mp to ms(3)
சுமாராக 20 பேர்கள் இருந்தோம். அத்தனைபேருக்கும் சூடாகவும் சுவையாகவும்
2 மணி நேரத்தில் சாப்பாடு ரெடி பண்ணிட்டா.பஞ்சாப் கோதுமை போல இருக்கு
அவ்வளவு ருசியாக இருந்தது ஒவ்வொருகட்டிலிலும் 5, 5 பேராகஉக்காந்தோம்.
ஒவ்வொரு கட்டிலிலும் 4, 5, பனை ஓலை விசிறியும் இருந்தது. வெய்யில் நேரம்சூடாக சாப்பிட கஷ்டமாக இருந்தால் விசிறியால விசிறி ஆறவைத்து சாப்பிடச்சொன்னா.பெரிய,பித்தளை ப்ளேட்களில் நாலு சப்பாத்தி, பாஜி, பக்கத்தில் உள்ளபுளியமரத்திலிருந்து ஃப்ரெஷாக பறித்த புளி இலையில் ஒரு சட்னி(சூப்பர்டேஸ்ட்)வெரும் பச்சைமிளகாயை முழுசாக எண்ணையில் பொரித்து மேலாக லேசாக உப்புதூவி ஒரு பெரியதட்டில் நடுவில் வைத்தார்கள். ட்ரக் காரர்களுக்கு நல்ல காரசாரமாசாப்பிட்டுபழக்கமாம். சமையலில் அதிகமா காரம் போடாமல் இப்படி மிளகாயை தனியா
வறுத்துவைக்கிரார்கள். எல்லாருமே சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தோம். அடிபம்பில்கை அலம்பி தட்டுக்களையும் அலம்பி வைத்தோம். ஐயோ மேம் சாப் நீங்க போயிப்ளேட்டெல்லாம் ஏன் கழுவரீங்க?ன்னு பதட்டப்பட்டு கையிலேந்து தட்டை வாங்கிண்டுபோனார்கள்.
யாருக்கெல்லாம் லஸ்ஸி வேனும்னு கேட்டா எல்லாருமே கையைத்தூக்கினோம்.எப்படிலஸ்ஸி பண்ரான்னு பாக்க கிச்சனில்(!!!!!!!!!!!!!!!!!!!!!) போயி பார்த்தேன். ஃப்ரிட்ஜ்லேந்து பெரிய பாத்திரத்தில் உள்ள் கெட்டிதயிரையும், கூடவே ஒரு பெரிய ட்ரே நிறையஐஸ் க்யூபும் பெரிய பாத்திரத்தில்ஜீனியும் கொண்டுவந்து நேரே வாஷிங்க் மிஷின்கிட்ட
போயி (ஸெமி ஆட்டோமேடிக்தான்) அதற்குள் எல்லாவற்றையும் போட்டு 5 நிமிஷத்துக்குஸெட் பண்ணி சுத்தவிட்டா. ஐயோ இத்ல போயி லஸ்ஸி பண்ராளேன்னு இருந்தது.சுத்தி முடிந்ததும் தண்ணீர்வெளியே போகும் ப்ளாஸ்டிக் பைப் வழியா ஒருபெரியபாத்திரத்தில் நுரை ததும்ப லஸ்ஸியை எடுத்துவந்து பெரிய, பெரிய பித்தளை டம்ளரில்ஊற்றி தந்தார்கள். தண்ணீரே சேர்ப்பதில்லை.அதுபோலஒருலஸ்ஸியைவேறுஎங்குமேசாப்பிட்டிருக்கமுடியாது. அவ்வளவு ருசியாக இருந்தது.
நான் உள்ள போயி அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். இந்தமிஷின்ல லஸ்ஸி பண்ரீங்களேசோப் வானை வராதா? என்றேன். மேம் சாப் என்ன சொல்ரீங்க புரியலியே என்றான்.
