Pages

Back to Top

கோவா.

ஒருவாரம் கோவா போயி சுத்திட்டு வந்தாச்சு. நான் நடு மகன் ஃபேமிலி மும்பையிலிருந்து ட்ரெயினில் கோவா போனோம். 10- மணி நேரம் ஆச்சு.
கொங்கன் ரயில்வே வழியில் நிறைய புது ஊர்கள் பேரக்குழந்தைகளுடன் அரட்டை என்று ஜாலியாக இருந்தது. பெரியமகன் ஃபேமிலியுடன் ஈரோடில் இருந்து கோவா வந்தார்கள். ஈரோடிலிருந்து டேரக்டா கோவாக்கு ரயில் இல்லே. ஷோரனுர் போயி அங்கேந்து கோவா வந்தார்கள். ரயிலில் 20-மணினேரம் பயணம். போகவர் 3- நாட்கள் ஆனது, கோவாவில் சின்னமகன்
                                           

                        
 புதுசா வீடு கட்டி இருந்தான். அதுபாக்கவும் கோவா சுத்திபாக்கவும் எல்லாரும் போனோம். வீடு வில்லாடைப்பில் மிக பிரம்மண்டமான பங்களாவாக இருந்தது. மாடியும் கீழுமா அழகா இருந்தது. இப்பதான் கட்டி முடித்திருப்பதால கரண்ட்கனெக்‌ஷன், வாட்டர் கனெக்‌ஷன் இன்னும் கொடுக்கல்லே. அதனால ஹோட்டலில் தான் தங்கினோம்.அங்க கரண்ட் எல்லாம் சோலார்பவரில்தான் ஒர்க் பன்ரது. நல்ல சிஸ்டம் இல்லியா?

கோவா டூரிஸ்ட் ப்ளேஸ் இல்லியா டூரிஸ்ட்களின் நடமாட்டம்தான் திரும்பினபக்கமெல்லாம். மோஸ்ட்லி ஃபாரினர்ஸ்தான். குழந்தைகள் எல்லாருடனும் சேர்ந்து இருந்ததால டைம் போனதே தெரியல்லே. தினசரி கடல் குளியல், ஹோட்டல் சாப்பாடு ஊர் சுற்றுவது என்று இருந்தோம்.
                               
திரும்பின பக்கமெல்லாம் பெரிசு பெரிசா சர்ச் இருக்கு , அதுபோல பீச்சும் நிறையா இருக்கு. ஒவ்வொரு பீச் ஒவ்வொரு பெயரில். பீச்சுன்னா அங்கயும் ஃபாரினர்ஸ் ஸன்பாத் எடுக்கும் காட்சிகள்தான் நிறையா கண்களில் பட்டுண்டே இருந்தது. ஊர் என்னமோ சின்னதா தன் இருக்கு. முதல் நாள் நாங்க

                              
 பீச் போகும் போது எதிரில் வந்த பைக் பாத்து திடுக்கிட்டுப்போனோம். எலும்புக்கூடு மாதிரி பைக்கை வடிவமைத்து இருந்தா. தினசரி பார்த்து பார்த்து

                                    

                              அதுவும் பழகிப்போச்சு.குழந்தைகள் கடலில் குளிக்க இறங்கினா கரை ஏறவே மாட்டேங்கரா. அவ்வளவு ஜாலியா எஞ்சாய் பன்ரா.

