முதலில் என்கோபம், பேங்க் காரங்கமேல. நான் கடந்த 20 வருஷமாக பென்ஷன்(ஃபேமிலிபென்ஷன்) பேங்க் போய் வாங்கிண்டு இருக்கேன்.பென்ஷன் ஹோல்டர்னா ஒவ்வொரு மாசமும் பாஸ்புக்ல எண்ட்ரி இருக்கணும்.காலை10 மணிக்குபோயி டோக்கன் வாங்கிண்டு ஒருமணி நேரம் க்யூவில் கால்கடுக்க நின்னுபணம்வித்ட்ரா பண்ணிட்டு, வேற கவுண்டர்போயி பாஸ்புக்ல என்ட்ரிபண்ணவும்பெரியக்யூவில் அரைமணி நேரம் நின்னு என்ட்ரியும் பண்ணிட்டு வருவேன்.முதல் வாரம் கூட்டம் இருக்கும் என்று 10- தேதிக்குமேலதான் போவேன். யாரிடமும் ஹெல்ப்புக்கு போகமாட்டேன். எல்லாருமே தெரிந்த முகங்கள்தான். யாரும் வன்து ஹெல்ப்பும் பண்ணமாட்டாங்க. இதுல ஒவ்வொரு வருஷமும் நவம்பர்மாதம்லைஃப் சர்ட்டிபிகேட்கொடுக்கணும். நான் உசிரோடதான் இருக்கேன் வேற ஒருஇடத்திலும் வேலை எதுவும் பாக்கறதில்லைனு ஒருஃபார்ம் ஃபில் பண்ணி கொடுக்க்கணும். அதையும் கரெக்டாவே கொடுப்பேன். இப்ப கடந்த நவம்பரில்ஃபார்ம் ஃபில் அப் செய்து கொடுக்கும்போது தலைவலி ஆரம்பம் ஆச்சு.
நீங்கதான் லஷ்மின்னு என்ன நிச்சயம். அதுக்கு என்னப்ரூஃப்? நீங்கதான் லஷ்மிஎன்பதை ஒரு க்ரேட் ஒன் ஆபீசர் கிட்டேந்து லெட்டர் வாங்கி வாங்க அனாதான்உங்க ஃபார்ம் ஏத்துப்பொம் என்று சொல்லிட்டாங்க. நானும் எவ்வளவோ சொல்லிப்பாத்தேன். எவ்வளவு வருஷமா பென்ஷன் வாங்கிண்டு இருக்கேன்இங்க உள்ளவங்க எல்லாருக்குமே என்னை நல்லா தெரியுமே என்றேன்.அவங்க காதிலேயே வாங்க தயாரா இல்லை. பேங்க் ஆர்டர் இது நீங்க கோவாபரேட் பண்ணுங்க மேடம்னு சொல்லிட்டாங்க. வீடு வந்து பையனுக்கு போன்பண்ணீ சொன்னேன்.பேங்கலயே யாரும் க்ரேட் ஒன் ஆபீசர் இல்லியா ஆவரிடம்கேட்டு பாருங்க. என்றான் . பேங்க் காரா அப்படி சர்டிபிகேட் எல்லாம் தர மாட்டாளாம்.
சரின்னுபையன்ஒருக்ரேட்ஒன்ஆபீசரைத்தேடிப்பிடிச்சுஎன்னைப்பற்றிசொல்லிஒரு சர்டிபிகேட்டும் வாங்கி தந்தான். வேடிக்கை என்னன்னா அவரு யாருன்னுஎனக்குத்தெரியது, நான் யாருன்னு அவருக்குத்தெரியாது. ஆனா சர்டிபிகேட்லஇவங்கதான் லஷ்மி, இவங்களை எனக்கு கடந்த 10 வருஷமா தெரியும் என்றுஎழுதிக்கொடுத்தார். பேங்க்ல கொண்டு கொடுத்ததும் அக்செப்ட் பண்ணிட்டாங்க.பென்ஷனும் ஒழுங்கா வர ஆரம்பித்தது. இது என்ன அசட்டுத்தனம். நான் முழுசா போயி நின்னு நாதான் லஷ்மின்னா உண்மையை நம்ப மாட்டாங்களாம்.யாரோ முகம் தெரியாத க்ரேட் ஒன் ஆபீசர் எழுதிக்கொடுக்கும் ”பொய்”சர்ட்டிபிகேட்டத்தான் நம்புவாங்களாம்.
