Pages

Back to Top

மனசே ரிலாக்ஸ்

இப்ப ஒருமாசமா  ஈரோடில் தாமசம். பெரியமகன் வீட்டில்
 வருஷத்தில் ஒருமாதம் ஏதாவது ஒரு மகன் வீட்டிலோ
 மகள் வீட்டிலோ போய் தங்கி அவர்களை சந்தோஷப்படுத்தி
 நானும் சந்தோஷப்படுவேன்.பாக்கி 11 மாசமும் அம்பர்னாத்.
 மும்பை லைஃப் ஸ்டைலில் இருந்து டோட்டலி டிபரண்ட்டா
 இருக்கு.காலை நான் கொஞ்சம் லேட்டாதான் எழ்ந்துப்பேன்
 இரவு லேட்டாபடுப்பேன். இவங்கல்லாம் நான் எழுந்து காபி
 குடிக்கும்போதே ஃபுல் லஞ்ச் சாப்பிடுவாங்க. அதுவே எனக்கு
 வேடிக்கையா இருக்கும். இவங்க 9 மணிக்கு வெளில கிளம்பி
போனா மாலை 5- மணிக்குத்தான் திரும்ப  வருவாங்க. இரவும்
9-மணிக்கு தூங்கிடுவாங்க. இவங்கல்லாம் கிளம்பி போனதும் நான் வராண்டாவில் நின்னு
 கொஞ்ச நேரம் தெருவை வேடிக்கைபார்ப்பேன். இந்தப்பக்கம்லாம்
 இன்னும் அடுக்கு மாடி குடி இருப்புகள் வந்திருக்கலை. அதனால
 வெளியில் வந்து நின்னா பரந்து விரிந்த நிலப்பரப்பும் ஆகாயமும்
 பார்க்க கிடைக்கிரது. தனி தனி வீடுகள் தான் அதிக அளவில் இருக்கு
 ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சாணிதெளித்து பளிச்சுனு  பெரிசு
 பெரிசா கோலமும் போட்டிருப்பதைப்பார்க்கும்போதே மனசுக்கு
 சந்தோஷமா இருக்கு.தெருவில் மறி மாறி கைவண்டிக்காரர்களின்
 வியாபாரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கு. முதலில்
கோலப்பொடின்னு கூவிக்கொண்டே ஒருவர் போரார். அடுத்து
 முளைக்கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை என்று கீரைக்காரிகளின்
 இனிமையான சங்கீதக்குரல்கள்.அடுத்து வாழக்கா, வாழக்கான்னு
 வாழைக்காய்காரரின் குரல் அடுத்து வழலே வாழல்லேன்னு இலைக்
 காரரின் வேடிக்கையான குரல். அடுத்து பழவண்டிக்காரர். வாழையில்
 இருக்கும் எல்லா தினுசிலும் பழங்கள் வைத்திருப்பார். வழைப்பூ, தண்டு
 எல்லாமே  வாசலில் கொண்டுவராங்க. தக்காளிவண்டி காய்கறி வண்டின்னு
 வரிசையாக 11-மணிவரை தெருவில் நடமாட்டம் இருந்து கொண்டே
 இருக்கு.

மிடில் மிடில்ல உள்ளே போய் என் காலை வாக் எக்சர்ஸைஸ் மூச்சு
பயிற்சிகள் குளியல் முடித்து வழக்கம்போல பிஸ்கெட் டீ ப்ரெக் ஃபாஸ்ட்
 எடுப்பேன்.  11-டு 1-வரை கம்ப்யூட்டர். இங்கல்லாம் கரண்ட்கட் பிராப்லம்
 நிறையாவே இருக்கு. அதனால டி, வி, யோ கம்ப்யூட்டரோ யூஸ்பண்ணவே
 முடியமாட்டேங்குது. நான் எழுதிவரும் ஆப்ரிக்கபயனக்கட்டுரைக்கூட
சரியா தொடரமுடியல்லே. எப்பகரண்ட் போகும் வரும்னே சொல்லமுடியல்லே எப்பவேனா போகுது வருது. அதுதான் கொஞ்சம்
 கஷ்ட்டமா இருக்கு.புக்ஸ் தான் நிறையா நேரம் படிக்கனும்.5- மணிக்கு
 இவங்கல்லாம் வந்ததும் காபி குடிச்சுட்டு மொட்டைமாடியில் போய்
 உக்காருவோம். மொட்டமாடி ந்ல்லா பெரிசா சுத்தமா இருக்கு. அவர்களுக்கு
 ஏதானும் ஸ்னாக்ஸ் பண்ணிக்கொடுப்பேன். பேரனுடன் பாட்மிண்டனோ, கிரிக்கெட்டோ மேல விளையாடுவேன் நான் கொஞ்ச நேரம் என் மகன் கொஞ்ச நேரம் அவன்கூட விளையாடுவோம். இரவு 8- மணிவரை பழயகதையெல்லாம்
 பேசிட்டு அப்புரம்தான் கீழயே வருவோம் கரண்ட் அப்பதான் வரும். பிறகு
 என் குளியல். கொஞ்ச நேரம் டி, வி. 8.30-சாப்பாடு. அவங்கல்லாம் 9-மணிக்கு
 ப்டுத்துடுவாங்க நா கம்ப்யூட்டர்.கரண்ட் இருந்தா 12-வரை உக்காந்திருப்பேன்.

