மருமகளின் அக்காவும் கூடவே வந்தா.அன்னிக்கும் காலிவயிருடன்,குளிக்காம வரச்
சொல்லியிருந்தார். நான்மட்டும் குளிக்கலை.அங்கபோயிச்சேரும்போதே9 மணிஆச்சு.
வைத்தியர் ரெடியாகாத்திட்டு இருந்தார்.முதலில் ரூம்லபோயி சாமான்களை வச்சுட்டு
வாங்கன்னு ரூமிக்கு கூட்டிப்போனார்.அவ்ர்வீட்லேந்து ஜஸ்ட்2 நிம்ஷவாக்கில் ரூம்
இருந்தது. வெளியில் நீ.....ண்.......ட வராண்டா. உள்ளே 5 ரூம்கள். ஏற்கனவே 2ரூம்
களில் ஆட்கள் ட்ரீட்மெண்டுக்காக தங்கி இருந்தார்கள். எங்களுக்காக ஒதுக்கப்பட்டரூம்
போயி சாமான்களை வைத்தோம்.10க்கு 8 என்கிர அளவில் ஒரு ரூம்.அதை ரூம் என்று
சொல்வதே சிறிது அதிகம்தான்.ஒருமரக்கட்டில்,அதன்மேல் எண்ணைப்பிசுக்குடன் ஒரு
கோரைப்பாய். ஒருகாலத்தில் அது பாயாக இருந்திருக்கலாம். இப்போ அதில் எண்ணி 10
குச்சிகள்தான் இருந்தது. எதிர்சைடில் இன்னொருசின்ன நீள பெஞ்ச்.சின்னதாகஒரு
அழுக்குடேபிள். தொட்ட இடம்பூரா பிசு.பிசுன்னு ஒட்டரது. ஐயோ, இங்கயா ஒருவாரம்
இருக்கணம்? நுதான் தோணித்து.சரி,வைத்யத்துக்குனு வந்தாச்சு, வேரஎதைப்பத்தியும்
யோசிக்கவே கூடாதுன்னு சாமான்களைவச்சுட்டு திரும்ப வைத்தியர்வீடு போனோம்.
புடவை வேண்டாம்னுசொன்னதால நைட்டிதான். ஒருதனி ரூமில் கால்,கைகளுக்கு
மருந்து எண்ணைதடவி நல்லா நீவி விட்டு விரல்களில் சொடக்கு எடுத்துவிட்டார்.
இங்க இருக்கும் ஒருவாரமும் இந்த எண்ணை ஒரு நாளுக்கு5 தரம் உடம்பு பூராவும்
தடவிக்கணும்.எண்ணை காயவேகூடாது.தள,தளன்னு உடம்புல எண்ணை வழிஞ்சுண்டே
இருக்கணும்,அப்பரம் முக்கியமா,ஒருவாரமும் குளிக்கவேகூடாது(ஐயயோ)ன்னுட்டார்.
எண்ணைதடவிண்டு கஷாய்ம்ங்கிர பேரிலென்னமோ தந்து குடிக்கச்சொன்னார்.
தொண்டைக்கு கீழ இறங்கவே இல்லை. நாங்க திரும்பரூம்போனோம்.அங்கதங்கீருந்தவா
பேச்சுக்கொடுத்தா. அவா வந்து 4 நாள் ஆச்சாம். இதுபோல 5 நேரம்எண்ணைபிரட்டல்
கஷாயம் என்று இருக்காளாம்.தோள்பட்டைலேந்து, கால்களிலும் நல்ல வலியாம்.
ஸ்பைனல் காடில் ஏதோ ப்ராப்ளமாம்.எர்ணாகுளத்திலேந்து வந்திருப்பதாகச்சொன்னா.
அவா மலையாளிகள்தான்.என்மகன், மருமகளின் அக்கா இருவரும் கொஞ்ச நேரம்
இருந்துட்டு கிளம்பினா. என் மகனுக்கு எங்க இருவரையும் இங்க இப்படி தனியா
விட்டுட்டு போக மனசே இல்லை. ஆபீசில் லீவுதரமாட்ரா.அரைமனசாதான் கிளம்பினான்.
