Pages

Back to Top

பெட் அனிமல்(4)எண்ட்.



பெட் அனிமல்(4)எண்ட்






ஒரு அவசர வேலை விஷயமா நாங்க இருவரும் கிராமத்துக்குப்போக வேண்டி வந்தது.பெரியபொண்ணு படிப்பு முடிந்து வீட்லதான் இருந்தா. அவளிடம் சமைத்துப்போடச்சொல்லிகுழந்தைகள், வீட்டையும் பாத்துக்கச்சொல்லிட்டு நாங்க ஒருவாரத்துக்கு ஊருக்குப்போயிட்டுவேலைகள் முடிந்து ஒரு நாள் சாயந்தரம் வீடுவந்தோம். அன்றும் ஒரு ஜனவரி26-ம் தேதி.


ப்ளாக்கியோட பர்த்டேன்னு ஸ்வீட்,வீட்டை அலங்கரிக்க கலர்பேப்பர், பலூன் எல்லாம் வாங்கிவந்திருந்தோம். நாங்க உள்ள நுழையும்போதே இவர் ப்ளாக்கின்னு கூப்பிட்டுண்டே வந்தார்.இவர் சத்தம் கெட்டாலே எங்கேருந்தாலும் ஓடிவந்து மேல ஏறி குதித்து விளையாடும்.ப்ளாக்கி
ப்ளாக்கி என்று திரும்ப திரும்ப கூப்பிட்டும் அது வரலை.இவருக்கும் ஒருவாரமா அதைப்பாக்காமஇருந்தது என்னமோ போல இருந்தது. நம்ம மேல கோச்சுண்டுதான் வெளில வரமாட்டேங்குதோனு



உள்ளபோயி பார்த்தா, எல்லாகுழந்தைகளும் பெட் ரூம்ல அழுதுண்டு உக்காந்திருக்கா. ஏய் என்னாச்சு?ப்ளாக்கி எங்கன்னு நாங்க கேக்கவும் பெரிதாக அழுது கொண்டே அப்பா ப்ளாக்கி செத்துபோச்சுப்பான்னு
அடக்க முடியாம எல்லாரும் விசும்பி அழரா. எப்படிடான்னு இவர் கோவமா கேட்டார்.அப்பா இன்னுக்கு 26-ஜனவரி இல்லியா ஸ்கூல்ல கொடி ஏத்தம்னு நாங்கல்லாம் காலேல ஸ்கூல் போனோம்.
எல்லாஃப்ரெண்ட்சிடமும் இன்னிக்குப்ளாக்கி பர்த்டே எல்லாரும் சாயங்காலம் வீட்டுக்கு வாங்கன்னு சொல்லிட்டுகொடி ஏத்தம் எல்லாம் முடிந்து சாக்லெட் வாங்கிண்டு வீடு வர 12-மணி ஆச்சு, வந்தா நம்ம பில்டிங்க் கீழ ப்ளாக்கி
படுத்திருந்தது. எதுக்கு இங்க வந்து படுத்திருக்கு, எப்படி வெளில வந்ததுன்னு நினைச்சு, ப்ளாக்கி எழுந்திரு, வீட்டுக்குவான்னு உசுப்பி எழுப்பினாலும் எந்திக்கவே இல்லை.எங்களுக்கு ஒன்னுமே புரியலை உடம்பு ஏதானும் சரி இல்லியோந்னு நினைச்சோம் அப்போ பின்னாடிலேந்து ஒரு ஆளு வந்து தம்பி நாயி செத்துபோச்சுப்பா. நம்ம ஏரியால வெறி நாய்நிறைய ஆயி, எல்லாரையும் கடிக்கரதா ஆபீசுல கம்ளைண்ட் வந்தது, அதனால வெறி நாயெல்லாம் சுட்டுக்கொல்லஆபீசில ஆர்டர் போட்டாங்க. பெரிய நாயெல்லாம் சுட்டுட்டோம். இதுபோல குட்டி நாய்கள் இடைவெளி வழியா ஒடிதப்பிச்சு போயிடுது. அதனால சோத்துல விஷம் கலந்து பக்கம் பக்கமா வச்சு காவலுக்கு இருந்தோம். இந்த நாயும்அந்த சாப்பாடு சாப்பிட்டு இங்கவந்து செத்து விழுந்த்துன்னு கூலா சொல்ரான். சார் இது வெறி நாய் இல்லைசார் வீட்டு
நாய். இதுவரை யாரையுமே கடிச்சதே இல்லை அ நியாயமா ஒரு நல்ல ஜீவனைக்கொன்னுட்டீங்களேன்னு அங்கயேஅழ ஆரம்பித்துவிட்டார்கள். தம்பி வீட்டு நாய் நா கழுத்துல பட்டிபோட்டு வெளில விடனும் நாங்க என்ன கண்டோம்கழுத்துல பட்டி இல்லே. அப்பதெரு நாய்னு நினைச்சோம். நீங்கல்லாம் அழுகிரதைப்பாத்தாபாவமா இருக்கு. நான் என்ன
செய்ய முடியும். என்று சொல்லி ப்ளாக்கியை குப்பைமாதிரி அள்ளி நாய்வண்டியில்போட்டு கொண்டு போனான்.






