வெளில தள்ளித்தெரிந்த சிகப்பு புள்ளி நாங்க இருக்கும் இடம் தேடி வருவதுபோல
ரொம்பவே ந்ருங்கி வந்தது. உமாவும் நானும் வெளியில்பாக்காம ஒருவரை ஒருவர்
பாத்துண்டு சுவற்றைப்பார்த்தபடி உக்காந்துண்டு என்னமோ பேசிண்டொம். கொஞ்ச
நேரத்ல ம்க்ம் என்று எங்க பின்னடிலேந்து ஒருகனைப்புசத்தம்.திடுகிட்டு திரும்பி
பாத்தோம். வைத்தியர் வாயiில் பீடியுடன் நின்று கொண்டிருந்தார். பக்கத்ல உள்ள
வங்க காலி பண்ணிட்டு போயாச்சே, நீங்க இருவரும் தனியா இருப்பீங்களே,லைட்டு
வேர போச்சேன்னு உங்களுக்கு கொஞ்ச நேரம் துணையா இருக்கலாம்னு வhந்தேன்னு
சிரிச்சுகிட்டே சொல்ரார்.எங்களுக்கு பயம் போயி சிரிப்புதான் வhந்தது.இப்படியா சத்தம்
போடாம வருவீங்க நாங்க ஒரு நிமிஷம் ஆடிப்போனோம் தெரியுமோன்னு உமா அவரிடம்
சத்தம் போட ஆரம்பிச்சுட்டா.அவர் இன்னும் பெரிசா சிரிச்சு ஏன்ன் என்னை கொள்ளிவாய்ப்
பிச்சாசுன்னு நினைச்சீங்களான்னு கேட்டு இன்னமும்பெரிசா சிரிக்கரார்.
ஆனாலும் மாமியாருக்கும், மறு மகளுக்கும் தைரியம் ஜாஜ்திதான்னு வேர சொல்ரார்.
கரண்ட் வந்ததும் அவர் கிளம்பி போனார். நாங்க சாப்பிட்டு 10 மணிக்கு உள்ள போனோம்.
இரவும்,அடுத்தைரண்டு நாட்களும்கூட இப்படியேதான் போச்சு.வழக்கமான எண்ணைக்குளியல்
சூப்பரா வாக்கிங்க் உக்காந்த இடத்தில் சூடு, சூடா நல்ல ருசியான சாப்பாடுன்னு போயிண்டு
இருக்கு. நல்ல ஒரு அனுபவம் கிடைச்சுண்டு இருக்கு. நல்லா ரசிச்சுண்டு இருக்கேன்.
அடுத்த நாள் டிஸ் சார்ஜ் ஆகணும். அப்பாடான்னு இருந்தது. நானும் தேங்கா நாரை
ஸாஃப்ட் பண்ணிண்டேன். என்னால் வெட்டவெளிலல்லாம் குளிக்க முடியாது. டாய்லெட்
ரூம்லகுளிக்கரேன்னு உமா விடம் சொன்னேன். இருங்கோ அங்க ஒரு ரூம்ல விறகு அடுப்பு
அலுமினியகுண்டான் எல்லாம் இருக்கு வென்னீர் போட்டுத்தரேன்னா.
குண்டான்லதண்ணி பிடிச்சு விறகடுப்பை ஏத்த தெரியாம கண்ணும் மூக்கும் சிவக்க அடுப்பு
ஊதி,ஊதி ஒருவழியா அடுப்பை பத்தவச்சுட்டா. குண்டானை அடுப்பில் ஏத்தினா அடுப்பு அணைஞ்சு
அணைஞ்சு போயிண்டே இருந்தது. முதல்ல காரணமே தெரியலை. அப்பரம் பாத்தா குண்டான் ஓட்டை
அதிலேந்து தண்ணி லீக் அடிச்சு அடுப்பில் விழுந்து அடுப்பை அணைக்குது. கொஞ்சம் புளி எடுத்து
பானையின் ஓட்டை அடைத்து வென்னீர்போட்டுட்டா.ரெண்டு ப்ளாஸ்டிக் பக்கெட்களில் கலந்து
தெங்கா நாரால் தேய்த்து குளியல். குடிக்க, குளிக்க வென்னீர்தான் என்று சொல்லிட்டார்.
அப்பாடா கொஞ்சமே கொஞம் ஃப்ரெஷ் ஆனேன். புடவை போட்டுண்டு வைத்யரிடம் போயி
பண விஷயம் செட்டில் பண்ணினோம். ரூமிற்கு ஒரு நாள் வாடகை 50 ரூபாதான்.
வீட்டுக்குப்போனாலும் தொடர்ந்து3 மாசம் குறைந்தது ரெண்டு நேரமும் உடம்பு பூரா வும்
எண்ணை தேய்ச்சுக்கணம். பத்தியம்னு ஏதும் கிடையாது. உங்க வயசு+ ப்றாப்ளம் ரொம்ப
வருஷமா இருக்கு.அதனால குணம் தெரிய டைம் எடுக்கும். கொஞ்சம் பொறுமையா இருங்க
என்றார்.3 மாசத்துக்குண்டான 3 பாட்டில் எண்ணையும் தந்தார். காலி ஆயிடுத்துன்னா தெரிய
படுத்துங்க கூரியரில் அனுப்பி வைக்கிரேன் என்றார்.எண்ணைக்கு விலை அதிகம் தான்.
