வாச்மேன் இண்டெர்காமில் தகவல் சொன்னான். மருமகள் கீழே வந்து என்னைலிஃப்டில் வீட்டுக்கு கூட்டிப்போனா.மகன் ஆபீஸ்வேலை விஷயமாக அன்றுகாலைதான் டில்லி போன்னானாம். மருமகளும் குழந்தைகளும் வேலைக்காரிகளுமே வீட்டில் இருந்தார்கள்.சமையல் முதல் எல்லா வேலைகளுக்குமே வேலைக்காரிகள் இருந்தார்கள். மருமகள் உடனே ஃபேமிலிடாக்டருக்கு போன் பண்ணி விபரம் சொன்னா. அவரும் உடனே, இவங்களைஉடனே லோக்(பெரிய ஆஸ்பிடல்) கூட்டிப்பொங்கன்னு சொன்னார்.அங்க எல்லாவற்றுக்குமே ஸ்பெஷலிஸ்ட் இருப்பாங்க.
மருமகளும் அங்க போன் பண்ணினா.கார்டியாலஜிஸ்டின்னும் அரை மணி நேரம்தான் இங்க இருப்பாங்க. நீங்க உடனே வாங்கன்னு சொன்னாங்க. நான் வந்தஆட்டோக்காரப்பையனே காத்திண்டு இருந்தான். அவனோட ஆட்டோவிலேபெரிய ஆஸ்பிடல் போனோம். நர்ஸ் வீல் சேர் வச்சுண்டு கீழெயே காத்துண்டு இருந்தா. உடனேமேல கூட்டிப்போனார்கள். டாக்டர் வழக்கமான எல்லா செக்கப்பும் செய்து பாத்துட்டு,ஒரே நேரத்ல மைல்ட்&;மாசிவ் அட்டாக் ஆகியிருக்கு.
உடனே ஒரு இஞ்செக்ஷன் போடனும், வாங்கிட்டு வாங்கன்னு எழுதிக்கொடுத்தார்.அவளும் ஒவ்வொரு மெடிக்கல்ஷாப்புக்கா போன் பண்ணிகேட்டா. ஸ்டாக் இல்லைன்னு எல்லாரும் ஒரே மாதிரி சொல்லிட்டாங்க.டாக்டர் சொன்னார் ஆஸ்பிடல்ல கீழே மெடிக்கல் ஷாப் இருக்கு அங்கபோய்கேட்டுப்பாருங்க என்ரார். அவளும் கீழபோயி கேட்டா. லக்கிலி ஒரே ஒருபாட்டில் இருந்தது. 9000 ரூபாகொடுத்து மருந்து வாங்கி வந்தா.
உடனே ஊசி போட்டு என்னை ஐ, சி, யு-வில் அட்மிட் பண்ணீனா.அதுவரைபொறுக்கமுடியாத நெஞ்சு வலியும் வேர இருந்தது.ஊசி போட்டதும் வேர்வைகொட்டுவது நின்னுது.வலி குறையவே இல்லை.எனக்கு நினைவும் திரும்பலைஇந்தவிஷயங்கள் எல்லாமே நான் வீடு வந்தபிறகு என் மருமகள் சொல்லித்தான்தெரிஞ்சுண்டேன். அவள் தைரியமா முடிவு எடுத்து ஆஸ்பிடலில் சேர்த்தபிறகுவீட்டுக்குப்போயி எல்லா பையன்கள், பொண்ணுகளுக்கும் போன் பண்ணிட்டா.
இதில் ஒருபையன் பொண்ணு வெளி நாட்ல இருக்காங்க.ஒருபையன் ஈரோட்லயாராலயுமே நம்ப முடியலை. அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்கா? டாக்டர் என்னமோ தப்பா சொல்ரார்.அம்மா கோவப்படவேமாட்டாங்க, எதுக்குமே டென்ஷன்படமாட்டாங்க, கவலையும் படமாட்டாங்க பின்ன எப்படி ஹார்ட்அட்டாக்வரும். சான்சே இல்லைன்னு நம்பவே இல்லை.அப்படியும் மனசு கேக்காமரெண்டு நாள்லயே எல்லாரும்வந்திட்டாங்க.அதுகூட எனக்குத்தெரியாது.
3 வாரம் ஐ,சி,யு-ல இருந்து,ஸ்பெஷல் வார்ட்ல3 வாரம் இருந்திருக்கேன்.பசங்கள்ளாம் என்னைப்பாத்தப்போஆஸ்பிடல் ட்ரெஸ்போட்டு ஸலைன் ட்யூப் ரெண்டு கையிலும், மூக்குல ஆக்சிஜன்ட்யூப்,கை,கால், நெஞ்சுபூராவும் ட்யூப்மாட்டி ஈ,சி,ஜி.கீழ யூரினுக்கும் ஒரு ட்யூப் என்று உடம்பு பூராட்யூப் மயம்.
