Pages

Back to Top

எதிர்காலம்(5)குழந்தை பற்றிய சந்தேகம் உடனே க்ளிய்ர் பண்ணிக்கணு்ம் எனறு அடுத்தநாளே டாக்டரை தேடிப்போனான். சைல்ட் ச்பெஷலிஸ்ட் தான். எல்லா செக்கப்பும்பண்ணிட்டு பெரிய குண்டா தூக்கிப்போட்டார். குழந்தை பிறவியிலேயே டௌன்சிண்ட்ரோம் பேபியா பிறந்திருக்கு. வயத்ல இருக்கும்போதே ஸ்கேன் பண்ணி யிருக்கனும். அப்பவே தெரிஞ்சிருக்கும். வேண்டாம்னு பண்ணி யிருக்கலாம். உங்க ரெண்டுஃபேமிலியுலும் யாருக்காவது இதுபோல மூளை வளர்ச்சி இல்லாம இருந்திருக்கானுகேட்டார். மகன் மருமகள் இருவருமே டாக்டரிடம் போயிருந்தார்கள். இல்லை ரெண்டுசைடிலும் யாருக்கும் இதுபோல இல்லனு சொன்னா. நீங்க சொந்தத்ல கல்யாணமா என்றார்

அதுவும் இல்லியே. க்ரோமசோம் டிஃபரண்டால இப்படி மூளை வளர்ச்சி குறைந்தகுழந்தைபிறந்திருக்கு. ஆஸ்பிடலில்தானே டெலிவரி பாத்தீங்க.அங்க டாக்டர்ஸ் எதுவுமே சொல்லலியாஎன்றார். அங்கும் எதுவுமே சொல்லலை. என் பெண் சொல்லலைனா எங்க யாருக்குமே தெரிய வாய்ப்பில்லாமலே போயிருக்கும். அவளுக்கு தெரிந்த குறைபாடு வேறு யார்கண்ணுக்குமேஎப்படி தெரியாம இருந்ததுன்னுதான் புரியவே இல்லை.
இதுக்கு எந்த ட்ரீட்மெண்டும் கிடையாது. நாம வீட்டில்பழக்கப்படுத்தனம்..எவ்வளவு வயசானபிறகும் 5 வயசு குழந்தையோட மூளை வளர்ச்சிதான் இருக்கும் கிரகிக்கும்பவர் மிக, மிக கம்மியா இருக்கும். இவனை வளர்க்க பொறுமை ரொம்ப இருக்கணும்என்று ஒரே அட்வைஸ் தான்.என்னபண்ண சோர்ந்துபோயி வீடு வந்து விவரங்கள்

சொன்னார்கள். எங்களுக்கும் தாங்க முடியாத அதிர்ச்சி. அட கடவுளே இந்தபையனைநிம்மதியாவே இருக்க விடமாட்டியான்னு கடவுள்கிட்டத்தான் முறையிட்டோம்.15 வயசிலேந்து பிரச்சினைக்குமேல பிரச்சினை களா இவனத்துறத்துதே இதுக்குஎன்னதான் பண்ரது ந்னுஒரேகவலைதான். அவா அஹேரி கிளம்பி போனா.குழந்தையைமிகவும் கவனமாக கவனிச்சுண்டா. 3 வயசுவரையிலும் நடக்கவும் வரலை பேச்சும் வல்லைமருமகளின் அக்கா கேரளாவில் இருந்தா. அவ சொன்னா கேரளாவில் வந்து நாட்டு வைத்தியரிடம்குழந்தையைக்காட்டு. அவர் ஏதானும் செய்வார் என்று சொன்னா. உடனே கேரளா போனாபரணீயம் என்னுமிடத்தில் ஒரு ஆயுர்வேத நாட்டு வைத்தியரிடம் போனா. அவரும் நன்குசெக் பண்ணிட்டு இந்தக்குழந்தையை என்னால நடக்க வைக்க முடியும். ஆனா 6- மாசம்தொடர்ந்து இங்கியே தங்கி வைத்தியம் பண்ணனும் என்றார்.
பையனுக்கு பேங்கில் லீவே கிடைக்காது. மருமகளும் பேரனும் 6மாசம் அங்கதங்கி வைத்தியம் பார்ப்பதாக ஏற்பாடானது. வைத்திய சாலையிலேயே ஒரு ரூம்இருந்தது. அங்கு தங்கி கொண்டார்கள்.தினசரி மூணு வேளை மருந்து எண்ணைகாய்ச்சி நன்கு மசாஜ் செது காலை உருவி விட்டு உள்ளுக்கும் குடிக்க பச்சிலைகஷாயம் கொடுத்து தீவிரமாக ட்ரீட்மெண்ட் நடந்தது.சாப்பாடு நாமதான் கவனிச்சுக்கணம்.


