Pages

Back to Top

பலகரை ஜோதிடம்.ரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது கோவில் வெளீ வாசல் தின்ணையில் ஒரு பெரியவரைச்சுற்றிநிறைய பேரு உக்காந்திண்டு இருந்தாங்க. நாங்களும் அங்க என்ன நடக்குதுன்னுபாக்கப்போனோம். அந்தப்பெரியவர் கை நிரைய சோழிகளை வைத்துக்கொண்டுஅதை குலுக்கிப்போட்டு எல்லாருக்கும் ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்தார்.

சுத்தி இருந்தவங்க மிகவும் ஆர்வமாக தங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொண்டிருந்தார்கள். பக்கத்தில் இருந்த சிலரிடம் இது என்னன்னு கேட்டோம். இதுதான்சோழி ஜோசியம். இந்தப்பெரியவர் சொன்னது அப்படியே பலிக்குது. யாருக்குத்தான் தங்க எதிர்காலம் தெரிஞ்சுக்க ஆசை இருக்காது இல்லியா அதான் எல்லாரும் அவர்கிட்ட கெட்டுக்கிட்டிருக்கொம்னு சொன்னாங்க. நாங்கலும்ஒரு பக்கமா உக்காந்தோம். கொஞ்சம் கொஞமாக கோட்டம் கலைந்தபிறகுஅனதப்பெரியவரிடம் போனோம். வாங்கம்மா. என்ன கேக்கணும் உங்களுக்குஎன்ரு அன்பாகக்கேட்டார். ஐயா நீங்க இந்த சோழிகளை குலுக்கிப்போட்டுஎப்படி ஜோசியம் சொல்ரீங்கன்னு எங்களுக்கு தெரிஞ்சுக்க ஆசை சொல்லுவீங்க்ளான்னு கேட்டோம்.
அவர் சிரித்துக்கொண்டே இது என்னபெரியவிஷயம்சொல்ரேனேன்னுசொல்ல ஆரம்பித்தார். அவர்சொன்னதை உங்க கூட பகிர்ந்து பகிர்ந்துகொள்கிரேன்.இந்த ஜோதிடம்பாக்க 12 சோழிகள் தேவை.பஞ்சாட்ச்சர இல்லைனா அட்சாட்சர ஜபம் தெரிஞ்சிருக்கணும். யாரு என்ன கேக்கராங்களோ அதை முழுசா மனதில் வாங்கிண்டு சின்ன பிர்ச்சனைன்னா அட்சாச்சரஜபம் மனதில் சொல்லிண்டு அவர்களின் பிரச்சனை தீரனும் என்று முழுமனசாக பிரார்த்தனை பண்ணிண்டு சோழிகளை குலுக்கி போடனும்.


அப்போ ஒரு சோழி மட்டும் நிமிர்ந்து விழுந்தால் நினைத்தகாரியம் வெற்றிபெரும்,மகிழ்ச்சிபெருகும்,பொருள்சேரும்,பகைகுறையும்தன்னம்பிக்கை ஏற்படும் மொத்தத்தில் நல்லதே நடக்கும்.அதுவே ரெண்டு சோழிகள் நிமிர்ந்து விழுந்தால்னினைத்தகாரியம் நிறைவேரதாமதமாகும்.ஆனால் வெற்றி கிட்டும்.கைவிட்டு போன பொருள் கிடைக்கும்மன நிம்மதி பெருகும்

மூணு சோழி நிமிர்ந்தால் நினைத்தகாரியம் முடியாது,பொருள் விரயம் ஏற்படும், நண்பர்களால் தொல்லை ஏற்படும்,மொத்தத்தில் கெட்டபலன்கள்.
நாலு நிமிர்ந்தால் நினைத்தகாரியம் நடக்கும்,தொழில் வளர்ச்சி ஏற்படும்,மேலிட ஆதரவும் உதவியும் கிடக்கும் நோய் அகலும்.
ஐந்து நிமிர்ந்தால் தேடிய பொருள் கைக்கு வரும் இழந்தது திரும்பவும் கிடைக்க்கும்,வருமானம் பெருகும், வசதிகள் கூடும்,மனதில் தன்னம்பிக்கை பெருகும்.ஆறு நிமிர்ந்தால் பொருள் இழப்பு, வீண் வம்பு,வழக்கு உடல் நல குறைபாடுபண விரயமெண்ணீய காரியம் ஈடேராது. கெடுதலான பலன்கள்.ஏழு நிமிர்ந்தால் தொழில் வளர்ச்சி ஏர்படும், நோய் நீங்கும்,சேமிப்பு பெருகும்,சொத்துக்கள் சேரும் மங்கள காரியங்கள் நடக்கும்.எட்டு நிமிர்ந்தால் தொழில் பாதிப்பு,மனக்கவலை, குடும்பத்தில் பிரிவினை,பொருள் நட்டம் ஏற்படும்.ஒன்பது நிமிர்ந்தால் பொருள் சேரும்,வருமானம் பெருகும்,னோய் நீங்கும்,நல்ல பலன்களே கிடைக்கும்.

