Pages

Back to Top

போராட்டம்(2)

பிறகு இவருக்கு மாத்தல் உத்திரவு வந்தது. குழந்தைகளி  படிப்பு காரணத்தினாலஒ
இவர் முதலில் கிளம்பி போனார். ஒருவருஷம் கழிச்சு  நாங்க போனோம்.
 பூனாவில் க்ளைமேட் எப்பவுமே கூலாகவே இருக்கும். ஜபல்பூரில்  எல்லா
க்ளை  மேட்டுமே எக்ஸ்ட்ரீம். நாங்கபோனது நல்ல வெய்யில் காலம். வெய்யில்
 நாஅப்படி ஒரு வெய்யில். உடம்பெல்லாம் கொதிக்கும்.வீட்லயும் தரை  யெல்லாம் கொதிக்கும்  . சாயங்காலம் மொட்டை மாடியில்  த்ண்ணீர் ரொப்பி
வைத்து இரவு  அலம்பி விட்டு அங்கதான் படுக்க முடியும்.வாரம் ஒரு முறை
தான் மார்க்கெட்டில் எல்லாம் கிடைக்கும்.எங்களுக்கெல்லாம் வெய்யில்
 ஒத்துப்போகாம சன் ஸ்ட்ரோக்கே வந்தது.  ஐயோ இங்உள்ளவங்கல்லாம்
 எப்படிதான் இருக்காளோன்னுதான் நினைக்கத் தோனிச்சு.  அப்படி  ஒரு
வெயில் இதுலயும் ஒரு   நல்லது, நடந்தது. பையனின் தோல் பிரச்சனை
  காணாமலே போச்சு.பூனாவில் எவ்வளவு வைத்தியம் பாத்தும் கொஞ்சம் கூட சரி ஆகா வியாதி
இங்க  வந்த ஒரே மாதத்தில்  மறைந்து விட்டது.  எங்களுக்கே ஆச்சர்யம்
  தான்.   இதுஎப்படி   சாத்தியம்? புரியவே இல்லை.ஆபீஸ  காரங்க்ளே  ஸ்கூல்
நடத்தி வந்தார்கள்.அங்கயே எல்லாருக்கும் அட்மிஷ்ன் கிடைத்தது. ரெண்டாவது மகனையும் கி்ராமததிலிருந்து கூட்டிண்டு    வந்தொம்.
அவன் பூராவும் தமிழ் மீடிய்ம் படிப்பில் படித்தான்.ஹிந்தி, இங்கிலீஷ், ஒரு
வார்த்தை கூட   தெரியலை.கமேரியா மத்யபிரதேஷ்.  ப்யூர் ஹிந்தி.
  மராட்டி, கிடையாது.லாங்க்வேஜ்  ப்ராப்லம்னால அவனையும் 6-வதில்
 தான் சேர்த்துக்கொண்டார்கள்.ஆக்சுவலி அவன் 7-வது பாஸ் பண்ணி  இருந்தான்.

இப்போ  தம்பி  கூட 6- வ்தில் படிக்கவேண்டிய நிர்ப்பந்தம். வேர வழி இல்லே.
 வழக்கம்போல நல்லா படிச்சாங்க  எல்லாருமே.வெயில் 4-  மாசம் ஆகி
குளிர் ஆரம்பிச்சதும் சின்னவனுக்கு பழ்யபடி உடமு  பூரா தோல் செதில்
  செதிலா உரிய ஆரம்பிச்சது. ஓ,  இவன் உடம்புக்கு  கு ளிர் ஒத்துக்க மாட்ரது
என்று தெரிஞ்சுண்டோம். பழையபடி ஃபுல் பேண்ட் ஃபுல்  ஷர்ட், தொப்பி
  எல்லாம் போட்டு ஸ்கூல்  போனான்.    குளிர்னா அப்படி ஒரு  குளிர் கை  கால்
பல் எல்லாமே வெட , வெடன்னு நடுங்கும்.  வாயத்திறந்தா புகையா வரும்.
 மூச்சு விடுமபோதே  மூக்லேந்தும் புகை வரும்.  4 மாசம்  ரொம்ப  கஷ்ட்டம்.

15 comments:

எல் கே said...

ஜபல்பூர் இரண்டு காலங்களிலும் இரண்டு கோடியில் இருக்கும்.. தொடருங்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்கள் வாழ்க்கைப் போராட்டம் மிகவும் நன்றாகவே எழுதப்பட்டுள்ளது. பல ஊர்கள்/விஷயங்கள்/சீதோஷ்ண நிலை/பருவ மாற்றங்கள்/விளைவுகள், பிரச்சனைகளை எதிர்கொண்டவிதம் அனைத்தும் அறிய முடிகிறது. பாராட்டுக்கள்.

Chitra said...

http://www.uihealthcare.com/topics/skinhealth/winterskin.html

Poor guy.... mmmm.....

Lakshmi said...

ஆமா கார்த்தி, ஒவ்வொரு மானிலத்திலும் பருவ நிலைகள் எப்படி
வித்யாசப்படுகிரது இல்லியா?

Lakshmi said...

கோபால் சார், வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி.

Lakshmi said...

சித்ரா தேங்க்ஸ்.

அப்பாவி தங்கமணி said...

எல்லா ஊரிலும் காலநிலைகள் வித்தியாசம் தான் போல...

வெங்கட் நாகராஜ் said...

வெயிலும் பனியும் இரண்டு கோடிகள்…. வட இந்தியாவில் பல இடங்களில் இப்படித்தான்… தொடர்ந்து பகிருங்கள் உங்கள் அனுபவங்களை.

Lakshmi said...

ஆமாங்க அப்பாவி அப்படித்தான் இ
ருக்கு.

Lakshmi said...

வெங்கட், வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி

ellen said...

புதியதாக நாம் செல்லும் இடங்களின் பருவநிலை மாறுதல்கள் நமக்கு பழகுகிறவரை கஷ்டம்தான். இவை கால ஓட்டத்தில் நமது மனோதைரியத்தை நிச்சயமாக மேம்படுத்தும்.

Lakshmi said...

ellen, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

ப்ருவநிலை மாற்றம் கடினமாக எதிர்கொண்டிருக்கிறீர்கள்.

Lakshmi said...

இராஜராஜேச்வரி நன்றி.

Anonymous said...

https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US&pli=1

today, i have made some important modifications in adding a label feed in google reader ....see it....d...

Related Posts Plugin for WordPress, Blogger...