Pages

Back to Top

எதிர் காலம் (7)



நாமக்கல்லில் இப்படி 5 வருடங்கள்.பிறகு ஈரோடு டிரான்ஸ்பர் வந்தது.
அதேபோல வீடுதேடும் படலம் குழந்தைக்கு ஸ்பெஷல் ஸ்கூல் தே
டும் படலம். பாங்கிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் வாடகைக்
கு வீடு எடுத்து, செட்டிலான பிறகு குழந்தைக்கு ஸ்பெஷல் ஸ்கூல்
எங்க இருக்குன்னு தேடல். நாங்க இருக்கும் இடத்திலிருந்து 15 கிலோ
மீட்டர் தொலைவில் திண்டல்னு ஒரு இடத்தில் ஒருஸ்கூல் இருந்தது.
சக்திமசாலா தயார் செய்பவர்கள்தான் அந்தஸ்கூலை நடத்தி வந்தார்
கள். அங்கபோய்க்கேட்டோம். இங்க அட்மிஷனுக்கு காசெல்லாம் வாங்கரது
இல்லை இதை ஒரு தொண்டாகவே நடத்தரோம். ஒரே கண்டிஷன் என்னன்னா
குழந்தையின் அம்மாவும் அவன் கூட 10- டு 4 இங்கியே தங்கனும் என்றார்கள்.
குழந்தையின் அம்மாவுக்கோ உடல் நிலை அதற்கு இடம் கொடுக்கலை.


அதனால்அங்க சேர்க்கமுடியலை. வேர ஒரு இடம் தேடி 10 கிலோமீட்டர்தள்ளி ஒரு சின்னரூமில் ஒருஸ்கூல் நடப்பது தெரியவந்தது. அங்க கொண்டு சேர்த்தோம்எங்கமகன் காலை 5 மணிக்கே எழுந்து வீட்டில் எல்லா வேலைகளும் செய்தமுடித்து 9.30-க்கு குழந்தையை அந்தஸ்கூலில் விட்டு விட்டு பேங்க் போவான்மதியம் 4 மணிக்கு பேங்கில் டீ டைம். அப்போ குழந்தையை கூட்டி வர்வன்டீ குடிச்சு திரும்ப பேங்க் போய்ட்டு 7 மணி வீடு குழந்தையிடம் ஸ்கூலிலஎன்ன சொல்லி தந்தார்கள் என்று கேட்டு அவனுக்கு கொஞ்சம் ட்ரெய்னிங்கஅவனையும் கிச்சனில் வைத்துக்கொண்டே இரவு சமையல் என்றுபண்ணுவான்.டி,வி யில் குழந்தை ரொம்ப ஆர்வமா இருந்தான் பாட்டு டான்ஸில் ரொம்பஆர்வம் இருந்தது. விஜய் பட்டும் டான்சும் ரொம்ப ஆரவமா ரசிப்பான். ஆடவுமஆடுவான். படிப்பு என்பது பெரிய கேள்விக்குறிதான்.



இப்ப அந்தக்குழந்தைக்கு 17 வயசாரது. பேச்சு வீட்டில் உள்ளவர்
களுக்குமட்டுமே புரிஞ்சுக்கமுடியும். நான் எப்பவாவது அவர்கள்
வீடு போகும்போது என்கூட கேரம், தாயக்கட்டம் பிசினஸ் என்று
பூரா நாளும் விளையாடுவான். ஓ,கே என்னும் விதத்தில்
இருக்கான். இதற்குமேல அந்தக்குழந்தையிடம் எதையும் எதிர்
பார்க்கமுடியாது. ப்யூச்சர் பெரிய கொஸ்டின் மார்க்தான்.
இதுதான் என் பெரியமகனின் வாழ்க்கை .

15 comments:

எல் கே said...

ஆண்டவனிடம் கோபம் வருவது இத்தகைய தருணங்களில் தான். :(

பனித்துளி சங்கர் said...

