Pages

Back to Top

மின்சாரம் அது மின்சாரம்


பவர்கட் ஜிந்தாபாத்




இங்கு நாங்க வசிக்கும் பகுதிகளில் சம்மரில் காலை 3 மணி நேரம்

சாயந்தரம் 3 மணி நேரம் கரண்ட் கட் ஆகும். காலை, மாலை இரு

நேரமும் 6 டு 9 கரண்ட் கிடையாது.இப்ப விண்டரில் காலை, மாலை

ஒரு, ஒருமணி நேரம் கரண்ட்கட். எல்லா இடங்களிலும் உள்ளதுதான்.

நாங்க இருப்பது ஸிட்டியை விட்டு 60 கிலோ மீட்டர் உள்ளே தள்ளி

இருக்கும் புற நகர்ப்பகுதியாகும். நல்ல கிராமப்புரப்பகுதி தான். எல்லா

விஷயங்களுக்கும் 3 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஸ்டேஷன் வரை

போகனும். காய்கறி, பால், ப்ரொவிஷன்,டாக்டர், மருந்துக்கடை என்று

எதுவுமே பக்கத்தில் கிடையாது.




இந்த பவர்கட்டும் தொடர்ந்து 5 வருடங்களாக இருந்து கொண்டுதான் இருக்கு.

முதலில் எல்லாம் காலங்காத்தால, ஆபீஸ்,ஸ்கூல், காலேஜ் போறவங்க எல்லாம்ரொம்ப கோவமும், டென்ஷனும் தான் பட்டோம். சரி கொவப்படுவதால ஹெல்த்பாதிக்கரதுதான் மிச்சம். நாங்க இருப்பது மூன்று விங்க்ஸ்(A, B, C.) இருக்கும4 மாடி குடி இருப்பு பகுதி. மொத்தமா 50 குடித்தனங்கள் இருப்போம். எல்லா பாஷைக்காராளும் அடக்கம். எந்த டோரில் யாரு இருக்கா என்கிர விபரங்கள்கூட தெரிஞ்சுக்காம அவா, வா வெலை உண்டுன்னு தான் எல்லாருமே இருந்தோம்.



இதுபோல ஒரு கரண்ட் கட் நாளில் வீட்டில் இருக்க முடியாம எல்லாரும் கீழே

இருக்கும் கார்டனில் உக்காந்து பேசிண்டு இருந்தோம். என்ன கொடுமை பாருங்கரொம்பவே கஷ்டமா இருக்குன்னு கரண்ட்கட் பத்திதான் பேச்சு பூரா. லேடீஸ் ஒவ்வொருவரும் எப்படி சமாளிக்கரோம் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

எங்க பில்டிங்க்ல நாந்தான் கொஞ்சம் வயசானவ. அந்த மறியாதைக்கு என்னிடமும்ஆண்டி ஏதானும் ஐடியா கொடுங்கன்னு கேட்டுட்டே இருந்தாங்க. எனக்கு தெரிந்ததைசில யோசனைகளாக அவர்களிடம் சொன்னேன்.




மறு நாள் தொடங்கி என் யோசனைப்படி லேடீஸ் எல்லாம் காலை சமையலில் இருந்துஆரம்பித்தார்கள். மிக்சி, ஃப்ரிட்ஜ், கீசர், வாஷிங்க் மிஷின் என்று எதுவுமே காலை நேரம்ஒர்க் பண்ணாது. கூடியமான வரை அரைக்கத் தேவை இல்லாத சமையலே ப்ளான் பண்ணிநார்கள். எல்லார் வீட்டிலுமே சின்ன அம்மி, சின்ன குழவி வைத்திருந்தார்கள். லஞ்சுக்குமோஸ்ட்லி சப்பாத்தி பாஜிதான் கையில் கொண்டு போவார்கள். அதற்கு சரியானபடி

தொட்டுக்கொள்ள வேனுமே. இஞ்சி, பூண்டு வெங்காயம் அம்மியில் அரைத்து மசாலாரெடி பண்ண தொடங்கினார்கள். குழந்தைகள், பெரியவர்கள் எல்லாருமே அவரவர் துணிகளை துவைத்து, பச்சைத்தண்ணீரில் குளித்தார்கள். இந்தபக்கம்லாம் ஒரு பழக்கம்.



தண்ணீரினால்தான் எல்லா வியாதிகளும் பரவுது என்று,குளிக்க, குடிக்க எல்லாமே வென்னீர்தான். முதலில் துணி துவைக்கமாட்டேன்னு எல்லாரும் அடம் பிடிதார்கள்தான். சரி வேணாம்.நாளை அதே அழுக்குதுணிதான் போட்டுக்கணும்னு சொல்லி அவர்களை துவைக்கப்பழக்கவேண்டி இருந்தது.




