Pages

Back to Top

கோவிந்தா,,,, கோவிந்தா




என் முதல் பெண்ணும் மாப்பிளையும் தறபோது ஒரவருஷமாஹைதரபாத்தில் வசித்தவருகிரார்கள்.அதற்குமுன்பு15வருடங்களாஆப்பிரிக்கநாட்டில் இருந்தார்கள்.வெளி நாட்டு வாழ்க்கை அலுத்து்ப்போய்.இண்டியாவில்வந்து செட்டில் ஆனார்கள். எல்லா சொந்தக்காரங்களும்மும்பையில்தான்
இருந்தார்கள்.மும்பை ரொம்ப நெரிசலா இருக்குன்னு, பாம்பே அவங்களுக்கபிடிக்காம போச்சு. ஹைதராபாத்தில் ஒதுக்குப்புறமாக ஒரு ஃப்ளாட்வங்கிண்டுவெளில போய்வர ஒரு காரும் வாஙிண்டு, அங்கியே ஒரு ப்ரைவேட்கம்பெனியில் ஒரு வேலையிலும் சேர்ந்தார். வெளி நாட்டில் சம்பாதித்த பணத்தில் சின்னதாக ஒரு பிளாட்டும் , காரும் வாங்கிண்டு மீதி பணத்தில் கொஞ்சமாகதங்கமும், வெள்ளியுமாக முதலீடு செய்திருந்தார்கள் .






அந்தபில்டிங் கட்டியே ஒருவருடம் தான் ஆகியிருந்தது. இவர்களுடையது4 வதுமாடியில் இருந்தது . மற்ற க்குடித்தனக்காரர்களுடன்
நல்ல பழக்கம் ஆகியிருக்கலை. எல்லாருமே புதிதாக குடி வந்தவர்கள்தான்.
ஊரும் புதுசு, ஒவ்வொரு இடம்பற்றியும் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டி
இருந்தது. பேங்கிலும் அக்கவுண்ட்டெல்லாம் ஆரம்பித்து, டெபிட்கார்ட், க்ரெடிட்கார்டஎல்லாமும் வாங்கி அதற்கே 3 மாசம் இழுதடித்தபிறகுதான் தந்தார்கள். ஸேப்டிலாக்கருக்கு அப்ளை பண்ணி 8 மாசமாகியும் லாக்கர் கிடைக்கலை. இந்மாசம்தரோம், அடுத்தமாசம் தரோம்னே இழுத்தடிப்புதான். அதனால் ரெடிமேட் ஸேப்டலாக்கர்வாங்கி பெட் ரூம் சுவரில் பிட் பண்ணீ அதில் தங்கம் வெள்ளி யெல்லாமபாதுகாப்பாக வைதார்கள்.




காலை 6 மணிக்கு டெய்லி வாக்கிங்க், போயி வந்ததும் ஓட்ஸ்கஞ்சி, பப்பயா ஃப்ரூட்எடுத்துண்டு அவர் ஆபீஸ்போவார். ஹெல்த் கேரிலும் ரொம்ப ஸ்ட்ரிக்ட். டயட் கண்ட்ரோலஎன்று ஸிஸ்டமேடிக்கா அமைதியாக இருந்தார்கள். 6 மாசத்துக்கு ஒரு முறை ஒரு சேஞ்ச்வேணும்னு மூணார், தேக்கடி இதுபோல போய் 10 நாளைக்கு ரிலாக்ஸ் ண்ணிக்கொள்வார்கள்.
இன்னொரு 6 மாசம்கழித்து பாம்பே வந்து எல்லா சொந்தக்கார்களையும் சந்தித்து 10 நாளஇருந்துட்டுபோவார்கள். ஒருமுறை அவர் கம்பெனியில் ஆள்குறைப்பு செய்தார்கள். இவருக்கும்ரொம்ப டென்ஷன். வெலைக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாதுன்னு நினைச்சார். வீட்டில் ஒய்ஃபிடம்


பேசி, நாம ஒருதரம் திருப்பதிபோயி பாலாஜியைதரிசனம் பண்ணிட்டு, பக்கத்திலே இருக்குமகாளஹஸ்தியும் போய் தரிசனம் பண்ணிட்டு வந்துடலாம்.என்றார். அவளுக்கு இப்ப திருப்பதிபோக மனசே இல்லை, இப்ப வேண்டாம், அப்பரமா போலாமே என்றாள். அவருக்கு உடனே
போய்ட்டு வரணும் என்று இருந்தது.