எண்ணத்தில் நினைப்பதை பேசுவது போலவே எழுத்து முடியும் என்ற ஒன்று எளிதாக எல்லோருக்கும் வருவதில்லை . ஆனால் உங்களின் இந்தப் பதிவில் அதை உணர்கிறேன் சாதாரண பேச்சு வழக்கில் எந்த போலித் தன்மையும் இல்லாத நேர்த்தியான எழுத்து நடை .ஆனால் இதில் நீங்கள் சொல்லி இருப்பதை என்னால் உள்வாங்க இயலவில்லை . சில நேரம் புனைவாகிபோனால் நலமே என்று எண்ணுகிறது உள்ளம் .பகிர்ந்தமைக்கு நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

கேட்க மிகவும் சங்கடமாகத்தான் உள்ளது. எனக்குத் தெரிந்த ஒரு சில உறவினர் குழந்தைகள் இதைவிட மோசமாக நிலையில் இருந்து பார்த்துள்ளேன். பெற்றோர்களுக்கு மஹா பொறுமை வேண்டும். ”எப்படி இருக்கு இப்போ” என்று ஓயாமல் விசாரிப்பவர்களுக்கு பதில் சொல்லியே மாளாது. கடவுள் தான் க்ருபை செய்ய வேண்டும். மனோ பலத்தையும், நம்பிக்கையையும் இழக்காமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.

குறையொன்றுமில்லை. said...

கார்த்தி நம்ம கர்மாவை நாமதான் அனுபவிக்கணும். ஆண்டவன்மேல கோவம்வந்து என்ன ஆகப்போகுது?

குறையொன்றுமில்லை. said...

பனித்துளிசங்கர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

கோபால்சார், நீங்க சொன்னதுபோல பெற்றவர்களுக்கு மிகவும் பொறுமை
வெண்டும்தான். விசாரிக்கரவங்களுக்கு பதில் சொல்லத்தான் பொறுமை போயிடும்.

இராஜராஜேஸ்வரி said...

கடவுள் தான் க்ருபை செய்ய வேண்டும். மனோ பலத்தையும், நம்பிக்கையையும் இழக்காமல் இருக்க we pray god.

கவி அழகன் said...

என்னத்தை சொல்ல எல்லாம் விதி

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

யாதவன், ஆமாங்க எல்லாமே விதியின் விளையாட்டுத்தான்

குறையொன்றுமில்லை. said...

குடந்தை அன்புமணி, வருகைக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

எவ்வளவு சங்கடங்கள்
எவ்வளவு பிரயத்தனங்கள்
எத்தனை பொறுமை ,நிதானம்,
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
உண்மையில்
படிக்க படிக்க என்னால்
கண்ணீரை அடக்க முடியவில்லை
அந்த தெய்வக் குழந்தையை
படைப்பதை தவிர்க்க இயலாத இறைவன்
நல்ல இடத்தில் ஒப்படைத்ததற்காக
நன்றி கூறத்தான் வேண்டும்
வேறு என்ன சொல்ல...

குறையொன்றுமில்லை. said...

ஆமா, ரமணி சார் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. அந்தக்குழந்தையை நல்லஇடத்தில்தான் ஒப்படைத்திருக்கிரார், ஆண்டவன்

radhakrishnan said...

லட்சமிஅம்மா,
இன்று ஏதோ தற்செயலாக உங்கள்பதிவுகளைப்படிக்கப்போக, இந்த
பதிவுத்தொடரைப் படித்தேன்.என்னசொல்வது.மனம் மிகவும்
கனக்கின்றது.ஒருவருக்கு இவ்வளவு
துன்பம் வரலாமா?பிராரப்தம்என்றால் அதற்கோர் அளவு கிடையாதா.இவ்வளவு
துயரத்தை வைத்துக்கொண்டு எப்படிம்மா
அழகாகப் பதிவிடுகிறீர்கள்
..உங்கள்கோர்வையானபதிவு இதுபோல்
பாதிக்கப்பட்டபலருக்கும் கண்டிப்பாக தைரியத்தைக் கொடுக்கும்.உங்கள்மகனுக்காகவும் பேரனுக்காகவும் பிரார்தனை செய்கிறோம்.

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்னன் உங்க வருகையும் கருத்தும் எனக்கு ரொம்ப உற்சாகமா இருக்கு. இந்தப்பதிவு போட்டு இவ்வளவு மாசம் ஆகியும் உங்க பார்வைக்கு கிடைச்சிருக்கே. நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...