அவங்களுக்கெலாம் என்னை அப்படி பாக்கும்போது தாங்கவே முடியாம அழுகை வந்திருக்கு.டாக்டரிடம் போயி விவரம் கேட்டிருக்கா.உங்கம்மாவுக்கு
ஆயுசு கெட்டி இல்லைனா ரெண்டு அட்டாக் ஒரேசமயத்ல தாங்கிண்டு ஆட்டோல துணிச்சலா வந்திருக்காங்களே.ரோட்ஸைட் ட்ராவல் அதுவும்ஆட்டோல எவ்வளவு ரிஸ்க் தெரியுமா. அட்டாக் ஆகி முதல் ஒருமணி நேரத்தைகோல்டன் அவர்ன்னு சொல்வோம். அதுக்குள்ள தகுந்த ட்ரீட் மெண்ட் கிடைச்சுட்டா லக்கிதான். ஆனாகூட சிவியர் மட்டும் தாங்கர வீக்லதான் இப்ப இருக்காங்க.தனியே ஒரு இடமும் அனுப்பாதீங்க.கோவமோ,டென்ஷனோ படக்கூ
டாது, மைண்ட் எப்பவும் ரிலாக்சா ஈசியா இருக்கனும்.மாடிப்படி ஏறி இறங்க கூடாது. நிறைய நடக்கக்கூடாது,
சாப்பாட்லயும் நிறையா கூடாதுகள். நல்ல வேளை ப்ரெஷரோ, ஷுகர்கம்ப்ளைண்டோ இல்லை. இனிமேல ரொம்ப ஜாக்ரதையா பாத்துக்கோங்கன்னு ஒரேஅட்வைஸ்மழைதான்.ஒரு வேளைக்கு 7,8,மாத்திரைகள் முழுங்கனும்.அப்போசத்தான சாப்பாடு சாப்பிடனும்னும் சொல்ரார்.இன்னும் ஒரு வாரத்தில் ஆஞ்சியோ டெஸ்ட் பண்ணி பாக்கனும். எங்கல்லாம் ப்ளட் க்ளாட் இருக்குனுபாத்து ஒரு ஆஞ்சியோவோ, பைபாசோ செய்ய வேண்டி இருக்கும் என்றார்.உயிருக்கு ஆபத்தில்லை.அதனால நீங்கல்லாம் பயப்பட வேண்டாம்ன்னுட்டார்.
ஊர்லேந்து வந்தகுழந்தைகள் எல்லாரும் 10 நாட்களில்திரும்ப போனார்கள்.
Tweet | |||||
22 comments:
அம்மா உங்களை நமஸ்கரிக்கிறேன். உங்கள் தைரியம் மன உறுதி என்னை வியக்க வைக்கிறது, அந்த நேரங்களில் எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு நல்லாத் தெரியும். என் சிறிய தாத்தா இந்த மாதிரி மருத்துவமனியில் இருந்த பொழுது சேலம் முழுவதும் மருந்து கிடைக்காமல், திருச்சியில் இருந்து வரவழைத்தோம்
கேட்கவே பயங்கரமாக இருக்கும்மா!
////மைண்ட் எப்பவும் ரிலாக்சா ஈசியா இருக்கனும்.மாடிப்படி ஏறி இறங்க கூடாது. நிறைய நடக்கக்கூடாது,////
கவனமா தொடருங்கள் அம்மா..
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.
Ask to take extra care...!
இனி இறையருளால் நலமாக வாழப்பிரார்த்திகிறேன் அம்மா.
கார்த்தி, இந்தமன தைரியம் எப்படி
வந்ததுன்னு எனக்கே தெரியலை என் அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தி இருக்கலாம். வேறு என்ன சொல்ல?
இப்பவும் மருந்து மாத்திரைகளுடன்
வண்டி ஓடிண்டு இருக்கு.
வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ம.தி.சுதா,வருகைக்கு நன்றி.
நான் இருப்பது மூணாவதுமாடியில்.
மாடி ஏறாம இறங்காம எப்படி முடியும்?
மைண்ட் வேணும்னா ரிலாக்சா வச்சுக்க
முடியும். சில சமயம் டாக்டர்கள் சொல்வதை எல்லாம் ஃபாலோ பண்ணமுடியாது. சொல்வது அவங்க டூட்டி
பிரணவம் ரவி குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இராஜ ராஜேஸ்வரி எனக்காக பிர்ரர்த்தனை செய்ததற்கு நன்றிம்மா.
அம்மா இப்ப எப்படி இருக்கீங்க
ரெண்டு போஸ்டையும் சேர்த்து படித்தேன்
நானும் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.
take care.
angelin, வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றிம்மா.
இப்போ உடம்பு பரவாயில்லையாம்மா..
நிஜமாவே உங்கள் மன உறுதி எங்களுக்கொரு பாடம். ரொம்ப ஆச்சரியமா இருக்கு.
விக்னேஸ்வரி, இப்ப சூப்பரா இருக்கேன்மா.
லஷ்மிமா,இப்ப உடல் நலம் பரவாயில்லையா?உங்களை மாதிரி தான் என் சொந்த அக்காவிற்கும்,நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்.பிரார்த்தனைகள்.
ஆஸியா இப்ப சூப்பரா இருக்கேன்மா. உங்க எல்லாரிடமும் என்னைப்பற்றி சொல்லி வருவதால மனசே ரிலாக்சா இருக்கு.
உங்க நல்ல மனசுக்கு எந்த பிரச்சனையும் ஓடி விடும் அம்மா...
இப்பவும் தனியாத்தான் இருக்கீங்களா? அட்லீஸ்ட் உங்க மகன் வீட்டுக்கு வெகு அருகிலாவது இருக்கலாமே?
உங்கள் மனதைரியமும், உடல் நலத்தைப் பேணும் திறனும் மற்றவருக்குப் பாடங்கள். வாழ்த்துக்கள் மேடம்.
பாரத் பாரதி வருகைக்கும் உங்க கருத்துக்கும் நன்றிங்க,
ஹுஸைனம்மா வாங்கம்மா, இப்பவும் தனியாதான் இருக்கேன்.
டாக்டர் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவும்.
அமைதி அப்பா, வருகைக்கு நன்றி.
Post a Comment