ஆனா கொடுக்கலாம்.எண்ணை தயார் செய்வதில் எத்தனை பேரின் உழைப்புகலந்திருக்கு.
வலி என்று வருகிரவர்களின் வலிகுறைக்கத்தானே இவர்கள் இவ்வளவு பாடு படுகிரார்கள்.
மத்யானம் என்மகன் கால்டாக்சி கொண்டு வந்தான்.கிளம்பியாச்சு. மிகவும் சாந்தமான
அமைதியான இடம். நம் வீடு போயாச்சுன்னா,இருக்கவே இருக்கு, மிஷின்லைஃப்.
50, 55 வயதில் வந்திருக்க வேண்டியது. குடும்ப பொறுப்புகளிலிருந்து விடுபட்டு இங்க
வர இப்பதான் முடிந்தது.அது டூ லேட்
இந்தபதிவு படிக்கத்தொடங்கியதிலிருந்தேஎல்லாருமே வலி குறைந்ததான்னுதான் கேட்டார்கள்.
சரியா சொல்லணும்னா 100% ரிலீஃப் கிடைக்கலைதான். ஆனா நல்ல அனுபவங்கள் நிறையவே
கிடைத்து அதை உங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
Tweet | |||||
24 comments:
தேவையான விஷயம்தான் . எங்களுக்கு யாருக்காவது தேவைப்பட்டால் செல்வோம் அல்லவா ? நன்றி
ஆமா, அதனாலதானே இந்தப்பதிவை எழுதினேன். யாருக்காவது உபயோகப்படனும்.
முற்றிலும் குணமடைய வாழ்த்துக்கள்!
இன்றுதான் உங்கள் தளம் வருகிறேன்! நல்லா இருக்கு! :-)
முதல் வருகைக்கு நன்றி ஜீ.
மூட்டு வலியோட முதல் தடவை வருகிறேன்.பேஷ்..பேஷ் ..ரொம்ப நல்லா இருக்கு!
http://keerthananjali.blogspot.com/
குணமடைய வாழ்த்துக்கள்!!
ப்ளாக் ஐ நல்ல கலர் full ah ஆக்கிடீங்க.
பாருங்க அம்மா நீங்க ரெண்டு ப்ளாக் எழுதறது இப்போதான் எனக்கு தெரியுது.
மன்னிக்கவும்.
நல்ல அனுபவம், ஆன்டி.
ஆரண்ய நிவாஸ் வருகைக்கு நன்றி.
பலே பிரபு இப்ப தெரிஞ்சுக்கிட்டீங்க இல்லே, இனி ரெண்டு ப்ளக்கிலும் அடிக்கடி வந்து கருத்து சொல்லுங்க.
வானதி வருகைக்கு நன்றிம்மா.
ஆறு பதிவுகளில் அழகாய் உங்கள் பரணீயம் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நன்றி வெங்கட்.
முதன் முறையாக வந்தேன் உங்கள் வலைக்கு அருமையா இருக்கு
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
வருகைக்கு நன்றி தமிழ் தோட்டம்.
அனுபவம் பேசிய ஆறு பதிவும் அருமை.
அருகில் இருந்து, பேச்சு கொடுத்தது போன்று இருந்தது.
கடந்த சில நாட்களாக தங்களின் வலைப்பூவிற்கு வரமுடிய வில்லை. மன்னிக்க வேண்டுகிறோம்..இப்போது எல்லாவற்றையும் படிச்சாச்சு..
பாரத்..பாரதி இப்பவாவ்து வரமுடிஞ்சுதே. சந்தோஷம்.
பகக்மிருந்து பேசுவதுபோல உங்கள் பதிவு.சந்தோஷமாயிருக்கு அம்மா !
ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மூட்டைப் பிடித்துக்கொண்டு படித்து முடித்தேன். உங்க மருமகளின் அடுப்புப் பற்ற வைக்கிற அநுபவம் தான் கிடைச்சிருக்கு. கரி அடுப்புக் கிடைக்கலை, நாளைக்கு வந்து பார்க்கிறேன். நன்றி. :D
கீதா சாம்பசிவம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அம்மா,
மருத்துவசிகிச்சைக்குசென்றதைக்கூட மிகுந்த ரசனையுடன்அனுபவித்துஎழுத
உங்களால்மட்டுமேமுடியும்.அதைபடித்தவுடன் அந்தஇயற்கைஅழகைரசித்து
அனுபவிக்க உடனேஅங்குசெல்லவேண்டும்போல
உள்ளது.உங்கள் மருமகளைமிகவும் பாராட்டவேண்டும்எங்கோ பிக்நிக்சென்றதைப்போலசென்றிருக்கிறீர்கள்.வலிபூரணமாககுணமாகாவிட்டாலும் நல்லஅனுபவம்கிடைத்துள்ளது.அடுத்த
முறைசென்றால்எங்களுக்கும்தெரிவியுங்கள்.நானும்என்மனைவியும்,முடிந்தால்என்அக்காஅத்திம்பேரும்வருகிறோம்.
ராதா கிருஷ்னன் என் பழைய பதிவெல்லாமும் படிக்கிர்ரீங்களா? சந்தோஷமா இருக்கு .
Post a Comment