Pages

Back to Top

போராட்டம்(1)போன பதிவில் என் முதல் மகனின் வாழ்க்கை அனுபவங்களைபகிர்ந்து கொண்டேன். இப்போ 2,3- வது மகன்களின் அனுபவம்.ரெண்டாவது மகன் என் அம்மாவிடம் 5 வருடங்கள் வளர்ந்தான்.தமிழ் மீடியம் படிப்பு.3-வது மகன் 4 வயது வரையில் நல்லா வேஇருந்தான். பிறகு கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம் ஆரம்பமாச்சு.

முதலில் கை முட்டி, கால் முட்டிகளில் வெள்ளை வெள்ளையாக தோல் உரிந்து வந்தது. நாளா வட்டத்தில் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரையிலும் தோல் உரிய ஆரம்பித்தது.தலையில் பொடுகு வந்தா தலை பூராவும் வெள்ளைக்கலரில்பவுடர் போலத்தெரியும் இல்லியா அப்படி உடம்பு பூராவும் பொடுகபோல தோல் உரிந்தது
ஸ்கின்ஸ்பெஷலிஸ்ட்டிடம் கொண்டு காட்டினோம். அவரோஇதுபோல பாத்ததே இல்லியே புதுசா இருக்கேன்னு பல பரிசோதனைகள் செய்தும் என்னப்ராப்ளம் என்றே கண்டு பிடிக்கமுடியலை.ப்ளெட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எல்லாமே நார்மல்.ஸ்கின் டெஸ்டிலும் எதுவும் கண்டு பிடிக்க முடியலை.பரிசோசோதனை எலிபோல மருந்துகளை மாத்தி, மாத்தி கொடுத்துப்பார்த்தார்.என்ன ப்ராப்ளம்னு தெரிஞ்சாதானே சரியான மருந்து

கொடுக்கமுடியும். ஸ்பைடர் கூடு போல உடம்பு பூராவும் செதில்செதிலாக தோல் உரிந்து கொண்டே இருந்தது. பார்க்கவே அவ்வளவுஅறுவெருப்பா இருக்கும்.
இவனைப்பார்த்து ஸ்கூலில் சேர்த்துக்க மாட்டேன்னுட்டாங்க. மத்தகுழந்தைகளுக்கும் பரவிடும். அவங்க பேரண்ட்ஸ் அப்செக்‌ஷன் பண்ணுவாங்கன்னு காரணம்லாம் சொன்னாங்க. டாக்டரிடம் போயி ஒரு மெடிகல்சர்ட்டிபிகேட் வாங்கி இந்த ப்ராப்ளம் மத்தகுழந்தைகளுக்கு பரவாதுன்னுடாக்டர் சர்ட்டிபிகேட் பாத்ததும் அரை மனதாக ஸ்கூலில் சேர்த்துண்டார்கள். அதுவும் எப்படி கடைசி பெஞ்சில் தனியா உக்கார வச்சு. அந்த்ப்பையன்மனசு எவ்வளவு சங்கடப்பட்டிருக்கும்?ஒன்னாம் வகுப்பிலேந்தே அவனுக்குஃபுல் பேண்டும், ஃபுல் ஷர்ட்டும் தான் போடவேண்டி வந்தது,உடலைப்பூராவும்மறைக்கும்படி.கருப்பு நூலில் க்ரோஷாவில் ஒரு தொப்பி பன்ணி தலையிலும்மாட்டி விடுவேன்
4வருஷம் டாக்டர் ட்ரீட்மெண்டில் எந்த முன்னேற்றமும் தெரியலை.என்வீட்டுக்காரர் ரொம்ப சாமி பக்தி உள்ளவர்,குழந்தையை திருப்பதி கூட்டிவந்து முடி இறக்கரோம், குருவாயூர் போய் துலாபாரம் செய்யரோம், ஆறுபடைவீடுகளையும் வந்து தரிசிக்கிரோம் உப்பிலியப்பன் கோவில் வந்து உப்பு மிளகுபோடுரோம்ன்னு எல்லா சாமிகளையும் வேண்டிண்டார். வருஷம் ஒருவேண்டுதலா நிறைவேத்தியும் பார்த்தோம்.5 வருடமாக வைத்தியம் ஒருபுறம் கோவில்களுக்கு வேண்டுதல்கள் ஒருபுரம் என்று பணம் தண்ணீராகசெலவழிந்ததுதான் மிச்சம். பையன் உடல் நிலையில் எந்தமுன்னேற்றமும்இல்லை. வீட்டில் அவன் உடல் நிலை பற்றி அவன் ஃபீல் பண்ணக்கூடாதேன்னுஅவன்கூட நிறைய நேரம் இருப்பேன்.
கேரம், செஸ், பல்லாங்குழி என்று மத்தகுழந்தைகளுடன் அவனையும்விளையாட வைப்பேன். வெளியில் விளையாடப்போக மாட்டான் யாரானும்கேலி செய்வாங்கன்னு. அவனுக்குப்பிடித்தமதிரி நிறைய கதைகள் சொல்லிஅவனை உர்சாகப்படுத்திண்டே இருப்பேன்.கிச்சனில் எல்லாகுழந்தைகளுமேஎனக்கு வேலைகளில் ஹெல்ப் பண்ணுவார்கள். இவனும் வந்து நானும் ஹெல்ப்பண்ரேன்பான். சரி உனக்க என்ன பண்ணனுமோ பண்ணும்பேன்.சமையல் சாப்பாடெல்லாம் முடிந்த பிறகு எல்லா பாத்திரங்களையும் நனராக தேய்த்துக்கழுவி துடைத்துத்தருவான்.வீட்டில் நாங்க யாருமே அவனைஒதுக்குவதே இல்லை. அது அவனுக்கு பெரிய சப்போர்ட்டா இருந்தது.
ஒன்றாம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்புவரை க்ளாஸ் ஃப்ர்ஸ்ட் வந்தான்.

