Pages

Back to Top

சந்தேகம்

நம்ம எல்லாருக்குமே காஞ்சி பெரியவர்பற்றி நன்கு தெரியும்(தெரியும்தானே?)
 காஞ்சிபுரத்தில் கலவையில் பெரியவர் முகாம்இட்டிருந்தார்கள்.அப்போதுஒரு
வர் சென்னையில் இருந்து பெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றார்.அவ
ருக்கு பெரியவர் மேல் பெரிய மகான் என்று தனி மறியாதையே உண்டு. அங்கு
சென்று காலை பூஜையில் எல்லாம் கலந்துகொண்டார். அங்கு மடத்திற்கு பெரி
யவாளை சந்திக்க யார் வந்தாலும் மதிய உணவு தந்து உபசரிப்பார்கள். அவரும்
சாப்பாடு ஆனதும், பெரியவரிடம் சில சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள அங்கு
காத்திருக்கும் 20, 30 பக்தர்களுடன் சேர்ந்துஅமர்ந்துகொண்டார்.சாமிகள்மதியம்
2 டு 4 மணி வரை பக்தர்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள்கொடுப்பார். சாமி
கள் உள்ளே தள்ளி ஒரு இருட்டு ரூமில் அமர்வார். மற்றவர்கள் வெளியே ஒரு
 ஹாலில் வரிசையாக அமர்வார்கள்.

ஐரோலி பாலாஜி

ஆடி மாசம் பிறந்ததுமே வரிசையாக பண்டிகைகளின் அணி வகுப்பு
 தொடங்கிடு.ம் 8, 8, நாட்களில் வரிசையா பண்டிகைகள். கணவன் மனை வி
 இருவருமே வேலைக்கு போகும் வீடுகளில் பண்டிகைகளை சிறப்பாக
 கொண்டாட டைம் ஒத்துழைப்பு கொடுக்காது. வீட்டளவில் சுருக்கமாக
 ஸ்வாமிக்கு ஒரு வெத்தலை ,பாக்கு, பழம், தேங்காய், கடைகளில் வாங்கும்
தின்பண்டங்களை வைத்து சுருக்கமாகபண்டிகைக்களைகொண்டாடுகிறார்கள்.
கொண்டாடவும் முடியாமல், விடவும் முடியாமல் அவஸ்தைதான். அதே
 கோவிலில் ஸ்வாமிக்கு ஒரு திருக்கல்யாணமோ, லஷார்ச்சனையோ
 நவக்ரஹ ஹோமமோ நடக்கும்போது, அதுவும் லீவு நாட்களில் வந்தா
 உள்ளூரில் இருப்பவர்களும், பக்கத்து ஊர்களில் இருப்பவர்களும் ஒன்று
 கூடி சிறப்பாக நடத்தி வருவது நல்ல விஷயம். அந்தபூஜையின் போது
 கலந்து கொண்டால் தெரிந்த வர்களை சந்திக்கும் வாய்ப்பு சந்தோஷம்
 மன நிம்மதி கிடைப்பதாக நினைக்கிரார்கள்.

கல்யாணமாம் கல்யாணம் - 3

            மறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்‌ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்லாம் முறைப்படி வைதீகச் சடங்குகளுடன் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. 10.30 முகூர்த்தம். நாதஸ்வர ஓசையுடன் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. எல்லாருக்கும் ஜூஸ் உபசாரம். மாப்பிள்ளை வந்தாரா, மாட்டுப்பெண் வந்தாளான்னு உற்சாக விசாரிப்புகள். 

கல்யாணமாம் கல்யாணம் - 2

      ரகு லீலா மால் ரொம்பவே பெரிசா பிரும்மாண்டமா இருந்தது. மூணாவது மாடியில் ப்ரோக்ராம் ஏற்பாடு செய்திருந்தா. எஸ்கலேட்டரில் மேலே போனோம். ஃபுல்லா ஏ சி. வெளியே மழையின் குளிர் ஒரு புறம், உள்ளே ஏ சி குளிர் ஒரு புறம்ன்னு ஒரே ஜிலு, ஜிலுப்புதான். மேலே ஒரு தனி இடமொதுக்கி அங்கே பூரா நம்ம கிராமத்தைப் போல வடிவமைத்து இருந்தார்கள். மேலே ஓலைக் கூரை வேய்ந்து, அங்கேந்து நிறையா அரிக்கேன் லைட்டுகளை தொங்க விட்டிருந்தா. கூடவே பேப்பர் ரிப்பனில் தோரணங்களையும் தொங்க விட்டிருந்தா. உக்கார நிறைய பிறம்பு நாற்காலிகள்  சில கயித்து கட்டில்களும் இருந்தது. தரையில் மணல் பரப்பி இருந்தார்கள்.  

கல்யாணமாம் கல்யாணம் - 1

     சமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெண் வீட்டுக் கல்யாணம் என்பதால் கல்யாணத்துக்கு 4 - நாள் முன்பு சுமங்கலி பூஜை எல்லாம் முறையாக பண்ணினார்கள். அந்த ஃபங்க்‌ஷன் கோலிவாடா என்னுமிடதில் இருந்தது. ஆத்மார்த்தமாக, முறையாக எல்லாம் செய்தார்கள். பெண்ணின் அப்பாவுடன் பிறந்தவர் நவி மும்பை நெருல் என்னுமிடத்தில் வசித்து வந்தார். அவருடன் கூடப்பிறந்தவர்கள் 2 அண்ணா, 1 தம்பி. அந்த தம்பி வீட்டில் தான் பூஜை நடந்தது. எல்லாருமே குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டார்கள். 2 அண்ணாவும் வெளி நாட்டில் தோஹா கத்தாரில் இருந்து வந்திருந்தார்கள். சமையலுக்கும் ஆள் போட்டிருந்தார்கள். 
Related Posts Plugin for WordPress, Blogger...