Pages

Back to Top

பெட் அனிமல்(1)

பெட் அனிமல்.


நாங்க, ஜபல்பூரில் 5 வருடம் இருந்தோம். அங்க ஒரு குட்டி நாய் வளர்த்தோம்.
ஒரு 26-ஜனவரி அன்று ஒரு ஃப்ரெண்ட் வீடு போயிருந்தோம். அவ்ங்களும் தமிழ்க்காரங்கதான்.அவங்க இருந்தது. தனி வீடு. ரொம்ப பெரியவீடு. பின்புறம் பெரியதோட்டம் முன்புறமும் பூச்செடிகள் வைக்கும்படி தாராளமாக காலி இடங்கள்.நாங்க இருந்தது முதல் மாடி. எல்லாருமே ஆபீஸ் குவார்ட்டர்சில் தானிருந்தோம்.பதவிக்குத்தகுந்த வீடு. ஜபல்பூரிலிருந்து,30, 40 கிலோ மீட்டர் உள்ளே தள்ளி இருக்கும்கமேரியா என்னுமிடத்தில் வெடிமருந்துதொழிற்சாலை, அங்கே வேலை பார்ப்பவர்கள்
குடி இருப்புப்பகுதி.காய்கறியோ, ப்ரொவிஷன் கடைகளோ வாரம் ஒருமுறை சந்தைபோலகூடும். அங்குதான் வாங்கனும். லீவு நாட்களில் ஃப்ரெண்ட்ஸ் வீடுகள் போயி அரட்டை அடிப்பதுதான் ஒரே பொழுதுபோக்கு. எங்க வீட்டிலிருந்து அவங்கவீடு குறைந்தது ஒரு கிலோ மீட்டர்
தூரமாவது இருக்கும். வாகன வசதிகளும் கிடையாது. நடராஜா சர்வீஸ்தான். மிஞ்சிபோனா எல்லாரிடமும் சைக்கிள்கள் இருக்கும். அவ்வளவுதான்.



டி,வி, சினிமாதியேட்டர் என்று எந்தவிதமான பொழுதுபோக்கு அம்சம்களும் கிடையாது.வெரும் பொட்டல்வெளிதான்.அந்தஃப்ரெண்ட் வீட்டிலும் 4 குழந்தைகள், எங்களுக்கும் 5 பேர். எல்லாரும் ஜாலியா விளையாடி
அரட்டைஅடிச்சுண்டுஇருந்தோம்.அவங்கவீட்லஒருஅல்சேஷன்நாய்5குட்டிகள் போட்டிருந்தது. 4 குட்டிகள்நல்ல கலரில் சுறு சுறுப்பா ஓடி எல்லாருடனும் நன்கு விளையாடிக்கொண்டிருந்தது. ஒரே ஒருகுட்டிமட்டும் ஒரு
ஓரமா தன்னால என்னமோ பண்ணிட்டு இருந்தது. அதோடகலரும் கழுதைக்கலரில் ப்ரௌனும் அழுக்குகலருமா
கலந்து இருந்தது.அதுலயும் அதுமட்டும் பெண் குட்டி வேறு.யாருமே அதுகூட விளையாடவே இல்லை. ஐயோபாவமா இருந்தது. அந்தவீட்டுக்காரார், என் வீட்டுக்காரரிடம், நேத்துதான்பா குட்டி போட்டுது நல்ல அல்சேஷன்
உசந்தஜாதி நாய், நீ வேணா ஒருகுட்டி கொண்டு போரியான்னு கேட்டார். உங்க வீடு கீழ்வீடு நாய் ஓடி விளையாடதாராளமா இடமும் இருக்கு. எங்க வீடோ மாடிவீடு. நாய்வளக்க சவுரியப்படாதே, வீடுபூரா அசிங்கம் பண்ணி டுமே
என்று அவங்க இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே எங்கள் சின்னப்பையன் அப்பா, அப்பா, ப்ளீஸ் பா நாமஒரு குட்டி கொண்டுபோலாமேன்னு கெஞ்சலாக கேக்கவும் அரைமனதுடன் சரி என்றார். எந்தகுட்டி வேனுமோஎடுதுக்கோங்க என்றார் அந்த ஃப்ரெண்ட்.



எங்கபையன் அ ந்த அழுக்கு கலர் பெண் குட்டியைஎடுத்துக்கொண்டான்.இதுவா வேனும், சரி எடுத்துக்கோ என்றார்.ஜனவரிமாதம் ஆதலால் நல்ல பல்கிட்டும் குளிர். இந்த இடத்தில் எல்லா க்ளைமேட்டுமே எக்ஸ்டீமா தான் இருக்கும்.
குளிர்னா, ஒரே குளிர், வெய்யில்னா ஒரே வெய்யில்னு ஒரு வழி பண்ணிடும். அந்தகுட்டிக்கு குளிருமே என்று அவன்போட்டுக்கொண்டிருந்த கோட்டை அவிழ்த்து நாய்க்குட்டியை அதில் சுருட்டி எடுத்துக்கொண்டான்.அந்த குட்டியும்
அவன் கைகளில் சுருண்டு கொண்டது. எல்லாரும் கிளம்பி வீடு வந்தோம். ஒரு பெட்ரூம், ஒருஹால், சின்னதாக ஒருகிச்சன் ஒருபெரிய வராண்டா,அதன்பக்கம் பாத்ரூம், டாய்லெட் என்று அடக்கமான சின்ன வீடுதான்.அந்த வராண்டாவில், ஒரு ஓரமாக,கீழே நிறைய பழைய ந்யூஸ்பேப்பர் விரித்து, அதன்மேல் சாக்குகள் விரித்து, நாய்க்கு இடம் பண்ணினான்.அதில் நாய்க்குட்டியை விட்டு கிச்சனில் போய் ஒரு கிண்ணம் நிறையா பால் கொண்டு வைத்தான். எவ்வளவு நேரம் பசியோ
குட்டிக்கு. வைத்தபாலைப்பூராவும் ஒரு சொட்டு பாக்கி வைக்காமல் நக்கி குடித்தது.