இல்லீங்க துணி த்வைக்கிர மிஷின்லபோயி லஸ்ஸிபண்ரீங்களே. துணி துவைத்தபிறகுநல்லா தண்ணீர் ஊற்றி க்ளீன்பண்ணிடுவீங்களா என்றேன். அவர்கள் ரொம்ப ஆச்சர்யமாகஎன்னிடம் மேம் சாப் என்ன சொல்ரீங்க, நீங்கல்லாம் இதிலயா துணி துவைப்பீங்க?என்றுரொம்ப அப்பாவியாக கேட்கிரான்.கடைக்காரன் எங்ககிட்ட இதுலஸ்ஸிபண்ற மிஷின் என்று
சொல்லின்னா வித்துட்டுபோனான். என்றான். சரி இவர்களிடம் பேசி புரிய வைக்கமுடியாதுன்னுபுரிஞ்சிடுத்து. பேசாம, இல்லை ரொம்ப நல்லா சாப்பாடு லஸ்ஸில்லாம் பண்ணின்னீங்கரொம்ப நன்றின்னு சொல்லிட்டு வளில கட்டில்ல வந்து எல்லாருடனும் பேசிண்டு இருந்தேன்.அங்கயே கேரம், செஸ், சீட்டுக்கட்டு என்று எல்லாமே வைத்திருந்தார்கள். எல்லாருக்குமே
நல்லா டை ம்பாஸ் ஆச்சு. ட்ரைவர்கள் எல்லாருமே தூங்கிட்டா. இரவுபூரா ட்ரைவ் பண்ணனுமே.இப்படியாக 3 பகல், ரெண்டு இரவு போச்சு.சந்த்ராப்பூர் நெருங்க 50 கிலோமீட்டர் இருக்கும்போதுரோடு இருபுறமும் நல்ல மரங்கள் அணி வகுத்து நிற்பதுபோல அணி வகுத்து இருந்தது சூப்பரா
இருந்தது.குழந்தைகள் மேலே இருந்து அப்பா, அம்மா ந்னு குஷியா கத்திண்டு ஜோரா தாளம்போட்டுண்டு இருந்தா. மூன்றாம் நாள் இரவு நாங்கள் போய்ச்சேர வேண்டிய இடம் வந்தது.அங்கபோயி டூட்டி ஜாயின் பண்ணின பிறகுதான் எங்களுக்கு க்வார்ட்டர்ஸ் கிடைக்கும். அதுவரை
ஒரு ஃப்ரெண்ட் வீட்டில் தங்கிக்க சொல்லி சாவி கொடுத்துவிட்டு அவர்கள் வக்கேஷனுக்குஒரு மாசலீவில் சென்னை போயிருந்தார்கள். அவர்கள் வீடு போய் இறங்கினோம். புது இடம்.யாரையுமே தெரியாது.ட்ரைவரும் கிளீனருமே எல்லா சாமான்களையும் இறக்க ஹெல்ப் பண்ணினா.
மூன்றுசேர்களை காணலை. குழந்தைகளிடம் கேட்டோம். ஆமாப்பா, ரெண்டுபக்கமும் மரமாஇருந்துதா மூணுசேரும் மரக்கிளைல மாட்டின்னு .அதுக்குதான் பெரிசா தாளம்லாம் போட்டுஅப்பா, அம்மானு கத்தி, கத்தி கூப்பிட்டோம். நீங்கயாருமே கண்டுக்கவே இல்லை நாங்க என்ன
பண்ணுவோம் என்று கேட்கிரார்கள்.
எப்படியோ எந்தப்ராப்ளமும் இல்லாமல் வந்து சேர்ந்தோம்.ட்ரைவரும் சாமானுக்கு பேசின பணமமட்டுமே வாங்கிண்டான். எங்களுக்காக பணம் வாங்க மாட்டேன்னுட்டான். இந்தகாலத்திலயும்இப்படியும் சில நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிரார்கள்.
Tweet | |||||
43 comments:
இப்படியும் சில நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிரார்கள்.
...... Praise the Lord!
// .பெரிய,பித்தளை ப்ளேட்களில் நாலு சப்பாத்தி, பாஜி,//
பித்தளை தட்டுகளை சாப்பிட பயன்படுத்த முடியுமா? அதில் களிம்பு ஏறி வேறுவகையான சுவை வருமே? அதுவும் கூட வயிற்ருக்கு நல்லதில்லையே அம்மா? இது எப்படி அவர்களுக்கு சாத்தியமாகிறது?
நான் முதல் இரண்டு பதிவுகளை தவற விட்டேன். மறுபடியும் முதல் பகுதியிலிருந்து படித்துக்கொண்டே வந்தேன்.