சரிமாசாமாசம்இப்படிகாலகடுக்கக்யூலநின்னுஅவஸ்தைப்படவேண்டாமேன்னுஒரு ஏ. டி. எம் கார்டுக்கு அப்ளிக்கேஷன் பண்ணி கொடுத்தேன்.ஜனவரி10-தேதிக்கு ப்ஃஃர்ம் ஃபில் பண்ணி கொடுத்தேன்.அங்க உள்ள மேடம் 15- நாள்லகார்டு கிடைக்கும்னாங்க. நானும் வெயிட் பண்ணி பாத்தேன். அடுத்தமாதமும்கார்டு வல்லை. வழக்கம்போல பேங்க் போயி ஒன்னரை மணி நேரம் க்யூல நின்நு பணம் வித்ட்ரா பண்ணி பாஸ்புக் எண்ட்ரியும் பண்ணிட்டு அந்தமேடத்தைதேடினேன். அவங்க டேபிள் காலியா இருந்தது. பக்கத்து டேபிள் மேடமிடம்நான் ஏ. டி. எம் கார்டுக்கு அப்ளை பண்ணி ஒருமாசம் ஆச்சு கார்டுவல்லியேன்னுகேட்டேன். அவங்க அலட்சியமா எல்லாம் வரும்போது வரும்னுட்டாங்க.
அதுக்கு அடுத்தமாசமும் இதே கதை. அப்படியா மூணூ மாசம் ஆகியும் கூடகார்டு கிடைக்கலை. இப்ப இந்தமாசம் சீக்கிரமே பேங்க் போனேன் அந்த ஏ. டி. எம்டேபிளில் மேடம் இருந்தாங்க. நேரா அவங்ககிட்டபோயி கேட்டேன். அவ லெட்ஜர் எல்லாம் எடுத்துபாத்துட்டு மேடம் உங்க கார்டு ஜனவரி 25-ம் தேதியே வந்தாச்சே, என்று சொல்ரா. நான் மாசாமாசம் வந்து கேட்டுகிட்டே இருந்தேனேயாருமே சரியா பதிலே சொல்லலியென்னேன். அந்தன்தடேபிள்ள இருக்கரவங்களுக்கு அவங்கவங்க வேலை பத்தி தான் தெரியும். எல்லா டேபிள் வேலையும்தெரியாது. நீங்க நேரா என்கிட்ட கேட்டிருக்கணும் என்று சொன்னா. நான் வந்தநேரம் இந்தடேபிள் காலியா இருந்தது அதனால பக்கத்து டேபிள் மேடம் கிட்டகேட்டேன். என்றேன்.தவிர பாஸ்வேர்ட் போஸ்ட்ல வருனு சொன்னாங்களேஎன்ரேன். யாரு சொன்னா அப்படி, அதெல்லாம் ஒன்னுமில்லை நீங்கபேங்க்லவந்துதான் கலெக்ட் பண்ணிக்கணும் என்கிரா.எப்படியோ கார்ட் கையில் வன்தாச்சு.இனிமேலதான் யூஸ்பண்ண ஆரம்பிக்கணும்.
Tweet | |||||
28 comments:
அட ராமா.......
நாங்க ஒரு வாரத்துலே கிடைக்குமுன்னு ஏஜண்டு சொன்னதை நம்பி PAN கார்டுக்கு அப்ளை பண்ணி ஆறு மாசம் தேவுடு காத்த கதைதான் போங்க :(
சிலவங்கிகளில் இது போன்றுதான் அலைய விடுகிறார்கள்....
இன்னும் தன்னுடைய வாடிக்கையாளர்களை கவனிக்க எந்த வங்கியும் முழு நம்பிக்கை அளிக்கவில்லை....
கோவப்படாதிங்க மேடம்...
100 பாளோயர்ஸ் பெற்றதற்க்கு வாழ்த்துக்கள்..
பக்கத்து டேபிள் மேடமிடம்நான் ஏ. டி. எம் கார்டுக்கு அப்ளை பண்ணி ஒருமாசம் ஆச்சு கார்டுவல்லியேன்னுகேட்டேன். அவங்க அலட்சியமா எல்லாம் வரும்போது வரும்னுட்டாங்க.
...... என்னே ஒரு பொறுப்பான பதிலுங்க.... ச்சே!
100 followers!!! Congratulations!!! :-)
ம்ம்..என் அம்மாவின் பென்ஷன் எடுக்க போகும் போது இதே கதை தான்.
சர்க்கார் சட்டம் அப்படித்தான் இருக்கும். இந்த வருஷம் லைஃப் சர்ட்டிபிகேட் இருக்கு, போன வருஷத்தது இல்லீயே, அதையும் கொடுங்கன்னு கேக்கிற ஆபீஸ் நெறய இருக்கு. இதுக்கெல்லாம் அசந்தா எப்படீங்க லக்ஷ்மி அம்மா.
சட்டம் ஒரு கழுதைன்னு கேள்விப்பட்டதில்லையா நீங்க?
சட்டத்த மேக்கறவங்கள என்ன சொல்றதுன்னு தெரியல.
வயதான எல்லோருமே எல்லா ஊர்களிலுமே இதுபோல பலவித கஷ்டங்கள் அனுபவிக்க வேண்டியதாகத் தான் உள்ளது.
மனிதாபிமானம் மிக்க சேவை மனப்பான்மை கொண்ட வங்கி ஊழியர்கள் வரவர மிகவும் குறைந்து போய் விட்டார்கள்.
நம்மை அவர்களுக்குத்தெரியாது என்பார்கள். பாஸ் புக்கைத்தான் நம்புவார்கள்.
