Pages

Back to Top

சினேகிதனே, சினேகிதனே.........1

கல்யானத்துக்கு தேதி கூட குறிச்சாச்சு. முகூர்த்தத்துக்கு இன்னும் ஒருமாசம் கூட இல்லே. பணத்துக்கு என்னடி பண்ரது? வாசுவின் குரலில் ஆதங்கம்.
ஏன் ஆபீஸ்ல பிராவிடண்ட் பண்ட்ல லோன் போட்டிருந்தீங்க இல்லியா? அது என்னாச்சு? லதாவின் நியாயமான கேள்வி. அது இன்னிக்குதான் கிடைச்சது ஆனா நான் எவ்வளவு அப்ளை பண்ணி யிருந்தேனோ அதில் பாதி தான்  சாங்க்‌ஷன் ஆகியிருக்கு.பாக்கி பணத்துக்கு வெளில யாருகிட்டயாவது கடன் வாங்கித்தான் ஆகணும். யாருகிட்ட போயி கேக்கரது? எப்படியும் கடன் வாங்காம கல்யாணம் நடத்தணும்னு நினைச்சோம். எங்க நடுத்தர வர்க்கத்தினரின் சாபம் இது கடன் வாங்காம எந்த ஒரு காரியமும் பண்ணமுடியாது, சரி மேற்கொண்டு யாருகிட்ட கேக்கலாம் உனக்கு ஏதானும் தோனரதா? ஏண்டி நம்ம வெங்கு கிட்ட கேட்டு பாக்கலாமா? நம்மாத்துலயே10- வருஷமா பேயிங்க் கெஸ்ட்டா இருந்திருக்கானே . அவனை நண்பன் போலவா நடத்தினோம். நம்ம குடும்பத்தில் ஒருவனாகத்தானே நினைச்சோம்.. நம்ம நிலமை எடுத்துச்சொல்லி கேட்டு பாக்கலாமா? ஆமாங்க ஏற்கனவே அவரும் நம்மகிட்ட சொல்லி இருக்காரே. பொண் கல்யாணம் என்றால் நான் ஹெல்ப் பண்ரேன்னு. இப்போ அவரும் நல்லா வசதியாதானே இருக்கார். கேட்டுபாக்கலாம். ஆனா இப்போ அவர் வேர ஊர்லன்னா இருக்கார் லெட்டர்போட்டு பதில் வரதுக்கெல்லாம் டைம் இல்லே நாம நேரிலே போயி பத்ரிகை கொடுதுட்டு விஷயம் சொல்லிட்டு வரலாம்.

கோகுலம் ட்ரஸ்ட் (2)போனபதிவில் நிரைய பேரு அந்தக்குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த ஹெல்ப்
 பண்ணலாம்னு சொல்லி இருந்தாங்க . அவங்க வசதிக்காக. கோகுலம் ட்ரஸ்டோட
பேங்க் அக்கவுண்ட் நம்பர் மற்ற் விபரங்கள் கொடுத்திருக்கேன். விருப்பமுள்ளவர்கள்
 ஹெல்ப் பண்ணவும் நன்றி

 மெயிலில் நிறையா பேரு இந்த விவரங்கள் கேட்டிருந்தாங்க.THE ACCOUNT DETAILS OF THE SCHOOL.

ACCOUNT NAME :         GOKULAM TRUST
ACCOUNT NUMBER :     1129155000095944
IFSC CODE:                   KVBL0001129
BANK NAME :                KARUR VYSYA BANK , MUTHURANGAM STREET
                                      ERODE.


ஆசை


ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக்கூடாது 
அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்கு செல்வது 
காஞ்சி மகானின் தினசரி வழக்கம். பிச்சையில் கிடைக்கும் உணவையே அவர் உண்பார்.  
ஒரு சமயம், வழக்கம்போல் பூஜைகளை முடித்த பின்னர், பிட்சைக்கு செல்லாமல் மடத்திலேயே
இருந்துவிட்டார் மகான். பிட்சைக்கு செல்லாததால், அவர் உணவு எடுத்துக்கொள்ளவில்லை. 

பலரும் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார்.
இது மறுநாளும் தொடர்ந்தது. அன்றும் மகான் உணவருந்தவில்லை.  

மூன்றாம் நாளும் மகாசுவாமிகள் பிட்சைக்கு செல்லவில்லை . எனவே, மடத்தில் உள்ளோருக்கு
பயம் தொற்றிக் கொண்டது.  மடத்தில் உள்ளோர் எதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை தண்டிப்பதற்கு

பதில் மகான், தம்மையே இப்படி வருத்திக்கொள்வது வழக்கம் என்பதால் அவர்களின் அச்சம் அதிகரித்தது.
அதனால், எல்லோரும் சேர்ந்து சுவாமிகள் முன் நின்றார்கள்.  

"எங்களில் யார் என்ன பிழை செய்திருந்தாலும் தயவு செய்து மன்னித்து, உணவு ஏற்கவேண்டும்..!" 
எனப் பணிந்து வேண்டினர்.  
மகா பெரியவர் சிரித்துகொண்டே,  "நீங்கள் யாரும் எந்த தவறும் செய்யவில்லை. உங்கள் மேல் எனக்குக் 
கோபமும் இல்லை. என்னை திருத்திக்கொள்ளவே நான் இப்படி உண்ணாவிரதம் இருந்தேன்.
கொஞ்சம் நாட்களுக்கு முன் பிச்சையில் கிடைத்த உணவில் வெகு சுவையாக கீரை சமைத்து இட்டிருந்தார்கள். 