பெரியவங்களும் அப்படியேதான் எஞ்சாய் பண்ணத்தானே வெளி ஊர்லாம் போரோம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விருப்பம். நான் க்ரையில் உக்காந்துண்டு எல்லாரையும், எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டே

                                    

                                  
 இருந்தேன். நடு மறுமகள் நிலாவை கைக்குள் பிடித்து அந்த நிலாவைதான் நான் கையில பிடிச்சேன்னு போஸ்கொடுக்கரா. சின்னமகன் மஹேந்த்ராக்ளப் ஹவுசில் மெம்பரா இருக்கான். வருஷத்துக்கு ஒரு தொகை கட்டினா நாம எப்பபோனாலும் அங்க தங்க சவுரியம் பண்ணித்தருவா. அங்கதான் தங்கினா.  எல்லா பீச் பக்கமும் மீன் பிடிக்கும் வலை காயப்போட்டிருக்கா. எனக்கு ஊர் பூராவும் மீன் வாடை அடிக்கராப்லவே இருந்தது. வெஜ்

                 
ஹோட்டலாபாத்துதான் சாப்பிட போனோம் அங்கயும்கூட மீன் வாடைதான்.

               









ப்யூர் வெஜிடேரியனாஇர்க்கரவங்களுக்கு இதெல்லாம் பெரிய தொல்லைதான். ஒரு வாரம் எப்படி போச்சுன்னே தெரியல்லே.  தோசை, வடை எல்லாம் நிறையா சாம்பார் கூட தராங்க. டேஸ்ட்டும் ஓக்கே தான். தெரிஞ்சவங்க வீட்டுக்கு ஒரு


                                                                       
                                          நாள் போனோம் அவ வீட்டில் ஒரு நாய்க்குட்டி இருந்தது எங்களையெல்லாம் கூட்டமாபாத்தது பாவம் அது பயந்தேபோச்சு. குழந்தைகளுடன் நல்லா விளையாடினது.

பீச்பக்கம் சுத்தும்போது அங்குவரும் டூரிஸ்ட்களுக்கு கைட் எல்லாரும் அந்தந்த இடங்கள் பற்றி விவரம் சொல்லிண்டு இருந்தா, இதுதான் சிங்கம் ஹிந்திப்படம் ஷூட்டிங்க் எடுத்த இடம், இதுதான் ஏக் துஜே கே லியே ஹிந்திப்படம்

                                       
                               
 ஷூட்டிங்க் நடந்த இடம்னு சொல்லிண்டு இருந்தா. படம் ஷூட்டிங்க் எடுத்த இடம்னு சொன்னால்தான் எல்லாரும் ஆர்வமா பார்ப்பார்களோஎன்னமோ?கோவாகிளைமேட் கொஞ்சம் சூடாகத்தான் இருக்கு. மும்பையில் அதிகாலை, இரவுகளில் நல்லகுளிர் இருக்கு.. ஒருவாரம் ஆனதும் அவரவர்கள் கிளம்பி அவரவர் இடங்களுக்கு திரும்பியாச்சு. நான் நேர உங்களையெல்லாம் சந்திக்க வந்துட்டேன். நாளை முதல் ஆப்ரிக்க பயணம்தொடருகிரேன். எல்லாரும் அங்க வந்துடுங்க.

35 comments:

ஹுஸைனம்மா said...

கோவா பயணம் நல்ல எஞ்சாய் பண்ணிருக்கீங்க போல. வீடு அழகா இருக்கு. எலும்புக்கூடு பைக் பாத்ததும் பயந்துட்டேன்.

//நடு மறுமகள் நிலாவை கைக்குள் பிடித்து அந்த நிலாவைதான் நான் கையில பிடிச்சேன்னு போஸ்கொடுக்கரா//
உங்க மருமகள் உங்க கிண்டலை ரசிச்சாங்களா? :-)))

ஆப்பிரிக்காவா? அது எப்பப் போனீங்க? சொல்லவே இல்லை? :-))))

K.s.s.Rajh said...

வணக்கம் மேடம்
பயணஅனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்திருக்கீங்க அருமை

மகேந்திரன் said...

கோவா செல்லவேண்டும் என்பது
என் ஆசைகளில் ஒன்று.

இந்தப்பதிவு எனை அங்கே இட்டுச் சென்றது அம்மா..

RAMA RAVI (RAMVI) said...

உங்க மகனின் புது வீடு நன்றாக இருக்கும்மா,அவருக்கு வாழ்த்துக்கள்.