நேரில் உயிருடன் போய் நின்றாலும் நம்ப மாட்டார்கள். உயிருடன் நாம் இருப்பதாக எவனோ கொடுக்கும் உயிரில்லா சர்டிஃபிகேட்டை மட்டுமே நம்பி ஃபைலில் போட்டுக் கொள்வார்கள்.
மிகவும் கொடுமை தான் இது.
மிகவும் வயதானவர்களை சிரமப்படுத்தாமல், வீட்டிலேயே வந்து பணம் பட்டுவாடா செய்ய ஏதாவது ஏற்பாடு செய்தால் நல்லது. பூனைக்கு யார் மணிகட்டுவது?
பெரும்பாலான அரசு வங்கிகளில் இதுதான் உண்மையான நிலை. எந்த விஷயமும் ஒரே முறையில் முடிவதில்லை. தனியார் வங்கிகள் எனில் வேறு வித பிடுங்கல்கள். குட்டியூண்டு எழுத்தில் டேர்ம்ஸ் & கண்டிஷன்ஸ் போட்டு கையெழுத்து வாங்கிவிட்டு அந்த சார்ஜ், இந்த சார்ஜ் என பிடுங்கி விடுவார்கள். உங்கள் கோபம் நியாயமானது தான் அம்மா. இந்தியா முன்னேறப் போவது எப்போது?
துலசி கோபால் நானும் பான் கார்டுக்கு பட்ட அவஸ்தைகளை தனிப்பதிவாகவே போடலாம். அப்படி படுத்தி எடுத்துட்டாங்க.
கவிதை வீதி சௌந்தர், இந்தப்பதிவு போடவே மிகவும் யோசித்தேன் என்பதிவு படிக்கும் வாசகர்களில் யாரானும் பேங்க்ல வேலை செய்பவர்கள் இருந்தா அவங்க கோபத்துக்கு ஆளாக வேண்டி வருமே என்று நினைச்சேன்.
நனரிங்க. சௌந்தர்.
சித்ரா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
டாக்டர், பி, கந்தஸ்வாமி, பி ஹெச் டி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
பொதுமக்கள்னா தூசா?
கோபால் சார், நீங்க சொல்வது உன்மைதான். என் பெரிய மகன் மஹாராஷ்ட்ரா பேங்கில்தான் ஈரோடில் வேலை பாக்கரான். அங்கு வயதானவர்களுக்கு பெஷன் வீடு தேடிப்போய்க்கொடுக்கிராங்களாம்.
சிலபேரு நடந்துகொள்ளும் விதத்தால்
நாம எல்லாரையுமே தவராக நினைக்க வைத்து விடுகிரார்கள்.
இந்தியா எப்போது வேணாலும் முன்னேரட்டும், பொறுப்பானபதவிகளில் இருப்பவர்களாவது முனேறினாலே போதும்னுதான் இருக்கு.
துளசி கோபால் நானும் பான்
கார்ட் வாங்க பட்ட அவஸ்த்தை
தனி பதிவே பாடலாம்.
சௌந்தர், இது ஆதங்கம்.ஏன்
இப்படில்லாம் பொது மக்களை
அலைய விடுராங்கன்னு.
வாழ்த்துக்கு நன்றி சௌந்தர்.
ஆமா, சித்ரா இவங்க இப்படி பொறுப்
பில்லாம நடந்துக்கரது அவ்வளவா
நல்லா இல்லேதான்.
வாழ்த்துக்கு நன்றி சித்ரா.
அமுதாகிருஷ்ணா வருகைக்கு நன்றி
டாக்டர் கந்தசாமி பிஹெச் டி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இப்படி உருப்படாத சட்டங்களால
பாதிக்கப்படுவது பொது ஜனங்கள்தனே?
கோபால் சார் என்பையனு ஈரோ
டில் மஹாராஷ்ட்ரா பேங்கில்
வேலை பார்க்கிரான் பென்ஷன் காரா
ளுக்கு வீடு தேடிப்போயி கொடுக்கரா.
இங்கு சில பேரு பண்ணும் தவறுகளால்
எல்லாரையுமே தப்பா நினைக்க வைச்சு
டராங்க.
பென்ஷனா...இல்லை அதன் பெயர் டென்ஷனா? நல்லா எழுதி இருந்தீங்க...
லஷ்மி நாராயன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இதே பாங்கில் நீங்கள் பணம் டெபாசிட் செய்வதாக
இருந்தால் அவர்கள் வேகத்தைப் பார்த்தால்
அசந்து போவீர்கள்
அப்போதெல்லாம் ஆட்கள் பற்றாக்குறை
என்கிற பேச்செல்லாம் வராது
அடுத்த சீட்காரர் கூட அக்கறையாய்
பறந்து பறந்து செய்து தருவார்
அதுதான் இப்போதெல்லாம் தனியார் வங்கிகளில்
வாடிக்கையாளர்கள் அதிகமாகி வருகிறார்கள்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஆமா, ரமணி சார் நீங்க சொல்வது உண்மைதான். அதையும் பாத்திருக்கேன்.
Post a Comment