வாஷிங் மெஷின் என்பதை அறியாமல் அவர்கள் அதனை லஸ்ஸி தயாரிக்கும் மெஷினாக வாங்கி வந்தது சிரிப்பை வரவழைத்தாலும் அதை லஸ்ஸி தயாரிக்கும் மெஷினாக விற்ற கடைக்காரரின் சாதுர்யம், இந்த ஜனங்களின் அப்பவித்தனம் யோசிக்கவைத்தது.
மிக அழகான பகிர்வு. குடும்பத்துடன் சென்றதால் அங்கங்கே தங்கி வித்யாசமாக சாப்பிடுவதால் கடினமாக இருந்தாலும் இது ஒரு சிறந்த அனுபவம்தான்.நல்ல பகிர்வம்மா!
நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் ஆன்ட்டி
வருகை,வணக்கம் , வாழ்த்து மற்றும் வாக்கு...
இதுலஸ்ஸிபண்ற மிஷின் என்று
சொல்லின்னா வித்துட்டுபோனான்//
hahaha.. very nice.
//இருந்துதா மூணுசேரும் மரக்கிளைல மாட்டின்னு .அதுக்குதான் பெரிசா தாளம்லாம் போட்டு
அப்பா, அம்மானு கத்தி, கத்தி கூப்பிட்டோம். நீங்கயாருமே கண்டுக்கவே இல்லை நாங்க என்ன
பண்ணுவோம் என்று கேட்கிரார்கள்.//
ஹ...ஹா...ஹா....
நல்லா ரசிச்சேன் இந்த வரியை
லஸ்ஸி பண்ற மெசினா? ரொம்ப சூப்பர்.
//ண்டுபக்கமும் மரமா
இருந்துதா மூணுசேரும் மரக்கிளைல மாட்டின்னு .அதுக்குதான் பெரிசா தாளம்லாம் போட்டு
அப்பா, அம்மானு கத்தி, கத்தி கூப்பிட்டோம். ///
ஹிஹிஹி
வழக்கம்போல் உங்கள் நகைச்சுவை கலந்த எழுத்தில் அருமைமா
இல்லைங்க, பித்தளை ப்ளேட் தான் உள்புறம் பூராவும் ஈயம் பூசி இருப்பாங்க. பித்தளை டம்ளர்கள் உள்ளேயும் ஈயம் பூசி தான் உபயோகப்படுத்தராங்க. அதனால உடல் நலத்துக்கு கேடு ஏதும் இல்லை மாணிக்கம்.
பாராட்டுக்கு நன்றி மாணிக்கம்.இப்படி வேறு, வேறு ஊர்கள் புதிய, புதிய அனுபவங்கள். அதையெல்லாம் உங்க கூட பகிர்ந்து கொள்ளும் சந்தோஷம் எல்லாமே ப்ளாக் எழ்த தொடங்கியதுமுதல் தான் சாத்தியமாச்சு.
ஆனந்தி இது எல்லாருமே அடிக்கும் டயலாக்குதா. ஆனா நல்லவங்கதான்
நிஜத்தில் நிறையாவே கஷ்டங்களை உபவிக்கிராங்க.
பாரத்...பாரதி, வருகைக்கு, ஓட்டுக்கு, வாழ்த்துக்கு நன்றிகள்.
வானதி வருகைக்கு நன்றிம்மா.
இப்படித்தான் ஆமி என் லைஃப்ல எக்கச்சக்க காமெடிகள், சந்தோஷங்கள்
வருத்தங்கள் சோகங்கள் எல்லாமே கலந்துகட்டி இருக்கு. உங்க எல்லார்கூடவும் ஷேர் பண்ணும்போது எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுது,
தேங்க்யூ, கார்த்தி.
நல்ல பகிர்வும்மா! வாஷிங் மெஷினை லஸ்ஸி தயார் செய்யற மெஷின்னு வித்துருக்கானே அவன சொல்லணும்!! மூன்று பகுதி போனதே தெரியவில்லை. நன்றிம்மா…
நிறைய சொல்லுங்கள் அம்மா. நாங்களும் நிறைய சிரிக்கிறோம்.
வெங்கட் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
பிரபு வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப்போகும் இல்லியா?