வீட்ல வந்து அக்க விடம் சண்டை போட்டா. ஏண்டி ப்ளாக்கியை வெளில விட்டே.உன்னாலதான் அது செத்துபோச்சுன்னுஅவளைக்கண்டபடி கோச்சுட்டா. நா என்ன பண்ண யாரோ பெல் அடிச்சா திறக்கும்போது இடைவெளி வழியா ஒரே ஓட்டமாஓடிபோச்சு. நானும் ப்ளாக்கி, ப்ளாக்கின்னு கூப்பிட்டுப்பாத்தேன். அது திரும்பியே பாக்கலை.கட்டிபோட்டுட்டுதானே கதவை
திறக்கனும் நீ, என்று சின்னவன் எகிரிக்குதிக்கிரான். மறந்துட்டேடா சாரிடான்னு சொல்லியும் யாரையும் சமாதானப்படுத்தவே
முடியலை. அப்பா அதுக்கு ஏதானும் உடம்பு சரி இல்லாம போயி அதில செத்துப்போயிருந்தாகூட கொஞ்சமாவது சமாதானமா
இருக்கும் இவ்வளவு அன்பு பாசமா வளத்துட்டு இப்படி அனியாயமா ச்த்துபோச்சேன்னுதான் ரொம்ப துக்கமா இருகுப்பான்னு
அழுகையை அடக்கவே முடியலை. வீட்டுக்குள்ள யாரோசெத்துப்போனதுபோலவே ஒரே துக்கம் அழுகை. இரவு யாரும் சாப்பிட
கூட முடியலை. திரும்பின பக்கமெல்லாம் ப்ளாக்கி இருப்பதுபோலவே தோனிண்டு இருந்தது.எங்களை நாங்க சமாதானப்படுத்
திக்கொள்ளவே வெகு நாட்கள் ஆனது. இனிமேல வீட்ல பெட் அனிமலே வளக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணினோம்.




காலேல எழுந்து வராண்டா வந்து ப்ளாக்கி குட்மார்னிங்க் என்று ஆட்டோமேடிக்க வாயில் வந்துடும் சாப்பிட உக்காந்தா நடுவில்
ப்ளாக்கி உக்காந்து இருப்பதுபோலவேதோனும். எதைச்சொல்ல எதை விட. நாய் வளர்த்தவர்களுக்குத்தான் நான் சொல்லும்


உணர்ச்சிகளைப்புரிந்துகொள்ள முடியும். இப்ப குழந்தைகள் எல்லாருமே 40 வயதைதாண்டியவர்கள்தான் எல்லாரிடமும் கம்ப்யூட்டர்
ஜி.மெயிலும் உண்டு. எல்லாரும் பாஸ்வேர்டா ப்ளாக்கின்னு தான் வச்சுண்டு இருக்கான்னா நம்புவீங்களா?ப்ளாகி அவ்வளவுதூரம் எல்லார்


மனதிலும் இப்பவும் இடம் பிடிச்சுண்டுதான் இருக்கு.

37 comments:

எல் கே said...

