இன்றைய கோபம், B.S.N.L. காரங்க மேல. நான் ரெண்டு வருஷமா போன் பில்
E.C.S. மூலமாகத்தான் கட்டி வரேன். இவ்வலவு நாளா எல்லாம் சரியாதான்
இருந்தது. இந்தமாதம் போன் பில் 5000-ரூபாய்க்கு வந்தது.எனக்கு ஒரே ஷாக்
என்னது இது இவ்வளவு பில் எப்படி? என்று மண்டைக்குடைசல்.பேங்க் பாஸ்
புக் எண்ட்ரியை பார்த்தேன். நாலு மாசமா பில் கட் பண்ணவே இல்லே. நானும்
பாக்கலே. பேங்க்ல போயி கேட்டேன். B. S. N. L காரங்க பில் அனுப்பலே, நாங்களும் கட்டல்லேங்கராங்க. போன் ஆபீசுக்குப்போயி கேட்டேன். எனக்கு
எப்பவும் குழந்தைகள் எல்லாரும்தான் போன் பண்ணுவாங்க .நான்யாருக்குமே
பண்ண மாட்டேன். அப்படி இருக்க இவ்வள்வு பில் எப்படி வரும்??அங்கபோனா
அவங்க E. C. S. பத்தி என்கொயரி கல்யாண்லபோயி போன் ஆபீசில் கேளுன்னு
சொல்லிட்டாங்க.அம்பர் நாத்லேந்து கல்யாண் 20 கிலோ மீட்டரில் இருக்கு.
லோக்கல் ட்ரெயின் பிடித்து போனேன். ஆபீஸ்போரவா கூட்டம் வண்டில
நிக்கக்கூட இடம் இல்லே.10.30-க்கு போனேன். சீட்ல யாருமே வந்திருக்கலை.
வெயிட்டிங்க தான். 11.30-க்கு ஆடி அசைஞ்சுண்டு வரா. நான் என் ப்ராப்லம்
சொன்னேன்.
பேங்க்ல அக்கவுண்ட் நம்பர்லாம் 5 டிஜிட்லேந்து 13 டிஜிட் மாத்திட்டாங்க
நாங்க பழைய நம்பருக்கு பில் அனுப்பினா பேங்க்ல ஏத்துக்க மாடேங்கராங்க
நீங்க ஒரு காலி செக் ஸ்லிப்பொட காப்பி, பேங்க் பாஸ்புக்கோட முதல் பக்க காப்பி, இந்தபில் கட்டிட்டு அதோட காப்பி எல்லாம் இங்க பில்லிங்க் செக்ஷனில் ஸப்மிட் பண்ணூங்க்ன்னு சொன்னாங்க. நல்ல வேளை நான் கேஷ் கொண்டு போயிருந்தேன். அதை கட்டி எல்லாத்துக்கும் ஜெராக்ஸ்
எடுத்து சப்மிட் பன்ணிட்டு அங்க கேட்டேன். இப்படின்னு நீங்க போன் பில் அனுப்பும் போதே எனக்கு இன்ஃபார்ம் பண்ணியிருக்கலாமே பில் நிறையா
வந்திருக்கேன்னு நான் வந்து கேட்ட பிறகு சொல்ரீங்களே. எங்களுக்கு
எப்படி தெரிய வரும் என்ரேன். இதெல்லாம் எங்க வேலை கிடையாது, நீங்க
தான் கவனமா இருந்திருக்கனும்னு சொல்ரா.முன்னேல்லாம் ரெண்டு மாசத்துக்கு ஒருமுறைதான் பில் வரும் .இப்ப மாசம் ஒரு முறை வருது.
ஒருமணி நேரம் க்யூல நின்னு பில் கட்டி எல்லாத்துக்கும் காப்பி எடுத்து
அங்க கத்திட்டு வீடு வரும்போது சாயங்காலம் 4-மணி ஆச்சு. காலை10- மணீக்
க்கு போனேன்.இதுல யாரைக்குறை சொல்ல?கஷ்ட்டப்படுரது யாரு? பொதுவா
நான் ரொம்பவே அமைதியான குணம் தான். இப்படி ஏதானும் விரும்பத்தகாத
விஷயங்கள் என்னை ரொம்ப கோபக்காரியாவே மாத்திடுத்து. குழந்தைகள்
கூட அம்மா நீங்க இப்பல்லாம் ரொம்ப கோவப்படுரீங்கன்னு சொல்ராங்க.
அடுத்து எலக்ட்ரிகல் ஆபீஸ்காரா. இதுபோல க்யூவில் நின்னு பில் கட்ட கஷ்ட்
டமா இருக்குன்னு ஒரு வருஷத்துக்கு அட்வான்சாவே 15000ரூபாய்கட்டினேன்.
இங்க E. C. S. வசதி அக்செப்ட் பண்ணமாட்டேங்கராங்க. ஏன் தெரியலே.
