Pages

Back to Top

வெற்றி பெற 10 வழிகள்

LAWRANCE.D.BRENNAN----  MAKE THE MOST OF YOUR HIDDEN MIND POWER.( நன்றி)



   மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.


 ரொம்ப நாட்கள் முன்பு இந்தபுக் படிச்சேன். நம் பதிவர்களில் எத்தனை பேரு இதைப்படிச்சிருப்பாங்கன்னு தெரியல்லே. தெரியாதவங்களுக்காக இந்தபுக்கி
லிருந்து சில விஷயங்களைப்பகிர்ந்து கொள்கிரேன்.

 ஒவ்வொருவர் மூளையில் உள்ள  அணு சக்தி  நியூயார்க் நகரத்தையே தகர்க்கும் சக்தி வாய்ந்தது.என்று சொன்னார்  நார்மென் வின்செண்ட்பீல். அவ்வளவு சக்தி நம் மனதுக்கு இருக்குமானால் அதை ஏன் வெளிக்காட்டிக்கொள்ளக்கூடாது?பெர்னாட்ஷா என்ன செய்தார்? பிக் மேலியன் என்று ஒரு நாடகம் எழுதினார். வெரும் கூடைக்காரியாக இருந்த பெண்ணின் உடையையும் பேச்சையும் மாற்றி அவளை ஒரு பெரிய இடத்துப்பெண்ணாக மாற்றமுடியும் என்பதைப்பற்றி அந்த நாடகத்தில் குறிப்பிட்டார்.கூடைக்காரியாக இருந்தபோதும் பெரிய மனுஷியாக ஆன பிறகுமவளிடம் இருந்தது அதே அறிவுதான் ஆனால் ஒரு சின்ன வித்யாசம். முன்பு இருந்த அறிவின் சக்தியைமற்றவர்கள் பார்க்கும் படி அந்தப்பெண் வெளிக்காட்டவில்லை.அதை தூசி தட்டி வெளிக்கொண்டுவர ஒரு ப்ரொபசர் உதவிய  உடன் அவள் சீமாட்டியாக மாறி விட்டாள். அதை எழுதிய ஷாவின் வாழ்க்கையிலும் இதேதான் நடந்தது. டப்ளினில் ஒரு பெயர் தெரியாத கம்பெனியில் குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார்  ஷா. அவருடைய மூளை அந்த வேலையிலேயே துருப்பிடித்து போயிருந்தால், இப்போது நாம் அவரை உதாரணம் காட்டிக்கொண்டிருக்கமாட்டோம். அவர் தன்னுடைய நாடகம் எழுதும் திறமையை  இலக்கியம் படைக்கும் கெட்டிக்காரத்தனத்தைஉலகத்துக்கு பறை சாற்றியதாலேயே இன்றும் அவரை நினைக்கிரோம்.பேசுகிரோம் பாராட்டு கிரோம். உலகம் நம்மைப்பாராட்டவேண்டுமென்றால் நம்முடைய திறமையை உலகுக்கு ச்சொல்ல வேண்டும்.

இடுக்கண் வருங்கால் நகுக.

கிருஷ்ண ஜயந்திக்கும், கம்யூனிசத்துக்கும் உள்ள ஒற்றுமை

 கால்  மார்க்ஸ்.

 ஷார்ட் சர்க்யூட்,  பொறாமையின்  பேசிக் ப்ராப்ளம்

 வயறு  எரியுது.

 பாக்சிங்க், கடவுள் காளி சிலை

  நாக்   (கு)   அவுட்.

 தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்ன வித்யாசம

 தீபாவளி அன்னிக்கு பொங்கல் சாப்பிடலாம். பொங்கல் அன்னிக்கு தீபாவளியை சாப்பிட முடியாது.(எத்தனைபேருதான் இதையே சொல்வாங்க?)

  L. I.C. யோட 14-வது மாடியில் ஏன் சந்தனம் தடவி இருக்காங்க?

 அது ”மொட்டை” மாடியாம்.

