Pages

Back to Top

just for fun

ஆனந்தம் துள்ளும் நுரை ததும்பும் காதல்கதை இது. நெட்டில் படித்ததில் பிடித்தது.

காதலி ரேக்சொனவும் காதலன் சிந்தாலும் ஒருவரையொருவர் மனமார நேசித்தனர்.

இருவரும் அறிமுகமானது பவர் தெருவில் உள்ள லிரில் ஜிம்மில்

ரெக்சின் பெற்றோர் விவேல்,மார்கோ மற்றும் சிந்தலின் பெற்றோர் ஏ ரியல்,நிர்மா.

காதலுக்குத் தடைபோடவில்லை . எதிர்பார்த்தபடி சிந்தால் தன் லைஃபாய் ஆக
(வாழ்க்கைத்துணையாக) வருவதில்ரேக்சுக்கு கொள்ளை மகிழ்ச்சி.

மெடிமிக்ஸ் டவுனில் ஸந்தூர் தியேட்டருக்கு எதிரிலுள்ள பேர்&லவ்லிதோட்டத்தில்

கல்யாணம் நடக்க ஏற்பாடாயிற்று.
குட்டி க்யுரா அழகுநிலையம் ரேக்சை கனவுமங்கை ஆக்கியது.

மஞ்சள் பெர்க்ளோ மேஹந்தியிட்டு அசத்த ஹமாம்

நலங்கு நடத்தி கலகலக்கவைத்தாள். நண்பர்கள் குழாம் லக்ஸ், டவ், சாவ்லான், பா,

டெட்டால், நிவியா , சந்திரிகா முதலானோர் வந்திருந்து அழகுக்கு அழகு சேர்த்தனர்.

தென் நிலவுக்கு இருவரும் சன்லைட் தீவில் ப்ரீஸ் காட்டேஜில் தங்கிக் கொண்டு

கடலில் சர்ப் செய்து மகிழ்ந்தனர்.

தங்களது பியர்ஸ் கனவு மாளிகையில் தனிக்குடித்தனம் ஆரம்பித்தனர்.

அடுத்த வருடம் இருவர் நால்வராயினர் . ஆம் அவர்களுக்குப் பிறந்தது இரட்டையர்

கியாரண்டி.

கேஸ் சிலிண்டருக்கும் கியாரண்டி உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.. தெரியாதவர்களுக்காக இந்த தகவல்கள்.
சிலிண்டரை மேலே இருக்கும் கைப்பிடிவளையத்துடன் இணைப்பதற்காக மூன்ரு இரும்பு பட்டைகள் வைத்திருப்பார்கள்.அதில் ஒவ்வொரு பட்டையிலும் ஏ, பி, சி, டி என நான்கு எழுத்துகளில்  ஏதாவது ஒன்றுடன் இரண்டு எண்களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஏ-ஜனவரிமுதல் மார்ச்வரை,

பி-ஏப்ரல் முதல் ஜூன் வரை

சி-ஜூலை முதல் செப்டம்பர் வரை

டி-அக்டோபர் முதல் டிசம்பர் வரை

என அந்த எழுத்துக்கள் மூன்று மாதங்களைக்குறிக்கும்.
அதிலிருக்குமெண்கள் வருடத்தைக்குறிக்கும். இதுதான்
 சிலிண்டரின் கியாரண்டி காலம்.
 நாம் தெரிந்து கொண்ட நல்ல விஷயங்களைதெரியாதவர்களுக்கு தெரியவைப்பதும் நல்ல விஷயம்தானே.


நண்பரின் பிறந்த நாள்


                           
இவர் எனக்கு சமீபத்தில் கிடைத்த புதிய  மிகவும் அன்பான நண்பர். இன்று இவரின் 25-வது பிறந்ததினத்தை சந்தோஷமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.அந்த சந்தோஷத்தை உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிரேன். என்னுடன் சேர்ந்து அனைவரும் அவரை வாழ்த்தலாம் வாங்க.பிறந்த நாள் பரிசாக என்ன கொடுப்பதுன்னு ரொம்ப நேரம் யோசித்தேன். அவர் இருப்பது பெண்களூரில்,(ஹா ஹா) நான் மும்பையில். முகம் தெரியாத நண்பர்களின் வாழ்த்துக்களை
 விட சிறப்பான பரிசாக எதைக்கொடுத்து விடமுடியும்? அதான் உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிரேன்.
 நண்பா உன் அனுமதி இல்லாமலே உன் படத்தையும் பிறந்த நாளையும்
இங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்கிரேன். ப்ளீஸ் டோண்ட் மிஸ்டேக்மீ.......
வாழ்வில் நீண்ட ஆயுள் ஆரோக்கியமும் எல்லாவளங்களும் பெற்று சந்தோஷமாகவும்   இருக்க வாழ்த்துகிரேன்&;வாழ்த்துகிரோம்.

இவ்வளவு சொல்லிட்டு அவரின் பெயர் சொல்ல மறந்தேனே அவர் பேரு
பீர் மொஹம்மது PEER MOHAMMED
Related Posts Plugin for WordPress, Blogger...