இனிமேல மாசாமாசம் பில் வராது, 10 மாசம் கழிச்சு எவ்வளவு பேலன்ஸ்
இருக்குன்னு வந்து பாத்துக்குங்க்ன்னு சொன்னாங்க. 4-மாசம் பில் எதுவும் வல்லே.இந்தமாசம் 1000-ரூபாய்க்கு பில் வந்தது.திரும்ப அங்க படை எடுப்பு.
அங்கயும் கோவமாதான் பேச வேண்டி வந்தது.பில் க்ரூப்ல இருக்கரவங்க
பை மிஸ்டேக்கா பில் அனுப்பிட்டாங்கன்னு கூலா சொல்ராங்க. நான் மட்டுமே
வீட்ல இருக்கேன். மிஞ்சி, மிஞ்சி போனா ஒரு ரூம்ல நாள்பூரா ஃபேன் சுத்தும்
இரவு மட்டும் லைட் எரியும்.வாஷிங்க் மிஷின்லாம் 10- நாளுக்கு ஒரு முறைதான் போடுவேன். ஃப்ரிட்ஜ் இருக்கு. இதுக்கு எப்படி மாசம்1000-ரூவா
ஆகும்?
மாடிப்படி ஏறிவரும் சுவரில் மீட்டர் வச்சுருக்கா. மழைகாலம்னா மழையில்
நனையும், வெயில்லில் காயும், சைடு சுவரில், இல்லைனா என் வீட்டு வாசலில் மீட்டரை வைக்கசொன்னேன்.இல்லைனா வேறு யாராவது கரண்ட்
என்மீட்டரில் மிக்ஸ் ஆகுதான்னு செக் பண்ணூங்க்ன்னு எவ்வளவோ
ரிக்வெஸ்ட் பண்ணிப்பார்த்தேன்.என்ன மீட்டர் ரீடிங்க் வருதோ அதுதானே
நாங்க போடுரோம் வேர ஒன்னும் செய்ய முடியாதுன்னுட்டாங்க. நாம
யூஸ்பண்ணி அதுக்கு பணம் செலவு ஆனா சரின்னு ஒத்துக்க முடியும். ஆனா
அனாவசியமா செலவு எப்படி பண்ண முடியும். அக்கம் பக்கத்து வீடுகளில்
4,5, பேரு இருக்கர ஃபேமிலிதான்.அவங்கலுக்கு 500-ரூவாதான் வருது. என்
ஒருத்திக்கு 1000-ரூவா. என்னன்னு சொல்ல?

Tweet | |||||
14 comments:
யூஸ்பண்ணி அதுக்கு பணம் செலவு ஆனா சரின்னு ஒத்துக்க முடியும். ஆனா
அனாவசியமா செலவு எப்படி பண்ண முடியும்.//
என்னன்னு சொல்ல?கஷ்ட்டமா இருக்கு
.
உங்கள் கோபம் மிகவும் நியாயமானதே. பொறுப்பில்லாமல் நம்மை அலையவிடுவார்கள். எந்தத்தகவலும் முன்கூட்டியே யோசித்து தரமாட்டார்கள். நாமே போய் அலைந்து திரிந்து கேட்டால் ஏதேதோ அபத்தமாக ரூல்ஸ் சொல்லுவார்கள். எனக்கு இதுபோல அடிக்கடி கோபம் வருவதுண்டு. என் அனுபவம் ஒன்று உள்ளது. அதையும் பிறகு பதிவாகப்போட நீங்கள் வழி காட்டியுள்ளீர்கள். நன்றி.
தங்கள் கோபம் நியாயமானது அம்மா. இவர்களது தொல்லை தாங்க முடியவில்லை. இப்போதெல்லாம் ஆன்லைனில் பணம் கட்டலாம். நீங்கள் இ.சி.எஸ். மூலம் கட்டுவதை விட இது ஈஸி. முயற்சி செய்யுங்கள்.
வெங்கட் சொல்ற மாதிரி இ சி எச்சை விட ஆன்லைன் ஆப்ஷன் சிறந்தது. அதுக்கு ஏன் மாறக் கூடாது ?
அரசு துறைகள் எல்லாம் இப்படிதான்
இராஜ ராஜேச்வரி வருகைக்கு நன்றி
கோபால் சார், வருகைக்கும் ம்கருத்துக்கும் நன்றி.
வெங்கட் நீங்க சொல்ரதும் சரிதான். இனி அப்படித்தான் செய்யனும்.
ஆமா, கார்த்தி இனி அப்படி செய்யலாம்.
வருத்தமாக இருக்கிறது.
மா தேவி, வருகைக்கு நன்றி
திரும்பவும் ஒரு போராட்டமா...நான் பரவாலப்போல இருக்கே !
ஹேமா வருகைக்கு நன்றி
பொதுவான மனிதன் வேறு யாருடைய கவனக்குறைவால் காரணமாக கஷ்டப்பட கூடாது. ரஜினி வலுவாக போன்ற அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கைகள் கண்டிக்கிறது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR
unknown thanks
Post a Comment