 ஒரு அண்ணனும் தங்கையும் ஓடி வராங்க , அண்ணன் மேல் மூச்சு வாங்கரான். தங்கை??

 ஃபீமேல் மூச்சு வாங்குவா.

 எலிக்கு ஏன் வால் இருக்கு?

 செத்தபின்னாடி பிடிச்சு தூக்கிபோட.

 ரஷ்யால ஏன் கொசுஇல்லே

 ஏன்னா அங்க அதுக்கு வேர பேரு.

 ராஜா ஹரிச்சந்திரா என்னபேஸ்ட் யூஸ்பண்ணி இருப்பார்?

 பிராமிஸ்.

 பஸ்ஸை பின்னால் தள்ளினா என்னாகும்

 பின் வளைஞ்சு போகும்.

 மஹாத்மா காந்திக்கும் குன்னக்குடி வைத்ய நாதனுக்கும் என்ன வித்யாசம்?

 அவர் நான்   வயலினிஸ்ட்.  இவர்  வயலினிஸ்ட்.

 வயிறு எரிகிரது,  அடுப்பு எரியமாட்டேங்குது ஏன்?

 ரெண்டுக்குமே GAS  ப்ராப்ளம்

ஆதார் அடையாள அட்டை.

இந்திய குடிமகன்,  இந்திய குடிமகள் என்பதற்கான அடையாள அட்டை..
என்பெண் மும்பை மெயின் சிட்டியில் வசித்து வருகிறாள் அவ ஜூன்மாசம்
 10-ம் தேதி வாக்கில் எனக்கு போன்பண்ணி சொன்னா. அம்மா இண்டியன் கவர்மெண்ட்லேந்து ஒரு பர்மனெண்ட் ஐ. டி. கார்ட் கொடுக்கப்போரா. அதுக்கு ஃபார்ம் உன் பேங்கில்போய்க்கேளு. அதை ஃபில் அப் செய்துகொடு. நாங்கல்லாம் இங்க கொடுத்தாச்சு. இது முக்கியமான ஐ. டி கார்ட். எல்லா இடத்திலும் செல்லுபடி ஆகும். உடனே போயிப்பாருன்னு சொன்னா. நானும் என்.அக்கவுண்ட் வச்சிருந்த கேனரா பேங்க்ல போயி முதல்ல கேட்டேன் ஆதார் ஃபார்ம் வேணும்ன்னேன்(U.I.D.-UNIQUE  IDENTIFI CATION  DRIVE).  சுருக்கமா ஆதார்.ஃபார்ம்
முதல்ல நான் என்ன கேக்கரேன்னே அவாளுக்கு புரியல்லே. மேடம் நீங்க சொல்வது இப்பதான் கேள்விப்படரோம். என்னன்னு சரியா புரியலே. நீங்க வேர எங்கியானும் கேளுங்கன்னு சொல்லிட்டா.னானும் விடாம ஸ்டேட் பெங்க், பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா எல்லா இடத்திலும் போயி கேட்டேன். அவங்களுக்கும் இது பத்தி ஏதுமே தெரிஞ்சிருக்கலை. பெண்ணிடம் சொன்னேன். அவ  நீ நேரா முனிசி பாலிடில போயிக்கேளுன்னா. என் வீட்லேந்து முனிசிபா லிடி 5-கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. நான் இருப்பது ஈஸ்ட் பக்கம் அது வெஸ்ட்பக்கம். ஆட்டோக்காரன் 30- ரூவா போகமட்டும் கேப்பான். சரின்னு போனேன். உள்ள போயி கேக்கசொன்னா. போயி கேட்டேன் நீங்க கேக்கர ஆதார் ஃபார்ம் இன்னும் இங்க வரவே இல்லே. இன்னும் ரெண்டுமாசம் கழிச்சு வாங்கன்னு சொல்லி செப்டம்பர்15-ம்தேதின்னு வரச்சொல்லி ஒரு சீட்டில் எழுதிக்கொடுத்தான்.