படங்களெல்லாம் அழகாக இருக்கு,அந்த எலும்புகூடு பைக், வேடிக்கையாக இருக்கு.

//ப்யூர் வெஜிடேரியனாஇர்க்கரவங்களுக்கு இதெல்லாம் பெரிய தொல்லைதான். //

ரொம்ப கஷ்டம்தான்.நான் rice cooker எடுத்துண்டு போய்,சாதம் மட்டும் வைச்சுடுவேன்,தயிர்,மட்டும் வாங்கிண்டு, எடுத்துண்டு போகும் ஊருகாய், தொக்கு,இவற்றை வைத்து 2, 3 நாள் சமாளிச்சுடுவேன். ஒரு வாரம் என்றால் கஷ்டம் தான்.

கோவா அனுபவம் நன்றாக இருக்கு அம்மா.

ADHI VENKAT said...

கோவா பயணத்தை ஒரே பதிவுல முடிச்சிட்டீங்களேம்மா....

உங்களுடன் நாங்களும் சுத்தி பார்த்த மாதிரி இருந்தது....

எலும்புக்கூடு பைக் ......பார்க்கவே பயமா இருக்கே....

கோவை நேரம் said...

உங்க கூட நாங்களும் கோவா போன மாதிரி இருக்கு ...வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

பயணம் பற்றிய கட்டுரை நன்றாக இருந்ததும்மா....

எலும்புக்கூடு பைக் மாடல் - அட இது நல்ல ஐடியாவா இருக்கே.... :)

குறையொன்றுமில்லை. said...

தமிழ் மணம் இணைக்க முடியல்லியே?

குறையொன்றுமில்லை. said...

ஹுசைனம்மா வாங்க, ஆப்ரிக்க பயணம் குறையொன்றுமில்லை ப்ளாக்ல ஒருமாசமா போயிட்டு இருக்கு. அங்கயும் வந்து படிச்சுபார்த்து கருத்து சொல்லுங்க. என் மறுமகளுக்கு தமிழ் தெரியாது என் கிண்டலை அவங்களால ரசிக்கவேமுடியல்லே. நீங்கல்லாம் ரசிச்சு படிக்கரீங்க இல்ல அதான் எனக்கு பூஸ்ட்.

குறையொன்றுமில்லை. said...

ராஜ் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா நானும் ரைஸ்குக்கர் கொண்டு போனேன். குழந்தைகள்தான் ஹோட்டல் வந்துதான் ஆகனும்னு கம்பல் பன்னிட்டாங்க. வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2 தில்லி வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

கோவை நேரம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

vanathy said...

ஆன்டி, சூப்பரா இருக்கு. கோவா போக வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை.

குறையொன்றுமில்லை. said...

வானதி வருகைக்கு நன்றி கோவா வாங்க நம்ம வீடுதான் இருக்கே.

அமைதி அப்பா said...

கோவா பயணம் பற்றி சிறப்பாகா சொல்லியிருக்கிறீகள். படங்கள் நன்று.

புது வீடுக் கட்டியுள்ள தங்கள் சின்ன மகனுக்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

உங்களோட சேர்ந்து நாங்களும் கோவாவை சுற்றிப் பார்த்த மாதிரி இருந்தது.பகிர்வுக்கு நன்றி.
அடுத்து ஆப்பிரிக்காவா?
சீக்கிரம் எழுதுங்கள் அம்மா.

குறையொன்றுமில்லை. said...

ஜி ஜி வருகைக்கு நன்றி

radhakrishnan said...

கோவா பயணம் பதிவும் படங்களும்
அருமையாக உள்ளன.அங்கு கோவில்
எதறகும் போகவில்லையா?போகாமல்
இருக்க மாட்டீர்களே.பரவாயில்லை,
எங்கு சென்றாலும் எங்களையும் அழைத்துச் சென்றுவிடுகிறீர்களே, நன்றி
அம்மா

radhakrishnan said...

