Pages

Back to Top

ஹெல்த் கேர்.

ரெண்டு வருடம் முன் ஒரு ஜூலை மாதம் வழக்கம்போல மார்னிங்க் வாக்,
யோகா மெடிடேஷன்,பிராணாயாமம் எல்லாம் செய்து முடிந்ததும் கொஞ்சம்
ஒரு 5 நிமிடத்துக்கு ரிலாக்ஸ் பண்ணிண்டேன்.10 வருஷமாகவே இதெல்லாம்
 ரெகுலராக செய்து வரேன். கோவம் என்பதே கிடையாது. கவலையோ, டென்ஷனோஎதுக்குமே படுவதில்லை. ரொம்பவே சாந்தமுடன் அமைதியாக
இருப்பேன். அன்று காலை உக்காந்திருக்கும்போதே திடீர்னு கீழ்த்தாடை பக்கம்
 லேசாக ஒரு வலி தொடங்கியது.ஏன் இப்படி வலிக்குதுன்னு யோசிக்கும்போதே
தலை முதல் கால்வரை வேத்து கொட்டித்து. முகம் அலம்பி டவல் எடுக்க பெட்
ரூம் போனேன்,அவ்வளவுதான் தெரியும். நினைவே இல்லாம ஒரு மணி நேரம்
 கீழே விழுந்திருக்கேன்.

சடன்னா எழுந்து பாத்தா ஒருமணி நேரமா நினைவே இல்லாம விழுந்திருப்பது
தெரிய வந்தது.டவல் கொண்டு முகம் துடைத்தபிறகு கூட வேர்வை நிக்கவே
 இல்லை. திடீர்னு கழுத்தை சுத்தி பின்கழுத்துபக்கம்னு வலிசிவியரா ஆச்சு.
 நிக்கக்கூட முடியாம உடம்பு நடுக்கம் வேர. நான் தனியாகதான் இருக்கேன்.
 நான் இருக்கும் இடத்தில் டாக்டர் வசதியெல்லாம் போறாது. கொஞ்ச நேரம்
 மனதை அமைதி படுத்திண்டு, நமக்கு ஒன்னுமில்லை, ஒன்னுமில்லைன்னு
ஆட்டோசஜ்ஜஷன் மாதிரி சொல்லிண்டே உக்காந்தேன். அப்படியும் எந்த முன்
நேற்றமும் இல்லை. சரி இது சரியா தோணலியேன்னு எனக்குத்தெரிந்த ஒரு
ஆட்டோக்காரப்பையனை போன் பண்ணி வரச்சொன்னேன். உடனே வந்தான்.
 என்னாச்சும்மா? என்றான். இப்பவே என்பையன் வீடு கூட்டீபோயி விடு என்றேன்.

 நான் இருக்கும் இடத்திலேந்த பையன் இருக்கும் இடம் 40 கிலோ மீட்டர் இருக்கும்.ஆட்டோக்காரப்பையன் ரொம்ப நல்ல மாதிரி, என்கண்டிஷன் பார்த்து
அவனே பயந்து போனான். நான் இருப்பது மூணாவது மாடி.என்னை மெதுவாக
 கையைப்பிடித்துக்கொண்டு கீழே கூட்டிண்டு போய் ஆட்டோவில் உக்கார வைத்தான்.எ ன்னால உக்காரவே முடியலை. படுத்துட்டேன். கூடியமான வரை
மேடு, பள்ளம் பார்த்துகவனமாகவே ஓட்டிண்டு போனான்.ஒண்ணரை மணி
 நேரம் ஆச்சு. அவங்க இருப்பது சிட்டி சைட். எல்லா வீடுகளிலும் லிஃப்ட் உண்டு.
 எனக்கு ஆட்டோலேந்து இற்ங்கவே முடியலை.


14 comments:

மதுரை சரவணன் said...

padikkum pothe manam valikkirathu.

Chitra said...

படபடப்புடன் வாசித்தேன்.... Looks like symptoms of heart attack... Was it?

வெங்கட் நாகராஜ் said...

இந்த மாதிரி சமயங்களில் உடனேயே பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்வது தான் சரியாக இருக்கும். இன்னும் இந்தியாவில் மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை என்பதும் உண்மை. தனியாக இருப்பதில் சில பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கிறது. பயம் ஏற்பட்டது. பிறகு என்ன ஆயிற்று என்று சீக்கிரம் எழுதுங்கள்.

Lakshmi said...

மதுரை சரவணன் வருகைக்கு நன்றிங்க.

Lakshmi said...

ஆமா சித்ரா, அதேதான்.ஒரே நேரத்ல
மைல்ட்&மாசிவ் ரெண்டுமே அட்டாக் பண்ணிச்சு

Lakshmi said...

வெங்கட் சீக்கிரமே சொல்ரேன்.

Lakshminarayanan said...

தனியாக இருக்கும்போதும் மனம் தளராத தங்களின் உறுதி மெய்சிலிர்க்க வைக்குதம்மா... தங்கள் உடல் நலமடையவும் மீண்டும் உங்கள் எழுத்துகள் பூக்களாய் மலரவும் அனைத்தும் வல்ல இறையை வேண்டுகிறேன்.

Lakshmi said...

லக்‌ஷ்மி நராயணன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இப்பவும் தனியா
தான் இருக்கேன், மருந்து, மாத்திரை
துணையுடன்.:))

எல் கே said...

இருதய நோய் போல் இருக்கே ? இப்ப பிரச்சனை இல்லையே

இராஜராஜேஸ்வரி said...

தங்களின் மன உறுதிக்குப் பாராட்டுக்கள். பயமே பாதி வியாதிக்குக் காரணம்.சரியான முடிவெடுத்ததும், ஆட்டோ சஜசனும் எங்களுக்குப் பாடங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு லக்ஷ்மி அக்கா,
உங்களை உரிமையோட கூப்பிடலம்னு நினைக்கிறேன்.
இவ்வளவு வலியில் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். அதே சமயம் மனோ தைரியத்துடன் செயல் பட்டு இருக்கிறீர்கள்.
கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார். மற்ற பதிவுகளையும் படிக்கப் போகிறேன்.

Lakshmi said...

வல்லி சிம்ஹன், முதல் தடவையா வரின்ங்களா என் எல்லாபதிவும் படிச்சுப்பாத்து கருத்து சொல்லுங்க. உங்கள் அன்பான அக்கரைக்கு மிகவும் நன்றி. குறையொன்ற்ுமில்லைங்கிர தலைப்பிலும் ஒரு பதிவு எழுதிண்டு இருக்கேன் அங்கேயும் வாங்க.

அமைதி அப்பா said...

வலி வந்த பிறகு நாற்பது கிலோமீட்டர், அதுவும் ஆட்டோவில்?! எனக்கு ஒன்றும் புரியவில்லை. தொடர்ந்து படிக்கிறேன்...

Lakshmi said...

அமைதி அப்பா நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...