Pages

Back to Top

போராட்டம்

ஜபல்பூரில் 5வருஷம் இருந்துட்டு சந்த்ரபூர் வந்து 10 வருடம் இருந்தோம்.
 ரெண்டாவதுமூனாவது பையன் இருவரும் பத்தாவது முடிந்ததும் பாம்பே
 போயி பாண்டுப் என்னுமிடத்தில் ஒரு ஒரு சாலில் ஒரு ரூம் வாடைகைக்கு
 எடுத்துண்டு ப்ரைவேட்கம்பனியில் வேலை தேடிண்டா. நெருங்கிய சொந்தக்
காரா வேலை கிடைக்க ஹெல்ப் பண்ணினா. 10டு5 ஆபீசில் வேலை. 6டு 9
நைட் காலேஜில் மேற்படிப்பு. காலை 5மணிக்கு எழுந்து சப்பாத்தி பாஜி பண்ணி
 பால்கவரில் சுருட்டி எடுத்துண்டு பேண்ட் பாக்கெட்டில் வச்சுண்டு போவா,10
மணி ஆபீசுக்கு 8 மணிக்குள்ள கிளம்பனும்.இரவு வரும்போது 11,, 12 ஆயிடும்.
 வந்து இரவு சாப்பாடு பண்ணி சாப்பிடனும். மழை நாள்னா இரவு ரொம்பவே
 நேரம் ஆகும். அண்ணன் தம்பியிடம், வீட்டுக்குப்போயி சமைக்க நேரமில்லே
 ஆலுக்கு ஒரு க்ளாஸ் பால் மட்டும் குடிச்சுட்டு போலாம் என்பான். தம்பியோ
 போடா பால் குடிச்சா ல்லாம் பசி அடங்காது. ரெண்டுக்ளாஸ் பால் 10 ரூவா
 ஆகும் அதுக்கு ஒருடசன் பழம் வாங்கி ஆளுக்கு 6, 6 சாப்பிடலாம் என்பான்.

 எந்த பொழுதுபோக்குகளிலும் மனசை திருப்பாமல் , ஒரு கெட்ட பழக்கங்களுக்கும் அடிமை ஆகாமல் முன்னுக்கு வரணும் என்ற வெறியோட
கடுமையான உழைப்புஎன்றே 10 வருடங்கள் ஓட்டினார்கள். அந்தவயசுக்கு
இவ்வளவு கட்டுப்பாடு. பாராட்டவேண்டிய விஷயம். அப்படி கஷ்ட்டப்பட்டதுக்கு இன்று இருவருமே நன்றாக இருக்கா. அவர்கள் நாலு
 பேருக்கு வேலை கொடுக்கும் நிலமைக்கு உசந்திருக்கா. கல்யாணம்
குழந்தை குட்டின்னு எல்லாரும் நல்லா செட்டிலாயிட்டா.

20 comments:

யாதவன் said...

வாசிக்க வாசிக்க அருமையாய் உள்ளது

வை.கோபாலகிருஷ்ணன் said...

இளமையில் கஷ்டப்பட்டவர்கள் என்றும் வீண் போவதில்லை.

அவர்களுக்கு அந்த கஷ்டங்களே பணத்தின், நேரத்தின், உழைப்பின் அருமையைப் பாடமாக போதித்துவிடுகிறது.

பிறகு அவர்கள் பாதை நல்லவிதமாகவே அமைந்து பிற்காலத்தில் நல்ல நிலைமையில் சந்தோஷமாக இருப்பார்கள்.

கடைசிவரை பட்டகஷ்டங்களையும் மறக்காமல், கெட்ட வழக்கங்களுக்கும் ஆளாகாமல், தான் பட்ட கஷ்டங்கள் தன்னைச்சார்ந்தவர்கள் படக்கூடாது என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

தங்கள் வாரிசுகள் இன்று நல்ல நிலைமையில் இருப்பது கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

அன்புடன் vgk

Chitra said...