12 comments:

Chitra said...

வீட்டில் நாங்க யாருமே அவனைஒதுக்குவதே இல்லை. அது அவனுக்கு பெரிய சப்போர்ட்டா இருந்தது.


ஒன்றாம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்புவரை க்ளாஸ் ஃப்ர்ஸ்ட் வந்தான்.


..... How sweet! நெகிழ வைக்கும் பதிவுங்க.

எல் கே said...

அப்ப்பா , ஒவ்வொரு குழந்தைக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்க. படிக்கறப்பவே கஷ்டமா இருக்கு

யாதவன் said...

செம கலக்கல்
சுப்பர்

Lakshmi said...

சித்ரா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

ஆமா, கார்த்தி, அவ்வளவு கஷ்டங்கள் பட்டுத்தான் வந்திருக்கேன்.

Lakshmi said...

யாதவன் வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை விதமான அனுபவங்கள் அம்மா உங்களுக்கு. படிக்கவே கஷ்டமா இருக்கு.

புதிய வீடு [டெம்ப்ளேட்] நல்லா இருக்கும்மா!

Lakshmi said...

வெங்கட், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஹேமா said...

அம்மா....உங்கள் அனுபவங்களைக் கேட்டாலே நம் வேதனைகள் சின்னதொரு தூசாகிறது.

விடுபட்ட பதிவுகளும் வாசித்தேன் !

Lakshmi said...

ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

புதியதாகத்துவங்கியுள்ள அத்யாயத்திலும் குழந்தைகளுக்கு சிரமம் தானா?

அடடா, என்ன கஷ்டம் பாருங்களேன்!எதிர் நீச்சல் தான் போலிருக்கு.

Lakshmi said...

கோபால் சார் உங்களை எல்லாம் ரொம்பவே இம்சைப்படுதிண்டு இருக்கேனோ.முற்றுப்புள்ளி வச்சுட வேண்டியதுதா,ன்.

Related Posts Plugin for WordPress, Blogger...