Pages

Back to Top

பெட் அனிமல்(3)

பெட் அனிமல்(3)

அடுத்த நாள் முதல் ப்ளாக்கிக்கு சின்னபையன் ட்ரைனிங்க் கொடுத்தான். காலை அவன் குளிக்கப்போகும்போது அதயும் பாத்ரூம் கூட்டிப்போவான்.
அது நாலுகாலையும் தரையில் டைட்டாக ஊனிண்டு ஸ்ட்ரைக் பண்ணும். குளிக்க பிடிக்காது.பையன் விடுவனா? தாஜா பண்ணி உள்ள கூட்டிண்டு
போயி அதுக்குனு தனியா வாங்கின சோப்பு போட்டு,ஷவர்ல குளிப்பாட்டி, அதுக்கு வாங்கின தனி டவலால துடைச்சு விட்டு மொட்டை மாடில கொண்டு
கட்டிப்போட்டு காய விட்டுட்டு அப்பரமா அவன் குளித்துவருவன். அன்று சாயந்தரம் கடைகளில் தேடி பிடிச்சு, நாய்க்கு கழுத்துபட்டி, வாக்கிங்க் கூட்டிப்
போக பெரிய செயின் எல்லாம் இவர் வாங்கி வந்தார்.மொட்டைமாடிலேந்து ப்ளாக்கியைகூட்டிவந்து எல்லாருடனும் டிபன் சாப்பிட வைத்துஅதுகூட விளை
யாடி, கழுத்துபட்டையும் செயினும் அதனிடம் காட்டி, ப்ளாக்கி நீ சமத்தா இருந்தா சாயங்காலம் வாக்கிங்க் கூட்டிண்டு போவேன் வீட்ல சமத்தா இருக்கனம்

பெட் அனிமல்(2)

பெட் அனிமல்(2)


இரவு12மணிக்கு, சின்னப்பையன் எல்லாருக்கும் ஜீனி கொடுத்து, இன்னிக்கு நம் வீட்டுக்கு புதுவரவு வந்திருக்கு,அதைக்கொண்டாட வேண்டாமா? அதுதான் எல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கரேன்.என்று சொல்லி குட்டி நாய்க்கு
என்ன பேரு வைஇக்கலாம்னு என் 5 குட்டிகளும் டிஸ்கஸ் பண்ணினார்கள்.ஆளுக்கு ஒருபெயர் சொன்னார்கள்.கடைசியில் சின்னப்பையன் ப்ளாக்கின்னு பேர் வச்சான். முதல் பையனோ, ஏண்டா இது ப்ரௌன்&அழுக்கு
கலர்ல இருக்கு. ப்ரௌனின்னு பேரு வைக்கலாம்டான்னான். இல்லைடா, ப்ளாக்கி தான் நல்லா இருக்குடாஎன்றான். எல்லாரும் முழு மனதாக ப்ளாக்கியை ஏற்றுக்கொண்டார்கள்.1-மணிக்கு ப்ளாக்கியை வராண்டா
வில் படுக்கவைத்து தாலாட்டு மட்டும்தான் பாடலை. அவரவர்கள் தூங்கப்போனார்கள். அப்பா, குழந்தைகள் எல்லாருமே காலை 7-மணிக்கு கிளம்பனும். நாந்தினசரி காலை 5-மணிக்கு எழுந்தால் தான் எல்லாருக்கும்
ப்ரேக்ஃபாஸ்ட் ரெடிசெய்யமுடியும். அன்றும் அதுபோலவே 5-மணிக்கு எழுந்தேன். நான் வரும் சத்தம் கேட்டுப்ளாக்கியும் பின்னாடியே வந்தது.

பெட் அனிமல்(1)

பெட் அனிமல்.


நாங்க, ஜபல்பூரில் 5 வருடம் இருந்தோம். அங்க ஒரு குட்டி நாய் வளர்த்தோம்.
ஒரு 26-ஜனவரி அன்று ஒரு ஃப்ரெண்ட் வீடு போயிருந்தோம். அவ்ங்களும் தமிழ்க்காரங்கதான்.அவங்க இருந்தது. தனி வீடு. ரொம்ப பெரியவீடு. பின்புறம் பெரியதோட்டம் முன்புறமும் பூச்செடிகள் வைக்கும்படி தாராளமாக காலி இடங்கள்.நாங்க இருந்தது முதல் மாடி. எல்லாருமே ஆபீஸ் குவார்ட்டர்சில் தானிருந்தோம்.பதவிக்குத்தகுந்த வீடு. ஜபல்பூரிலிருந்து,30, 40 கிலோ மீட்டர்

நாராயன்பூர்(3)


                                                       
நாராயனேஸ்வர்(3)

கூட வந்த ஒரு பக்தர் முகுந்தன்னு பேரு. அவர் வீட்டில் எல்லாருக்கும்
மதிய சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார். நேரா பூனாவில் ஸ்வார்கேட்
என்னுமிடத்தில் உள்ள முகுந்த் நகர்(குல்டேக்டி) அவர் வீடு போனோம்.
சுற்றிவர பசுமையான மரங்கள் சூழ்ந்த குளுமையுடன் இருந்தது விஸ்தார
மான வீடு. வாசலில் பெரிய பந்தல் போட்டு 20. 30 சேர்கள் போட்டிருந்தார்கள்.
நாங்கள் எல்லாரும் போனதும் அவர்கள் வீட்டுப்பெண்கள் சிரித்த முகத்துடன்
இனிமையான வரவேற்பு கொடுத்தார்கள். பெரிசும், சிறிசுமாக ரெண்டு நாய்கள்
இருந்தது. பெரிய நாய் எங்களைக்கூட்டமாகக்கண்டதும் குலைக்க ஆரம்பித்தது.

நாராயன்பூர்(2)நாரயன்பூர்(2)                          

ஷிவ்பூர் டோல்கேட் தாண்டியதும் சிறிது நேரத்தில் பூனா எல்லை வந்தது.
11 மணி கோவில் வாசலில் இருந்தோம். பூனா மண்ணில் காலடி வைத்ததும்
உடம்பு, மனது பூராவும் ஒரு சிலிர்ப்பு. 15 வருடங்கள் வாழ்ந்த ஊர். வாழ்க்கை
தொடங்கியதே இங்குதான். சிரிப்பும், சந்தோஷமும், சோகமும் துக்கமும் என்றுகலந்துகட்டி அனுபவங்களைத்தந்த ஊர். அந்த உணர்வுகள் எல்லாம் மனதில்தோன்றி கண்களில் கண்ணீரைத்தேக்கி விட்டது.மற்றவர்கள் பார்த்தா என்னாச்சுன்னு கேப்பார்களென்னு கண்ணிரைக்காட்டாமல் இரிக்க ரொம்ப சிரமப்பட்டேன்.பூனாவை விட்டு இப்ப 35- வருடங்களுக்கு மேலேயே ஆச்சு. ஆனாலும் கூட நம்மனதுக்கு எவ்வளவு ஞாபக சக்தி இருக்கு.
Related Posts Plugin for WordPress, Blogger...