞாபகசக்தி உண்டு என்றாலும், வயதாகிப்படிப்பதால், படித்தவை பரீக்ஷை ஹாலில் மறக்காமல் இருக்க என் நண்பர் ஒருவர் ஒரு டெக்னிக் சொல்லிக்கொடுத்திருந்தார்.

உதாரணமாக What are all the Duties/functions of a Manager என்ற கேள்விக்கு உண்டான பதில்கள் முழுவதும் நாம் படித்து நன்கு தெரிந்துகொண்டு இருந்தாலும் அதைப்பற்றி தங்குதடையின்றி, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு 5 முழுப்பக்கங்கள் எழுதப்பட வேண்டும் என்னும் சூழ்நிலையில், இந்தக்குறிப்பிட்ட கேள்விக்கு POSDCORB என்ற ஒரு சொல்லை மனதில் பதிந்து கொண்டு விட்டால் என்னால் 5 பக்கங்களுக்கு மேல் 6 பக்கங்கள் கூட மளமளவென்று மிகச்சுலபமாக எழுத முடியும்.

இன்றும் இப்போதும் கூட இது போன்ற ஒருசில சொற்கள் மறக்காமல் உள்ளது.

அதாவது Planning, Organizing, Staffing, Directing, Controlling, Ordering, Reporting, Budgeting என்ற Managerial Functions களின் முதல் எழுத்துக்களைச் சேர்த்தால் POSDCORB என்று வருவதால், இந்த ஒரு வார்த்தையை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால்,அந்தக்கேள்விக்கு மளமளவென பதில் மறக்காமல் எழுத அது மிகவும் உதவிசெய்யும்.

நல்ல நகைச்சுவையான பதிவு.
பாராட்டுக்கள்.

எல் கே said...

வித்யாசமா இருக்கே , முயற்சி பண்ணலாம்

Gayathri Kumar said...

Super!

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றிம்மா

Lakshmi said...

கலா நேசன் நன்றி.

Lakshmi said...

கோபால்சார், நீங்க ளும் உங்க அனுபவங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளலாமே. நிறைய பேருக்கு பயன் படுமே.

Lakshmi said...

கார்த்தி நன்றி

Lakshmi said...

காயத்ரி, நன்றி.

மனோ சாமிநாதன் said...

நல்ல பதிவு!

அப்போதெல்லாம் நினைவாற்றல் நீடிக்கவும் பெருகவும் இந்த மாதிரி பயிற்சிகள் எல்லாம் பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பார்கள். தானாகவே மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது இந்த மாதிரி கதைகளும் பாடல்களும் விளையாட்டில் வந்து விடும். உங்களின் கதை அந்தக் கால ஞாபகங்களைத் தட்டியெழுப்பியது.

முனைவர்.இரா.குணசீலன் said...

தாங்கள் சொல்வது உண்மைதான் இன்று பலருக்குத் தங்கள் அலைபேசி எண்கள் கூடத் தெரிவதில்லை..

கணினிகளுக்கு நினைவுத்திறனும், செயல்திறனும் அதிகரிக்க அதிகரிக்க அது மனிதனுக்குக் குறைந்துவருகிறதோ என எண்ணத்தோன்றுகிறது.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வும்மா. படிப்பது மனதில் தங்க நல்ல உத்தி இது. சிறுவயதில் இது போன்ற சில உத்திகளை என் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்..

உங்கள் தளத்தின் புதிய வடிவமைப்பு நன்றாக இருக்கிறதும்மா....

யாதவன் said...

வித்தியாசமான கலக்கல் பதிவு

Lakshmi said...

மனோ சாமி நாதன் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

முனைவர் இரா, குணசீலன்
ஆமாங்க, நாம தான் இப்படி
எதையாவது சொல்லி நினைவு
படுத்த வேண்டி இருக்கு.னல்லது
தானே.

Lakshmi said...

யாதவன் நன்றி

vanathy said...

mmm... super idea, aunty.

Lakshmi said...

வானதி நன்றிம்மா.

Anonymous said...

see 13அறுவை கேஸ்கள் in this google document

https://docs.google.com/document/d/1jupa2kQYO_Pc4KlRinb1yg5323ktF4epqipg73k0kFM/edit?hl=en_US

Anonymous said...

others dont need to praise you

https://docs.google.com/document/d/1328NqQDTbsEFEeVxNrCi9hhTAnE1dNf2_cqiFr8opMA/edit?hl=en_US

Anonymous said...

ஊர் சுற்றுவது எப்படி-16 வழிக‌ள்

https://docs.google.com/document/d/1QI6g_IMGU2XMaj-i-BKZWFK1FfJ0c24nn9DV7YSDero/edit?hl=en_US

Anonymous said...

unmaiyin yirandu mugam

https://docs.google.com/document/d/1-ttFammYKSId4jx3fAVGhl5_oUWB2_T_PeONJWAn-Q4/edit?hl=en_US

Anonymous said...

பெண்களைப் பற்றி சாணக்கியர்

https://docs.google.com/document/d/1idvKf-KoXUc5OuUpWJ_5olkFQnptteG3aUv6CjJBAZo/edit?hl=en_US

athira said...

லக்ஸ்மியக்கா!!! நினைவாற்றலுக்கு நல்ல பதிவு.

இந்தக்காலத்தில பூனை எலியைச் சாப்பிடுறேல்லையாம்:) அவங்க நல்ல ஃபிரெண்ட்சாம்.... காலம் மாறெட்டேபோகுதே..:).

Lakshmi said...

அதிரா வருகைக்கு நன்றி.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Very nice...! Coming after a month here in your blog. Was away for treatment.

Your post is interesting.. My wishes.

Lakshmi said...

பிரனவம் ரவிக்குமார், நன்றி.

ரியாஸ் அஹமது said...

அம்மா வலைச்சரத்தில் ஒரு வாரமாக ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து ,இறுதியில் உங்கள் சுய அறிமுகம் ஆச்சர்யபடுத்தியது . மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்பது உங்களை போன்ற தாய்மார் மெய்ப்பித்து வரும் மெய் ..நன்றி இனி நானும் உங்கள் மகன் .

Lakshmi said...

ரியாஸ் அஹமது நன்றிப்பா. எனக்கு
புதுசா ஒரு பிள்ளை கிடைச்சிருக்கான்
சந்தோஷம்.

ஹேமா said...

இரண்டு மூன்றுமுறை சொல்லச் சொல்ல ஒரு சுறுசுறுப்புத் தெரிகிறது !

Lakshmi said...

ஹேமா, நன்றிம்மா.

RAMVI said...

லக்‌ஷ்மி அம்மா வலைச்சரதில் என் அறிமுகம் எனக்கு எழுதுவதர்க்கு தைரியம் தருகிறது.என்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முயற்சி சைகிறேன். நன்றி அம்மா.

Lakshmi said...

ராம்வி சீக்கிரமே எழுத ஆரம்பிங்க.
ஆல்த பெஸ்ட்.

Related Posts Plugin for WordPress, Blogger...