பத்து நிமிர்ந்தால் பொருள் விரயம், நோய், கடந்தொல்லைகள், அவமதிப்பு

என்று கெட்டபலன்கள் ஏற்படும்.பதினொன்ரு நிமிர்ந்தால் சேமிப்பு பெருகும், மதிப்பு உயரும், உயர்பதவி கிடைக்கும்,மழலைச்செல்வம் கிடைக்கும், நல்லபலன்களே நலக்கும்.பனிரெண்டும் நிமிர்ந்தால் பெயருக்கு இழிவு, கடன் தொல்லை, உடல் நலக்கேடு, பொருல் திருட்டு என்ரு மோசமான பலன்கள்
என்ரு விலா வாரியாக விளக்கினார். என்ஃப்ரெண்ட் நம்ம் வீட்ல சோழி

இருந்தா நாம்ளே ஜோசியம் பாக்கலாம் போல இருக்கேனு சிரிச்சா.

20 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சோழி ஜோஸ்யம் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தன.எத்தத்தின்னா பித்தம் தெளியும்னு பாவம் ஜனங்கள் இதுபோன்ற ஜோஸ்யர்களை நாடுகிறார்கள். எல்லாமே ஒரு நம்பிக்கை தான். ஒரு சின்ன ஆறுதல் தான். கடைசியில் நடப்பது நடந்தே தீரும்.

பகிர்வுக்கு நன்றி.

ரியாஸ் அஹமது said...

எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை ஆனால் உங்கள் எழுதும் நடையும் அருமை அம்மா ...

ரியாஸ் அஹமது said...

தமிழ் மனத்தில் முதல் ஓட்டு

Lakshmi said...

எனக்கும் இந்த ஜோசியம் எல்லாம் நம்பிக்கை இல்லெதான். ஆர்வமுள்ளவங்க யாரானும் இருப்பாங்களேன்னு போட்டேன்.

Lakshmi said...

ரியாஸ் அஹமது, நானும் இதெல்லாம் நம்புரது இல்லெ. ஹ, ஹ.

வெங்கட் நாகராஜ் said...

சுவாரசியமாய் இருந்தது உங்கள் பகிர்வு... ஜோசியம் எல்லாம் நான் பார்ப்பது இல்லை... பார்க்கும் நண்பர்களை தடுப்பதும் இல்லை... ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நம்பிக்கை... என்ன சொல்ல... :)

Lakshmi said...

அதான் வெங்கட் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நம்பிக்கை.

ellen said...

ஸ்வாரஸ்யமான இடுகை....வாழ்க்கை என்பதே சின்ன சின்ன நம்பிக்கைகளால் நகர்த்தப்படுவதுதானே...

கவி அழகன் said...

அருமை அருமை

Lakshmi said...

எல்லென் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

கவி அழகன் நன்றி.

vanathy said...

இவ்வளவு இருக்கா??? சோழியை உருட்டி ஜோசியம் இப்ப தான் கேள்விப்படுறேன்.

Lakshmi said...

ஆமா வானதி நமக்குத்தெரியாத விஷயங்கள் இன்னும் நிறையவே இருக்குதான்.

மனோ சாமிநாதன் said...

நிறைய மலையாளப்படங்களில் இந்த மாதிரி சோழி குலுக்கி பலன் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். இப்போது தமிழ் சின்னத்திரையில் கூட இந்த மாதிரி காட்சிகள் வருகின்றன. கேரளாவில் இந்த சோழி குலுக்குவதில் நிறைய நம்பிக்கைகள். அதற்கு என்ன அர்த்தம் என்று இப்போது உங்கள் விளக்கத்தைப்பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தன.

Lakshmi said...

மனோ மேடம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அம்பாளடியாள் said...

நல்ல தகவல் தந்தீர்கள்.பகிர்வுக்கு
நன்றி அம்மா!...........

Lakshmi said...

அம்பாளடியாள் நன்றி.

athira said...

அழகாக விளக்கியிருக்கிறீங்க சோழி ஜோசியம் பற்றி. எல்லாமே அவரவர் நம்பிக்கையில்தானே உள்ளது.

Lakshmi said...

அதிரா, வருகைக்கு நன்றிம்மா.

விச்சு said...

வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள். தங்களின் கருத்தினையும் தமிழ்மண வாக்கினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_17.html

Related Posts Plugin for WordPress, Blogger...