Pages

Back to Top

ஈரோடு சந்திப்பு

 ஈரோடு போய் வந்து ஒருவாரம் ஆகுது. அங்கு நடந்த சம்பவங்களை உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா/ முதல்ல பதிவர் சந்திப்பு.
 பதிவுலகில் நம்ம எல்லாருக்குமே  நன்கு அறிமுகமாகி இருப்பவர்  அட்ராசக்கை எனும் தலைப்பில் பதிவெழுதிவரும் சி. பி, செந்தில் குமார் அவர்கள்.1000 பதிவுகளுக்கும் மேல் எழுதி சாதனை படைத்திருப்பவர்,அந்த பந்தா எதுமே இல்லாமல் மிகவும் இனிமையாக பேசிப்பழகுகிரார்.ஈரோடு போனதும் 10- நாட்கள் கழித்து அவருக்குதான் முதலில் போன் பண்ணினேன். பதிவெழுதுபவர்களில் பெரும்பாலோனர் எழுத்துமூலம் மட்டுமே அறிமுகமாகி இருப்போம். அப்படி முகம்தெரியாம பழகினவங்களை நேரில்பார்க்கும் போது மனசுபூராவும் ஒரு சந்தோஷம் வந்து ஒட்டிக்குது பாருங்க, அதை அனுபவிச்சு பாத்தாதான் புரிஞ்சுக்கமுடியும்.


    
நான் போன்பண்ணினதுமேநானேவந்துஉங்களப்பாக்குரேம்மான்னுசொன்னார்  சொன்னபடியே மறு நாள் காலை கை கொள்ளாமல் பழங்களில் எத்தனை வகை உண்டோ அத்தனை பழங்களும் வாங்கிவந்தார்.அன்று காலை நேரம் வந்ததால் என் மகன் பேங்க் போயிட்டான் . நாங்க கொஞ்ச நேரம்பேசிட்டு இருந்தோ. சீக்கிரமே கிளம்பிட்டார். அடுத்தமுறை நண்டு@னொரண்டு எனும் தலைப்பில் பதிவெழுதும் ராஜசேகர் அவர்களுக்கும் செந்தில்குமாருக்கும் போன்பண்ணீ எங்க வீட்டுக்கு டின்னருக்கு கூப்பிட்டேன். நான் கிளம்ப ரெண்டு நாள்தான் இருந்தது. சனிக்கிழமை மாலை 7 மணிக்கு இருவரும் வந்தார்கள். என் மகன், மருமக, பேரன் எல்லாருடனும் கலகலப்பான பேச்சு.அவங்க அவங்க பத்தி சுய அறி முகங்கள் என்று இனிமையான ச ந்தோஷமான மாலைப்பொழுதாக இருந்தது.

                                    
                                  
                                  
 
    மருமக டின்னருக்காக சப்பாத்தி,ரெண்டுவித பாஜி,  வெஜிடபுல்புலாவ் வடாம் தயிர்சாதம், எல்லாம் பண்ணி இருந்தா. பேசிண்டே மொட்டைமாடியில் எல்லாரும் உக்காந்து சாப்பிட்டோம். ஈரோடில் கரண்ட் கட் ரொம்பவே அதிகமா இருக்கு அதனால மொட்டைமாடி டின்னர் அதுவும் சூப்பராதான் இருந்தது. அதன்பிறகு டெஸர்ட் கஸ்டர்ட் ஃப்ரூட் ஸாலட் சாப்பிட்டாங்க.  அவங்க 10 மணிக்கு கிளம்பி போனாங்க. எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷமா இருந்தது. இன்னும் இரண்டு பேரைக்கூப்பிட்டு இருந்தேன் அவங்க வரலே. இதையெல்லாம் உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்வதில் ரொம்பவே சந்தோஷமா இருக்கு

46 comments:

முதலீடு இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாரிக்கலாம் ! said...

முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!

Visit Here For More Details : http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/03/profit-sharing.html

! சிவகுமார் ! said...

உங்களுக்கு தெரியாம சிபி வெஜிடபிள் புலாவை பார்சல் செஞ்சி எடுத்துட்டு போய்ட்டராமே...!!

ரிஷபன் said...

என் மகன், மருமக, பேரன் எல்லாருடனும் கலகலப்பான பேச்சு.அவங்க அவங்க பத்தி சுய அறி முகங்கள் என்று இனிமையான ச ந்தோஷமான மாலைப்பொழுதாக இருந்தது.


படிக்குமோது அந்த சந்தோஷம் எங்களையும் தொற்றிக் கொள்கிறது.

yathan Raj said...

Valthukkal

ஹைதர் அலி said...

வாழ்த்துக்கள் சகோதரி

கோவை2தில்லி said...

பதிவர் சந்திப்பு நடந்தததில் மிக்க மகிழ்ச்சிம்மா. எழுத்தின் மூலம் அறிமுகமானவர்கள் நேரில் சந்தித்தால் அது ஒரு சந்தோஷம் தான்.....

Kovai Neram said...

பதிவர் சந்திப்பு அருமை...

Kovai Neram said...

நாங்க நம்ப மாட்டோம்...இது சிபி அல்ல..சிபி...எப்போதும் கண்ணாடி போட்டு இருப்பார்...யாரை ஏமாத்த பாக்கறீங்க..

தமிழ்வாசி பிரகாஷ் said...

குட் மீட்....
அம்மா

vanathy said...

பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... கேட்கும் போதே சந்தோஷமா இருக்கும்மா.....

நல்ல விஷயம்....

சந்திப்பு பற்றிய பகிர்வுக்கு நன்றிம்மா...

அமைதி அப்பா said...

நல்ல பகிர்வு அம்மா.