பெட் அனிமல்.

20 comments:

Thoduvanam said...

குழந்தையோடு குழந்தையாய் அந்தக் குட்டியும் வளரும்.
வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

thankyou kaalidoss

vanathy said...

நல்லா இருக்கு, ஆன்ட்டி. இது இன்னும் வருமா? அல்லது இவ்வளவு தானா? எனக்கு நாய் குட்டிகள் மிகவும் பிடிக்கும். ஆனா, இங்கு அது சாத்தியமாகுமா என்று பயத்தில் வளர்க்கவில்லை.

எல் கே said...

குழந்தைகள் எந்தவித விஷயத்தையும் யோசிகவேண்டாமே? மகிழ்ச்சிதானே அவர்கள் வாழ்க்கை

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

ஜபல்பூர் ஜிம்மியின் ஜூப்பர் ஜாலங்களை ஜொல்லவும்.படிக்க ஆர்வமாய் உள்ளோம்.

குறையொன்றுமில்லை. said...

வானதி, இது நாலு பகுதியா வரும். வருகைக்கு நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

ஆமா கார்த்தி, குழந்தைகள் உலகமே தனிதான். நான் போனபதிவுலயே உங்க பின்னுட்டமே வல்லியேன்னு நினைச்சேன். அப்டேட்டே ஆகலைன்னு நீங்க சொல்லித்தானே தெரிய வருது. இதை எப்படி சரி செய்யனும்

குறையொன்றுமில்லை. said...

லஷ்மி நாராயன் வருகைக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

ஹை நாய் குட்டி பற்றியா அடுத்த தொடர். சிறிய வயதில் தான் கவலையில்லாமல் எல்லாமே செய்யலாம், யோசிக்க வேண்டியதில்லை. தொடருங்கம்மா!

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் உங்களுக்கும் நாய்க்குட்டின்னா இஷ்டமா?

எல் கே said...

தெரியலை. வந்தும் நான் கவனிக்காமல் விட்டிருக்க வாய்ப்பு இருக்கு. இந்த வாரம் அதிகம் வலைப்பூக்களுக்கு போகலை. ஒரு சில புத்தங்களை படிப்பதில் ஆழ்ந்து விட்டேன். இனி சரியா வந்திருவேன்

எல் கே said...

திவ்யாகு பிடிக்கும். ஆனால் என் தங்கமநிக்கும் எனக்கும் பிடிக்காது

குறையொன்றுமில்லை. said...

திவ்யாக்குப்பிடிக்கும்னா வேற வழியே இல்லை. தங்கமணி, ரங்கமணில்லாம் சும்மா வேடிக்கை பார்த்துண்டு இருக்கனும்.அவ்வளவுதான்,

குறையொன்றுமில்லை. said...

என்னபுக் படிச்சீங்க தமிழா, ஆங்கிலமா? எனக்கும் நிறைய புக்(தமிழ்) படிப்பதில் ஆர்வம் உண்டு.

இராஜராஜேஸ்வரி said...

குழந்தையின் குதூகலம் எங்களுக்கும் சந்தோஷமளித்தது.
என் மகனும் சிறு வயதில் பூனை நாய்,குருவி எதைப்பார்த்தாலும் ஒரு கிண்ணத்தில் பால் கொண்டு வைப்பான்.

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி, வருகைக்கு நன்றிம்மா.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நாய்க் குட்டி, குட்டி நாய் பற்றி இன்ட்ரஸ்ட்டாக
சொல்லிவருகிறீர்கள். அந்தப் பெண் (குட்டி) நாய்
என்ன செய்தது? (குறும்பு, வேடிக்கை எதுவும்?)
அடுத்த பகுதியில் தொடரும்... (அது எப்ப?)

FARHAN said...

நாய் குட்டிகள் எனக்கு பிடிக்காது ஆனால் நீங்க சொன்ன விதம் அருமையாக உள்ளது மற்றைய பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்

குறையொன்றுமில்லை. said...

நிஸாமுதீன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீக்கிரமே தொடரும்.

குறையொன்றுமில்லை. said...

ஃபர்ஹன், வருகைக்கும்கருத்துக்கும் நன்றி. பெரிய நாய் வேனும்னா பிடிக்காம போகும் குட்டி நாய் எல்லாருக்குமே பிடிக்கனுமே?

Related Posts Plugin for WordPress, Blogger...