 நான் இங்க வந்ததும் நம்ம ப்ளாக் நண்பர் சி.பி. செதில்குமாருக்கு போன்
பண்ணினேன். அவர் வந்து பார்த்தார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
இன்னும் சிலருக்கும் போன் பண்ணினேன் வரேன்னு சொல்லி இருக்காங்க.
 இன்னும் 4- நாளில் மும்பை கிளம்பிடுவேன் அழகான கிராமத்து சூழலை நன்னாவே எஞ்சாய் பண்ணிண்டு இருக்கேன்.

16 comments:

Anonymous said...

கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

கோவை2தில்லி said...

ஈரோடின் அழகை நல்லாவே சொல்லியிருக்கீங்கம்மா. நல்லா எஞ்சாய் பண்ணுங்க.

suryajeeva said...

தெருவில் கூவி விற்பவர் என்ன விற்கிறார் என்று தெரிய மாதிரியா கூவுறார்... கொடுத்து வச்சவங்க ஈரோடு காரர்கள்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ஊர்மா...

நல்ல ரெஸ்ட் எடுத்து வாங்க.... மும்பை வந்து நிறைய பதிவு எழுதுங்க!

கடம்பவன குயில் said...

உங்கள் பார்வையில் ஈரோடு ரொம்ப அழகா இருக்கு. என்ஜாய் பண்ணிட்டு வாங்க.

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

சூர்யஜீவா ஹா ஹா நா சொல்ல மறந்ததை நினைவு படுத்துட்டீங்க. உண்மையில் அவங்க ராகம்போட்டு கூவிகிட்டு போகும்போது என்ன பொருள் விக்கிராங்கன்னே புரிஞ்சுக்க முடியல்லே வாசலில் போயி நின்னு கைவண்டிய பார்த்தபிறகுதான் தெரிஞ்சுக்க முடியுது.எல்லா இடங்களிலும் இப்படித்தானா?

Lakshmi said...

சூர்யஜீவா ஹா ஹா நா சொல்ல மறந்ததை நினைவு படுத்துட்டீங்க. உண்மையில் அவங்க ராகம்போட்டு கூவிகிட்டு போகும்போது என்ன பொருள் விக்கிராங்கன்னே புரிஞ்சுக்க முடியல்லே வாசலில் போயி நின்னு கைவண்டிய பார்த்தபிறகுதான் தெரிஞ்சுக்க முடியுது.எல்லா இடங்களிலும் இப்படித்தானா?

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்ரி

Lakshmi said...

கடம்பவனக்குயில் வருகைக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

அழகான கிராமத்து சூழலை நன்னாவே எஞ்சாய் பண்ணிஅழகாக பகிர்ந்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

ஹேமா said...

நீங்கள் சொல்லியிருக்கும் சூழலை நினைக்கவே ஆசையாயிருக்கு.கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் எல்லோருமே !

Lakshmi said...

ஹேமா வருகைக்கு நன்றி

radhakrishnan said...

ஈரோடில் வீடு எந்த ஏரியாவில் உள்ளது?
அவுட்டரில்தான் இருக்கும் போலுள்ளது.
வெயில் அதிகமாக இருந்திருக்குமே.
நான் சிறுவயதில் அருகில்உள்ள மேட்டூர் அணையில் அப்பாவுடன் வசித்திருக்கிறேன். மதுரையிலிருந்து
ஈரோடு வழியாகப் போவோம்.நல்ல ஊர்
காவேரி இருக்கிறதே?
பகிர்வுக்கு நன்றி அம்மா

Lakshmi said...

ஈரோடில் கொல்லம்பாளையம் ஏரியாவில் வீடு இருக்கு வருகைக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...