மறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்லாம் முறைப்படி வைதீகச் சடங்குகளுடன் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. 10.30 முகூர்த்தம். நாதஸ்வர ஓசையுடன் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. எல்லாருக்கும் ஜூஸ் உபசாரம். மாப்பிள்ளை வந்தாரா, மாட்டுப்பெண் வந்தாளான்னு உற்சாக விசாரிப்புகள்.
காலை ப்ரேக்ஃபாஸ்ட் கீழே அமர்க்களமாக இருந்தது. ஒன்னொன்னும் பாத்துபாத்து ஏற்பாடுகள் அவ்வளவு அழகாக செய்திருந்தார்கள். மேடை அலங்காரமும் ஒவ்வொரு வேளைக்கும் வித்யாசமாக டெகரேட் செய்தார்கள். கல்யாணம் மிக க்ராண்டாக நடந்தது. தெரிந்தவர்கள் நண்பர்கள் என்று ஹால் நிறைய ஜனக்கூட்டம் நிரம்பி இருந்தது. உக்காரும் சேர்களை கூட ஒவ்வொரு நேரம் ஒவ்வொருவிதமாக வடிவமைத்திருந்தது வித்யாசமாக கண்களை கவர்ந்தது.
வீடியோ போட்டோக்களின் ப்ளாஷ்லைட் கண்களை கூச வைத்துக் கொண்டே இருந்தது. கல கலப்பான குசல விசாரிப்புகள். ரொம்ப நாள் கழித்து பார்க்கும் உறவினர்களின் பழைய நினைவலைகள் என்று ஹாலே குதூகலமாக இருந்தது. மதியம் கீழே போய் விருந்து சாப்பாடு. காலையில் சாப்பிட்ட ஃப்ரேக் ஃபாஸ்ட், ஜூஸ் எல்லாமே இன்னும் ஜீரணம் ஆகலே. அதுக்குள்ள லஞ்ச். இதுதான் கஷ்டம். அப்படியும் எல்லாரும் சாப்பிட போனோம். அங்கியும் பேச்சு சிரிப்பு கல கல தான்.
என் ப்ளாக் படிக்கரவா சிலர் வந்திருந்தா என்னைப் பாத்தது ஓடி வந்து ரொம்ப பாராட்டினாங்க. என் நெருங்கிய சொந்தங்கள் என்னை ஆச்சரியமா பாக்கரா. நீ எழுதுவியான்னு என்கிட்ட கேக்கரா. என்னத்தைச் சொல்ல? மதியம் 4 மணிக்கு நலங்கு ஏற்பாடு செய்திருந்தா. கேலி பாட்டுக்கள் தேங்கா உருட்டல் அப்பளம் நொறுக்குதல் என்று கல்யாணப் பெண்ணையும் பிள்ளையையும் கேலி கிண்டல் பண்ணி முகம் சிவக்க வச்சுட்டா எல்லாரும். எல்லார் முகங்களிலும் உற்சாகத் துள்ளல் தான்.
அது முடிந்து சாயிந்தரம் ரிசெப்ஷன். அதுக்கு தனி அலங்காரம். பெண்ணும் பிள்ளையும் கூட மேடையும் ஹால் சேர்களுமே அலங்காரம் மாத்தியிருந்தா. ஹால் பூராவும் பெர்ஃப்யூம் மணம் தூக்கலா இருந்தது. விருந்தினர் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். ஒரே கூட்டம். கேட்டர்களின் ஆட்கள் வந்தவர்களுக்கு முதலில் கிவி ஜூஸ் கொடுத்து உபசரித்தார்கள். பிறகு வரிசையாக என்னமோ தின்பண்டங்கள் வரிசையாக வந்து கொண்டே இருந்தன. ஒரே நாளில் எப்படி இப்படி ஓவரா சாப்பிட முடியும். வேற வழி?
