Pages

Back to Top

மின்சாரம் அது மின்சாரம்


பவர்கட் ஜிந்தாபாத்
இங்கு நாங்க வசிக்கும் பகுதிகளில் சம்மரில் காலை 3 மணி நேரம்

சாயந்தரம் 3 மணி நேரம் கரண்ட் கட் ஆகும். காலை, மாலை இரு

நேரமும் 6 டு 9 கரண்ட் கிடையாது.இப்ப விண்டரில் காலை, மாலை

ஒரு, ஒருமணி நேரம் கரண்ட்கட். எல்லா இடங்களிலும் உள்ளதுதான்.

நாங்க இருப்பது ஸிட்டியை விட்டு 60 கிலோ மீட்டர் உள்ளே தள்ளி

இருக்கும் புற நகர்ப்பகுதியாகும். நல்ல கிராமப்புரப்பகுதி தான். எல்லா

விஷயங்களுக்கும் 3 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஸ்டேஷன் வரை

போகனும். காய்கறி, பால், ப்ரொவிஷன்,டாக்டர், மருந்துக்கடை என்று

எதுவுமே பக்கத்தில் கிடையாது.

                            வார்த்தை சித்திரங்கள் ஜி ஜி அவங்க இந்த விருது எனக்கு கொடுத்திருக்காங்க. நன்றி ஜி ஜி. நான் ஏற்கனவே இந்தவிருதை பகிர்ந்து கொண்டேன். மறுபடியும் ஐவரைச்சொல்லனுமா?

கோவா.

ஒருவாரம் கோவா போயி சுத்திட்டு வந்தாச்சு. நான் நடு மகன் ஃபேமிலி மும்பையிலிருந்து ட்ரெயினில் கோவா போனோம். 10- மணி நேரம் ஆச்சு.
கொங்கன் ரயில்வே வழியில் நிறைய புது ஊர்கள் பேரக்குழந்தைகளுடன் அரட்டை என்று ஜாலியாக இருந்தது. பெரியமகன் ஃபேமிலியுடன் ஈரோடில் இருந்து கோவா வந்தார்கள். ஈரோடிலிருந்து டேரக்டா கோவாக்கு ரயில் இல்லே. ஷோரனுர் போயி அங்கேந்து கோவா வந்தார்கள். ரயிலில் 20-மணினேரம் பயணம். போகவர் 3- நாட்கள் ஆனது, கோவாவில் சின்னமகன்
                                           

                        
 புதுசா வீடு கட்டி இருந்தான். அதுபாக்கவும் கோவா சுத்திபாக்கவும் எல்லாரும் போனோம். வீடு வில்லாடைப்பில் மிக பிரம்மண்டமான பங்களாவாக இருந்தது. மாடியும் கீழுமா அழகா இருந்தது. இப்பதான் கட்டி முடித்திருப்பதால கரண்ட்கனெக்‌ஷன், வாட்டர் கனெக்‌ஷன் இன்னும் கொடுக்கல்லே. அதனால ஹோட்டலில் தான் தங்கினோம்.அங்க கரண்ட் எல்லாம் சோலார்பவரில்தான் ஒர்க் பன்ரது. நல்ல சிஸ்டம் இல்லியா?

கோவா டூரிஸ்ட் ப்ளேஸ் இல்லியா டூரிஸ்ட்களின் நடமாட்டம்தான் திரும்பினபக்கமெல்லாம். மோஸ்ட்லி ஃபாரினர்ஸ்தான். குழந்தைகள் எல்லாருடனும் சேர்ந்து இருந்ததால டைம் போனதே தெரியல்லே. தினசரி கடல் குளியல், ஹோட்டல் சாப்பாடு ஊர் சுற்றுவது என்று இருந்தோம்.
                               