முடிவு இவ்வளவு சோகமா இருக்கும்னு எதிர்பாக்கலை.

குறையொன்றுமில்லை. said...

இதுதான் நடந்தது, கார்த்தி.

Chitra said...

இப்ப குழந்தைகள் எல்லாருமே 40 வயதைதாண்டியவர்கள்தான் எல்லாரிடமும் கம்ப்யூட்டர்
ஜி.மெயிலும் உண்டு. எல்லாரும் பாஸ்வேர்டா ப்ளாக்கின்னு தான் வச்சுண்டு இருக்கான்னா நம்புவீங்களா


.....இப்படி வெள்ளந்தியாய் பாஸ்வோர்ட் எல்லாம் கொடுக்காதீங்க..

Chitra said...

மனதை கனக்க வைக்கும் பதிவுங்க

குறையொன்றுமில்லை. said...

சித்ரா, வருகைக்கும்கருத்துக்கும் நன்றிம்மா.என்பசங்க பேயரோ யாருக்கும் தெரியாதே. பாஸ்வேர்ட் மட்டும்தானே சொன்னேன்.:)))))

வெங்கட் நாகராஜ் said...

சோகமானதோர் முடிவு! மனதை கனக்க வைத்தது அம்மா.

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

vanathy said...

நாங்க வளர்த்த நாயும் நோய் வந்து இறந்த பிறகு நாங்கள் நாய் வளர்ப்பதில்லைன்னு முடிவு செய்தோம். அது அனுபவித்தவர்களுக்குத் தான் விளங்கும். சோகமான முடிவு.

கால்கரி சிவா said...

மிக சோகமான முடிவு.

செல்ல பிராணிகளை தத்தடுக்கும் போதே இந்த மாதிரி அசம்பாவிததிற்கு நம் மனதை தேற்றிக் கொள்ளவேண்டும்.

நாய்க்கு நாம் உண்ணும் உணவை கொடுத்த பழக்க கூடாது. அதற்கென்று ப்ரத்யேக உணவை தரவேண்டும். அப்படி பழகிய நாய் மற்ற உணவை உண்ணாது.
:(

குறையொன்றுமில்லை. said...

வானதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

குறையொன்றுமில்லை. said...

கால்கரி சிவா, வருகைக்கு கருத்துக்கும் நன்றி. நாங்க இருந்தது ஒரு பட்டிக்காடு அங்க நாய் உணவெல்லாம் கிடைக்காது

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ச்சே...பாவம்...

குறையொன்றுமில்லை. said...

அப்பாவி தங்கமணி, வருகைக்கு நன்றி.

athira said...

படிச்சதும் மனம் கனத்துவிட்டுது, என்ன செல்லப்பிராணி எண்டாலும், அதன் பிரிவை எம்மால் தாங்கவே முடியாது. அழகா சொல்லியிருக்கிறீங்க.

Speed Master said...

மனிதாக இருந்தாலும் மிருகமாக இருந்தாலும் எதிர்பார இழப்பு வலிதான்

Yaathoramani.blogspot.com said...

நீங்கள் சொல்வது மிகச் சரி
உடம்பு சௌகரியம் இல்லாமல்
பிளாக்கியை இழந்து இருந்தால் கூட
நாமும் சில நாள் அதை கவனித்தோம் என்ற
மன நிம்மதியாவது இருந்திருக்கும்
மனிதனை நம்பி உண்ட உணவில்
இப்படி என்றால்.....
படிக்கவே மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது

குறையொன்றுமில்லை. said...

அதிரா எல்லாமே உயிர்தானே. வலி, வேதனை எல்லாருக்குமே சமம்தானே.

குறையொன்றுமில்லை. said...

ஸ்பீட் மாஸ்டர், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.முதலில் இதுபோல சோகமான பதிவு போடவேணாம்னுதான் நினைச்சேன்.
எல்லாருடனும் பகிர்ந்து கொண்டதில்
எனக்கு மனசே ரிலாக்ஸ்ஆச்சு.

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் ப்ளாக்கியின் இழப்பு எவ்வளவு பேரை பாத்திருக்கு பாருங்களேன்.வாயில்லா ஜீவந்தான். ஆனாகூட என்ன?