இரவு பஃப்பே டின்னர். மேடையில் பெண், பிள்ளையுடன் போட்டோ வீடியோ எடுத்துக் கொள்ள கிஃப்ட் கொடுக்க பெரிய க்யூ. நிறைய , நிறைய போட்டோ வீடியோ எல்லாம் எடுத்தா. ஒவ்வொருவராக கீழே டின்னர் சாப்பிட போனா. சௌத் இண்டியன், நார்த் இண்டியன் டிஷ் என்று சாட் ஐட்டம் என்று நிறைய ஐட்டங்கள். எதை சாப்பிடுவதுன்னே தெரியல்லே. வரிசையில் நின்னு அவரவர்களுக்கு வேண்டியதை தட்டுக்களில் அடுக்கி கொண்டு சேர்களில் உக்கார்ந்து பேச்சு சிரிப்புடன் சாப்பாடு நடந்தது.
கை அலம்ப போகும் போது பக்கதிலேயே வித விதமாக ஐஸ்க்ரீம் வகைகள். யாருக்கு எது வேனுமோ எவ்வளவு வேனுமோ எடுது சாப்பிடுங்கன்னு உபசரிப்பு. மனசு வயிறு நிறந்திருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு அமர்க்களமான கல்யாணம் பார்த்த திருப்தி கிடைத்தது. எல்லாரும் குழந்தைகளை ஆச்சிர்வதித்து விட்டு மன நிறைவுடன் கிளம்பினார்கள்.
Tweet | |||||
20 comments:
தமிழ்மணத்தில் இணைச்சுட்டேன்.
கல்யாண பொன்னோட ரிசப்ஷன் சாரி நல்லா இருக்கே......
:)
இந்த முறை போட்டோ அருமையா பதிவுக்கு அழகு சேர்த்தாப்ல இருக்கு
சாஸ்திர சம்பிரதாயப்படி நடைபெறும் இதுபோன்ற திருமணங்களைப் பார்ப்பதே அழகு தான். எவ்வளவு விஷயங்களை இந்தத் திருமணங்களில் வைத்துள்ளார்கள்! அடடா.
அருமையான பதிவு கொடுத்துள்ளீர்கள்.
நன்றி.
சூப்பர் வெடிங். அதை விட அருமை நீங்கள் வர்ணித்த விதம்.
அருமையான பதிவு
அருமையான பகிர்வு....
beautifull
//ஒரு அமர்க்களமான கல்யாணம் பார்த்த திருப்தி கிடைத்தது.//
உங்க எழுத்தில் கல்யணத்தை பற்றி படித்ததில் எங்களுக்கும் திருப்தியாக இருக்கு அம்மா.
என்னுடைய வீட்டில் தொலைபேசி மற்றும் இண்டர் நெட் ஆகியவை கடந்த 10 நாட்களாக சரியாக இல்லை. அதனால் உங்க கருத்தை என் பதிவில் வெளியிட தாமதமாகி விட்டது. இன்று காலைதான் சரியாகி உள்ளது. இப்பொழுது உங்க கருத்தை வெளியிட்டு விட்டேன் அம்மா. நன்றி
ரமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சமயத்தில் இந்த நெட் இப்படி தான் தொல்லை கொடுக்குது.
மணமக்களுக்கு எமது நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்...
கலகலப்பான கல்யாண பதிவுக்கு நன்றிகள்..
பாரத் பாரதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தமிழ்விரும்பியில் இன்றைக்கு தான் வந்தேன் . அமர்க்களமா இருக்கும்மா.
ஒரு கல்யாணத்தை நேரில் பார்த்த மாதிரி இருந்தது.
கோவை2 தில்லி வருகைக்கு கருத்துக்கு நன்றி.
அருமையான பதிவு ..
இந்தப் பெண் தேவதையின் திருமணத்துக்கு எனது
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அம்மா.வாழ்க பல்லாண்டு
நல்வளமும் நலனும் பெற்றிங்கே பார்போற்ற...................
நன்றி அம்மா பகிர்வுக்கு .
தமிழ்மணம் 7
அம்பாளடியள் வருகைக்கும் கருத்துக்கம்
நன்றி
Post a Comment