ஆபீசில் லீவு கிடைக்காது அதனால சனிக்கிழமை சாயங்காலம் போய்ட்டு திங்கள் காலை 5 மணிக்குள்வந்துடலாம் என்று ஃப்ளைட் டிக்கட் புக் பண்ணீ நினைத்தபடி திருப்பதிபோய் வெங்கடாஜலபதியைஆனந்தமாக தரிசனம் செய்துவிட்டு காளஹஸ்தியும் போய்தரிசனம் பணணிட்டு திங்கள் அதிகாலை
வீடு வந்தார்கள். 4-வது மாடியில் இவர்கள்வீட்டு வாசலில் நீளமான காரிடார் உண்டு, அதற்குமவெளியே ஒரு க்ரில் கதவும் பாதுகாப்புக்காக போட்டிருந்தார்கள். அந்தக்ரில்கதவில் உள்ளபூட்டுஉடைக்கப்பட்டு கதவு விரிய திறந்திருந்தது.அதைப்பார்த்ததுமே இவர்களுக்கு திக்கென்றாகி விட்டது.

எப்படி பூட்டு உடைஞ்சிருக்கு? என்று நினைத்தவாறே மெயின் கேட் வந்துபார்த்தா, கதவு மட்டமல்லாகாதிறந்திருந்தது. பூட்டை உடைக்கமுடிலை தாப்பாளை ஸ்க்ரூவெல்லாம் நெமபி எடுத்து தாப்பாளையே
தனியாக எடுத்துருக்கு. வீட்டினுள் நுழைந்து முதலில் சாமி ரூம் போய்ப்பார்த்தார்கள். விளக்கு எல்லாம்பூஜை சமான்கள் எல்லாமே வெள்ளியில் இருந்தது. சாமிரூமில் எல்லாம் அப்படியே இருந்தது. கிச்சன்
போய்ப்பார்த்ததில் அங்கயும் எல்லாம்வச்சது வச்சபடியே இருந்தது. பெட்ரூம்போய்ப்பார்த்தார்கள்.



சுவரில் பதிதிருந்த ஸேப்டி லாகரையே பேத்து எடுத்திருந்தது. பீரோவில் இருந்த துணிமணிகள் ரூம்பூராவும்இறைந்து கிடந்தது.லாகரையே திருடிண்டு போயிருக்கான்.ரெண்டு பேரும் தலையில் கைவைத்துண்டஉக்காந்து விட்டார்கள். பேச்சே வராம இருவருக்குமே அழுகை முட்டிண்டு வரது ஆண்டவா உன்னை தரிசிக்கவந்தசமயம் இப்படி ஒரு திருட்டா? எங்கல்லாமோ போயி 10 நாட்களுக்குமெல்ல இருந்துட்டு வந்தப்போல்லாம்
எதுவும் ஆகலை, கோவிந்தா, உந்தரிசனத்துக்கு வந்தவங்களுக்கு இப்படி ஒருசோதனையா? என்று மனசுகலங்கி உட்கார்ந்து விட்டார்கள்.பிறகு எழுந்து துணிமணிகளை அடுக்கி பீரோவில் வைத்துவிட்டு
பால் காய்ச்சி குடிச்சுட்டு குளித்துமுதலில் போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைண்ட் கொடுத்தார்கள்அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லி பேப்பரில் என்ன ல்லாம் திருடு
போயிருக்கு என்று விவரமாக எழ்திக்கொடுத்து, எஃப், ஐ, ஆர் ஃபைல் போடச்சொல்லி வீடு வந்தார்கள்.பின்னாடியே ஜீப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் வந்து வீட்டை நன்கு பார்த்தார். பெட் ரூம்லயும்போயி
செக் பண்ணினார். வழக்கமான விசாரணைகள்.ஒருமணி நேரம் கழிச்சு அவர் போனதும் போலீஸைப்பார்த்அக்கம்பக்கத்தவர்கள் ஒவ்வொருவராக துக்கம் விசாரிக்கவந்தார்கள்.




ஆளுக்கொரு அட்வைஸ், அவரவர் வீடுகளில் நடந்த திருட்டுக்கள் என்று ஆளாளுக்கு தோணினதைபேசிட்டுப்போனார்கள். யாரு என்ன பேசி என்னாகப்போகுது. போனது போனதுதானே. வெளி நாட்டில் கஷ்ட்டப்பட்டு
சம்பாத்தித்தபணமஇப்படிதிருடுகொடுக்கவா,மனசஆறவேஇல்லை.அடுத்துவந்த நாட்களில் தினசரபோலீஸ்வருவதும் விசாரிப்பதுமாகவே இருந்தது. வேற எந்த முன்னேற்றமும் இல்லை.கிட்டத்தட்ட7, 8, லட்சம் வரை திருடு போயிருக்கு. எனக்கும் போனில் தகவல் வந்தப்போ திடுக்குனு ஆச்சு.
அவாளுக்கு என்ன சமாதானம் சொல்லி தேற்றமுடியும்? ஏற்கனவே நொந்து போயிருக்கா. சரிஇப்ப நீங்க வீட்டுக்குள்ள இருக்கும்போது திருடன் வந்து உங்களையும் அடிச்சுப்போட்டுட்டு எல்லாத்தை
திருடிண்டுபோயிருந்தா உங்க கதி? உங்களுக்கு எதுவும் ஆகாம தப்பிச்சிங்களே. தங்கமும் வெள்ளியும்’திரும்ப சம்பாதிச்சுக்கலாம். உசிர்போனா என்னாயிருக்கும்? தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.




