Pages

Back to Top

புதிய இந்தியா


இந்த கவிதையை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அவருக்கு நன்றி

புதிய இந்தியா

"*levis jeans" **ஸும்,"van heusen"ஸும்
*வந்ததால் - எங்களின்*
*பருத்தி ...காதி துணிகள்**
பழசாய்ப் போயின**!

"நைட்டியும்","கவுனும்**"
வந்ததால் - எங்களின்*
*தாவணிகளும்,புடவைகளும்*
*தரமிழந்துப் போயின**!

"pizza" வும் "burger" ரும்*
*வந்ததால் - எங்களின்*
*இட்லி,சப்பாத்திக்களை*
*சுவை இழக்க வைத்தன**!

"axe perfume" உம் "olay" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*மஞ்சளும்,மருதாணிக்களும்*
*வாசம் இழந்துப் போயின**!

"valentine's day, friendship day" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*நட்புக்களும்,கல்யாணங்களும்*
*கோர்ட் படிகள் ஏறுகின்றன**!

"cricket"டும்,"golf" பும்*
*வந்ததால் - எங்களின்*
*கபடியும்,மல்யுத்தமும்*
*களையிழந்துப் போயின**!

"wine" னும்,"vodka" வும்*
*வந்ததால் - எங்களின்*
*கூழையும்,கள்ளையும்*
*குழித்தோண்டிப் புதைத்தன**!

"standard charted,american express bank" கும்*
*வந்ததால் - எங்களின்*
*கூட்டுறவு வங்கிகள்*
*திவாலாகிப்போயின**!

"dollar ,euro" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*மூளைகள் வெளிநாடுகளில்*
*அடமானத்திற்க்கு விற்கப்பட்டன**!

இதோ**....
"walmart" டும்,"tesco" வும்*
*வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்*
*நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்*
*உழைக்கும் விவசாயிகளும் கூட இனி**...
*அமெரிக்கர்களின் எகாதிபத்யத்தில்*
*மீண்டும் அடிமையாகப் போகிறார்கள்**.

*இருப்பதை விட்டுவிட்டு*
*பறப்பதற்கு ஆசைப்படும்*
*அரசியல் அதிகாரிகளுக்கு*
*மீனைவிட தூண்டில் பெரிதென்று*
*புரிவதெப்போது?*

15 comments:

வலையுகம் said...

சகோதரி அவர்களே

///"நைட்டியும்","கவுனும்**"
வந்ததால் - எங்களின்*
*தாவணிகளும்,புடவைகளும்*
*தரமிழந்துப் போயின**!///

அருமையான வரிகள் தேடிப்பிடித்து பகிர்ந்தமைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கும்மா கவிதை....

-தோழன் மபா, தமிழன் வீதி said...

கால மாற்றத்தால் நாம் பெற்றதைவிட இழந்தது அதிகம்.
நல்லதொரு கவிதை. பகிர்வுக்கு நன்றி!

ரிஷபன் said...

"valentine's day, friendship day" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*நட்புக்களும்,கல்யாணங்களும்*
*கோர்ட் படிகள் ஏறுகின்றன**!


Very nice.

ADHI VENKAT said...

கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

hydar ali thanks.

குறையொன்றுமில்லை. said...

vengat nanri

குறையொன்றுமில்லை. said...

thozan ma pa thamizan veethi nanri

குறையொன்றுமில்லை. said...

rishapan nanri

குறையொன்றுமில்லை. said...

kovai2thilli nanri

Unknown said...

தமிழா நீ பேசுவது தமிழா என்ற ஈழத்து கவிஞரின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது. பகிர்வுக்கு நன்றிகள்..

குறையொன்றுமில்லை. said...

barath barathi varukaikku nanri

radhakrishnan said...

காலத்திற்கு ஏற்ற கவிதை.மிக நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி அம்மா

குறையொன்றுமில்லை. said...

வருகைக்கு நன்றி ராதாகிருஷ்னன்

Jaleela Kamal said...

பகிர்வுக்கு நன்றி.
அருமை

Related Posts Plugin for WordPress, Blogger...