அதனை மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது.  பூஜைகளை முடித்ததுமே, இன்றைய பிச்சையில்
கீரை இருக்குமா?' என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. 

மூன்று நாட்களாக அந்த எண்ணம் மனதில் நின்றதால்தான், வயிறைப் பட்டினி போட்டு அந்த ஆசையை விரட்டினேன். 
ஒரு சந்நியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரக்கூடாது" என்றார்.  
ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்ததால்தான் மகாபெரியவரின் 
பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.

Hara Hara Sankara Jai Jai Sankara...

கோகுலம் ட்ரஸ்ட்

 இப்பவும் ஈரோடு பதிவுதான். ஒரு பள்ளியின் பிரின்சிபால் அம்மா என்னை வீட்ல வந்து பாத்தாங்க. அவங்க என்கிட்ட அம்மா நாங்க மன வளர்ச்சி குன்றிய குழந்தகளுக்கான ஒரு பள்ளி நடத்துரோம். நீங்க  நிறையா ப்ளாக் எல்லாம் எழுதுரீங்கன்னு உங்க வீட்ல சொன்னாங்க. எங்க பள்ளி பத்தியும் கொஞ்சம் எழுதமுடியுமா என்றார்கள். சொல்லுங்க என்ரேன். ஆண்டவன் படைப்பில் இது போல மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் படைப்பு ரொம்ப பரிதாபம். ஏன் என் ரெண்டு பசங்களுமே அப்படியான பசங்கதான்.  நாங்க ஓரளவு வசதியா இருப்பதால இது போல குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்தனும்னு நினைச்சு ஈரோட்ல நடத்துரோம் அம்மா. கவர்மெண்ட்ல பதிவும் செய்திருக்கோம். ஆனா எந்த சாரிட்டி மூலமாகவோ எந்த டொனேஷன் மூலமகவோ இந்தபள்ளியை நடத்தலேம்மா. முழுவதும் எங்க சொந்த செலவுலதாமா பன்ரோம். இப்பத்தைக்கு 20- குழந்தைகள் எங்க பள்ளியில் இருக்காங்க. 4- ஆசிரியர்களும் இருக்காங்க. அவங்களும் சேவை மனப்பான்மையுடன் தான் இந்தப்பணியை பொறுப்பாகவும் பொறுமையாகவும் செய்து வராங்க. ஆனாலும் கூட அவங்களுக்கும் குடும்பம் குழந்தைன்னு இருக்கே. அவங்களையும் கவனிக்கணுமே. அதுக்கு வருமானம் வேனுமில்லியா. எங்களால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு சம்பளம் கொடுக்கிரோம்மா.

ஈரோடு 3

இந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்படில்லாம் நான் பண்ணியாகணும். இல்லைனா கோவிச்சுகிட்டு போயிடுவான். அவஙக்ல்லாம் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்துடுவாங்க. நானோ லேட்டா தூங்கி லேட்டா எழுந்துப்பேன். காலேல்யே ஆரம்பிச்சுடுவான். பாட்டி என்ன நீ இவ்வள்வு நேரம் தூங்குரே. நான் சீக்கிரம் எழுந்திருச்சு உனக்காக வெயிட்பண்ணிட்டு இர்ப்பேன்னு உனக்கு தெரியாதா? சீக்கிரமா பல்தேய் நீ காபி குடிச்சுட்டு அதுல கொஞ்சம் எனக்கும் தா. என்பான் அப்பலேந்து அவன் ஆட்டி வக்கிரபடில்லாம் ஆடித்தான் ஆகணும். வேரவழி. அவங்கல்லாம் காலை 9-மணிக்கே ஃபுல் லஞ்ச் சாப்பிடுவாங்க. பாட்டி எனக்கு

DIVINE ACU THERAPY

போன மாசம் ஈரோடு போனதில் சில சு  சுவாரசியமான  அனுபவங்கள். அதில் ஒன்று இந்த ஹெல்த் கேர் அனுபவம்.இங்கு வந்தபிறகு ஒரு மாற்று மருத்துவ முறையைப்பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மருந்தில்லா மருத்துவம் என்று அதற்குப்பெயர். இந்தமருத்துவ மையத்தை நடத்துபவர் பெயர்  E. R. திரு ஞானம் அவர்கள்..கடந்த 23 ஆண்டுகளாக அவர் இந்த சிகிச்சையை செய்து வருகிரார். அவர்  ACU THERAPY  மட்டுமல்லாது  DIVINE HEALING, MAGNETIC THERAPY,   FLOWER MEDICINE,  REIKI HEALING  போன்ற பலவிதமான மாற்று மருத்துவ முறையில் பலவித நோய்களுக்கு மருத்துவம் செய்து வருகிரார்.கடந்த 6- வருடங்களாக பலவித நோய்களை குணப்படுத்தி இருக்கிரார். 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தபயிற்சி முறைகளை கற்றுக்கொடுத்தும் வருகிரார். அவரிடம்  கற்றுக்கொண்ட சிலர் தனியாக செண்டர் வைத்து மருத்துவம் செய்து வருகிரார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...