Angel said...

மனதை கனக்க வைத்த பதிவு .
DISEASE எதுவும் வந்து செத்திருந்தால் கூட மனசு ஆறியிருக்கும்.
ரொம்ப கொடுமை .LAST PART படிக்க கூடாது என்று நினைதேன்.
CURIOSITY ... படிச்சிட்டு துக்கத்தோடு செல்கின்றேன்

குறையொன்றுமில்லை. said...

angelin, வருகைக்கு நன்றிம்மா.

Anonymous said...

வீட்டு பிராணிகள் மனிதனை விட பாசமானவை.

Anonymous said...

எப்பவும் 50 ஆர்ட்ஸ் + 50 சயின்ஸ் தான் வாழ்க்கை.

குறையொன்றுமில்லை. said...

வங்க குறட்டைபுலி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

பிளாக்கியின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஞாஞளஙலாழன் said...

-----------------------
"குறட்டை " புலி said...

வீட்டு பிராணிகள் மனிதனை விட பாசமானவை.
------------------------
உங்களது பெயருடன் சேர்த்துப் பின்னூட்டத்தைப் படித்து விட்டேன்! சிரிப்பை அடக்க முடியல. நல்ல காலம் அலுவலகத்தில் வைத்து படிக்க வில்லை!

ஞாஞளஙலாழன் said...

எனக்கு நாய்கள் மீது பாசம் அதிகம். நாய்களுக்கு நம்மை விட பாசம் அதிகம். என்றாவது ஒரு நாள் நாம் போட்ட ஒரு பிஸ்கட்டுக்காக தனது உயிரையே நமக்குத் தந்து விடக் கூடியன நாய்கள்.

குறையொன்றுமில்லை. said...

njaa,nja,langalazan nalla kaametithaan poongka.

குறையொன்றுமில்லை. said...

irajarajeswari thanks for coming.

தமிழ் ஈட்டி! said...

தாங்கள் எழுதியதில் இருந்த பிழைகள்:

//இவர் சத்தம் கெட்டாலே//

சத்தம் கேட்டாலே என்று எழுதவும்


//வீட்ல வந்து அக்க விடம்//

அக்காவிடம் என்று திருத்தவும்.


//சின்னவன் எகிரிக்குதிக்கிரான்//

எகிறி என்று திருத்தவும்.


//அனியாயமா ச்த்துபோச்சேன்னுதான்//

அநியாயமா செத்துப்போச்சே என்று திருத்தவும்.


//ரொம்ப துக்கமா இருகுப்பான்னு//

துக்கமா இருக்குப்பா என்று திருத்தவும்.


அம்மா, தயவு செய்து இதற்கு சமாதானம் சொல்ல வேண்டாம். தமிழ் மொழி பல்லாண்டு வாழ பிழைகள் இன்றி எழுதுவதே சிறந்தது. எழுதி விட்டு ஓரிரு முறை சரி பார்த்த பின் பதிவிடவும். தங்கள் பதிவை பலர் படிப்பதால் சொல்கிறேன். தவறு என்றால் மன்னிக்க. வாழ்க தமிழ்!

குறையொன்றுமில்லை. said...

தமிழ் ஈட்டி, முதல் வருகைக்கு நன்றி. தவறுகளைச்சுட்டிக்காட்டியதற்கும்
நன்றி. இனி கவனமாக இருக்கேன்.அடிக்கடிவாங்க.

ஹேமா said...

ச்ச...இப்பிடி ஏன் செய்றாங்க.ரொம்பக் கஸ்டமாயிருக்கம்மா !

குறையொன்றுமில்லை. said...

ஹேமா வருகைக்கு நன்றிம்மா. என்னத்தைச்சொல்ல.

குறையொன்றுமில்லை. said...

பாரத் பாரதி வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

பிரணவம் ரவிகுமார் வருகைக்கு நன்றி.

மாதேவி said...

கவலையாகி விட்டது.

குறையொன்றுமில்லை. said...

மாதேவி முதல் வருகைக்கு நன்றிம்மா.

Related Posts Plugin for WordPress, Blogger...