காலை ப்ரேக்பாஸ்ட்டும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட உட்கார்ந்தார்கள்.10 மணி ஆபீசுக்குஇங்கேந்து 8 மணி லோக்கல் வண்டி பிடிச்சாகனும். ஆனாதான் 10 மணிக்குள்ள ஆபீஸ்போய்ச்சேர முடியும்.8 மணிக்குள்ள எல்லா வேலைகளும் முடிந்து வெளியில் வந்தால்லிஃப்ட்டும் ஒர்க் பண்ணாது. படிக்கட்டு வழியா ஏறி, இறங்கித்தான் ஆகணும்.அதனாலஎன்ன நல்ல எக்சர்சைசா நினைச்சுக்க வேண்டியதுதான். அப்படி படிக்கட்டுவழி இறங்கும் போது எல்லார் வீட்டுக்கதவுகளும் கூட திறந்திருக்கும். எல்லாரிடமும் ஃப்ரெண்ட்லியா

ஒரு குட்மார்னிங்க், ஒரு ஹாய் சொல்ல முடிந்தது.எந்த வீட்டில் யாரு இருக்கான்னும் தெரிந்து கொள்ள முடிந்தது.அவர் களுக்கு சிட்டிலேந்து ஏதானும் சாமான் வேண்டி இருந்தாசொல்வார்கள். நாங்களும் வாங்கி வருவோம். அதே போல வேலைக்குப்போகும் பெண்கள்வீட்டிற்கு வரும் கூரியரோ, சிலிண்டரோ,லெட்டரோ அவர்கள் வாங்கி வைப்பார்கள்.பில்டிங்கில் இருக்கும் ஒவ்வொருவருடனும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.




இரவு திரும்பி வரும்போதும் மாடிப்படி ஏறித்தான் வரணும்.வாசலில் உகாந்திருப்பவர்களுடன்சினேகிதமாக ஒரு சிரிப்பு, அன்பாக ஒரு விசாரிப்பு என்று ஆனது. குழந்தைகள், பெரியவர்கள்ஏன் வீட்டிலுள்ள எல்லாரும் இரவு உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட முடிந்தது. இதேகரண்ட் இருந்தால் எல்லாரும் டி வி. முன் அமர்ந்து தட்டுல என்ன போடரா, என்ன சாப்பிடரோம்

என்றகவனமே இல்லாமல்மிஷின் மாதிரி அரைத்துக்கொண்டிருப்ப்பார்கள். இப்ப எல்லாரும்சேந்துஉக்காந்து, நாங்க ஆபீசில் நடந்த விஷயங்கள், குழந்தைகள் ஸ்கூலில் நடந்த விஷயங்களென்றுபேசிக்கொண்டே சந்தோஷமாக திருப்த்தியாக சாப்பிட முடிந்தது.




லீவு நாட்களில் சாயங்காலம் 6 டு 9 குழந்தைகள் எல்லாரும் கீழே போய் பில்டிங்க்ல உள்ளகுழந்தைகளுடன் ஓடி ஆடி விளையாடுவார்கள். பெரியவர்களும் கீழே கார்டனில் உக்காந்துசொந்தக்கதைகள்,மற்றகதைகள் பேசி சிரித்துக்கொண்டிருப்போம்.அப்போது கரண்ட்கட் நம்மளுக்கு

எவ்வளவு நல்லது பண்ரது இல்லியா ஆண்டி, அம்மில அரைப்பதால இவ்வளவு நாளா எனக்குஇருந்த தோள்பட்டை, கழுத்துவலி எல்லாம் போயே போச்.என்று ஒருத்திசொல்ல, அதைத்தொடர்ந்துஇன்னொருத்தி ஆண்டி டெய்லி மாடி ஏறி இறங்குவதால 5 கிலோ வெயிட் குறைஞ்சிட்டேன்.


என்று தொடரவும் அடுத்தவளும் இப்ப பண்ணற சாப்பாட்டை அடிக்கடி சூடு படுத்தவே தேவைஇல்லை ஆண்டி எல்லாரும் ஒண்ணாவே உக்காந்து சப்பிட்டுடரோம். குழந்தைகளும் தங்கதுணிகளைத்தாங்களே துவைக்கர பழக்கம் பண்ணிகிட்டாங்கன்னு. இப்ப பாருங்களேன் இப்படிவெளில ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளுக்கு எவ்வளவு நல்லது இல்லியா?




என்று ஆளாளுக்கு பேசினா. நானும் ஆம்மாமா. பழையகால வீடுகள்ள ஏது மிக்சியும் க்ரைண்டரும். எக்ஸர்ஸைஸுன்னு தெரியாமலேயே அவங்கல்லாம் எவ்வ்ளவோ வேலைகள் பண்ணிஇருக்காங்க. வாக்கிங்க்னு தெரியாமயே ஒருமைல் தூரம் நடந்துபோயி ஆத்துல துணி துவைத்து

குளிப்பதிலேந்து எல்லாத்திலயுமே சிஸ்ட மேடிக்கா இருந்திருக்காங்க. இப்பமாதிரி கண்ட வியாதி’களுக்கும் இடம் கொடுத்ததே இல்லை. நம்மால எல்லாம் அப்படி இருக்க முடியாதுதான்.ஆனகூடசில நம்மால செய்யக்கூடிய விஷயங்களைப்பற்றி நாம கொஞ்சம் யோசிக்கலாம் இல்லியா?