அவர்கள்கிளம்பி போனதும் நான் வராண்டாவில் சின்னசிமெண்ட் திண்ணையில்
உக்காந்தேன். மருமகள் அடுப்பை மூட்டி முத்லில் காபி போட்டுத்தந்தா.பிறகு சமையல்
ஆரம்பிச்சா.காய்களும் வரும்போதே வாங்கி வந்தோம். நான் சுற்றிவர கொஞ்சம்
நடக்கலாமே என்று வெளியில்வந்தேன். நல்ல ஃபார்ம்ஹௌஸ்போல,சுத்திவர
300,வாழைமரங்கள்,300 தென்னை மரங்கள்,ப்லாமரங்களென்று சூப்பர் அட்மாஸ்பியர்
அதனால நல்ல நிழலிருந்தது. மாமரங்கள்வேருதோப்பாக இருந்தது.அதில் ஓடிவிளை
யாடும் கிளிகள், அணில்கள்,பேர்தெரியாத சின்ன,சின்ன பற்வைகள்,பூனை, நாய், எலிக
ள்,மூஞ்சுரு என்றுகுட்டி,குட்டியாக எவ்வளவு அழகுகள். டி.வி., ரெடியோ,பி.ஸி.
என்று எதுவுமே இல்லாதஒருவார வாழ்க்கை எப்படி இருக்கும்? செல்லிலும் சிக்னல்
ரேஞ்சே கிடைப்பதில்லை. (சுத்தம்.)
1மணிக்கு சூடு,சூடா சாப்பாடு ரெடி.புதுஇடம், மூக்குக்குஒத்துவராத வாடைகள்
சுத்திலும் இருக்கும் இயற்கை அழகை ரசித்தவாறே இருவரும் பேசிண்டே சாப்பிட்டோம்.
பக்கத்து ரூமில் இருப்பவர்கள் வெளியில் ஹோட்டலில் இருந்துதான் சாப்பாடு வாங்கி
சாப்பிடுகிரார்கள். ஹோட்டல் ரொம்ப தள்ளி இருக்கு. அதுவும் புழுங்கலரிசிசாதம் வேர
என்னத்தல்லாமோ போட்டு சமையல்ப்ண்ணிருப்பா. அவாள்ளாம்”எல்லாம்” சாப்பிடுவா.
தவிர ஹோட்டல்போய்வர ஒரு ஆம்பிளை பேஷண்டும் இருந்தார்.அவர்தான்போய்
வருவார்.எங்ககிட்டயும் கேட்டா ஏதானும் வாங்கி வரவான்னு. இல்லை நாங்க சமையல்
செய்ய எல்லா சாமான்களும் கொண்டே வந்திட்டோம் என்றது அவர்களுக்கு
ஆச்சர்யமான விஷயமா இருந்தது.சப்பிட்டு எல்லாருமா வராண்டாவில் உக்காந்து
பேசிண்டு இருந்தோம். எவ்வளவு நேரம் உக்காரரது.திரும்ப எண்ணை வழிய தடவி
உள்ள போனோம். தாராளமா பாட்டில் நிரைய எண்ணைததிருந்தார். அந்தகட்டிலைப்
பாத்தா படுக்கவே தோணலை.எத்தனைபேரு படுத்தகட்டிலோ? வேரவழியும் இல்லை.
Tweet | |||||
20 comments:
நீங்க நல்லா சுவாரஸியமா சொல்றேள் மாமி!
இன்ட்லி, தமிழ்மணத்துடன் இணைக்கலாமே!
ஆகா... நாங்க தான் FIRST , யாரங்கே கொண்டு வாருங்கள், வடையை...
இப்பதான் போஸ்ட் போட்டேன். முத ஆளா
வந்து பதிவு பொட்டாச்சா? குட்.