நாம என்ன ஆறுதல் கூறியும் அவர்களை சமா தானப்படுத்தமுடியாது. நாம எல்லாருமா சேர்ந்தஒரு கூட்டுப் பிரார்த்தனைசெய்து அந்த ஆண்டவனிடமே முறையிடலாம். அவர்களின் எல்லாபொருட்களும் எந்த சேதமும் இல்லாமல் அவர்களுக்கு கிடக்கட்டுமென்று. கூட்டுப்பிரார்த்தனைக்கு எப்பவுமே நல்லது நடக்கும்.

அன்புடன் , 

26 comments:

ஹுஸைனம்மா said...

திருடங்கள்லாம் இப்ப ரொம்பவே சமயோசிதமா இருக்காங்க. ஒரு ஏடிஎம்லகூட இப்படித்தான் பணம் வச்சிருக்க லாக்கரையே தூக்கிட்டுப் போயிட்டாங்களாம். நீங்க சொன்னாப் போல, கெட்டதிலயும் நல்லது மாதிரி, அவங்க உசிர் தப்புச்சே? அதுவே பெரிய பாக்கியம்.

மகேந்திரன் said...

நாம எவ்வளவுதான் ஜாக்கிரதியா இருந்தாலும்
திருடர்கள் அதைவிட ஜாக்கிரைதையா திருடுறாங்க. ...
என்ன செய்ய..
உழைக்காமல் வரும் பணத்துக்கு
தங்கமுலாம் பூசிப் பார்ப்பவர்கள் ....

கூட்டுபிரார்த்தனைக்கு எப்போதும்
நல்ல பலன் உண்டு என நீங்கள் கூறியது
முற்றிலும் உண்மை அம்மா.


தமிழ்மணம் 1

வெங்கட் நாகராஜ் said...

இப்போதெல்லாம் நிறைய இது போன்று நடக்கிறது. எங்கும் நமது பொருளுக்கு காவல் இல்லை. அதுவும் திருப்பதி பெருமாளைப் பார்க்க போனபோது இப்படியா ஆக வேண்டும். தொடர்ந்து காவல் துறையில் பிரஷர் கொடுக்கச் சொல்லுங்கள்... போனதில் பாதியாவது கிடைக்கும்...

மனதை வருத்திய செய்தி... பிரார்த்தனை செய்வோம்.....

RAMA RAVI (RAMVI) said...

மீள் பதிவு தானே அம்மா?
ஏற்கனவே படித்த நினைவு இருக்கு.அவர்களுடைய பொருட்கள் ஏதாவது மீட்க முடிந்ததா? திருட்டு செய்தவர்களை கண்டு பிடித்தார்களா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

கேட்கவே மனதிற்கு மிகவும் சங்கடமாகத்தான் உள்ளது.

பொருத்தமான தலைப்புக் கொடுத்துள்ளீர்கள்.

இழந்த பொருட்கள் திரும்பிக் கிடைக்கப் ப்ரார்த்திப்போம்.

இந்தப்பதிவு மற்றவர்களுக்கு ஒரு படிப்பிணையாக அமையக்கூடும்.

1 to 2 in Tamilmanam. vgk

ரிஷபன் said...

படிக்கவே மனசுக்கு கஷ்டமா இருக்கு.
தொலைந்த பொருட்கள் சீக்கிரமே திரும்பக் கிடைக்கட்டும்.
மனசு தைரியத்தை இழக்காமல் இருக்கட்டும்.

நிரூபன் said...

இறை தரிசனத்திற்காகச் சென்ற சமயம் பார்த்து திருடர்கள் கைவரிசையினைக் காட்டியிருக்கிறார்களே.
கடவுள் நிச்சயம் கை விட மாட்டார்.
நிச்சயாமாக இழந்த அனைத்தையும் வெகு விரைவில் பெற்றுக் கொடுப்பார் இறைவன்.
மனதைத் தேற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்.

Asiya Omar said...

என்ன சொல்றதுன்னு தெரியலை..லஷ்மிமா..

குறையொன்றுமில்லை. said...