வித்தியாசமா இருக்கு படிக்கும் போது. ரெண்டு ரெண்டு லைனா எழுதியிருக்கீங்க.....
yeskha- படிக்க கஷ்டமா இருந்திச்சா?
உங்கள் எழுத்தை ரொம்பவே ரசித்தேன்.
வாஷிங் மெஷின்ல லெஸ்சி. மரக்கிளையில் மாட்டின சேர்.
Interestingஆ இருக்கு உங்க கதை(?) சொல்லும் பாணி. பகிர்வுக்கு நன்றி மேடம்.
உங்கள் தளத்திற்கு முதல் தடவையாக வருகின்றேன். உங்கள் பயண அனுபவம்(MP to MS) நன்றாக இருந்தது. வெயில் சூடு என்றால் எனக்கு பிடிக்காது இருந்தாலும் உங்கள் பயணத்தில் நானும் கலந்து கொண்டேன்.இங்கே ஸ்கூல் பஸ்ஸாடப்பில் பனிக்காலத்தில் டீ சர்ட் மட்டும் அணிந்து நீற்கும் தமிழன் நான் மட்டும்தான்
மால்குடி வருகைக்கு மிகவும் நன்றி.அடிக்கடி வாங்க உங்க கருத்துக்களை சொல்லுங்க.
சிவகுமாரன் உங்க எல்லாரோட பாராட்டும்தான் என்னை மேலும்,மேலும்
நன்றாக எழுத உற்சாகப்படுத்தும் டானிக். அடிக்கடிவாங்க.
அவர்கள் உண்மைகள் உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி.அடிக்கடி வந்து கருத்துக்களைப்பகிர்ந்து கொள்ளவும்.
வாஷிங் மெஷின் லஸ்ஸி
hahahahahahahahahha
சிரிப்பு தாங்கமுடியல
farhan- ஆமாங்க இப்பகூட வாஷிங்க் மிஷின்ல துணிபோடும்போது லஸ்ஸிதான் நினைவுக்கு வருது.ஹா, ஹா,
யாதவன் வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமாம்.
வாஷிங் மெசின்ல லஸி செய்கிறார்களா? அடக் கடவுளே... இனி எப்ப லஸியைப் பார்த்தாலும் வாஷிங் மெஷின் தான் நினைவுக்கு வந்து... சோப் வாசமாகத்தான் தெரியும்....:).
உங்க தொடரும் முடிவும் சூப்பர்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா.
வாஷிங் மிஷின்ல லஸ்ஸின்னா, ஃபிரிட்ஜ்ல என்ன வரும்னு யோசனையா இருக்கு. சிக்கீரம் சொல்லுங்க. ;-)))))
எப்படி இத்தனை நாள் தவற விட்டேனோ லக்ஷ்மீம்மா ஒங்க எழுத்தை?
இப்ப வந்துட்டேன்.
அருமையான நடையும் மொழியும்.
எல்லாத்தையும் படிச்சுட்டு சீக்கிரம் என்னோட கமென்ட்டையும் எழுதறேன்.
என்னோட ப்ளாக்குக்கும் அவசியம் வாங்க.
சுந்தர்ஜி வாங்க இனிமேல அடிக்கடி வருவீங்கதானே. நன்றி.
ஹுஸைனம்மா, வருகைக்கும், கருத்துக்கும் நன்றிம்மா.
நகைச்சுவையான பகிர்வும்மா..நல்லா எழுதியிருக்கீங்க.நானும் அமிர்தசரஸ் போயிருந்தப்போ இந்த லஸ்ஸி செய்யும் மிஷினை {வாஷிங் மிஷினை) பார்த்தேன்மா.அங்கதான் முதன் முதல பார்த்தேன்.எப்படிலாம் ஐடியா தோணுதோ?
ஜி,ஜி, வருகைக்கு நன்றிம்மா.
அருமையான நினைவுகள். பகிர்ந்தமைக்கு நன்றிகளம்மா.
அன்புடன்
-ஞாஞளஙலாழன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஞாஞளஙலாழன். (என்னபேருங்க)?
இயல்பான நடை ஏற்ற சொற்கள்
படிப்பது இதமாக இருந்தது.
வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி ரமணி சார்.அடிக்கடி வாங்க.
Post a Comment