இரவு சரியாதூக்கமில்லை. எழுந்தக்கும்போதே டல்லா இருந்தது.
உமா 7மணிக்கு எழுந்து ப்ரெஷ் பண்ணிட்டு பால்வாங்கபோனா.
பாத்ரூம்னு தனியா எதுவும் கிடையாது.வைத்தியத்துக்கு வரும்
பெஷண்ட்கள் குளிக்கக்கூடாதுன்னுதான், பாத்ரூமே கட்டலை
போல இருக்கு கூட துணைக்கு இருப்பவர்கள் என்ன செய்வான்னு
ஒருயோசனையே. கிடையாது.அhந்த சின்ன ரூம்க்குள்ளயே ஒரு
குட்டி வெஸ்டன் டாய்லட்(அப்பாடா)!!!!!!! மட்டும் இருந்தது.அங்க
தான் உமா குளிக்க வேண்டி வந்தது. கொறத்தி பிள்ளைபெத்தா
குறவன் பத்தியம் சாப்பிடுவனாம்.அதுபோல எனக்கு வைத்யம் பாக்க
என்கூட அவளையும் கஷ்டப்படுத்தவேண்டியிருக்கு. என்ன பண்ண?
அவபால்வாங்கிவரும்போதே ந்யூஸ்பேப்பரும் வாங்கி வந்தா. நல்லா
சூடு,சூடா, டேஸ்டா காபி,தொட்டுக்க ந்யூஸ்பெப்பர்.னிதானமா ரசிச்சு
காபி குடிச்சு பேப்பர் படிச்சு வைத்யரிடம் எண்ணைதடவிக்க நாங்க
எல்லாரும் போனோம். வந்து, நல்லா பெரிய வாக் போனேன். என்ன
அற்புதமான அனுபவம்தெரியுமா. தென்னை, மா,பலா மரங்களின் ஊடே
சூரியக்கதிர்கள் வந்து நம் மேல படும்போது ஆஹா, சூப்பரா இருக்கு.
மாமரத்திலிருந்து,குயில்களின்,குக்கூ, கிளிகளின் கீ,கீ,மைனாவின் ,குருவி
யின் இனிமையான சங்கீதம்.அருமையான காலைப்பொழுது.எனக்குன்னு
வேலை எதுவும்கிடையாது, மன்சை அமைதியா வச்சுண்டு இதுபோல ஒரு
வாக்கிங்க் இங்கதான் சாத்தியம்.வாழை மரங்கள்பக்கம் மட்டும் போகலை.
Tweet | |||||