அப்படி கஷ்ட்டப்பட்டதுக்கு இன்று இருவருமே நன்றாக இருக்கா. அவர்கள் நாலு
பேருக்கு வேலை கொடுக்கும் நிலமைக்கு உசந்திருக்கா. கல்யாணம்
குழந்தை குட்டின்னு எல்லாரும் நல்லா செட்டிலாயிட்டா.


.... கடவுளுக்கு நன்றி. நம்பிக்கையூட்டும் பதிவுங்க.

ஹேமா said...

உங்கள் கஸ்டங்களுக்கும் ஓய்வு கொடுத்து சந்தோஷமாயிருப்பீர்கள் நீங்களும்.சந்தோஷம் அம்மா !

எல் கே said...

உண்மையில் இன்று பலருக்கும் உங்கள் மகன்களின் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும்

Lakshmi said...

யாதவன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

கோபால் சார், உண்மைலெ நான் இவங்களைப்பற்றி எழுத ஆரம்பிச்சதே மத்தவங்களுக்கு ஒரு உதாரணமா இருக்கனுனுதான்

Lakshmi said...

சித்ரா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஆமா கார்த்தி, அதனாலதான் எழுதவே ஆரம்பிச்சேன்.

இராஜராஜேஸ்வரி said...

தங்கள் வாரிசுகள் இன்று நல்ல நிலைமையில் இருப்பது கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
வாழ்த்துக்கள்.

Lakshmi said...

இராஜராஜேச்வரி வருகைக்கு நன்ரி.

ஷர்புதீன் said...

:)

Lakshmi said...

ஷர்புதின் நன்றி.

மாதேவி said...

படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

Lakshmi said...

மாதேவி நன்றி

radhakrishnan said...

அம்மா,
வடக்கேசென்றநம்மவர்கள்சொந்தமுயற்சியில்மேலேபடித்துமுன்னேறியிருக்கிறார்கள்.டில்லி பாரதிமணியைப்பற்றிதெரிந்திருக்குமென்று
நினைக்கிறேன்.அங்குள்ளோரேபொறாமைப்படும்அளவுக்குமுன்னேறியுள்ளனர்.
எல்லாவற்றிற்கும்தளராமுயற்சியும்
உழைப்புமேகாரணம்.எல்லாம்
உங்கள் வளர்ப்புமுறைதான்அம்மா.கடவுள்அனுக்ரகமும்ஒழுக்கமும்கூடுதல்காரணங்கள்
ஆனால்சோதனைகளும்ஏராளம்.

Lakshmi said...

ராதாகிருஷ்னன் பாரதி மணி பற்றி தெரியாதுங்க சொல்ரீங்களா தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்.

radhakrishnan said...

http://balhanuman.wordpress.com/
இந்த லிங்கில் பாரதிமணி 'தில்லியில்
பெரிய வீடு' என்ற பதிவு இட்டுள்ளார்.
அதைப்படித்தாலே அவர் பற்றி அறியலாம்.மேலும் விவரம் வேண்டுமானால் பிறகு தருகிறேன்.
நன்றி அம்மா.

பாரதி மணி said...

அன்புள்ள அம்மா:

என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்திய ராதாகிருஷ்ணனுக்கும் என்னைத்தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கும் உங்களுக்கும் பலகோடி நன்றி!

சொல்லிக்கொள்ள பெரிதாக எதுவுமில்லை. எல்லா பெருமைகளும் என்னை ஐம்பது வருடங்கள், வளர்த்து ஆளாக்கி, என் தகுதிக்கு மீறியே எல்லா செல்வங்களையும் அளித்த தில்லிக்குத்தான்!

என்னுடைய கட்டுரைகள் கீழ்க்கண்ட லிங்கில் படிக்கக்கிடைக்கும்:

goo.gl/mY0jJ

நான் இப்போது தில்லியில் இருக்கிறேன்.

எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்!

பாரதி மணி

Lakshmi said...

பாரதி மணி வருகைக்கும் கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி. தங்களைத்தெரிந்து கொண்டதில் ரொம்ப சந்தோஷம்உங்க கட்டுரைலிங்க் தந்ததர்கும் நன்றி. நான் மும்பையில் இருக்கேன் அடிக்கடி என்பக்கமும் வாங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...