பாரத் பாரதி. முதல் மூன்று பதிவும் உங்களோடதுதான். நன்றி. இன்டலி தமிழ்மணத்ல எப்படி இணைக்கனும்? ப்ளீஸ் ஹெல்ப்.
அம்மா
நல்லா விருவிருப்பா போகுது!!
அப்பறம் கால்வலி சரியாகிடுச்சா? அதை கேட்க ஆவலா காத்திட்டு இருக்கேன்
//ராளமா பாட்டில் நிரைய எண்ணைததிருந்தார். அந்தகட்டிலைப்
பாத்தா படுக்கவே தோணலை.எத்தனைபேரு படுத்தகட்டிலோ? வேரவழியும் இல்லை.//
:))
ஹாஸ்பிட்டல்ல பாத்தா கூட இதே பீலிங் தான் வருமா..
நான் போகும் போதே 2 பெட்சீட், ஒரு ப்ளாங்கெட் எடுத்துட்டு போயிடுவேன் :))
ta.indli.com tamilmanam.net இந்த வலைத்தள முகவரிகளுக்கு சென்று , பயனாளர் பயர், கடவு சொல் பெற்று கொள்ளுங்கள்.
அதன் பின் , எளிதாக பதிவுகளை இணைக்கலாம்..
ஆமி அது ஆஸ்பிடல் போலவே இல்லைமா. ஏதோஒரு பண்ணைவீடுபோல
சுத்திவர அத்தனை மரங்கள், பாடும் வித,விதமான பறவைகள் என்று
அவ்வளவு அம்சமான இடம்தான். நாங்களும் போர்வை எல்லாம் கொன்டு போயிருந்தோம்.ஆனா அந்தக்கட்டில்ல விரிக்கவே மனசு வல்லை. தினசரி எண்ணைலயே இருக்கணும். சுத்தம் தான் சுத்தமா இல்லை
பார்வையாளன் தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன். இன்ட்லி எத்தனை
தரம் யூசர் ஐ.டி., எத்தனைதரம் பாஸ்வேர்ட் போட்டாலும் ரென்டுமே தப்பூன்னே வரது.அவங்க வேர பாஸ்வேர்ட் அனுப்பினாங்கமெயிலில் அதைப்போட்டாலும் தப்புனே வரது. இப்ப என்னசெய்யலாம்?
சூப்பரா இருக்கு, ஆன்டி. எனக்கும் ஆஸ்பத்திரி, லாட்ஜ் கட்டில்களில் படுக்கவே வெறுப்பா இருக்கும்.
வானதி, என்ன லேட்டு??
நன்றி.என் ஆதரவு கண்டிப்பாக உண்டு.
உங்கள் நடை மேலும் வாசிக்க தூண்டுகிறது... உங்கள் கால் வலி சரியானதா ? மேலும் என்ன நடந்தது அங்கே. படிக்க ஆவலாய்
கார்த்தி வருகைக்கு நன்றி..
சின்ன யோசனை . இந்த ரோஜா பூ நன்றாக இருந்தாலு. சில சமயம் வார்த்தைகளுக்கு நடுவில் வந்து படிப்பதை தடை செய்கிறது
ஓ. இதில் இப்படி ஒரு சிக்க்ல் இருக்கா?
நல்ல பகிர்வு. நானும் இது போன்ற ஒரு பரணீயம் பார்த்து இருக்கிறேன். உங்கள் மூலம் கேட்பதில் சுவாரசியமாக இருக்கிறது. தொடருங்கள். நானும் தொடர்கிறேன்….
வெங்கட் நாகராஜ்
www.venkatnagaraj.blogspot.com
www.rasithapaadal.blogspot.com
நீங்க பாத்த பரணீயம் எங்க இருக்கு?
பொறுமைதான் உங்களுக்கு. கட்டிலையும் பாயையும் பார்த்ததுமே நான் கிளம்பி இருப்பேன். :D
கீதா சாம்ப சிவம் வருகைக்கு நன்றி
Post a Comment