தேவ் லாலி


 கெட் டுகெதர்.


நாசிக் கிட்ட இருக்கும் தேவ்லாலி என்கிர சின்ன ஊரில் ஒரு கெட் டுகெதருக்கு போய் வந்தேன்.ரொம்பவே சின்ன ஊருதான். கண்டோன்மெண்ட் ஏரியா. பூரா, பூரா மிலிடரி ஆட்கள்தான் இருக்காங்க. கட்டுப்பாடான ஊரு. சுத்தமான ஊரும் கூட,எல்லா பாஷைக்காரங்களும் ஆர்மில இருப்பாங்கதானே. 15-ம் தேதி சாயங்காலம் கிளம்பி இரவு போயிச்சேர்ந்தோம்.பெரியவங்களும் சின்
நவங்களுமா ஒரு 35 பேரு போனோம்.பஸ்ல குழந்தைக எல்லார்மே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.150-கிலோ மீட்டர். பாம்பேலேந்து. நாலு மணி நேரப்பயணம். நல்லா இருந்தது. நான் மட்டுமே தமிழ்.அங்க ஒரு பெரிய ரெஸ்டாரண்டில் எல்லாரும் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தாங்க.

மினி சந்திப்பு.



                               






 நான் இப்போ மகன்வீட்டுக்கு வந்திருக்கேன். நான் இருக்கும் அம்பர் நாத்லேந்து மகன் இருக்கும் தாணா என்னுமிடம் 40 கிலோ மீட்டர் தள்ளி இருக்கு.லோக்கல்வண்டி பிடித்து ஒருமணி நேரம் ட்ராவல் பண்ணீதான் அங்க போகனும். அவங்க வீட்ல பிள்ளையார் 5 நாள் வச்சு பூஜை பஜனை அன்னதானம் எல்லாம் சிறப்பாகச்செய்வார்கள். என்னையும் வாரச்சொல்லி இருந்தா. போயிருந்தேன். சதுர்த்திக்கு முதல் நாள் பிள்ளையார் அழைத்து வருவதுதொடங்கி சிறப்பான வழிபாடுகள் எல்லாம் செய்தார்கள். தினசரி 3 வேளை பூஜை ஆரத்தி பிரசாதங்கள் என்று நடந்தது. பிள்ளையார பார்க்க நிறையபேர் வந்தார்கள். எல்லாருக்கும் மஞ்சள் குங்குமம் பிரசாதம் கிஃப்ட் ஐட்டம் எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள்.

கோவிந்தா,,,, கோவிந்தா




என் முதல் பெண்ணும் மாப்பிளையும் தறபோது ஒரவருஷமாஹைதரபாத்தில் வசித்தவருகிரார்கள்.அதற்குமுன்பு15வருடங்களாஆப்பிரிக்கநாட்டில் இருந்தார்கள்.வெளி நாட்டு வாழ்க்கை அலுத்து்ப்போய்.இண்டியாவில்வந்து செட்டில் ஆனார்கள். எல்லா சொந்தக்காரங்களும்மும்பையில்தான்
இருந்தார்கள்.மும்பை ரொம்ப நெரிசலா இருக்குன்னு, பாம்பே அவங்களுக்கபிடிக்காம போச்சு. ஹைதராபாத்தில் ஒதுக்குப்புறமாக ஒரு ஃப்ளாட்வங்கிண்டுவெளில போய்வர ஒரு காரும் வாஙிண்டு, அங்கியே ஒரு ப்ரைவேட்கம்பெனியில் ஒரு வேலையிலும் சேர்ந்தார். வெளி நாட்டில் சம்பாதித்த பணத்தில் சின்னதாக ஒரு பிளாட்டும் , காரும் வாங்கிண்டு மீதி பணத்தில் கொஞ்சமாகதங்கமும், வெள்ளியுமாக முதலீடு செய்திருந்தார்கள் .



Related Posts Plugin for WordPress, Blogger...