மெயினா கரண்ட் பில்லும் கம்மி யாகுமே. சிக்கனுத்துக்கு சிக்கனம், ஹெல்த்துக்கு ஹெல்த்கூடவே எல்லாருக்கும் நல்ல பழக்கங்களைக்கத்துக்க ஒருவாய்ப்பு என்றுதான் நாம இந்த கரண்ட்கட் ப்ராப்ளத்தை எடுத்துக்கணும்,எல்லாத்தையுமே ஒரு பாசிடிவ் திங்கிங்கோட அணுகலாமே?

25 comments:

மகேந்திரன் said...

அப்படித்தான் எடுத்துக்கணும் அம்மா..
வேற வழி இல்லை..

RAMA RAVI (RAMVI) said...

பவர்கட்டினால இவ்வளவு நன்மைகளா?
பவர்கட் ஜிந்தாபாத்...

கோவை நேரம் said...

இப்போதான் இதனோட அருமை தெரியுது.,...வாழ்க பவர் கட் ..அப்படியே பதிவையும் நிறுத்தி விடாதீங்க...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வும்மா... முன்பே படித்திருந்தாலும், நல்ல யோசனைகளை திரும்பப் படிப்பதில் தப்பில்லை....

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.லக்ஷ்மி,
என்னவொரு பாசிட்டிவ் திங்கிங்..! வித்தியாசமான கோணம். வெல்டன்..!

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.
பவர் கட் நிறைய பேரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி அடுத்தவருடன் பழக வைக்கிறது உண்மைதான்.

அவ்ளோ ஏன்,
ஒரே வீட்டிலேயே, சதா டீவியில் உடகார்ந்து இருப்பவரும், எப்போதும் இணையத்தில் இருப்போரும், ப்ளே ஸ்டேஷனே கதியாக இருப்போரும்
கரண்ட்டு போனால்தான் பேசிக்கொள்கிறார்கள்.

வீட்டுக்குள்ளேயே வாக்கிங்/ஜாக்கிங்/ரன்னிங் பண்ணுகிற நிறைய பேருக்கு 'ட்ரெட் மில்லில் நடக்க முடியவில்லையே' என்ற வருத்தம்..! ஆனால், நீங்க நிறைய்ய்ய்ய்ய சொல்றீங்க சகோ...!

அருமையான பதிவு.

இராஜராஜேஸ்வரி said...

,எல்லாத்தையுமே ஒரு பாசிடிவ் திங்கிங்கோட அணுக அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

ADHI VENKAT said...

இந்த கரண்ட்கட்டால் நல்ல விஷயங்கள் நடந்திருப்பது மகிழ்ச்சியே....

எல்லா இடத்திலும் இப்படி நடந்தால் நல்லது தான்...

குறையொன்றுமில்லை. said...

மஹேந்திரன் வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை நேரம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சகோ முஹம்மது ஆஷிக் வருகைக்கும் ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

G.M Balasubramaniam said...

எல்லாம் சரிதான். ஆனால் இந்த பிள்ளைகள் படிக்க ஹரிக்கென் லாம்ப் உபயோகிக்கப் பழகணுமே. அந்தக் கால வாழ்க்கையில் இருந்தவர்கள் அவ்வளவாக கஷ்டப் பட மாட்டார்கள். எனக்கு நினைவு இருக்கிறது, மாலையானால் தெருவில் இருக்கும் கெரொசின் விளக்கை ஏற்ற ஒருவர் ஏணியுடன் சென்று விளக்கேற்றுவார்.

குறையொன்றுமில்லை. said...

g.m,பாலசுப்ரமனியம் சார்வருகைக்கு நன்றி தவிர்க்கமுடியாத நேரங்களில் பழகத்தானே வேனும்.

ஹேமா said...

நல்ல விஷயம்தானே நடந்திருக்கு !

குறையொன்றுமில்லை. said...

ஹேமா வருகைக்கு நன்றி

கருணாகார்த்திகேயன் said...

நல்ல பகிர்வும்மா...

அன்புடன்
கார்த்திகேயன்

ஸ்ரீராம். said...

காலை மூன்று மணிநேரம், மாலை மூன்று மணி நேரமா....ஐயோ....! என்ன கொடுமை!

குறையொன்றுமில்லை. said...

கருணா கார்த்திகெயன் வருகைகு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் என்ன ரொம்ப நாளா ஆளைக்காணோம் பிசியா. வருகைக்கு நன்றி

சிவகுமாரன் said...

உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு . ஐ லைக் இட். ( வடிவேலு ஸ்டைல்)
பகிர்வுக்கு நன்றிம்மா
நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும்

குறையொன்றுமில்லை. said...

சிவகுமாரன் நீண்ட இடைவெளீ விட்டாலும் வந்தீங்க இல்லே அதுக்கு நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

பாஸிடிவ் ஆகத்தான் திங்க் பண்ணனும். வேறு வழி ?

Related Posts Plugin for WordPress, Blogger...