திரும்பின பக்கமெல்லாம் பெரிசு பெரிசா சர்ச் இருக்கு , அதுபோல பீச்சும் நிறையா இருக்கு. ஒவ்வொரு பீச் ஒவ்வொரு பெயரில். பீச்சுன்னா அங்கயும் ஃபாரினர்ஸ் ஸன்பாத் எடுக்கும் காட்சிகள்தான் நிறையா கண்களில் பட்டுண்டே இருந்தது. ஊர் என்னமோ சின்னதா தன் இருக்கு. முதல் நாள் நாங்க

                              
 பீச் போகும் போது எதிரில் வந்த பைக் பாத்து திடுக்கிட்டுப்போனோம். எலும்புக்கூடு மாதிரி பைக்கை வடிவமைத்து இருந்தா. தினசரி பார்த்து பார்த்து

                                    

                              அதுவும் பழகிப்போச்சு.குழந்தைகள் கடலில் குளிக்க இறங்கினா கரை ஏறவே மாட்டேங்கரா. அவ்வளவு ஜாலியா எஞ்சாய் பன்ரா.

பெரியவங்களும் அப்படியேதான் எஞ்சாய் பண்ணத்தானே வெளி ஊர்லாம் போரோம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விருப்பம். நான் க்ரையில் உக்காந்துண்டு எல்லாரையும், எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டே

                                    

                                  
 இருந்தேன். நடு மறுமகள் நிலாவை கைக்குள் பிடித்து அந்த நிலாவைதான் நான் கையில பிடிச்சேன்னு போஸ்கொடுக்கரா. சின்னமகன் மஹேந்த்ராக்ளப் ஹவுசில் மெம்பரா இருக்கான். வருஷத்துக்கு ஒரு தொகை கட்டினா நாம எப்பபோனாலும் அங்க தங்க சவுரியம் பண்ணித்தருவா. அங்கதான் தங்கினா.  எல்லா பீச் பக்கமும் மீன் பிடிக்கும் வலை காயப்போட்டிருக்கா. எனக்கு ஊர் பூராவும் மீன் வாடை அடிக்கராப்லவே இருந்தது. வெஜ்

                 
ஹோட்டலாபாத்துதான் சாப்பிட போனோம் அங்கயும்கூட மீன் வாடைதான்.

               

ப்யூர் வெஜிடேரியனாஇர்க்கரவங்களுக்கு இதெல்லாம் பெரிய தொல்லைதான். ஒரு வாரம் எப்படி போச்சுன்னே தெரியல்லே.  தோசை, வடை எல்லாம் நிறையா சாம்பார் கூட தராங்க. டேஸ்ட்டும் ஓக்கே தான். தெரிஞ்சவங்க வீட்டுக்கு ஒரு


                                                                       
                                          நாள் போனோம் அவ வீட்டில் ஒரு நாய்க்குட்டி இருந்தது எங்களையெல்லாம் கூட்டமாபாத்தது பாவம் அது பயந்தேபோச்சு. குழந்தைகளுடன் நல்லா விளையாடினது.

பீச்பக்கம் சுத்தும்போது அங்குவரும் டூரிஸ்ட்களுக்கு கைட் எல்லாரும் அந்தந்த இடங்கள் பற்றி விவரம் சொல்லிண்டு இருந்தா, இதுதான் சிங்கம் ஹிந்திப்படம் ஷூட்டிங்க் எடுத்த இடம், இதுதான் ஏக் துஜே கே லியே ஹிந்திப்படம்

                                       
                               
 ஷூட்டிங்க் நடந்த இடம்னு சொல்லிண்டு இருந்தா. படம் ஷூட்டிங்க் எடுத்த இடம்னு சொன்னால்தான் எல்லாரும் ஆர்வமா பார்ப்பார்களோஎன்னமோ?கோவாகிளைமேட் கொஞ்சம் சூடாகத்தான் இருக்கு. மும்பையில் அதிகாலை, இரவுகளில் நல்லகுளிர் இருக்கு.. ஒருவாரம் ஆனதும் அவரவர்கள் கிளம்பி அவரவர் இடங்களுக்கு திரும்பியாச்சு. நான் நேர உங்களையெல்லாம் சந்திக்க வந்துட்டேன். நாளை முதல் ஆப்ரிக்க பயணம்தொடருகிரேன். எல்லாரும் அங்க வந்துடுங்க.
Related Posts Plugin for WordPress, Blogger...