மகேந்திரன் said...

மனமகிழ்வான சந்திப்பு..

Lakshmi said...

சிவகுமார் வருகைக்கு நன்றி அவங்க இருவரையும் ஃபேமிலியோட வரச்சொல்லி இருந்தேன் ஆனா தனியா வந்தாங்க அவங்களுக்கு பார்சல் கொடுப்பதுதானே முறை

Lakshmi said...

ரிஷபன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ரிஷபன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

யதன்ராஜ் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஹைதர் அலி வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நம்மில் சிலருக்கு இந்த அனுபவம் கிடைத்துக்கொண்டுதான் இருக்கு இல்லியா?

Lakshmi said...

கோவை நேரம் நீங்களே இப்படி சொன்னா எப்படி? இரவு நேரம் என்பதால அவரு கருப்புகண்ணாடி போடாம வந்திருக்கலாமில்லியா?

Lakshmi said...

பிரகாஷ் அதிசயமா நீ கூட என் பக்கம்லாம் வரே. குட்.

Lakshmi said...

வானதி வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

அமைதி அப்பா வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஹேந்திரன் வருகைக்கு நன்றி

கடம்பவன குயில் said...

சிபி சார கண்ணாடியில்லாமல் நிற்கவைத்தது உங்களோட பெரிய சாதனை அம்மா. நாங்களும் உங்ளோட டின்னர் சாப்பிட்ட உணர்வு. நல்ல பகிர்வு.

Lakshmi said...

கடம்பவனக்குயில் வருகைக்கு நன்றி

radhakrishnan said...

என்னம்மா, ஈரோடில் தூள்கிளப்பியிருக்கி
றீர்கள்? பதிவர் சந்திப்பு வேறு. வேறு
எங்கெல்லாம் போனீர்கள்?பவானி, மேட்டூர் சென்றீர்களா?அருகே கோபிசெட்டி பாளையம் சுற்றிலும்
உங்கள் ஊர்போல(கல்லிடை) இருக்கும்.
சீக்கிரமே சொந்தக் கூட்டுக்குச் சென்றுவிட்டீர்களே. ஷார்ட் அண்டு ஸ்வீட் போலிருக்கிறது.வாழ்த்துக்கள்.
நன்றி அம்மா

Lakshmi said...

ராதாகிருஷ்னன் ஈரோடில் வெலியே ஒரு இடமும் போகல்லே. வெயில் அனல் பறக்குது

Ramani said...

மதுரைவாசி நான்
பதிவுலகில் முதிர்ச்சியான சிந்தனையுடன் எழுதும் சிலருள்
முதனமையானவர் நீங்கள் என்பதில் எள்ளளவும் யாருக்கும்
சந்தேகமில்லை.என்றேனும் தங்களை நேரடியாகச் சந்திக்க
முடியுமாயின் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்.
படங்களுடன் பதிவு அருமை.வாழ்த்துக்கள்

Lakshmi said...

ரமனி சார் ஈரோடில் இருந்து மதுரை வர ஐடியா இருந்தது. நான் யாரு வீட்டுக்கு வரனும்னு இருந்தேனோ அவங்க ஈரோடுக்கு என்ன பாக்க வந்து ஒருவாரம் 10 நால் தங்கினாங்க ஆக நான் மதுரை வரமுடியாம போச்சு

ராஜி said...

சிபி சார் ரொம்ப கால்ய்ச்சாரா?!

ராஜி said...

எங்களுக்குலாம் டின்னர்?

Lakshmi said...

இல்லே ராஜி அன்னிக்கு சி.பி, சார் ரொம்ப அமைதியாதான் இருந்தார் ராஜசேகர் சார்தான் பேசிட்டு இருந்தார். நீங்களும் ஈரோடு வந்திருந்தா உங்களுக்கும் டின்னர் கிடைச்சிருக்கும் இல்லே?

Jaleela Kamal said...

வலை உலகில் முகம் தெரியாமல் பேசிட்டு நேரில் பார்க்க ஒரு சந்தோஷம் தான் இல்லையா?
உங்கள் சந்தோஷத்தில்நானும்கல்ந்து கொண்டேன்

Lakshmi said...

ஜலீலா எங்கபோனீங்க ரொம்ப நாளா கானோமே? வாங்க வாங்க.

சி.பி.செந்தில்குமார் said...

ஃபோட்டோவில் ஏதோ கிராஃபிக்ஸ் செஞ்சு என்னை மாநிறம் ஆக்கிட்டீங்க , =மீ செக்கச்சிவப்பு ஹி ஹி

Lakshmi said...

அப்படியா சொல்ரீங்க செந்திலெல்லாரும் உங்க கண்ணாடி பத்திதானெ கேட்டாங்க.

கணேஷ் said...

என் நண்பருடனான சந்திப்பு பற்றிய நிகழ்வைப் படித்ததில் மனதில் ஏற்பட்டது மகிழ்வு.

Lakshmi said...

கணேஷ் வாங்க நன்றி

கே. பி. ஜனா... said...

அருமையான சந்திப்பு. அழகான பகிர்வு.

Lakshmi said...

கே.பி. ஜனா வருகைக்கு நன்றி

குடந்தை அன்புமணி said...

பதிவர்களின் சந்திப்பு- ஒரு தனி சுகம்தான்... கொடுத்து வைத்தவர்கள்..

Lakshmi said...

அன்பு மணி வாங்க ரொம்ப நாளா உங்களக்கானோமே

ராம்ஜி_யாஹூ said...

நல்ல விஷயம். சந்திப்பை சுவாரஸ்யமாக எழுதி உள்ளீர்கள்

Lakshmi said...

ராம்ஜி வாங்க நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...