ஹுசைனம்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா ஆமா மீள் பதிவுதான் எந்த முன்னேற்றமும் இல்லே. அதான் திரும்ப இந்த பதிவு போட்டேன்

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் என்னபண்ண அந்த ஏழுமலையானுக்கு எங்க குடும்பத்தின்மேல என்ன கோபமோ?
வாசல் வரை வந்த என்னை தரிசனம்பண்ண விடாமலே தொரத்திட்டார், இப்ப பொண்ணுக்கு
பொருள் நஷ்ட்டம், மனக்கஷ்ட்டம் எல்லாம் வேர கொடுக்கரார். என்ன சொல்ல?

குறையொன்றுமில்லை. said...

ரிஷபன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

நிருபன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆசியா ஓமர் வருகைக்கு நன்றிம்மா

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றீ.

ADHI VENKAT said...

ரொம்ப கஷ்டமா இருக்கும்மா. அவர்களை தைரியமாக இருக்கச் சொல்லுங்கள். திரும்ப அனைத்தும் கிடைக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.

குறையொன்றுமில்லை. said...

கோவை2 தில்லி நன்றி.

அம்பலத்தார் said...

படிக்கவே ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.

சாந்தி மாரியப்பன் said...

திடுக்ன்னு ஆகிடுச்சு லஷ்மிம்மா. இவ்ளோ கஷ்டத்தையும் வெளிக் காட்டாம இருக்கறதுக்கு ரொம்பவே மன தைரியம் வேணும். உங்களைப் பார்க்க வந்திருந்தப்பக் கூட எவ்ளோ கலகலப்பா இருந்தீங்க!

நீங்க சொன்னாப்ல அவங்களுக்கு ஒண்ணும் ஆகாம, நலமா இருக்காங்களே, அதுவே நிம்மதி.

குறையொன்றுமில்லை. said...

அமைதிச்சாரல், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

அம்பலத்தார் வருகைக்கு நன்றி.

radhakrishnan said...

அம்மா,
மிகவும் வருத்தமாக உள்ளது.இது எப்போது நடந்தது?ஏதேனும் கிடைத்த்தா?அவர்கள் எந்த ஏரியாவில்இருக்கிறார்கள்?
என் பையன் சபில்குடா பகுதியில் இருக்கிறான்.அவனைஅலர்ட் செய்யவேண்டும்.ஒவ்வொன்றிலும் மூன்று வீடுகள்வீதம் நான்கு தளங்கள் கொண்ட அபார்ட்மெண்டில் மூன்றாவது
தளத்தில்இருக்கிறான்.எப்படிஇருந்தாலும்
நமக்கு நேரம் நன்றாக இருக்கவேண்டும்.

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்னன். இவர்கள் ஸைனிக்புரியில் இருக்கா. 6-மாசம் முன்பு நடந்த விஷயங்கள் இவை. இன்னும் ஒன்னுமே தெரியல்லே. கிணத்தில் போட்ட கால்லுபோல தான் இருக்கு. குறையொன்றுமில்லைன்னும் ஒரு ப்ளாக் எழுதரேன் அங்கியும் வந்து பாருங்க.

radhakrishnan said...

அம்மா,
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்,பொருளை திடீரென்று இழந்தால்
எப்படித்தான் மனதை சமாதானப்படுத்திக்கொள்வது.ஆனால்
100வருடம்ஆன கோவாபரேடிவ் பேங்க்
முழுகிப்போய்லட்சக்கணக்கில் பணம்
இழந்தது அண்மையில் மதுரையில்
நடந்த்து.சிலருக்கு கொஞ்சம் திரும்பக்கிடைத்த.து.நிறையப் பேருக்கு
கிடைக்கவில்லை.எனக்கும் 50000 வர வேண்டும்.அரசு கட்டுப்பாட்டில்இருந்தது.என்றுபெயர்தான்.இதற்கு என்ன செய்வது?இதுவும் நமது நேரம்தான் என்பதா?
நன்றி அம்மா.குறையொன்றுமில்லை
தளத்தை பார்த்து வருகிறேன்.எல்லாமே அருமை.நேற்றுதான் தமிழ்ராக்ஸ் பார்த்தேன்.இத்தனை நாட்கள் நிறைய
இழந்துவிட்டேன் என்று தோன்றுகிறது.
பெட்டர்லேட் தேன் நெவர் என்று சமாதானபடுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்னன் உங்களின் தொடர்வருகையும் பின்னூட்டங்களும் ரொம்ப உற்சாகமா இருக்கு. உங்களுக்கும் பெரிய இழப்புதானே/ நம்ம நேரம் சரி இல்லே. வேர என்ன சொல்ல? நீங்களும் பதிவு எழுத ஆரம்பிச்சுடுங்கோ மனம் விட்டு பகிர்ந்து கொள்ள முடியும் இல்லியா/

Related Posts Plugin for WordPress, Blogger...