Pages

Back to Top

உடல் நலம் 2

உடல் நலம் 1

பொதுவாக நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும்பாலானவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்காங்க.

அவங்களுக்கு பயன்படும் விதத்தில் இந்த வீடியோவை உங்க கூட பகிர்ந்து கொள்ரேன்.ஹீலர்

பாஸ்கர் என்பவர் ரொம்ப அழகா சொல்லி இருக்கார். வியாதிகள் ஏன் உண்டாகிரது அதுக்கு

என்ன தீர்வு என்ரெல்லாம் புரியும் படி விளக்கமா சொல்லி இருக்கார். மருந்து மாத்திரை எதுவுமே

தேவை யில்லைன்னு அடிச்சு சொல்ரார். நம்மால முடிந்ததை ஃபாலோ பண்ணிபார்க்கலாமே?

எல்லாருக்குமே ஏதாவது உடல் ப்ராப்லம் இருக்கத்தானே செய்யுது. என்னதான் சொல்ராருன்னு

கேட்கலாமே இல்லியா? மொத்தம் 20-பகுதிகள் இருக்கு ஒர் நா விட்டு ஒரு நா ரெண்டு பகுதியா

பதிவு போடலாம்னு இருக்கேன், ஆர்வமுள்ளவங்க பார்த்து கேட்டுதெரிஞ்சுக்கலாமில்லையா?


ராம நாம மகிமை


வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்

என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,

மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு

33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32

எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின.ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு

ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி

ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.அந்த எழுத்துக்கள்தான் ரா......... ம...............ஷஷ்டி அப்த பூர்த்தி


                                                


சிந்தனைக்கு

 நஷ்டமில்லாமல் வெற்றி இல்லை
 முட்கள் இல்லாமல் அறியணை இல்லை
 முயற்சி இல்லாமல் பெருமை இல்லை.
 சிலுவை இல்லாமல் மகுடமில்லை.(அறிஞர் பென்)

 குவிந்து கிடக்கும் சாம்பல் மீது தண்ணீரைத்தெளித்தால்
 தண்ணீர் போன இடம் தெரியாது. நல்ல எண்ணம், நல்ல
 பிரார்த்தனைகள் இவைகளுக்கெல்லாம் நல்ல மனம் வேண்டும்.
 அகம்பாவம் குவிந்து கிடக்கும் சாம்பலுக்கு சமமானது.
 அது இருக்கும் மனத்தில் பிரார்த்தனைகளும், நல்லெண்ணங்களும்
 எடுபடாது.(ராமகிருஷ்ன பரமஹம்சர்)

 சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது - இதயத்தின் இசை.
 சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் அது-சக்தியின் பிறப்பிடம்.
 விளையாட நேரம் ஒதுக்குங்கள் அது- இளமையின் ரகசியம்.
 படிக்க நேரம் ஒதுக்குங்கள் அது- அறிவின் ஊற்று.
 நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் அது- மகிழ்ச்சிக்கு வழி.
 உழைக்கநேரம்ஒதுக்குங்கள்அதுவெற்றியின்விலை.   

அன்பனே பொழுதைப்பொன்னாக்கு.ஒரு நிமிஷம் கூட வீணாக்காதே,
 யோசித்துப்பார், ஒரு நாளைக்கு 24-மணி நேரம். அதில் சுமார்8- மணி
 நேரம் இளைப்பாறலாம்.தேகப்பயிற்சி செய்ய, குளிக்க ,துவைக்க, உண்ண உடுக்க 4-மணி நேரம், வயிற்றுப்பிழைபுக்காக தொழில்புரிய8-மணி நேரம்
இந்த 8-மணி நேரத்தைப்பெண்கள் வீட்டு வேலைகளிலும், ஆண்கள் வெளியேசென்று அலுவலகம், தொழிற்சாலைகளிலும் கழிக்கலாம்.
 மீதி 4-மணி நேரம் உள்ளது. அதை வீணாக்காதே.அறிவுப்பயிற்சிகளிலும் ஆன்மீகப்பயிற்சிகளிலுமதைச்செலவிடு.(சுத்தானந்த பாரதியார்)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
Related Posts Plugin for WordPress, Blogger...