கோவா வீடு மிக அழகாக உள்ளது.
தங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்னன் எங்க போயிட்டிங்kக. ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க. கோவில் போனோம் போட்டோ எடுக்க அலவ் பண்ணல்லே. நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் நாளை ஈரோடு பயணம் அங்கே கம்ப்யூட்டர் இருக்கு நெட் இல்லே. பாக்கனும்.

Vetirmagal said...

எத்தனையோ தடவை கோவா போயிருக்கிறேன், ஆனால் எலும்ப் கூடு எண் கண்ணில் பட்டதே இல்லை.;-)

கோவா உங்கள் பார்வையில் ரசிக்கும் படியாக உள்ளது. வெஜ் சாப்பாட்டிற்கு கஷ்டம்தான்.

Geetha Sambasivam said...

படிச்சேன், நீங்க கோவாவிலே எந்த ஊர் போனீங்கனு தெரியலை. நாங்க வாஸ்கோவிலே என் நாத்தனார் வீட்டிலே தங்கி இருந்தோம். அங்கிருந்து பனாஜி, மர்மகோவா போன்ற இடங்களுக்குச் சென்றோம். ருத்ரேஸ்வரர், மஹாதேவர், மங்கேஸ்வரர் கோயிலுக்கும் போனோம். பனாஜியில் இருந்து தான் ஸ்டீமரில் எங்க கார், லாரி போன்றவை ஆற்றைக் கடக்க ஏறி அக்கரைக்குப் போனோம்னு நினைக்கிறேன், முப்பது வருஷம் ஆச்சு; எங்கிருந்து ஸ்டீமர் கிளம்பியது என்பது சரியாய் நினைவில் இல்லை. ஆனால் இப்போதும் இருக்குனு சொல்வாங்க.

குறையொன்றுமில்லை. said...

வெற்றி மகள் முதல் முறையா என் பக்கம் வரீங்களா? நாளுக்கு நாள் புதுசு புதுசா என்னல்லாமோ யோசிக்கிராங்களே. எலும்புக்கூடு பைக் அதுபோலத்தான்.

குறையொன்றுமில்லை. said...

கொலங்கோட் பீச் பக்கம் வீடு .மட்காவ் இறங்கி டாக்சிலதான் போகனும் பானாஜில்லாம் சுத்திபாகப்போனோம். .

Unknown said...

தங்களுக்காக ஒரு விருது எனது வலைப்பூவில்...
http://vaarthaichithirangal.blogspot.in/2012/02/blog-post.html

radhakrishnan said...

போகிற இடங்களில் நெட் இல்லாவிட்டால், ஒரு நெட்கார்டு வாங்கிவிட்டால் அவ்வப்போது தேவைப்படும் பொழுது கனெக்ஷன்
வாங்கிக் கொள்ளலாமே. ரிலையன்ஸ்
கார்டு பெட்டர்.
ஈரோடு வந்துவிட்டீர்களா?ரிங் போகிறது.
போன் எடுக்கவில்லையே?

குறையொன்றுமில்லை. said...

ஜீ ஜீ வருகைக்கும் வருதுக்கும் நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் நெட் கார்ட் வாங்கி இருக்கான் பி எஸ் என் எல் கார்ட் இன்னிக்குவரை ஆக்டிவேட் ஆகல்லே நான் ட்ரை பன்ரேன்.15-ம்தேதி ஈரோட் வந்தாச்சு

குறையொன்றுமில்லை. said...

ஜீ ஜி உங்கபக்கம் கமென்ட் போடமுடியல்லியே.

Geetha Sambasivam said...

ஓ, கமென்ட்ஸ் போட்டிருக்கீங்க ஆனால் எனக்கு மெசேஜ் வரலை. நல்லது.

குறையொன்றுமில்லை. said...

ஏன் மெஸேஜ் வல்லே?

Related Posts Plugin for WordPress, Blogger...