மகன் மாதம் ஒருமுறை அஹேரிலேந்து வந்து ரெண்டு நாள்தங்கி பாத்துட்டு தேவையானதை வாங்கி கொடுதுட்டுபோவான்.மருமகளின் அக்காவும் மாசம் ஒருமுறைவந்து பார்த்துட்டுபோவா. அங்கு வேர என்ன பொழுதுபோக்கும் கிடையாது குழந்தைக்குரொம்பவே போராச்சு. என்ன பண்ணமுடியும்?பல்லைக்கடிச்சுண்டு எல்லா சிரமங்களையும்தாங்கிண்டு 6 மாசட்ரீட் மெண்ட் முடிந்ததும் பேரன் மெது, மெதுவா நடக்க ஆரம்பிச்சான்.முதலில் சுவரைப்பிடித்துக்கொண்டு நடக்கப்பழகினான். பிறகு அம்மாவின்கை பிடித்துமெள்ள அடிமேல அடி வைத்து நடக்கத்தொடங்கினான்.
6மாசட்ரீட்மெண்ட் முடியும் போது ஓர்ளவு நடக்க ஆரம்பித்தான் அந்தவைத்தியரிடமேபேச்சும் வல்லியெ ஸ்பீச் தெரபி கொடுப்பீங்களான்னு கேட்டோம். இல்லைமா. நாங்கமலையாளத்லதான் பயிற்சி கொடுப்போம் நீங்க தமிழ்ல பேசுவீங்க குழந்தை குழம்பிடுவான்.அதுக்கு நீங்களே தான் வீட்லபயிற்சி கொடுக்கனும். இப்பதான் மெதுவாநடக்க தொடங்கி இருக்கான். தினசரி எண்ணை தடவி மசாஜ் பண்ணுங்க, கால் நீட்டிமடக்கி எக்சர்ஸைஸ் பண்ணவைங்க. கால்ல பலம் பிடிச்சதும் நல்லா ஓடவே செய்வாங்க.என்றார்.

21 comments:

asiya omar said...

பையன் நடக்க ஆரம்பிச்சது மகிழ்ச்சி,உடனே கவனித்தது நல்லதாகப் போச்சு.தொடர்ந்து கஷ்டங்கள் வராமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதுபோன்ற சிகித்சை மேற்கொள்ள, கூட இருப்பவர்களுக்கு, அதுவும் பொழுதுபோக்கே இல்லாத நிலையில் எவ்வளவு பொறுமை வேண்டும் தெரியுமா! பொறுமையுடன் கஷ்டப்பட்டதில் குழந்தை ஒருவாறு நடக்க ஆரம்பித்தது கேட்க சந்தோஷமே.
மேற்கொண்டும் நல்ல செய்தி கேட்க ஆவலுடன், vgk

ஞாஞளஙலாழன் said...

நீங்கள் எவ்வாறு பயிற்சி கொடுத்தீர்கள் என்று அறிய ஆவல்.

Chitra said...

very touching....

நிகழ்வுகளை நன்றாக தொகுத்து அருமையாக சொல்லி வருகிறீர்கள்.

எல் கே said...

அந்தத் தாயின் மனது என்ன பாடு பட்டிருக்கும் ?

vanathy said...

