வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்
என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,
மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு
33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32
எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின.ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு
ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி
ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.அந்த எழுத்துக்கள்தான் ரா......... ம...............
அவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று
Tweet | |||||
19 comments:
தெரிந்துகொண்டேன்.
ஹரிஹரப் பெருமையை சிறு விஷயத்தில்
அழகாய் சொல்லிவிட்டீர்கள் அம்மா...
அருமை அருமை
இதுவரை அறியாத அரிய தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
த.ம 3
அந்த இரண்டு எழுத்துக்கள் என்ன அம்மா. சொல்லாமல் விட்டுவிட்டீர்களே... ஓம்? நல்ல விஷயத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
நல்ல பகிர்வு. ராம நாமத்தின் மகிமையை உணர்த்தும் அருமையான கதைம்மா.
சில மாதங்களாக நான் தினமும் இரண்டு பக்கங்களாவது ராம நாமம் எழுதிக் கொண்டு வருகிறேன்.
நல்ல முடிவு.
நல்ல பகிர்வு மேடம்
ராம நாம மகிமை பற்றிய புதிய விவரம் அறிந்தேன். நன்றிம்மா...
அருமை,அருமை. அம்மா,இந்த விஷயத்தை கேள்விப்பட்டதே இல்லை. நன்றி பகிர்வுக்கு.
நண்டு நொரண்டு ரசித்ததற்கு நன்றி.
மகேந்திரன் வருகைக்கு நன்றி
ரமணி சார் வருகைக்கு நன்றி
கணேஷ் கடைசில சொல்லி இருக்கேனே?
கோவை2தில்லி வருகைக்கு நன்றி
கந்தசாமி சார் வருகைக்கு நன்றி
ராஜ் வருகைக்கு நன்றி
வெங்கட் வருகைக்கு நன்றி
ரமா வருகைக்கு நன்றி எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிந்திருக்காதே அதுதான் நாம ரசித்த விஷயங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிரேன்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே இம்மையே ராம'வென்ற இரண்டெழுத்தினால்.
பகிர்விற்கு நன்றி.
Post a Comment