படிக்கவே கஷ்டமா இருக்கு. சிலரை ஆண்டவன் ரொம்பவே சோதிப்பார் என்பது உண்மையே.

Lakshmi said...

ஆஸியா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Lakshmi said...

கோபால்சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ஞா ஞ,ள, ங,லா, ழ,ன், உங்க பேரு டைப்
பண்ணவே நேரமாகுதே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடுத்து வரும் பதிவுகளில் சொல்கிரேன்.

Lakshmi said...

சித்ரா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

ஆமா கார்த்தி, ரொம்ப கொடுமையான தருணங்கள்தான்.

Lakshmi said...

வானதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

முனைவர்.இரா.குணசீலன் said...

வாழ்ககையே போராட்டம் தான்..

Lakshmi said...

வருகைக்கு நன்றிங்க. முனைவர் அவர்
க ளே.

ஆனந்தி.. said...

வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html

Lakshmi said...

ஆனந்தி, நன்றிம்மா.

Lakshminarayanan said...

தான் என்ன பாடுபட்டாலும் சரி...தன் குழந்தை படுவதை எந்த தாயாலும் சகிக்க முடியாது...இங்கே பரிதவிக்கும் இரண்டு தாயுள்ளங்கள்.ஆறு மாத சிகிச்சைக்குப் பின் அக்குழந்தை நார்மல் ஆனானா? இறைவன் அருள் புரிவானாக...

Lakshmi said...

லஷ்மி நாராயன் வருகைக்கும் கருத்துக்கும் நன்ரிங்க. எப்படிங்க சரி ஆவான் பிறவியிலேயே குறை ஆயிடுத்தே?

குலவுசனப்பிரியன் said...

//உங்க ரெண்டுஃபேமிலியுலும் யாருக்காவது இதுபோல மூளை வளர்ச்சி இல்லாம இருந்திருக்கானுகேட்டார்.//
டௌன் சின்ட்ரோமுக்கும், மூதாதயார்களுக்கும் சம்பந்தம் இல்லை. புள்ளிவிவரத்தின் படி இதுவரை கிடைத்துள்ள ஒரே குறிப்பு தாயாருக்கு வயது அதிகமாக அதிகமாக டௌன் சின்ட்ரோம் குறை உள்ள குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம் என்பது மட்டுமே. ஆனால், 18 வயது தாய்களுக்கும் கூட டௌன் சின்ட்ரோம் உள்ள குழந்தை பிறந்திருக்கின்றன. எப்படி தடுப்பது என்றால், பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது ஒன்றுதான் வழி.

என் மகனுக்கும் இதே குறை இருக்கிறது. மருத்துவமனை பிரசவ அறையில் நானும் இருந்தேன். பிறந்த நிமிடமே சொல்லிவிட்டார்கள் இவனுக்கு இந்த கோளாறு என்று. இரண்டு வயதில்தான் நடந்தான். அப்பா என்று மட்டும் சொல்கிறான். இப்போது 8 வயது ஆகிறது. இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. ஆனால் ரொம்ப சுட்டி, அவன் சிரிப்பதைக்கேட்டு சுற்றி உள்ள எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். தாமதமாக நடந்ததுபோல தாமதமாக பேசுவான் என்று நம்புகிறோம்.

அமெரிக்காவில் எல்லா அரசு பள்ளிகளிலும், இவன் போன்ற குழந்தைகளுக்கு தனியாக வகுப்புகள் இருக்கின்றன. அனுபவமும் பக்குவமும் உள்ள ஆசிரியர்கள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கிடையே திறன்கள் மாறுபடுகின்றன. சிலர் 6 வயதில்தான் எழுந்து நிற்கிறார்கள். சிலர் கல்லூரி பட்டம்கூட வாங்கி இருக்கிறார்கள்.

உங்கள் பேரனும் நல்ல முறையில் வளர்ந்து நல்ல ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

.தொடர்ந்து கஷ்டங்கள் வராமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..

Lakshmi said...

irajarajesvari nanri

Related Posts Plugin for WordPress, Blogger...